23.05.20

 

இன்றைய சிந்தனைக்கு

 

விட்டு விடுவது:

 

எதிர்பார்ப்புகளிலிருந்து விடுபட்டிருப்பது என்றால் கவலையிலிருந்து விடுபட்டிருப்பது என்பதாகும்.

 

சிந்திக்க வேண்டிய கருத்து:

நம்முடைய எதிர்பார்ப்புகளுக்கு மாறாக யாராவது ஒருவர் எதையாவது செய்யும்போதுநாம் சரியானது என்று எதை உணர்கின்றோமோ அதற்கேற்றவாறு அவர்களை மாற்ற முயற்சிக்ககூடும். நிச்சியமாகநம்முடைய முயற்சியை அவர்கள் தடுப்பார்கள். இது கவலையை ஏற்படுத்துகின்றது.

 

செயல்முறை:

என்னுடைய எதிர்பார்ப்புக்கு மாறாக யாராவது நடந்துகொள்வதை நான் பார்க்கும்போதுஅந்த நபர் தனித்தன்மை வாய்ந்தவர் என்று புரிந்துகொள்வது அவசியம். எந்த நொடியிலும் அவர் புரிந்துகொண்டதற்கு ஏற்ப அவர் நடந்து கொள்வார். நான் அவரைஒரு குறிப்பிட்ட முறையில் நடந்துகொள்ள வேண்டும் என எதிர்பார்க்க முடியாது. என்னுடைய எதிர்பார்புகளை நான் விட்டுவிடுவதால்நான் கவலையிலிருந்து விடுபட்டு இருக்கின்றேன்.