01.01.2019        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்:
இனிய குழந்தைகளே, இங்கே நீங்கள் அஞ்ஞாத வாசத்தில் இருக்கிறீர்கள். குழந்தைகளாகிய நீங்கள் நல்ல உணவு உண்பதிலோ அல்லது நல்ல ஆடைகள் அணிவதிலோ ஆர்வம் கொள்ளக்கூடாது. கல்வியிலும் உங்கள் கதாபாத்திரத்திலும் (உhயசயஉவநச) முழுக் கவனம் செலுத்துங்கள்.

கேள்வி:
சதா ஞான இரத்தினங்களால் நிறைந்தவர்களாக இருப்பதற்கான வழி என்ன?

பதில்:
தானம் செய்வதாகும்: எவ்வளவுக்கு அதிகமாக நீங்கள் மற்றவர்களுக்கு இரத்தினங்களைத் தானம் செய்கின்றீர்களோ, அந்தளவுக்கு அதிகமாக நீங்கள் நிறைந்தவர்களாக இருப்பீர்கள். விவேகமான குழந்தைகளே, அவற்றைச் செவிமடுத்துக் கிரகித்துப் பின்னர் அவற்றை மற்றவர்களுக்கும் தானம் செய்பவர்கள். புத்தியில் ஒரு துவாரம் இருப்பின், இரத்தினங்கள் வெளியேறி விடுவதனால், உங்களால் கிரகிக்க முடியாமல் இருக்கிறது. ஆகவே ஒழுங்குமுறையுடன் கற்றுக்கொள்ளுங்கள். ஐந்து விகாரங்களிலிருந்தும் தூர விலகியிருங்கள். ரூப்பும் பசாந்தும் ஆகுங்கள்.


ஓம்சாந்தி.
ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளாகிய உங்களுக்கு விளங்கப்படுத்துகிறார். ஆன்மீகத் தந்தை பௌதீகப் புலன்கள் மூலம் பேசுகிறார். ஆன்மீகக் குழந்தைகளும் பௌதீகப் புலன்கள் மூலம் செவிமடுக்கிறார்கள். இது புதியதொன்று. உலகிலுள்ள எம் மனிதராலும் இதனைக் கூற முடியாது. நீங்கள் செய்யும் முயற்சிக்கேற்ப, வரிசைக்கிரமமாகவே, நீங்களும் இதனை விளங்கப்படுத்துகிறீர்கள். இது ஓர் ஆசிரியர் கற்பிக்கும்பொழுது மாணவர்களின் பதிவேடு அனைத்தையும் காட்டுவதைப் போன்றதாகும். அவர்களின் பதிவேட்டிலிருந்து அவர்களின் நடத்தையையும், அவர்கள் எவ்வாறு கற்கிறார்கள் என்பதையும் உங்களால்; கூறமுடியும். கல்வியும், கதாபாத்திரமுமே பிரதான விடயம். இது வேறு எவராலும் கற்பிக்க முடியாத, இறை கல்வி. இது படைப்பவரினதும், படைப்பான உலகச் சக்கரத்தினதும் ஆரம்பம், மத்தி, இறுதியின் ஞானமாகும். முழு உலகிலும் உள்ள மனிதர் எவருக்குமே இது தெரியாது. அதிகாரங்களைக் கொண்ட கல்விமான்களாகிய புராதன ரிஷிகளும், முனிவர்களும் தங்களுக்குப் படைப்பவரையும், படைப்பைப் பற்றியும் தெரியாது என்று கூறுவதுண்டு;. தந்தையே வந்து தனது சொந்த அறிமுகத்தைக் கொடுத்தார். இது முட்காடு என்பது நினைவுகூரப்பட்டது. ஒரு காடு நிச்சயமாகத் தீப்பற்றி எரியும். ஒரு மலர்கள் நிறைந்த பூந்தோட்டம் ஒருபொழுதும் தீப்பற்றி எரிய முடியாது, ஏனெனில் பூந்தோட்டம் பசுமையானது. காடு முழுவதும் வரண்டு உள்ளது. ஆனால் பசுமை நிறைந்த, நறுமணமுள்ள பூந்தோட்டம் ஒருபொழுதும் தீப்பற்றாது; ஆனால் ஒரு வரண்ட காடு விரைவில் தீப்பற்றி எரியும். இதுவே தீப்பற்றிய, எல்லையற்ற