16/09/20

இன்றைய சிந்தனைக்கு

நேர்மறையான எண்ணங்களில் கவனம் செலுத்துவது சக்தியையும் வளர்ச்சியையும் தருகிறது.

சிந்திக்க வேண்டிய கருத்து: எண்ணங்கள் எதுவாக இருந்தாலும்,  அந்த எண்ணங்கள் சக்திவாய்ந்தவை ஆகும். இது ஒரு விதையின் வளர்ச்சியை போன்றது. ஒரு சிந்தனையானது,  ஒரு நேர்மறையான சிந்தனையானதுமனதில் விதைக்கப்பட்டு,  அதில் கவனம் செலுத்தபட்டால்அது சூரிய ஒளி ஆற்றலைச் சேர்ப்பது போல மாறுகிறது. அவற்றில் அதிக கவனம் கொடுக்கும்போது இந்த எண்ணங்கள் வளர ஆரம்பமாகின்றன.

அனுபவம்: ஒவ்வொரு நாள் காலையிலும் என்னால் ஒரு நேர்மறையான சிந்தனையை உருவாக்க முடியும்போது,  அதற்கு நாள் முழுவதும் கவனத்துடன் தண்ணீர் ஊற்றும்போது,  நான் மேலும் மேலும் சக்திவாய்ந்தவனாக இருப்பதைக் என்னால் காண முடிகிறது. எதிர்மறையான சூழ்நிலைகள் அல்லது எதிர்மறையாக உள்ளவர்கள் என்னைப் பாதிக்கவில்லை,  ஆனால் அந்த எதிர்மறையை முடிக்க நான் ஒரு சக்திவாய்ந்த ஆதாரமாக மாறுகிறேன். இந்த நேர்மறையான சிந்தனையை அனைத்து சூழ்நிலைகளிலும் என்னால் பராமரிக்க முடிகிறது.