01.02.19        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்:
இனிய குழந்தைகளே, இப்பொழுது உங்கள் பற்றின் இழைகள் துண்டிக்கப்பட வேண்டும், ஏனெனில் இம் முழு உலகமும் அழிக்கப்படவுள்ளது. நீங்கள் இப் பழைய உலகின் எதன் மீதும் எந்த ஆர்வத்தையும் கொண்டிருக்கக்கூடாது.

கேள்வி:
ஆன்மீக போதையைக் கொண்டிருப்பவர்களின் தலைப்பு என்ன? எக் குழந்தைகள் அந்த போதையை அனுபவம் செய்கின்றார்கள்?

பதில்:
ஆன்மீகப் போதையை அனுபவம் செய்கின்ற குழந்தைகள் மாஸ்ட் காலண்தார் (போதையை உடைய அரசர்கள்) என அழைக்கப்படுகின்றார்கள். அவர்களே காலங்;கிதார் (அவதூறு செய்யப்பட்ட பின்னர் மயிலிறகை உடையவர்கள்) ஆகுகின்றார்கள். அவர்கள் எப்பொழுதும் அரசர்கள் ஆகுகின்ற போதையைக் கொண்டிருக்கின்றார்கள். தாங்;கள் இப்பொழுது ஏழைகளிலிருந்து செல்வந்தர்கள் ஆகுகின்றார்கள் என்பது அவர்களின் புத்தியில் உள்ளது. உருத்திர மாலையில் கோர்க்கப்படவுள்ளவர்களே அந்த போதையை அனுபவம் செய்கின்றார்கள். தாங்கள் இப்பொழுது வீடு திரும்பிப் பின்னர் புதிய உலகிற்குச் செல்லவுள்ளார்கள் என்ற நம்பிக்கையைக் கொண்டிருக்கின்ற குழந்தைகள் அந்த போதையை அனுபவம் செய்கின்றார்கள்.


