19.11.20

இன்றைய சிந்தனைக்கு

பொறுமை:

பொறுமை உறவுகளில் ஒற்றுமையை ஏற்படுகிறது.

சிந்திக்க வேண்டிய கருத்து:

ஒரு உறவுமுறையில் கருத்து வேறுபாடு இருக்கும்போதுநாம் அடுத்தவரை புரிந்துக்கொள்ள எந்த முயற்சியும் செய்வதில்லை. நாம் பொறுமையற்றவர்களாக ஆகிவிடுகிறோம்மேலும் மற்றவர்களைப் புரிந்துகொள்ள அவர்கள் கூறுவதை நாம் கேட்பதுமில்லை. இதன் காரணமாக நாம் அவர்களைப் பற்றிய விஷயங்களைக் விசாரித்து கண்டுபிடிகின்றோம். இது மேலும் தவறான புரிந்துணர்வை மட்டுமே அதிகரிக்கிறது.

தீர்வு:

எவருடனும் நமக்கு கருத்து வேறுபாடு இருந்தால்மற்றவரை புரிந்து கொள்ளவும் அவர் கூறுவதை கேட்கவும் சிறிது நேரம் கொடுக்க வேண்டும். அப்போதுதான் மற்றவரின் கண்ணோட்டத்தை நம்மால் புரிந்து கொள்ள முடியும். இந்த பயிற்சியானது மற்றவர்களுடன் நாம் கொண்டுள்ள தவறான புரிந்துணர்வை முடிக்கவும் உறவுமுறைகளில் இணக்கத்தையும் ஏற்படுத்துகிறது.