17.05.20

 

இன்றைய சிந்தனைக்கு

 

வளைந்துகொடுக்கும் தன்மை:             

பறக்கும் பறவையானதுஅனைத்து பிரச்சனைகளையும் கடந்து செல்கிறது.

சிந்திக்க வேண்டிய கருத்து:

பிரச்சனைகள் நம் மீது இருக்கும்போதுஅது பெரிய பாரமாக தெரிகிறது. அது நம்முடைய செயல்படும் ஆற்றலை பாதித்துமுன்னோக்கிச் செல்வதை தடுக்கிறது.

செயல்முறை:

என்னை நான் ஒரு வானில் பறக்கும் பறவையாக கருதும்போதுஎன்னுடைய பிரச்சனைகளின் மேல் பறந்துஅவற்றை அங்கிருந்து கீழே பார்க்கமுடிகின்றது. அவை இன்னமும் கூட கீழே இருக்கலாம்ஆனால்மேலே நான் விடுபட்டு இருக்கின்றேன். மனதை இந்த அளவிற்கு வளைந்துகொடுக்கக் கூடியதாக வைத்திருப்பதே அனைத்துப் பிரச்சனைகளுக்கும் தீர்வு காண்பதாகும்.