19.06.22

இன்றைய சிந்தனைக்கு

தவறுகளிலிருந்து கற்றுக்கொள்வது:

கவனத்துடன் இருப்பது முன்னேற்றத்தைக் கொண்டுவரும்.

சிந்திக்க வேண்டிய கருத்து:

நாம் தவறுகள் செய்யும்போது, அதை நியாயப்படுத்துவதற்கு, சிலநேரங்களில் முயற்சி செய்கின்றோம். நாம் அதற்கு சாக்குபோக்கு கூறிவதோடு அதேபோல் காரணம் கூறுபவர்களோடு நம்மை நாம் ஒப்பிட்டு கொள்கின்றோம். அதனால், நம்முடைய தவறுகளிலிருந்து நாம் கற்றுக்கொள்ள தவறுவதோடு, அடிக்கடி மீண்டும் அதே தவற்றை செய்கின்றோம். அதன்பின், நம்மால் உண்மையான முன்னேற்றத்தின் சந்தோஷத்தை அனுபவம் செய்யமுடியவில்லை.

செயல்முறை:

உண்மையான விவேகம் என்பது மற்றவர்களுடைய தவறுகளிலிருந்து கற்றுக்கொள்வதில் உள்ளது. மற்றவர்கள் தவறு செய்யும்போது, அவர்களின் அனுபவத்தினால் நான் லாபமடைகின்றேன். அதிலிருந்து கற்றுக்கொள்வதற்கு, நானும் மீண்டும் அதே அனுபவங்களை கடந்து செல்லவேண்டிய அவசியமில்லை. தொடர்ந்து மற்றவர்களுடைய செயல்களை நான் என்னுடைய விழிப்புணர்வில் வைத்திருக்கும்போது, ஒவ்வொரு அடியிலும் நான் முன்னேற்றத்தை அனுபவம் செய்கிறேன்.