29.11.19

இன்றைய சிந்தனைக்கு

நேர்மையான இதயம்:

நேர்மையான இதயத்தோடு தனது பொக்கிஷங்களை அங்கீகரித்து பயன்படுத்துபவர்கள் உண்மையான அதிருஷ்டசாலிகள்.

சிந்திக்க வேண்டிய கருத்து:

சில நேரங்களில் நாம் சந்திக்க நேரிடும் சில சந்தர்ப்பங்கள் நாம் அதிக அதிருஷ்டசாலிகள் இல்லை என்று நம்மை உணர செய்கிறது. அந்நேரத்தில் நேர்மறையான விளைவுகள் கிடைக்கவேண்டும் என்பதற்காக நம்மிடம் இருந்திருக்க வேண்டிய அனைத்தை பற்றியும் நாம் சிந்திக்கிறோம். இவ்வகையான சிந்தனையின் காரணமாக, நம்மிடம் இருக்கும் பொக்கிஷங்களை பயன்படுத்த நாம் தவறிவிட கூடும்.

தீர்வு:

நமக்குள் நம் நடைமுறை வாழ்க்கையில் பயன்படுத்தக்கூடிய அநேக பொக்கிஷங்கள் இருக்கின்றன. இந்த பொக்கிஷங்கள் நம் திறன்கள், திறமைகள் அல்லது நம்முடைய சில சிறப்பு அம்சங்களாக இருக்கலாம். அனைத்து சூழ்நிலைகளிலும் இந்த பொக்கிஷங்களைப் பற்றிய நமக்கு ஒரு விழிப்புணர்வு இருப்பது அவசியம். நாம் அவற்றை அறிந்திருக்கும்போது, சரியான முறையில் அனைத்தும் நிகழவேண்டும் என்று எதிர்பார்ப்பு கொள்வதற்கு பதிலாக தினமும் நாம் நம் வாழ்க்கையில் அவற்றை நடைமுறை படுத்த ஆரம்பித்துவிடுகின்றோம்.