காடாகும். பூந்தோட்டமும் ஸ்தாபிக்கப்பட்டது. உங்கள் பூந்தோட்டம் ஒரு மறைமுகமான முறையில் ஸ்தாபிக்கப்படுகிறது. நாங்கள் பூந்தோட்டத்தின் மலர்களாக, அதாவது, நறுமணம்மிக்க தேவர்களாக ஆகுகின்றோம் என்பது உங்களுக்குத் தெரியும். அது சுவர்க்கம் என்று அழைக்கப்படுகிறது. சுவர்க்கம் இப்பொழுது ஸ்தாபிக்கப்படுகிறது. நீங்கள் மக்களுக்கு எந்தளவு விளங்கப்படுத்தினாலும், அது எவரது புத்தியிலும் இருப்பதில்லை என்பது அதிசயமே. இந்தத் தர்மத்துக்கு உரியவர்கள் அல்லாதவர்களின் புத்தியில் இது இருக்க மாட்டாது. அவர்கள் அதனை ஒரு காதால் கேட்டு, மறு காதினால் அதனை வெளியே செல்ல விடுகின்றார்கள். பாரதத்தில் மிகச் சிலரே சத்திய, திரேதா யுகங்களில் இருக்கிறார்கள். பின்னர் துவாபர, கலியுகங்களில் அதிகளவு வளர்ச்சி இடம்பெறுகிறது. அங்கு அவர்களுக்கு ஒன்று அல்லது இரண்டு குழந்தைகளே உள்ளனர். ஆனால் இங்கோ அவர்களுக்கு நான்கு அல்லது ஐந்து குழந்தைகள் உள்ளனர். ஆகவே, நிச்சயமாக அங்கு வளர்ச்சி இருக்கும். பாரத மக்கள் இப்பொழுது இந்துக்கள் என்று அழைக்கப்படுகின்றனர். உண்மையில் அவர்கள் தேவ தர்மத்துக்கு உரியவர்களாக இருந்தனர். ஏனைய சமயங்களைச் சேர்ந்தவர்கள் தங்கள் சமயத்தை மறப்பதில்லை. பாரத மக்களே இதனை மறந்துள்ளார்கள். பாருங்கள், ஏராளமான மக்கள் இப்பொழுது உள்ளனர். அவர்கள் அனைவரும் இங்கு வந்து ஞானத்தைப் பெற முடியாது. உங்கள் ஒவ்வொருவராலும் உங்கள் பிறவி;களைப் புரிந்துகொள்ள முடியும். முழு 84 பிறவிகளையும் எடுததுள்ளவர்களே நிச்சயமாக மிகவும் பழமையான பக்தர்கள். நீங்கள் எந்தளவு பக்தி செய்துள்ளீர்கள் என்பதை நீங்களே புரிந்துகொள்ளலாம். நீங்கள் குறைந்தளவு பக்தி செய்திருந்தீர்களாயின் குறைந்தளவு ஞானத்தைப் பெறுவதுடன், குறைந்தளவு மக்களுக்கே விளங்கப்படுத்துவீர்கள். நீங்கள் அதிகளவு பக்தி செய்திருந்தால், அதிகளவு ஞானத்தைப் பெற்று, வேறு பலருக்கும் ஞானத்தை விளங்கப்படுத்துவீர்;கள். நீங்கள் அந்தளவு ஞானத்தைப் பெறாவிட்டால் உங்களால் அந்தளவு விளங்கப்படுத்தவும் முடியாது. ஆகவே நீங்கள் குறைந்தளவு பலனையே பெறுகிறீர்கள். ஒரு கணக்கு உள்ளது. இஸ்லாமியர்கள் எத்தனை பிறவிகள் எடுப்பார்கள் என்றும், பௌத்தர்கள் எத்தனை பிறவிகள் எடுப்பார்கள் என்றும் ஒரு குழந்தை கணக்கிட்டுத் தந்தைக்கு அனுப்பியுள்ளார். புத்தரும் ஒரு சமய ஸ்தாபகரே. அவருக்கு முன்னர் பௌத்த சமயத்தைச் சேர்ந்தவர்கள் எவரும் இருக்கவில்லை. புத்தரின் ஆத்மா ஒருவருள் புகுந்து, பௌத்த சமயத்தை ஸ்தாபித்தார். ஒருவரிலிருந்து பின்னர் விரிவாக்கம் ஏற்பட்டது. அவரும் மக்களின் தந்தையாவார் (பிரஜாபிதா). பின்னர் அவரிலிருந்து அதிகளவு விரிவாக்கம் இடம்பெற்றது. நீங்கள் புதிய உலகில் அரசர்கள் ஆகவேண்டும். இங்கு நீங்கள் அஞ்ஞாத