16.11.20

இன்றைய சிந்தனைக்கு

உற்சாகம்:

எவர் ஒருவர் தொடர்ந்து உற்சாகத்துடன் இருக்கின்றாரோ அவரே உண்மையில் அதிர்ஷ்டசாலி ஆவார்.

சிந்திக்க வேண்டிய கருத்து:

நம் வாழ்க்கையில் காரியங்கள் தவறாக நடந்துகொண்டிருக்கும்போதுநாம் உடனடியாக அனைத்து உற்சாகத்தையும் இழந்து விடுவதை காண்கின்றோம். அதன்பிறகு நம் சூழ்நிலையை மாற்றுவதற்கு நாம் எதுவும் செய்வதில்லைஆனால் நமது விதியை சபிக்க தொடங்குகின்றோம். இத்தகைய அணுகுமுறையால்நம் அதிர்ஷ்டத்தை மாற்றியமைக்க நம்மால் எதுவும் செய்ய முடியாதுள்ளது.

தீர்வு:

நம் வாழ்க்கையில் காரியங்கள் தவறாகும்போதுநிகழ்காலம் நம் கைகளில் தான் உள்ளது என்பதை உண்மையில் நாம் அங்கீகரிக்க வேண்டும். கடந்த காலங்களில் நடந்தது என்ன என்பதை நாம் சிந்திக்க தேவையில்லை. நம்முடைய விதியை நொந்து கொள்ளவும் அவசியம் இல்லை. அதற்கு மாறாகநம் எதிர்காலத்தை சிறந்ததாக மாற்றுவதற்கு நிகழ்காலத்தைப் சிறந்த வழியில் பயன்படுத்துவதற்கு நம்மை உற்சாகத்தால் நாம் நிரப்பிக்கொள்ள வேண்டும்.