16.06.22

இன்றைய சிந்தனைக்கு

உற்சாகம்:

தொடர்ந்து உற்சாகத்தினால் நிறைந்திருக்கும் ஒருவர் மற்றவர்களை ஊக்கப்படுத்துகின்றார்.

சிந்திக்க வேண்டிய கருத்து:

பிரச்சனைகளை சந்திக்கின்றபொழுதெல்லாம் நாம் எதிர்மறை எண்ணத்தினால் மனச்சோர்வை உணரும் மனப்போக்கை கொண்டுள்ளோம். பாரமான மனம், நம்மை உற்சாகத்தோடு முன்னோக்கி செல்வதை தடுக்கிறது. மேலும், நாம் மற்றவர்களை உற்சாகப்படுத்துவதையும் கடினமாக்குகிறது.

செயல்முறை:

நான் கடினமான சூழ்நிலைகளை சந்திக்கும்போது, லேசாகவும், சுதந்திரமாகவும் இருப்பதற்கு விஷேசமான முயற்சி செய்வது அவசியம். அதிகமான உற்சாகத்தோடு இருக்கும்போது, நான் அதிக முன்னேற்றத்தை செய்வேன். என்னுடைய மனோபாவம் மற்றவர்களையும் ஊக்கப்படுத்தும்.