18.11.20

இன்றைய சிந்தனைக்கு

சுய-முன்னேற்றம்:

உண்மையான முன்னேற்றமானது சுயத்திடம் முன்னேற்றத்தை கொண்டு வருமளவிற்கு மற்றவர்களிடமும் முன்னேற்றத்தை கொண்டுவருகின்றது.

சிந்திக்க வேண்டிய கருத்து:

சுய-முன்னேற்றம் மற்றும் மற்றவர்களின் முன்னேற்றம் முற்றிலும் தனித்தனியானது என்று பொதுவாக நம்பப்படுகிறது. சுயத்தின் முன்னேற்றத்திற்கான சிந்தனை எங்குள்ளதோஅங்கு சுயநலம் உள்ளதென்றும் மற்றும் சுற்றி இருப்பவர்களுக்கு எந்த நன்மையும் இல்லை என்றும் நம்பப்படுகிறது. உண்மையில்சுயநலமானது அதன் தீவிர வடிவத்தில் சுற்றி இருப்பவர்கள் மீது எதிர்மறை தாக்கத்தை சிலநேரங்களில் ஏற்படுத்த கூடும்.

தீர்வு:

நாம் எதைச் செய்யும்போதும்அதிலிருந்து நாம் நன்மை அடைவதன் கூடவே நம்முடன் மற்றவர்களும் நன்மை அடைகின்றார்களா என்று சரிபார்த்துக்கொள்ள வேண்டும். அவ்வாறு இல்லையென்றால் குறைந்தபட்சம் ஒரு நபராவது ஒரு நேர்மறையான பாதிப்பை பெரும் வகையில் நாம் செய்வதை சிறந்த வழியில் செய்வதற்கு இயலுமா என்று பார்க்க வேண்டும். பின்னர் நாம் இருமடங்கு நன்மை பெறுவதை நம்மால் காணக் கூடும். இதனால் நாம் பெறும் தனிப்பட்ட நன்மைகளுடன் மற்றவர்களுடைய ஆசீர்வாதமும் கிடைக்கிறது.