17.01.23

இன்றைய சிந்தனைக்கு......

அகநோக்குடன் இருப்பது நேர்மறைதன்மையை வெளி கொண்டுவருகிறது.

சிந்திக்க வேண்டிய கருத்து:

அன்பு, அமைதி, மகிழ்ச்சி முதலான அகத்தே உள்ள குணங்களினால் ஒவ்வொரு மனிதனுக்கும் தனக்கேயுரிய நேர்மறையான தன்மை உள்ளது. அகநோக்கில், உள்ளுக்குள் பார்க்கும் பயிற்சி, ஒருவரை தொடர்ந்து தன்னுடனும் தன்னுடைய உண்மையான இயல்புடனும் தொடர்பில் இருக்க செய்கிறது. செய்யப்படும் அனைத்திலும் இந்த குணங்களை வெளிப்பட செய்கிறது. இந்த குணங்களோடு நீண்ட காலமாக பயிற்சி பெற்றதால், இந்த குணங்கள் தேவைக்கேற்ப மிகவும் இயல்பாக வெளிப்படுகிறது.

தீர்வு:

அகநோக்கு பயிற்சியில் இருப்பது என்னை அந்த குணங்களை எனக்குள் அனுபவம் செய்ய உதவுகிறது. அது  மற்றபடி கடினமான சூழ்நிலைகளில் மறைந்திருக்கிறது. இதனால் எனக்கு உண்மையான சுய மரியாதை இருக்கிறது மேலும் என்னுடைய அகந்தையை என்னால் முடிக்க எனக்கு உதவுகிறது. என் தவறுகளை அடையாளம் காண்பதற்கும் ஏற்றுக்கொள்வதற்கும் எனக்கு சக்தி தருகிறது, இது வெற்றிகரமாக வேலை செய்ய எனக்கு தைரியம் தருகிறது.