22.11.20

இன்றைய சிந்தனைக்கு

பற்றற்றதன்மை:

பற்றற்றதன்மை ஒவ்வொரு செயலின் தரத்தையும் கூட்டுகின்றது.

சிந்திக்க வேண்டிய கருத்து:

நாம் பற்றற்று இருக்கும்போது நம்முடைய செயல்களால் நாம் கட்டுப்படுத்த படவில்லை. நாம் காரியங்களை செய்யும்போதுஅவற்றின் முடிவை நாம் சார்ந்து இருப்பதில்லை. இது தனிச்சையாகவே நாம் செய்கின்ற காரியங்களின் தரத்தை அதிகரிக்கிறது.

செயல்முறை:

எந்தவொரு சூழ்நிலையிலும்நான் அதிகமாக செய்தபோதிலும் நான் எதையும் சாதிக்கவில்லை என்பதை நான் பார்க்கும்போதுஎன் கையிலிருக்கும் காரியத்தின் மீது நான் எத்தளவு பற்றுடன் இருக்கின்றேன் என கேட்பது அவசியமாகும். காரியத்தில் அதிகமாக பற்றுடையவராக இருக்கும்போது நான் அதிகமாக முயற்சி செய்கின்றேன். ஆனால் பெரும்பாலும் இதன் முடிவாக நான் குறைவாக சாதிக்கின்றேன். நான் பற்றற்று இருக்கும்போதுநான் செய்கின்ற அனைத்திலும் என்னுடைய சிறப்பானவற்றை என்னால் கொடுக்க முடிகின்றது.