23.01.23

இன்றைய சிந்தனைக்கு......

தைரியம்:

தைரியம் கொண்டிருப்பது என்பது சுலபமாக மாற்றத்தை கொண்டுவருதற்கான திறனைக் கொண்டிருப்பதாகும்.

சிந்திக்க வேண்டிய கருத்து:

தன்னிடமும் மற்றவர்களிடமும் கடவுளிடமும் நம்பிக்கை வைத்திருப்பவர் தொடர்ந்து தைரியமிக்கவர் ஆவார். மிகவும் மோசமான நிலையில் கூட மாற்றத்தை உறுதிப்படுத்துவது  தைரியம் கொண்டிருப்பதாகும். சூழ்நிலைகள் மாற்றங்கள் மற்றும் முன்னேற்றத்தை ஏற்படுத்துவதில் உதவுகின்றன. மாற்றத்தை கொண்டு வருவதென்பது புகார்களை முடிப்பதாகும்.

தீர்வு:

நான் கடினமான சூழ்நிலைகளில் தைரியமாக இருக்கும் போது, எது நடந்தபோதிலும் என்னிடம் எந்த புகாரும் இல்லை. கடந்த காலத்துடன் நான் சிக்ககொள்ளவில்லை. மறுபுறம், நான் தொடர்ந்து நிகழ் காலத்தை பயன்படுத்தி எதிர்காலத்தை நோக்கி முன்னோக்கி நகர்ந்து செல்ல முடிகின்றது. என் பார்வை தெளிவாகிறது மற்றும் என்னால் விரைவான மற்றும் சுலபமான மாற்றத்தை கொண்டு வர முடிகின்றது.