வாசத்தில் உள்ளீர்கள். நீங்கள் எதிலும் ஆர்வத்தைக் கொண்டிருக்கக்கூடாது. நான் நல்ல ஆடைகள் அணிய விரும்புகிறேன். அதுவும் சரீர உணர்வாகும். உங்களுக்குக் கிடைத்தவை அனைத்தும் நல்லவையே. உலகம் ஒரு குறுகிய காலத்திற்கு மாத்திரமே இருக்கப் போகின்றது. இங்கு நீங்கள் நல்ல ஆடைகளை அணிந்தால் அங்கு அவை குறைக்கப்படும். நீஙகள் அந்த ஆர்வத்தைத் துறக்க வேண்டும். குழந்தைகளாகிய நீங்கள் மேலும் முன்னேறிச் செல்லும்பொழுது, இயல்பாகவே தொடர்ந்தும் காட்சிகளைக் காண்பீர்கள். இவர் பெருமளவு சேவை செய்கின்றார் என்று நீங்களே கூறுவீர்கள். அது ஓர் அற்புதமாகும். அவர் நிச்சயமாக ஓர் உயர்ந்த இலக்கத்தைக் கோருவார். பின்னர், நீங்கள் தொடர்ந்தும் மற்றவர்களை உங்களைப் போன்று ஆக்குவீர்கள். நாளுக்கு நாள் பூந்தோட்டம் வளரும். எவ்வாறாயினும் சத்திய, திரேதா யுகங்களில் இருக்கின்ற தேவர்கள் இங்கே மறைமுகமான வடிவில் அமர்ந்திருக்கிறார்கள். அவர்கள் பின்னர் வெளிப்படுத்தப்படுவார்கள். இப்பொழுது நீங்;கள் ஒரு மறைமுகமான அந்தஸ்தைக் கோருகின்றீர்கள். நீங்கள் மரண பூமியில் கற்கின்றீர்கள் என்பதும், நீங்கள் உங்கள் அந்தஸ்தை அமரத்துவப் பூமியில் பெறுவீர்கள் என்பதும் உங்களுக்குத் தெரியும். அவ்வாறான ஒரு கல்வியை நீங்கள் எப்பொழுதாவது கண்டுள்ளீர்களா? எவ்வாறு பழைய உலகில் நீங்கள் கற்று, புதிய உலகில் உங்கள் அந்தஸ்தைப் பெறுகிறீர்கள் என்பது ஓர் அற்புதமாகும். உங்களுக்குக் கற்பிக்கும் அந்த ஒரேயொருவரே அமரத்துவ பூமியின் ஸ்தாபனையையும், மரண பூமியின் விநாசத்தையும் தூண்டுபவரும் ஆவார். உங்களுடைய இந்த அதிமங்களகரமான சங்கமயுகம் மிகவும் குறுகியது. இந்த யுகத்திலேயே தந்தை உங்களுக்குக் கற்பிக்க வருகிறார். அவர் வந்தவுடன் உங்கள் கல்வி ஆரம்பமாகுகிறது. இதனாலேயே தந்தை கூறுகிறார்: சிவபாபாவின் பிறந்தநாளே கீதையின் பிறந்த நாளும் என்பதை எழுதுங்கள். மக்களுக்கு அந்த ஒரேயொருவரைத் தெரியாது. அவர்கள் கிருஷ்ணரின் பெயரைக் குறிப்பிட்டுள்ளார்கள். இப்பொழுது இந்தத் தவறையாவது குறைந்தபட்சம் எவராவது ஒருவர் புரிந்துகொள்;ள வேண்டும்! பல பிரபல்யமானவர்கள் நூதனசாலைக்கு விஜயம் செய்வதற்கு வருகிறார்கள். அவர்களுக்குத் தந்தையைத் தெரியும் என்றில்லை; இல்லவேயில்லை! இதனாலேயே பாபா கூறுகிறார்: அவர்கள் எதனையாவது கற்றுக் கொண்டார்களா இல்லையா என்று நீங்;கள் கூறுவதற்கு ஒரு படிவத்தை நிரப்பும்படி அவர்களைக் கேளுங்கள். இல்லாவிட்டால், அவர்கள் இங்கே வந்தால் வேறு எதனைச் செய்வார்கள்? அங்கு அவர்கள் சந்நியாசிகள், புனிதர்கள் மற்றும் மகாத்மாக்கள் போன்றோரிடம் செல்வது போன்று இங்கு இல்லை. இவர் அந்தச் சாதாரண வடிவிலேயே உள்ளார். அவரின் ஆடைகளில் எவ்வித மாற்றமும் இல்லை. இதனாலேயே எவராலும் புரிந்துகொள்ள