23.11.20

இன்றைய சிந்தனைக்கு

வெற்றி:

தன் மீது உண்மையான நம்பிக்கை கொண்டிருப்பது என்றால் வெற்றி பெறுவதாகும்.

சிந்திக்க வேண்டிய கருத்து:

சில நேரங்களில் பொய்யான தைரியம் நம்பிக்கை என தவறாக புரிந்துக்கொள்ளப்படுகிறது. நாம் சில பணியை எடுத்துக் கொள்ளும்போதுநமக்கு அதிக நம்பிக்கையூட்டக்கூடிய தைரியம் இருப்பதாக உணர்ந்து நாம் ஏமாற்றமடையலாம். நம்முடைய சிறந்ததைக் கொடுப்பதற்கு பதிலாக நாம் கவனக்குறைவு உடையவர்களாக இருக்கும் போக்கு நம்மிடம் இருக்கிறது. இத்தகைய கவனக்குறைவு நமக்கு எளிதில் வெற்றி கிடைக்க உதவாது.

தீர்வு:

நம்மை நாம் உள்ளுக்குள் சரிபார்த்து நம் மீது நமக்கு உண்மையான நம்பிக்கை இருக்கிறதா அல்லது இல்லையா என்று பார்க்க வேண்டும். எப்போதும் நம் சொந்த சிறப்புகளை அங்கீகரிப்பதனால் நம் மீது நமக்கு நம்பிக்கை வருகிறது. நம்மால் அடைய கூடிய ஒன்றை நோக்கி நாம் கவனம் செலுத்த வேண்டும். நாம் இதை செய்யும்போது இயற்கையாகவே நாம் வெற்றி பெறுவதை நம்மால் காணமுடியும்.