26/07/20

இன்றைய சிந்தனைக்கு

தன்னை கடவுளுடைய கருவியாக கருதுவது என்றால் இலேசாக இருப்பது என்பதாகும்.

சிந்திக்க வேண்டிய கருத்து:

கடவுளின் கருவியாக இருப்பது என்றால் கடவுளுடைய குணங்கள் தம்முடைய வாழ்க்கையில் வெளிப்பட அனுமதிப்பதாகும். இது கடவுளுடைய பணி நடைபெற தான்  தயாராக இருப்பது என்பதாகும். தன்னை ஒரு கருவியாக கருதுகிறவர்கள் அவரின் மூலம் செய்யப்படும் காரியத்தால் ஆணவம் கொள்வது கிடையாது அல்லது அவர்களுக்கு சூழ்நிலைகளை கையாளுவதில் எந்த சிரமமும் இருப்பது இல்லை. அவரால் அனைத்தையும் நன்றாகவும் எளிதாகவும் செய்ய முடியும்.

அனுபவம்:

நான் கடவுளின் ஒரு கருவியாக இருக்கும்போது,  நான் பொறுப்பாக இருக்கும் போதும் கூட என்னால் இலேசாக இருக்க முடிகிறது. ஒரு கருவியாக இருப்பதால்,  கடவுளுடைய பணியை என்னால் செய்ய முடிந்ததை நான் இயல்பாகவே கருதுகிறேன். நான் கடவுளுடைய கருவியாக இருப்பதால்,  என்னை மென்மேலும் அழகாக ஆக்கிக்கொள்ளும் பொறுப்பு எனக்கு இருக்கிறது.