27/07/20

இன்றைய சிந்தனைக்கு

வலிமையாக இருப்பதென்றால் உடலின் பாதிப்பிலிருந்து விடுபட்டு இருப்பதாகும்.

சிந்திக்க வேண்டிய கருத்து:  உடல் மனதின் மீது செல்வாக்கு செலுத்த அனுமதிப்பது இருமடங்காக நோயுற்றிருப்பதாகும். தன்னை இருமடங்காக நோயுற்றிருப்பதை அனுமதிக்கும் ஒருவரால் உடலின் நோயை சமாளிக்க முடியாது. மறுபுறம்,  மனதளவில் சக்திவாய்ந்தவர் நோயைச் சமாளிக்கும்போதும் உள்ளார்ந்த பலத்தை பராமரித்து அவரால் மேலும் முயற்சி செய்து அதை முடிக்கவும் முடியும்.

அனுபவம்:

உடலின் நோயை உணருவதற்குப் பதிலாக,  நான் செய்ய வேண்டிய அனைத்தும் உள்ளார்ந்தமாக நான் சக்திசாலியாக இருகின்றேன் என்ற சிந்தனையை பராமரிப்பதாகும். அதன்பின் நான் உடலின் நோய் பற்றி பயப்பட மாட்டேன்,  ஆனால் எனக்கு அதை சமாளிக்க தைரியம் இருக்கும். என்னால் நோயை தற்காலிகமான ஒன்றாக பார்க்க முடிகிறது,  மேலும் விரைவில் நான் நலம்பெறுவதை பார்க்கின்றேன்ஏனென்றால் நான் உள்ளுக்குள் சக்திவாய்ந்தவன்.