முடியாதுள்ளது. அவர் ஒரு வைர வியாபாரியாக இருந்தார் என்பதை அவர்கள் புரிந்துகொள்கிறார்கள். அவர் முதலில் அழியும் இரத்தினங்களின் வியாபாரத்தைச் செய்;தார். இப்பொழுது அவர் அழிவற்ற இரத்தினங்களின் வியாபாரத்தைச் செய்கின்றார். பெரிய வர்த்தகரும், மந்திரவாதியும், இரத்தினக் கல் வியாபாரியுமான எல்லையற்ற தந்தையுடன் நீங்கள் ஒரு பேரத்தைச் செய்கின்றீர்கள். ஆகவே நீங்கள் ஒவ்வொருவரும் உங்களை ரூப்பாகவும், பசாந்தாகவும் கருதவேண்டும். நாங்கள் பல நூறாயிரம் பெறுமதிமிக்க ஞான இரத்தினங்களை எங்களுக்குள்; வைத்திருக்கின்றோம். இந்த ஞான இரத்தினங்களின் மூலம் நீங்கள் தெய்வீகப் புத்தியுடையவர்கள் ஆகுகின்றீர்கள். அதுவும் புரிந்துகொள்ள வேண்டிய விடயங்கள். இவ்விடயங்களைக் கிரகித்துக் கொள்ளக்கூடிய சி;றந்த விவேகமான குழந்தைகள் சிலர் உள்ளனர். எதனையும் கிரகித்துக் கொள்ள முடியாத ஒருவரினால் எவ்விதப் பயனுமில்லை. அனைத்தும் வெளியே சென்று விடுகின்ற துவாரமுள்ள புத்தியையே அவர் கொண்டிருக்கின்றார்; என்றே கருதுங்கள். தந்தை கூறுகிறார்: நான் உங்களுக்கு அழிவற்ற ஞான இரத்தினங்களைத் தானம் செய்கின்றேன். நீங்கள் தொடர்ந்தும் தானம் செய்தால், நிறைந்தவர்களாக இருப்பீர்கள். இல்லாவிட்டால் உங்களிடம் எதுவும் இருக்காது. நீங்கள் வெறுமையாக இருப்பீர்கள். நீங்கள் கற்கவும் மாட்டீர்கள். ஒழுக்கத்துடன் முன்னேறவும் மாட்டீர்கள். இங்குள்ள பாடங்கள் மிகச் சிறந்தவை. நீங்கள் ஐந்து விகாரங்களிலிருந்தும் முற்றாக விடுபட வேண்டும். ரக்ஷாபந்தன் கொண்டாட்டமும் இந்நேரத்தையே குறிக்கின்றது என்று தந்தை விளங்கப்படுத்தியுள்ளார். எவ்வாறாயினும் ஏன் ராக்கி கட்டப்படுகின்றது என்பதை மக்கள் புரிந்துகொள்வதில்லை. அவர்கள் தொடர்ந்தும் தூய்மையற்றவர்களாக இருந்தபொழுதிலும் ராக்கி கட்டிக்கொள்கிறார்கள். முன்னர் பிராமணப் பூசாரிகள் ராக்கியைக் கட்டினார்கள். இப்பொழுது சகோதரிகள் சகோதரர்களுக்கு அதனைக் கட்டுகிறார்கள். இது ஒரு பரிசுப் (பொதுவாகப் பணம்) பரிமாற்றம். அங்கு தூய்மை என்ற கேள்விக்கே இடமில்லை. அவர்கள் மிக நாகரீகமான ராக்கிகளைத் தயாரிக்கிறார்;கள். இந்தத் தீபாவளி, தசேரா போன்ற விழாக்கள் அனைத்தும் சங்கம யுகத்திற்கானவை. தந்தையால் மேற்கொள்ளப்பட்ட செயற்பாடுகள் பின்னர் பக்தி மார்க்கத்தில் தொடர்கின்றன. தந்தை உங்களுக்கு உண்மையான கீதையைக் கூறி, உங்களை இலக்ஷ்மி, நாராயணன் ஆக்குகிறார். இப்பொழுது நீங்;கள் முதலாவது தரத்திற்குள் செல்லவுள்ளீர்கள். சத்திய நாராயணனின் கதையைக் கேட்ட பின்னர் நீங்கள் சாதாரண மனிதரிலிருந்து நாராயணனாக மாறுகின்றீர்கள். குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது முழு உலகையும் விழித்தெழச் செய்யவேண்டும். உங்களுக்கு அதிக யோக