31/07/20

இன்றைய சிந்தனைக்கு

அமைதியாக இருப்பது என்பது சுற்றியுள்ளவர்களுக்கு ஆதரவளிப்பதாகும்.

 

சிந்திக்கவேண்டிய கருத்து: சுற்றிலும் எதிர்மறை இருக்கும்போது கூட உள்ளார்ந்த அமைதி இருந்தால்சுற்றியுள்ளவர்களுக்கு ஆதரவளிக்கும் திறன் உள்ளது. சவாலான காலங்களில் தேவைப்படுபவர்களுக்கு இந்த ஆதரவை வழங்குவதே ஒருவர் செய்யக்கூடிய மிகப்பெரிய சேவை ஆகும். குழப்பமான சூழ்நிலைகளில் கூட நிம்மதியாக இருப்பவர் ஒரு எடுத்துக்காட்டு ஆகின்றார்.

 

அனுபவம்: அனைத்து சூழ்நிலைகளிலும் எனது சொந்த உள்ளார்ந்த நிலையை அமைதியாக பராமரிக்க முடிந்தால்,  நடக்கும் அனைத்திலிருந்தும் என்னால் கற்றுக்கொள்ள முடிகிறது. நேர்மறையின் அதிர்வுகளால் என்னைச் சுற்றியுள்ளவர்களுக்கு என்னால் நன்மையளிக்க முடிகிறது. தேவைப்படும் அனைவருக்கும் நான் உத்வேகம் மற்றும் ஆதரவின் ஆதாரமாக மாறுகிறேன்.