25.07.20

இன்றைய சிந்தனைக்கு

அன்பு

நல்லாசிகள் நிறைந்த வார்த்தைகள் மற்றவர்களிடம் மாற்றத்தை கொண்டுவருகிறது.

சிந்திக்க வேண்டிய கருத்து

நாம் மற்றவர்களை திருத்தும்போதுநம்முடைய வார்த்தைகளுக்கு சிறிதளவே விளைவு இருப்பதை நாம் அடிக்கடி பார்க்கின்றோம். நம்முடைய சொந்த எதிர்பார்ப்புகளில் நாம் அதிகமாக சிக்கிக்கொண்டுள்ளதால்நாம் அடுத்தவரை புரிந்துக்கொள்ள தவறிவிடுகின்றோம். அதன்பிறகுநமக்கு வேண்டியது நமக்கு கிடைப்பதில்லை. மேலும் உறவுமுறையும்பரஸ்பரம் திருப்தியில்லாததாகிவிட கூடும்.

செயல்முறை

நான் பேசும் வார்த்தைகளோடுநல்லாசிகளையும் சேர்க்கும்போதுஅன்பு உண்டாகிறது. அன்போடு பேசப்படும் வார்த்தைகளில்,சுயநலமும் எதிர்மறைத்தன்மையும் இல்லை. மேலும் மற்றவர்கள் மீது சக்திவாய்ந்த பலன் இருக்கிறது. அன்பாக பேசப்படும் வார்த்தைகள் மட்டுமேமற்றவர்களிடமும் தன்னிடமும் மாற்றத்தை கொண்டு வரும்.