24.07.20

இன்றைய சிந்தனைக்கு

 

நேர்மறைதன்மை:

சுயத்தில் நேர்மறைதன்மையை பார்ப்பது என்பது தன்னுடைய உள்ளார்ந்த முழுமையை நோக்கிச் செல்வதாகும்.

சிந்திக்க வேண்டிய கருத்து:

நாம் தவறுகள் செய்யும் போதும்அல்லது நாம் சந்திக்கக்கூடிய சவால்களை சமாளிக்க முடியாதபோதும்நம்முடைய எதிர்மறையானவற்றை பார்க்க முனைகின்றோம். இந்த எதிர்மறையான தன்மைகளை நினைவு செய்வது என்பதுஅவற்றை பலப்படுத்துவது என்பதாகும். அதனால்நாம் அவற்றை மீண்டும் மீண்டும் பயன்படுத்துவதை பார்க்கின்றோம்.

செயல்முறை:

இன்றுநான் என்னுடைய கவனத்தை  எதிர்மறையான குணங்களில் செலுத்துவதற்கு மாறாகஎன்னுடைய நேர்மறையான குணங்களின் மேல் அதிக கவனத்தை செலுத்துவது அவசியம். நான் அதிகமாக நேர்மறையான குணங்களை பயன்படுத்தும்போது,அந்த குணங்கள் என்னுடைய வாழ்க்கையில் அதிகமாக தென்பட ஆரம்பிக்கும்.