21.11.23

இன்றைய சிந்தனைக்கு.....

மனஉறுதி:

வெற்றியடைவதற்கான மனஉறுதி உடையவர் ஒரு வழியை கண்டுபிடிப்பார்.

சிந்திக்க வேண்டிய கருத்து:

பெரும்பாலும் நம்முடைய வாழ்க்கையில் நடந்துகொண்டிருக்கின்ற சம்பவங்களினால், சூழ்நிலைகளையும் மக்களையும் நாம் குற்றம் சாட்டுவதை காண்கின்றோம். சூழ்நிலையை மாற்றுவதற்கு ஏதாவது ஒன்றை செய்வதற்கான, ஆசையை நாம் வெளிக்காட்டுகின்றோம், ஆனால் அதே சமயத்தில் நாம் எதுவும் செய்யாமல் இருப்பதற்கான காரணங்களையும் கண்டுபிடிக்கின்றோம்.

செயல்முறை:

உண்மையான தீர்வானது சூழ்நிலை என்னிடமிருந்து என்ன எதிர்பார்க்கின்றது என முதலில் பார்பதில் உள்ளது. தற்போதைய சூழ்நிலை எதுவாகிலும், அது  ஒரு காரணத்திற்காகவே என்னிடம் வந்துள்ளது. அதனால் நான் சாக்குபோக்குகள் சொல்வதை நிறுத்தும்போது, நான் வெற்றியடைவதற்கான வழியை கண்டுபிடிப்பதற்கு என்னுடைய திறமைகளை பயன்படுத்துவதற்கான வழியை பற்றி நான் சிந்திக்க ஆரம்பிக்கின்றேன்.