16.11.23

இன்றைய சிந்தனைக்கு.....

நற்குணம்:

ஒருவருடைய நற்குணத்தை மெச்சுவதோ அல்லது பாராட்டுவதோ என்பது அவற்றை பின்பற்றுவதாகும்.

சிந்திக்க வேண்டிய கருத்து:

ஒருவருடைய தனித்துவமான குணங்களை நாம் கவனிக்கும்போது, நாம் அவற்றை பாராட்ட ஆரம்பிப்பதுடன் அவற்றை பற்றி மற்றவர்களிடம் பேசுகின்றோம். ஆனால், மற்றவர்களுடைய நற்குணங்களை நாம் பாராட்டும் போதிலும், நாம் அரிதாகவே அந்த நற்குணங்களை நம்முள் கிரகித்துக்கொள்வதற்கு முயற்சி செய்கின்றோம்.

செயல்முறை:

மற்றவர்களிடமுள்ள குறிப்பிட்ட நற்குணங்களை நான் பாராட்டுவதற்கான காரணம் அவை என்னுள் சுட்சுமமாக வேலைசெய்து கொண்டிருக்கின்றது என்று நான் புரிந்துகொள்வது அவசியமாகும். அவற்றை நான் உணர்வுபூர்வாக கிரகித்துக்கொள்வதற்கு முயற்சி செய்யும்போது, அவை சுலபமாக வெளிப்படும்.