சக்தி வேண்டும். யோக சக்தி மூலம் மாத்திரமே நீங்கள் ஒவ்வொரு கல்பத்திலும் சுவர்க்கத்தை ஸ்தாபிக்கிறீர்கள். யோக சக்தியின் மூலம் ஸ்தாபனை இடம்பெறுகிறது, பௌதீகச் சக்தி மூலம் விநாசம் இடம்பெறுகிறது. இவையே இரு வார்த்தைகளுமாகும்: அல்பாவும், பீற்றாவும். நீங்கள் யோக சக்தியின் மூலம் உலக அதிபதிகள் ஆகுகின்றீர்கள். உங்கள் ஞானம் முற்றிலும் மறைமுகமானது. நீங்கள் சதோபிரதானாக இருந்தீர்கள். இப்பொழுது தமோபிரதான் ஆகியுள்ளீர்கள். நீங்கள் மீண்டும் ஒருமுறை சதோபிரதான் ஆகவேண்டும். அனைத்தும் நிச்சயமாகப் புதியதிலிருந்து பழையது ஆகவேண்டும். புதிய உலகில் எதுதான் இருக்காது? பழைய உலகில் எதுவுமே இல்லை; அது ஒரு வெறுமையான பெட்டியாகும். முன்பு பாரதம் சுவர்க்கமாக இருந்தது. இப்பொழுது பாரதம் நரகமாகி விட்டது; பகலுக்கும், இரவுக்குமான வித்தியாசம் உள்ளது. அவர்கள் இராவணனின் கொடும்பாவிகளைச் செய்து, அவற்றை எரிக்கின்றார்கள். ஆனால் அவர்களுக்கு அதன் அர்த்தம் தெரியாது. அம்மக்கள் என்ன செய்கின்றார்கள் என்பதை நீங்கள் இப்பொழுது புரிந்துகொள்கிறீர்கள். நேற்று நீங்களும் அறியாமையில் இருந்தீர்கள். ஆனால் இன்று உங்களிடம் ஞானம் உள்ளது. நேற்று நீங்கள் நரகத்தில் இருந்தீர்கள். இன்று நீங்கள் உண்மையில் சுவர்க்கத்திற்குச் செல்கிறீர்கள். இது, உலக மக்கள் இன்னார் இன்னார் சுவர்க்கவாசிகள் ஆகிவிட்டார்கள் என்று கூறுவது போன்றதல்ல. இப்பொழுது நீங்கள் சுவர்க்கத்திற்குச் செல்வீர்களாயின், நரகம் இருக்காது. இவ் விடயங்கள் புரிந்துகொள்ளப்பட வேண்டும். இது ஒரு விநாடிக்கான விடயம். தந்தையை நினைவுசெய்யுங்கள். உங்கள் பாவங்கள் அழிக்கப்படும். தொடர்ந்தும் அனைவருக்கும் இதனைக் கூறுங்கள். அவர்களிடம் கூறுங்கள்: நீங்கள் அவர்களைப் (இலக்ஷ்மி, நாராயணன்) போல் இருந்தீர்கள். 84 பிறவிகளை எடுத்த பின்னர் நீங்கள் இவ்வாறு ஆகியுள்ளீர்கள். நீங்கள் சதோபிரதானிலிருந்து தமோபிரதான் ஆகியுள்ளீர்கள். மீண்டும் ஒருமுறை நீங்கள் சதோபிரதான் ஆகவேண்டும். ஆத்மாக்கள் ஒருபொழுதும் அழிவதில்லை. ஆனால் அவர்கள் நிச்சயமாக மீண்டும் ஒருமுறை தமோபிரதானிலிருந்து சதோபிரதான் ஆகவேண்டும். பாபா தொடர்ந்தும் பல்வேறு வழிகளில் உங்களுக்கு விளங்கப்படுத்துகிறார். எனது பற்றறி (டியவவநசல) ஒருபொழுதும் பழையதாகுவதில்லை. பாபா கூறுகிறார்: உங்களை ஒரு புள்ளியான, ஓர் ஆத்மாவாகக் கருதுங்கள். அவர்கள் கூறுகின்றார்கள்: இவருடைய ஆத்மா பிரிந்து விட்டார்;. ஆகவே ஓர் ஆத்மா, தனது சம்ஸ்காரங்களுக்கு ஏற்ப, ஒரு சரீரத்தை நீக்கி இன்னொன்றை எடுக்கிறார். இப்பொழுது ஆத்மாக்கள் வீடு திரும்ப வேண்டும். இதுவும் நாடகமாகும். உலகச் சக்கரம் மீண்டும் தொடர்கிறது. இப்பொழுது இறுதியில் அவர்கள் சனத்தொகையைக் கணக்கிட்டுக் கூறுகிறார்கள்: