23.06.22

இன்றைய சிந்தனைக்கு

நேரத்தை நன்றாக பயன்படுத்துவது:

நேரத்தின் முக்கியத்துவத்தை புரிந்துகொண்டவர்கள், அதை முழுமையாக பயன்படுத்திக் கொள்வார்கள்.

சிந்திக்க வேண்டிய கருத்து

காரியங்களை கடைசி நொடிவரை ஒத்திப்போடும் போக்கு நம்மிடம் இருக்கிறது. அதனால், நாம் காரியத்தை முடிக்க வேண்டிய அவசியம் இருக்கும்போதும் மேலும் எதிர்பாராத சூழ்நிலைகள் தோன்றும்போதும் பெரும்பாலும், நாம் மன உளைச்சலை உணர்கின்றோம். அதன்பின், நாம் சிறப்பாக வேலை செய்வதை விட்டுவிட்டு, நமக்கு அதிக நேரம் கிடைத்திருக்கலாம் என்று விரும்புகின்றோம்.

செயல்முறை

நேரத்தின் முக்கியத்துவத்தை புரிந்துகொண்டு, நான் உடனடியாக வேலைகளை செய்வது அவசியம். எவ்வாறு இந்த நொடியை நான் இழந்து விட்டால், அதை திரும்ப பெறுவதற்கான வாய்ப்பு கிடைக்காது என்பதைப் பற்றி இன்று நான் சிந்திப்பேன். என் கையிலிருக்கும் நேரத்தை நான் சரியாக பயன்படுத்தும்போது, என்னால் எப்பொழுதும் லேசாக இருக்க முடியும். மேலும், திடிரென்று தோன்றும் சூழ்நிலையிலும் என்னால் பணியாற்ற முடியும்.