16.08.22

இன்றைய சிந்தனைக்கு

ஒத்துழைப்பு

ஒத்துழைப்பை பெறுவதற்கான உகந்த வழி ஒத்துழைப்பை வழங்குவதாகும்.

சிந்திக்க வேண்டிய கருத்து:

பெரும்பாலும், நமக்கு உதவி தேவைப்படும்போது, நமக்கு நெருக்கமானவர்களிடமிருந்து நாம் உதவியை எதிர்பார்க்கின்றோம். நமக்கு என்ன தேவைப்படுகிறது என்று அவர்கள் புரிந்துகொண்டு அதை நமக்கு கொடுக்க வேண்டும் என்று எதிர்பார்கின்றோம். நாம் தொடர்ந்து ஆதரவையும் உதவியையும் எதிர்பார்கின்றோம் இது நம்மிடமுள்ள திறமைகள் முழுவதையும் அறிந்துகொண்டு அவற்றை அனைவருடைய நன்மைக்காகவும் பயன்படுத்த நம்மை அனுமதிப்பதில்லை.

செயல்முறை:

சிறந்த முறையில் ஒத்துழைப்பை கொடுப்பதற்கு மனதின் சக்தியின் மூலம் மற்றவர்களுக்காக நல்லாசிகளையும் தூய உணர்வுகளையும் உருவாக்கவும், காரியத்தின் வெற்றிக்காகவும் பயன்படுத்த வேண்டும். இந்த முறையில் மற்றவர்களுடன் நான் ஒத்துழைக்கும்போது, எனக்கு அவசியமாக தேவைப்படும்போது, அவர்களுடைய ஒத்துழைப்பை நான் பெறுவேன்.