உலகில் இந்தளவு மக்கள் உள்ளனர். அவர்கள் ஏன் இந்தளவு ஆத்மாக்கள் உள்ளனர் என்று கூறுவதில்லை? தந்தை கூறுகிறார்: குழந்தைகள் என்னை அதிகளவு மறந்து விட்டார்கள். பின்னர் நான் வந்து அனைவருக்கும் நன்மையளிக்க வேண்டும். இதனாலேயே அவர்கள் தந்தையைக் கூவியழைக்கிறார்கள். நீங்கள் தந்தையை மறந்து விடுகிறீர்கள். ஆனால் தந்தை குழந்தைகளாகிய உங்களை மறப்பதில்லை. தூய்மையற்றவர்களைத் தூய்மையானவர்கள் ஆக்குவதற்கே தந்தை வருகிறார். இவர் கௌமுக் (பசுவின் வாய்) ஆவார். எருது போன்ற கேள்விக்கு இடமில்லை. இதுவே அதிர்ஷ்ட இரதமாகும். பாபா குழந்தைகளாகிய உங்களுக்குக் கூறுகிறார்: சிவபாபா உங்களை அலங்கரிக்கிறார். இதனை உறுதியாக நினைவுசெய்யுங்கள். சிவபாபாவை நினைவுசெய்வதில் அதிகமான நன்மைகளுண்டு. பாபா உங்களுக்கு இவர் (பிரம்மா) மூலம் கற்பிக்கிறார். ஆனால் நீங்கள் இவரை நினைவுசெய்யக்கூடாது. சிவபாபா ஒருவர் மாத்திரமே சற்குரு. நீங்கள் உங்களை அவருக்கு அர்ப்பணிக்க வேண்டும். இவரும் தன்னை அவருக்கே அர்ப்பணித்துள்ளார். தந்தை கூறுகிறார்: சதா என்னை மாத்திரம் நினைவுசெய்யுங்கள். குழந்தைகளாகிய நீங்கள் மலர்கள் நிறைந்த உலகமான, சத்திய யுகத்திற்குச் செல்கின்றீர்கள். ஆகவே ஏன் நீங்கள் முட்களில் பற்று வைக்க வேண்டும்? 63 பிறவிகளாக நீங்கள் பக்திக்கான சமயநூல்களைக் கற்று, வழிபட்டு வருகிறீர்கள்; நீங்கள் முதலில் சிவபாபாவை வழிபட்டீர்கள். இதனாலேயே நீங்கள் சோமநாதருக்கு ஆலயத்தைக் கட்டினீர்கள். அரசர்கள் அனைவரினதும் அரண்மனைகளிலும் ஆலயங்கள் இருந்தன் அங்கு பல வைரங்களும், இரத்தினங்களும் இருந்தன. பின்னரே ஆலயங்;கள் தாக்கப்பட்டன. அவர்கள் ஓர் ஆலயத்திலிருந்து ஏராளமான தங்கம் போன்றவற்றை எடுத்துச் சென்றார்கள். நீங்கள் அவ்வாறான ஒரு செல்வம் கொழிக்கும் உலகிற்கு அதிபதிகள் ஆகுகின்றீர்கள். அவர்கள் செல்வந்தர்களாகவும், உலக அதிபதிகளாகவும் இருந்தார்கள். ஆனால் எவ்வளவு காலத்திற்கு முன்னர் அவர்களின் இராச்சியம் ஸ்தாபிக்கப்பட்டது என்பது எவருக்கும் தெரியாது. தந்தை கூறுகிறார்: அது 5000 வருடங்களுக்கு முன்னராகும். அவர்கள் 2500 வருடங்கள் ஆட்சிசெய்தார்கள். எஞ்சிய 2500 வருடங்களில் கிளைகளும், சிறுகிளைகளும் தொடர்ந்து வளர்ந்தன. எல்லையற்ற தந்தை உங்களுக்குக் கற்பிக்கின்றார் என்று குழந்தைகளாகிய நீங்;கள் மிகவும் சந்தோஷப்பட வேண்டும். நீங்கள் மிகுந்த செல்வத்தைப் பெறுகிறீர்கள். சமுத்திரத்திலிருந்து தேவர்கள் தட்டுக்கள் நிறைய இரத்தினங்களுடன் வெளிவருவதாக அவர்கள்; சித்தரித்துள்ளார்கள். நீங்கள் இப்பொழுது தட்டுக்கள் நிறைய ஞான இரத்தினங்களைப் பெறுகின்றீPர்கள். தந்தை ஞானக் கடலாவார். சிலர் தங்கள் தட்டுக்களை மிக நன்றாக