15.11.23

இன்றைய சிந்தனைக்கு.....

சக்தி:

சக்திசாலியாக இருப்பதென்றால் ஒரு பிரச்சனையை தீர்வாக மாற்ற முடிவதாகும்.

சிந்திக்க வேண்டிய கருத்து:

ஒரு பிரச்சனையை தீர்க்காமல், சாக்குபோக்குகளை தேடுவதும் காரணங்களை கண்டுபிடிப்பதும் சுலபமானதாகும். ஆனால், இது சரியான தீர்வு கிடையாது என நாம் அறிந்திருக்கின்றோம். நம்மிடம் நாம் நேர்மையாக இருக்கும்போதுசூழ்நிலையினால் நாம் சந்தோஷமாக இல்லை என நமக்கு தெரிந்திருந்தாலும், எவ்வாராயினும், நாம் தீர்வு காண்பதில்லை அல்லது தீர்வு கண்டுபிடிக்க முடியாமல் இருக்கின்றோம்.

செயல்முறை:

வாழ்க்கை எனக்கு கொண்டுவரும் பிரச்சனைகளை கையாள்வதற்கான சாவியானது, எனக்கு பிடிக்காத சூழ்நிலைகளை மாற்றுவதற்கு முயற்சி செய்வதை காட்டிலும், அதை மேலும் சுலபமாக அணுகுவதற்கு என்னை நானே வலுபடுத்திகொள்ள முடியும் என கற்றுக்கொள்வதாகும். என்னுள் இருக்கும் சக்தியை பயன்படுத்துவதற்கு நான் கற்றுக்கொள்ளும்போது, நான் பிரச்சனைகளுக்கு மேன்மேலும் சுலபமாக தீர்வு காண்கின்றேன்.