16.03.19

 

இன்றைய சிந்தனைக்கு

 

மாற்றம்:

மாற்றம் என்பது வளர்ச்சிக்கு இன்றியமையாததாகும்.

சிந்திக்க வேண்டிய கருத்து:

பொதுவாக, நம்முள் எப்போது நாம் மாற்றத்தை கொண்டுவருவது அவசியம் என்பதை நாம் அறிந்திருக்கிறோம் - நாம் மாற வேண்டும் என்னும் திடமான ஆசையையும் உணர்கின்றோம். ஆனால் இந்த புரிந்துணர்வையும் ஆசையையும் நடைமுறையில் செயல்படுத்துவது நமக்கு மிகவும் கடினமானதாக இருக்கிறது.

செயல்முறை:

நான் அவசியம் மாற வேண்டும் என்பதை புரிந்துகொண்டவுடன், மாற்றத்தை கொண்டு வருவதற்கான முயற்சியை நான் செய்ய வேண்டும். இந்த நேரத்தை விட சிறப்பான நேரம் எப்போதும் இல்லை என்பதை எனக்கு நானே கூறிக்கொள்வது அவசியம்.