24.01.23

இன்றைய சிந்தனைக்கு......

களைப்படையாமல் இருப்பது: களைப்படையாமல் இருப்பது வெற்றியை ஊர்சிதப்படுத்துவதாகும்.

சிந்திக்க வேண்டிய கருத்து: 

களைப்படையாமல் இருக்கும் ஒருவர் வாழ்க்கையின் ஒவ்வொரு சூழ்நிலையிலும் தயாராக இருக்கிறார், அதனால் நடக்கும் எதை பற்றியும் பயப்படவில்லை. களைப்படையாமல் இருப்பது எனில் துல்லியமான முறையில் நிலைமையை புரிந்து கொள்வதும், அனைத்து கடினமான சூழ்நிலைகளிலும் முன்னோக்கிச் செல்வதற்கான திறனைப் பெற்றிப்பதும் ஆகும். இது ஒவ்வொரு சூழ்நிலையிலிருந்தும் கற்றுக் கொள்வதும் தொடர்ந்து முன்னேறுவதும் ஆகும்.

தீர்வு:

என் வாழ்க்கையின் அனைத்து சூழ்நிலைகளிலும் நான் களைப்படையாமல் இருப்பதென்றால், என்னால் விஷயங்களை தெளிவாக புரிந்துகொள்ள முடிகிறது என்பதாகும். நான் எவ்வித பயத்தையும் அனுபவம் செய்யவில்லை, ஆனால் நிச்சயமாக நான் வெற்றிகரமாக இருப்பேன் என்று தெரிந்து நம்பிக்கையுடன் முன்னேற முடிகின்றது. என்னுடைய களைப்பற்றதன்மையின் காரணமாக, மிக மோசமான சவால்கள் என் வழியே வந்தாலும் கூட நான் வெற்றியை உறுதி செய்கிறேன்.