நிரப்புகின்றார்கள். ஆனால் ஏனையவர்களின் தட்டுக்களிலிருந்து அனைத்தும் வெளியேறிவிடுகின்றன. நன்றாகக் கற்று, ஏனையவர்களுக்கும் கற்பிப்பவர்கள் நிச்சயமாக செல்வம் மிக்கவர்கள் ஆகுவார்கள். ஓர் இராச்சியம் ஸ்தாபிக்கப்படுகின்றது; இது நாடகத்தில் நிச்சயிக்கப்பட்டுள்ளது. நன்றாகக் கற்பவர்களே ஒரு புலமைப்பரிசிலைப் பெறுவார்கள். இது அழிவற்ற, இறை புலமைப்பரிசில். ஏனையவை அழியக்கூடியவை. ஏணி மிகவும் அற்புதமானது. அது 84 பிறவிகளின் கதையாகும். தந்தை கூறுகிறார்: மிகவும் பெரிதாக, தூரத்திலிருந்தும் தெளிவாகப் பார்க்கக்கூடியதாக ஏணியின் திரான்ஸ் லைட் (வசயளெடiபாவ) படமொன்றைச் செய்யுங்கள். அதனைப் பார்க்;கும் மக்கள் அதிசயப்படுவார்கள். அப்பொழுது உங்கள் பெயர் தொடர்ந்து புகழடையும். இப்பொழுது சுற்றிச் சுற்றி வருபவர்கள் இறுதியில் மீண்டும் வருவார்கள். அவர்கள் இரண்டு முதல் நான்கு தடவைகள் சுற்றி வருவார்கள். பின்னர் அது அவர்களின் பாக்கியத்தில் இருந்தால் அவர்கள் நிலைத்திருக்கிறார்கள். ஒரேயொரு சுவாலை மாத்திரமே உள்ளது; வேறு எங்கே அவர்களால் செல்ல முடியும்? குழந்தைகளாகிய நீங்கள் மிகவும் இனிமையானவர்களாக வேண்டும். யோகத்தில் இருந்தால் மாத்திரமே உங்களால் இனிமையானவர்களாக முடியும். யோகத்தின் மூலம் மாத்திரமே நீங்கள் ஈர்க்கப்படுவீர்கள். துரு நீக்கப்படும்வரை எவரும் ஈர்க்கப்பட மாட்டார்கள். இந்த ஏணியின் இரகசியத்தை ஆத்மாக்கள் அனைவருக்கும் கூறுங்கள். படிப்படியாக அனைவரும் வரிசைக்கிரமமாக அறிந்துகொள்வார்கள். இதுவே நாடகமாகும். உலகின் வரலாறும் புவியியலும் தொடர்ந்து மீண்டும் மீண்டும் இடம்பெறும். இதனை விளங்கப்படுத்திய ஒரேயொருவரை நீங்கள் நினைவுசெய்ய வேண்டும். அவர்கள் தந்தையைச் சர்வவியாபி என அழைக்கின்றனர். ஆனால் மாயையே சர்வவியாபியாக இருக்கிறாள். இங்கு உங்களின் தந்தை உள்ளார். ஏனெனில் அவர் ஒரு விநாடியில் இங்கு வரக்கூடியவர். பாபா சதா இவரில் இருக்கின்றார் என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். அவரே கரன்கரவன்ஹார். அவர் அனைத்தையும் செய்வதுடன், அனைத்தையும் செய்வதற்கும்; தூண்டுகிறார். அவர் குழந்தைகளாகிய உங்களுக்கு வழிகாட்டல்களைக் கொடுப்பதுடன், தொடர்ந்தும் செயற்படுகிறார். இந்தச் சரீரத்தில் இருக்கும்பொழுது, அவரால் எதைச் செய்ய முடியும் என்றும், எதைச் செய்ய முடியாதென்றும் தீர்மானியுங்கள். பாபா உண்பதில்லை; அவர் நறுமணத்தை மாத்திரம் எடுக்கிறார். அச்சா

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய எப்போதோ தொலைந்து இபபோது கண்டெடுக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு தந்தை தாயாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை, ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார். 
