25.01.23

இன்றைய சிந்தனைக்கு......

இனிமை :

உண்மையான இனிமை என்பது ஒவ்வொரு எண்ணம், சொல் மற்றும் செயலில் அமைதியாக இருப்பதாகும்.

சிந்திக்க வேண்டிய கருத்து: 

எண்ணங்களில் அமைதியானவர் வார்த்தைகளில் இனிமையாகவும் நடவடிக்கைகளில் நேர்மறையாகவும் இருக்க முடியும். இத்தகைய நபர் தன்னுடைய சொந்த நேர்மறையான குணங்கள் மற்றும் மற்றவர்களின் குணங்களின் அனுபவத்தையும் அளிக்க முடியும். எனவே, அத்தகைய நபரின் வாழ்க்கையில் அழகு, நேர்மறைத்தன்மை மற்றும் இனிமை உணரப்படுகிறது.

தீர்வு:

நான் முற்றிலும் அமைதியாக இருக்கும்போது, என் சொந்த அக அழகினை என்னால் அனுபவம் செய்ய முடிகின்றது. மனதின் மௌனத்தில், என்னால் அனைத்தையும் நேர்மறையான வழியில் பார்க்க முடிகின்றது. அதனால் எனக்கு எந்த ஒரு கடினமான சூழ்நிலையும் இல்லை, ஆனால் என்னுள் இருந்து சிறந்தவற்றை வெளியே கொண்டு வரும் சூழ்நிலைகளே இருக்கின்றன. நான் வாழ்க்கையின் இனிமையை அனுபவித்து வெற்றி நோக்கி தொடர்ந்து நகர்ந்து செல்கின்றேன்.