21.11.19

இன்றைய சிந்தனைக்கு

நேர்மறை எண்ணங்கள்:

நேர்மறை எண்ணங்களின் சக்தி மற்றவர்கள் தங்களின் கவலைகளிலிருந்து விடுபட உதவுகிறது.

சிந்திக்க வேண்டிய கருத்து:

கடினமான நேரங்களை கடந்து செல்லும் ஒருவருக்கு இயல்பாகவே கவலை மற்றும் பதற்றம் இருக்கிறது. இத்தகைய சந்தர்ப்பங்களில், இயல்பாகவே அவருடன் இருப்பவர்களும் பதட்டம் அடைகின்றார்கள். எவ்வாறாயினும், இத்தகைய எண்ணங்களைக் கொண்டிருக்கும்போது மற்றவர்களாலும் எவ்விதத்திலும் முதலாமவருக்கு உதவமுடியாமல் இருக்கிறது. மாறாக, அந்த நபரின் எதிர்மறை எண்ணங்களுக்கு இரண்டாமவரும் கைக்கொடுக்கின்றார்.

தீர்வு:

கடினமான சூழ்நிலையில் எதிர்மறையான எண்ணங்களைக் கொண்டிருப்பவர்களை நாம் சந்திக்கும்போது, நாம் தான் அவர்களுக்கு உதவிசெய்ய வேண்டும் என்பதை நமக்கு நாமே நினைவூட்டிகொள்ள வேண்டும். நம் சொந்த எண்ணங்கள் நேர்மறையானால் மட்டுமே நம்மால் இதை செய்ய முடியும். நம் மனதை இவ்விதத்தில் பயிற்றுவிக்கும்போது, நம்முடைய சொந்த நேர்மறை தன்மையை தக்க வைத்துக் கொள்ள முடியும் அதே நேரத்தில் மற்றவர்கள் தங்கள் கவலைகளை முடிக்க உதவுகிறது.