18.01.23

இன்றைய சிந்தனைக்கு......

தனித்தன்மை:

என் சொந்த ஆளுமையின் தனித்துவத்தை அங்கீகரிப்பது எதிர்மறையின் செல்வாக்கிலிருந்து விடுபட்டு இருப்பதாகும்.

சிந்திக்க வேண்டிய கருத்து:

தன்னுடைய சொந்த தனித்தன்மை பற்றி அறிந்த ஒருவர் தனது சொந்த ஆளுமையின் வலுவான செல்வாக்கை உருவாக்கிகொள்ள முடியும். எனவே, அத்தகைய நபரை யாருடைய ஆளுமை பண்புகளும் எதிர்மறையாக பாதிப்பதில்லை. அவர் முன் மிகவும் வலுவான ஆளுமை கொண்ட ஒரு நபர் இருந்தாலும்கூட, அவரின் எதிர்மறையின் செல்வாக்கிலிருந்து விடுப்பட்டிருக்க முடியும்.

தீர்வு:

எனக்குள் இருக்கும் சிறப்பு அம்சங்களை நான் அங்கீகரிக்கவும் பயன்படுத்தவும் முடியும்போது, என்னால் உள்ளுக்குள் சக்திவாய்ந்தவனாக இருக்க முடிகிறது. அனைத்து சூழ்நிலைகளிலும் அனைத்து மக்களிடத்திலும் இந்த உள்ளார்ந்த சக்தியை நான் அனுபவம் செய்கிறேன். என் சொந்த சிறப்பு அம்சங்களோடு நான் தொடர்ந்து தொடர்பில் இருப்பதால், நான் லேசாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கின்றேன்.