21.01.23

இன்றைய சிந்தனைக்கு......

பணிவுதன்மை:

உண்மை பணிவுதன்மையை கொண்டுவருகின்றது.

சிந்திக்க வேண்டிய கருத்து:

சத்தியத்திற்கான உறுதிப்பாடு இருக்கும்போதுஒருவருக்கு அனைத்து அம்சங்களிலும் இந்த உண்மையை வெளிப்படுத்த தைரியம் உள்ளது. மற்றவர்கள் எதிர்த்தாலும் அல்லது விமர்சிப்பதாலும் கூட அப்படிபட்டவர் ஒருபோதும் பாதிக்கப்படுவதில்லை. பணிவுதன்மையோடு அவர் நடக்கும் அனைத்திலிருந்தும் கற்றுக்கொள்ள முடிகிறது, அதோடு மேலும் ஒவ்வொரு படிப்பினையும் உள்ளார்ந்த சத்தியத்திற்கு நெருக்கமாக செல்வதற்குப் பயன்படுகிறது.

தீர்வு:

நான் சத்தியத்திற்காக உறுதியுடன் இருக்கும்போது, என் வாழ்க்கையில் நடக்கும் அனைத்தின் அழகையும் அனுபவிக்க செய்கிறது. அனைத்தும் அனைவரும் சத்தியத்திற்கு என்னை நெருக்கமாக கொண்டு செல்வதில் கருவிகள் ஆகின்றனர் என்பதை நான் உணர்கிறேன். இவ்வாறு, நான் பணிவுதன்மையோடு இருந்து அனைத்தையும் பாராட்டுவதோடு தொடர்ந்து கற்றுக்கொண்டும் இருக்கின்றேன்.