 

தாரணைக்கான சாராம்சம்:

1. ரூப்பும், பசாந்தும் ஆகுங்கள். அழிவற்ற ஞான இரத்தினங்களால் உங்கள் புத்தியைச் சதா நிரப்பி வைத்திருங்கள். உங்கள் புத்தியில் துவாரம் இல்லாதிருக்கட்டும். ஞான இரத்தினங்களைக் கிரகிப்பதுடன், அவற்றை ஏனையவர்களுக்கும்; தானம் செய்யுங்கள்.

2. ஒரு புலமைப்பரிசிலைக் கோருவதற்கு நன்றாகக் கற்றுக்கொள்ளுங்கள். முழுமையான அஞ்ஞாத வாசத்தில் இருங்கள். எவ்விதமான ஆர்வத்தையும் கொண்டிராதீர்கள். ஒரு நறுமணம் மிக்க மலராகி, மற்றவர்களையும் அவ்வாறு ஆக்குங்கள்.


ஆசீர்வாதம்:
நீங்கள் ஏனையோருக்காகத் தூய, ஆக்கபூர்வமான எண்ணங்களைக் கொண்டிருந்து, அனைவராலும் நேசிக்கப்படுவதால் அனைவரினதும் ஒத்துழைப்பைப் பெறுவீர்களாக.

ஏனையோருக்காகத் தூய, ஆக்கபூர்வமான எண்ணங்களைக் கொண்ட ஆத்மாக்கள் மீது அனைவரும் தங்கள் இதயங்களில் அன்பு கொண்டுள்ளனர், அத்தகைய அன்பே அவர்களை ஒத்துழைப்பானவர்கள் ஆக்குகின்றது. அன்பு இருக்குமிடத்தில் மக்கள் எப்பொழுதும் தங்கள் நேரம், செல்வம், ஒத்துழைப்பு ஆகியவற்றை அர்ப்பணிப்பதற்குத் தயாராக உள்ளனர். எனவே, நீங்கள் ஏனையோர் மீது தூய ஆக்கபூர்வமான எண்ணங்களைக் கொண்டிருப்பது ஏனையோரை உங்களை நேசிக்கச் செய்கின்றது. அன்பானது சகல விதமான ஒத்துழைப்பையும் உங்களிடம் அர்ப்பணிக்க வைக்கும். ஆகவே சுயத்திற்காகவும், ஏனையோருக்காகவும் தூய ஆக்கபூர்வமான எண்ணங்களால் சதா நிறைந்திருந்து, ஏனையோரை அன்பானவராகவும் ஒத்துழைப்பானவராகவும் ஆக்குங்கள்.

சுலோகம்:
இந்நேரத்தில் அருள்பவர்கள் ஆகுங்கள், அப்பொழுது உங்கள் இராச்சியத்திலுள்ள ஒவ்வோர் ஆத்மாவும் ஒவ்வொரு பிறவியிலும் நிறைந்திருப்பார்.


குறிப்பு:


இந்த அவ்யக்த மாதம் பிராமணக் குழந்தைகளாகிய எங்கள் அனைவருக்கும் ஒரு விசேட மாதம். இந்த மாதத்தில் நாங்கள் அகநோக்கில் இருந்து தந்தை பிரம்மாவைப் போன்று ஆகுகின்ற இலக்கை வைத்திருந்து தீவிர முயற்சி செய்வோம். இதற்கு, ஒவ்வொரு நாள் முரளியின் இறுதியிலும் விசேட முயற்சியைச் செய்வதற்கான ஒரு விசேட கருத்தை எழதுகின்றோம். இக் கருத்தில் விசேட கவனம் செலுத்தி, நாள் முழுவதும் அதனைக் கடைந்து, சூட்சும உலகைச் சுற்றி வாருங்கள்.

தந்தை பிரம்மாவிற்குச் சமமானர் ஆகுவதற்கான விசேட முயற்சி.

நேரத்திற்கேற்ப, மூன்று வார்த்தைகளை எப்பொழுதும் நினைவுசெய்யுங்கள்-அகநோக்கு (அந்தர்முகி), அவ்யக்த், அலௌகிக். இதுவரை, சில லௌகீகம் அல்லாதவை (உலகியல்) கலந்துள்ளது, ஆனால் நீங்கள் முழுமையாக அலௌகீகமாகவும், அகநோக்காகவும் ஆகும்பொழுது, ஓர் அவ்யக்த தேவதையாகப் பார்க்கப்படுவீர்கள். ஆன்மீகமான, அலௌகீக ஸ்திதியில் நிலைத்திருப்பதற்கு, அகநோக்குடையவர்கள் ஆகுங்கள்.