15.11.20

இன்றைய சிந்தனைக்கு

புத்தி மற்றும் இதயத்தின் சமநிலை

புத்தி மற்றும் இதயத்தின் சமநிலையோடு சேவை செய்யும் ஒருவர் வெற்றியாளர் ஆகின்றார்.

சிந்திக்க வேண்டிய கருத்து:

பொதுவாக மக்கள் தவறான வழியில் செல்லும்போது அவர்களுக்கு நாம் வழிகாட்டல்களை வழங்குகின்றோம். நாம் அத்தகைய வழிகாட்டல்களை வழங்கும்போது புத்தியை கொண்டு அதிகம் யோசித்த பிறகே வழங்குகிறோம்ஆனால் அது எப்போதும் நாம் விரும்பும் விளைவைக் கொடுப்பதில்லை. அதன்பிறகு நாம் அடுத்தவர் தவறு செய்ததாக கருதுகிறோம்.

தீர்வு:

நாம் மற்றவர்களுக்கு ஆலோசனைகளை வழங்கும்போது புத்தி மற்றும் இதயம் இரண்டிற்கும் இடையில் சமநிலை இருப்பதை உறுதி செய்து கொள்ளவேண்டும். அதாவதுஅவர்களுக்கு நம்முடைய ஆலோசனைகளை வழங்கும்போது அவர்கள் மீது நமக்கு அதிகமான அன்பு இருக்கவேண்டும். அதன்பின் நாம் சொல்வது எதுவாயினும் அது அவர்களிடம் ஒரு நல்ல விளைவை ஏற்படுத்துகிறது.