20.11.20

இன்றைய சிந்தனைக்கு

பணிவுத்தன்மை:

பணிவுத்தன்மை இருக்கும்போதுஅன்பின் பரிமாற்றம் இருக்கிறது.

சிந்திக்க வேண்டிய கருத்து:

நாம் எப்பொழுது நம்முடைய ஆணவத்தின் அடிப்படையில் செயல்படுகின்றோம் என்பதை பொதுவாக அறியாமல் இருக்கின்றோம். ஏனென்றால் அது ஆழமாக புதைந்துள்ளது. மற்றவர்கள் நம்முடைய ஆணவத்தை சுட்டிக்காட்டும்போதுநாம் அதை ஏற்றுக்கொள்ள விரும்பவில்லைஅதனால் தொடர்ந்து ஆணவத்தோடு நடந்துக்கொள்கின்றோம். ஆணவம் கற்றுக்கொள்வதற்கான திறனை முடித்துவிடுகிறது. நம் உறவுமுறைகளை எதிர்மறையாக பாதிக்கிறதுஏனென்றால் அங்கு அன்பின் பரிமாற்றம் இல்லை.

தீர்வு:

ஆணவத்தை முடிப்பதற்கான வழிமுறையானது பணிவுத்தன்மையை வளர்த்துக்கொள்வதாகும். பணிவுத்தன்மை என்பது நம்முள் நாம் வலிமையோடு இருப்பதும் அதேநேரத்தில் மென்மையாகவும் வளைந்துக்கொடுக்கும் தன்மையோடும் இருப்பதாகும். இதுநம்மை வளைந்துகொடுக்கஅதாவது சிரம் தாழ்த்த உதவி செய்கிறது. இவ்வாறு நாம் சிரம் தாழ்த்துவதால் நாம் தோற்கடிக்கப்பட்டிருக்கிறோம் என்று பொருள் இல்லைஆனால் இது நம் சொந்த வெற்றியை வெளிப்படுத்துகிறது. இவ்வாறு நாம் வளைந்துகொடுத்து மன்னிக்கும்போது மட்டுமே உறவுகளில் அன்பின் ஓட்டத்தை நம்மால் அனுபவம் செய்ய முடிகின்றது.