24.05.20

 

இன்றைய சிந்தனைக்கு

 

மரியாதை:

அனைவருக்கும் மரியாதை கொடுப்பது என்பது சுய-கட்டுப்பாட்டுடன் இருப்பதாகும்.

சிந்திக்க வேண்டிய கருத்து:

நாம் சில சமயங்களில் நம்முடைய அதிகாரத்தை மற்றவர்களிடம் காட்டும் அவசியத்தை உணர்வதோடு அவர்களுடைய மரியாதையை வேண்டுகின்றோம். ஆனால்தாராள மனதுடன் கொடுக்கப்படாத மரியாதை உண்மையான மரியாதை அல்ல. விரைவிலேயே மற்றவர்களையோ அல்லது அவர்களுடைய நடத்தையையோ நாம் கட்டுப்படுத்த முடியாதிருப்பதை நாம் காண்கின்றோம். மேலும் குறைவாகவே சாதிக்க முடிகின்றது.

செயல்முறை:

காரியங்களை சிறப்பான வழியில் செய்து முடிப்பதற்கான வழி, அனைவருக்கும் மரியாதை கொடுப்பதோடுநம் அனைவரிடமும் இருக்கின்ற தனித்துவமான பரிசுகளையும்திறமைகளையும் ஏற்றுக்கொள்வதாகும். நான் மற்றவர்களை மதிக்கும்போதுஅவர்களும் என்னை மதிப்பார்கள். இந்த இருதரப்பட்ட மரியாதை ஒவ்வொருவரையும் புரிந்துகொள்ள உதவி செய்வதோடு அனைவருடைய நன்மைக்காகவும் நம்மை சேர்ந்து வேலை செய்ய அனுமதிக்கின்றது.