19.10.20

இன்றைய சிந்தனைக்கு

மனஉறுதி:

மனஉறுதி மேன்மையான எண்ணங்களை நடைமுறைபடுத்த தூண்டுகிறது.

சிந்திக்க வேண்டிய கருத்து:

நாம் நம் வாழ்க்கையில் ஒரு குறிக்கோள் கொண்டு அதற்காக பணிபுரியும் போதுசில நேரங்களில் நாம் செய்ய திட்டமிட்டுள்ள அனைத்தையும் நடைமுறையில் கொண்டு வர முடியாதுள்ளது . நாம் அதன்பின் சோர்வடைந்து சில காலத்திற்கு முயற்சி செய்த பிறகு அவற்றை கைவிட முற்படுகின்றோம். இவ்வாறாகநாம் நம்முடைய எண்ணங்கள் நம் வாழ்க்கையில் கொண்டுவரகூடிய நன்மைகளை இழ்ந்துவிடுகின்றோம்.

செயல்முறை:

நமக்கு வருகின்ற நல்ல எண்ணங்களை நடைமுறையில் செயல்படுத்த அதாவது எண்ணங்களை நடைமுறைபடுத்த மனஉறுதியோடு அதைப் கருத்துப்பதிவு செய்வது அவசியமாகும். நாம் சொல்லும் வார்த்தைகள் 'நான் முயற்சி செய்கிறேன்', என்றில்லாமல் எப்போதும் 'அதை நான் செய்வேன்என்பதாக இருக்க வேண்டும். மனஉறுதி இருக்குமிடத்தில் வெற்றி நிச்சயம்.