17/09/20

இன்றைய சிந்தனைக்கு

ஒருவர் தன்னுடைய சொந்த குணங்களின் பற்றிலிருந்து விடுபடுவது என்பது சுயத்தின் மீது மாற்றம் கொண்டுவரும் திறனைக் கொண்டிருப்பதாகும்.

சிந்திக்க வேண்டிய கருத்து: சுயத்தின் மீது கொண்டிருக்கும் முக்கியமான பற்று என்பது ஒருவர் தன் சொந்த சிறப்புகள் மற்றும் பலவீனங்களுக்கான பற்றை கொண்டிருப்பதாகும். இந்த வகையான பற்றிலிருந்து தன்னை விடுவிக்கும் திறன் இருக்கும்போது,  இரண்டிலும் மாற்றம் கொண்டுவரும் திறன் உள்ளது. அவைகளைப் பற்றிய விழிப்புணர்வு உள்ளது,  ஆனால் அவைகளால் பந்தனத்தில் இல்லை. விசேஷங்களை அன்போடுதேவைக்கேற்ப பயன்படுத்தக்கூடிய திறன் உள்ளது. பலவீனங்களை முடிக்க சிறப்பு கவனம் செலுத்தப்படுகிறது.

அனுபவம்: நான் பற்றிலிருந்து விடுபடும்போது,  நான் அவைகளைப் பற்றி அறிந்திருக்கிறேன்,  ஆனால் எனக்குள் இருக்கும் எதிர்மறையின் முன்னிலையில் சிறப்புகளின் ஆணவமோ அல்லது கீழ்த்தரமான உணர்வுகளோ இல்லை. அவைகளிடமிருந்து பற்றின்மையை என்னால் அனுபவம் செய்ய முடிகிறது,  மேலும் எனது சிறப்புகளை எளிதில் பயன்படுத்த முடிகிறது. பலவீனங்கள் இருப்பதால் நான் கவலைப்படவில்லை,  ஆனால் அவற்றை எளிதாக வெல்ல முடிகிறது.