19.01.23

இன்றைய சிந்தனைக்கு......

சமநிலை: சமநிலை இருக்கும்போது வாழ்க்கையில் அமைதியும் மகிழ்ச்சியும் உள்ளது.

சிந்திக்க வேண்டிய கருத்து:

அமைதியான ஒரு வாழ்க்கை சமநிலை இருக்கும் வாழ்க்கை ஆகும். சில நேரங்களில், ஒரு ஒற்றை எதிர்மறை சிந்தனை அல்லது வார்த்தை சமநிலையின் வெளியே ஒருவரை தூக்கி எறிய முடியும். நற்குணமும் கூட சமநிலையில் இருக்க வேண்டும். உதாரணமாக, ஒரு காரியத்தை முடிப்பதற்கு உறுதியோடு இருப்பதற்கு தேவையான ஆற்றல் மற்றும் ஒருமுகப்டுத்தும் சக்தி ஆகியவை பிடிவாதமாகவும் இருக்கமுடியும். எனவே உறுதியாக இருப்பதுடன் பொறுமை மற்றும் வளைந்துகொடுக்கும் தன்மையுடன் சமநிலையில் இருக்கும்போது, வாழ்க்கையில் மகிழ்ச்சியை உருவாக்குகிறது.

தீர்வு:

நான் ஒரு நற்குணத்தை பயன்படுத்தும்போது, நான் விடுபட்ட நிலையில், என்னால் சமநிலையை பராமரிக்க முடியும். இல்லையெனில் ஒரு நற்குணம் கூட அதனுடைய தீவிர எல்லையில் எதிர்மறை வடிவம் எடுப்பதை நான் காண்கின்றேன். விடுபட்ட நிலை நற்குணத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து தேவைக்கேற்ப என்னை சரியான முறையில் அதை பயன்படுத்த, எனக்கு உதவுகிறது.