18.06.22

இன்றைய சிந்தனைக்கு

பணிவுத்தன்மை:

சத்தியம் பணிவுத்தன்மையோடு சேரும்போதுதான்உண்மை உறுதிசெய்யப்படுகிறது.

சிந்திக்க வேண்டிய கருத்து:

நமக்கு உண்மை தெரியும் என்றும், நாம் உண்மையாக இருக்கின்றோம் என்றும் நாம் நினைக்கும்போது, நாம் சரியாகத்தான் செய்கின்றோம் என்ற நம்பிக்கை நமக்கு உண்டாகிறது. மற்றவர் என்ன கூற வருகின்றார் என்று நம்மால் பார்க்க முடியவில்லை, மேலும் நம்முடைய சொந்த கண்ணோட்டத்தை தொடர்ந்தும் நாம் முன்வைக்கிறோம். இது வீண் விவாதங்கள் மற்றும் குழப்பத்திற்கு வழிவகுக்கக்கூடும்.

செயல்முறை:

உண்மையோடு சேர்ந்து எனக்கு பணிவுத்தன்மையும் தேவைப்படுகிறது. பணிவுத்தன்மையானது, என்னுடைய கருத்துக்களை பற்றற்ற முறையில் மற்றவர்களின் முன்வைக்க உதவுகிறது. எனக்குள் இருக்கும் உண்மையானது, அடுத்தவரை புரிந்து கொள்ள எனக்கு உதவி செய்வதோடு, அவருடைய கருத்தையும் திறந்த மனதுடன் வரவேற்கவும் செய்கிறது. அடுத்தவராலும் என்னுடைய கண்ணோட்டத்தை பார்க்க முடிவதால், என்னுடைய கருத்தை அதிக சிரமமின்றி என்னால் முன்வைக்க முடியும்.