19.11.23

இன்றைய சிந்தனைக்கு.....

தைரியம்:

தைரியமான ஒரு அடியானது அதிக முன்னேற்றத்தை கொண்டுவருகின்றது.

சிந்திக்க வேண்டிய கருத்து:

நாம் கடினமான சூழ்நிலையை சந்திக்கும்போது பெரும்பாலும் நாம் அச்சமடைகின்றோம். நாம் தைரியமாக இருக்க வேண்டிய நேரத்தில், நாம் பயத்தினாலும் கவலையினாலும் ஆட்கொள்ளப்படுகின்றோம். இந்த உணர்வுகள் நம்முடைய சக்தியை விரயமாக்குவதோடு, சூழ்நிலையை மாற்றுவதற்கு எதுவும் செய்ய கடினமாக இருப்பதையும் நாம் காண்கின்றோம்.

செயல்முறை:

என்னுள் உண்மையாகவே எவ்வளவு திறமை இருக்கிறது என நான் புரிந்துகொள்ளும்போது, ஒர் அடி முன்னோக்கி எடுத்து வைப்பதற்கான தைரியத்தை நான் காண்கின்றேன். தைரியத்துடன் எடுத்துவைக்கும் ஒவ்வொரு அடியிலும், நூறு-மடங்கு உதவி பெறப்படுகின்றது. என்னுடைய பயங்களை நான் சந்தித்து, தைரியத்துடன் ஓர் அடி முன்னோக்கி செல்லும்போது, என்னால் அதிகமாக முன்னேற முடிகிறது.