25.11.19

இன்றைய சிந்தனைக்கு

அருள்பவர்:

தொடர்ந்து கொடுக்கும் ஒருவர் ஒர் உண்மையான அருள்பவர் ஆவார்.

சிந்திக்க வேண்டிய கருத்து:

பொதுவாக நமக்குக் கொடுக்கிறவர்களுக்கு மட்டுமே நாம் கொடுப்பவர்களாக இருக்கின்றோம். யாராவது நமக்கு அன்பு அல்லது மகிழ்ச்சி கொடுத்தால், நாமும் கொடுக்கத் தூண்டப்படுகிறோம். எனவே நாம் மற்றவர்களிடம் இருந்து பெறாவிட்டால், நமக்கு கொடுப்பது கடினமாகிவிடுகிறது.

தீர்வு:

நம்மிடம் வருபவர்கள் ஒருவரும் வேற்று கையோடு திருப்ப கூடாது என்ற நோக்கத்தை நாம் கொண்டிருக்க வேண்டும். அதாவது, அவர்களுக்கு அன்பு அல்லது மகிழ்ச்சியின் அனுபவம் அல்லது அந்த நேரத்தில் அவர்களுக்குத் தேவையானதை கொடுப்பது என்பதாகும். நாம்மிடம் அந்த நோக்கம் இருக்கும்போது, நாம் எதையும் பெறாவிட்டாலும் கூட நம்மால் கொடுக்க முடிகின்றது. பின்னர், நாம் கொடுக்கும்போது மட்டும்தான் நமக்கு கிடைக்கும் என்பதை நாம் காண்கிறோம்.