ஓம் சாந்தி.
ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளாகிய உங்களுடன் ஓர் இதயபூர்வமான சம்பாஷணையைக் கொண்டிருக்கின்றார். இது ஆத்மாக்களுக்கான ஆன்மீக ஞானம் என அழைக்கப்படுகின்றது. பரமாத்மாவே ஞானக்கடல் ஆவார். மனிதர்கள் ஒருபொழுதும் ஞானக்கடல்களாக இருக்க முடியாது. மனிதர்கள் பக்திக்கடல்கள் ஆவார்கள். அனைவரும் மனிதர்கள் ஆவார்கள். பிராமணர்கள் ஆகுகின்றவர்கள் ஞானக்கடலிடமிருந்து ஞானத்தைப் பெற்று மாஸ்டர் ஞானக்கடல்கள் ஆகுகின்றார்கள். அத்தேவர்கள் பக்தி செய்வதுமில்லை, இந்த ஞானத்தைக் கொண்டிருப்பதுமில்லை. தேவர்களிடம் இந்த ஞானம் இல்லை. ஒரேயொரு பரமாத்மாவாகிய பரமதந்தை மாத்திரமே ஞானக்கடல் ஆவார், இதனாலேயே அவர் மாத்திரமே ஒரு வைரத்தைப் போன்றவர் எனக் கூறப்படுகின்றார். அவரே வந்து உங்களைச் சிப்பிகளிலிருந்து வைரங்களாகவும், உங்கள் புத்தியைக் கல்லிலிருந்து தெய்வீகமானதாகவும் மாற்றுகின்றார். மனிதர்களுக்கு முற்றிலும் எதுவுமே தெரியாது. மனிதர்கள் பின்னர் தேவர்கள் ஆகுகின்றார்கள். அவர்கள் ஸ்ரீமத்தைப் பின்பற்றுவதால், தேவர்கள் ஆகுகின்றார்கள். அங்கு, அரைக் கல்பத்திற்கு எவருடைய கட்டளைகளும் தேவைப்பட மாட்டாது. இங்கு, மக்கள் பல்வேறு குருமார்;களிடமிருந்து வழிகாட்டல்களைப் பெறுகின்றார்கள். நீங்கள் சற்குருவிடமிருந்து ஸ்ரீமத்தைப் பெறுகின்றீர்கள் எனத் தந்தை இப்பொழுது உங்களுக்கு விளங்கப்படுத்தியுள்ளார். அமரத்துவ ரூபமாகிய சற்குருவைப் பற்றிச் சீக்கிய மக்கள் பேசுகின்றார்கள். அவர்கள் அதன் அர்த்தத்தைப் புரிந்து கொள்வதில்லை. அவர்கள் கூவியழைக்கின்றார்கள்: சற்குருவே அமரத்துவ ரூபமானவர், அதாவது, அவரே சற்கதியை அருள்கின்ற அமரத்துவ ரூபம் ஆவார். பரமாத்மாவாகிய பரமதந்தை மாத்திரம் அமரத்துவ ரூபம் என அழைக்கப்படுகின்றார். சற்குருவுக்கும் குருவுக்கும் இடையில் பகலுக்கும் இரவிற்கும் இடையிலான வித்தியாசம் உள்ளது. அவர்கள் பிரம்மாவின் பகலையும் இரவையும் பற்றிப் பேசுகின்றார்கள். நிச்சயமாக பிரம்மா மறுபிறவி எடுப்பதாலேயே அவர்கள் இது பிரம்மாவின் பகல் எனவும், பிரம்மாவின் இரவு எனவும் கூறுகின்றார்கள். பிரம்மா பின்னர் விஷ்ணுதேவர் ஆகுகின்றார். நீங்கள் சிவபாபாவைப் புகழ்கின்றீர்கள்: அவருடைய பிறவி ஒரு வைரத்தைப் போன்றதாகும். வீட்டில் உங்கள் குடும்பங்களுடன் வசிக்கும்பொழுது, குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது தூய்மையாகின்றீர்கள். நீங்கள் தூய்மையாக இருந்து இந்த ஞானத்தைக் கிரகிக்க வேண்டும். குமாரிகளுக்கு எப் பந்தனமும் கிடையாது. அவர்கள் தங்கள் பெற்றோரையும் சகோதர, சகோதரிகளையும் நினைவுசெய்கின்றார்கள். பின்னர், அவர்கள் தங்களுடைய புகுந்த வீட்டிற்குச் செல்லும்பொழுதே, அவர்களுக்கு இரு குடும்பங்கள் இருக்கின்றன. தந்தை இப்பொழுது உங்களுக்குக் கூறுகின்றார்: சரீரமற்றவர்கள் ஆகுங்கள்! இப்பொழுது நீங்கள் அனைவரும் வீடு திரும்ப வேண்டும். நான் உங்களுக்குத் தூய்மையாகுவதற்கான பாதையைக் காட்டுகின்றேன். நான் மாத்திரமே தூய்மையாக்குபவர் ஆவேன். நீங்கள் என்னை நினைவுசெய்தால், அந்த யோகத் தீயில் உங்கள் பல பிறவிகளின் பாவங்கள் எரிக்கப்பட்டு விடும் என நான் உங்களுக்கு உத்தரவாதம் அளிக்கின்றேன். நீங்கள் பழைய தங்கத்தைத் தீயிலிடும்பொழுது, கலப்படம் அகற்றப்பட்டு, நிஜத் தங்கம் மாத்திரம் எஞ்சியிருப்பது போன்று, இதுவும் யோகத் தீ ஆகும். இச்சங்கமயுகத்தில் மாத்திரம் பாபா உங்களுக்கு இந்த இராஜயோகத்தைக் கற்பிக்கின்றார். இதனாலேயே அவர் அதிகளவு புகழப்படுகின்றார். கடவுள் கற்பித்த இராஜயோகத்தை அனைவரும் கற்க விரும்புகின்றார்கள். சந்நியாசிகள் வெளிநாட்டிலிருந்து மக்களை அழைத்து வருகின்றார்கள். அம்மக்கள் அனைத்தையும் துறந்து விட்டதாக அவர்கள் நினைக்கின்றார்கள். எவ்வாறாயினும், நீங்களும் சந்நியாசிகளே, ஆனால், இந்த எல்லையற்ற துறவறத்தைப் பற்றி எவருக்கும் தெரியாது. ஒரேயொரு தந்தை மாத்திரமே உங்களுக்கு எல்லையற்ற துறவறத்தைக் கற்பிக்கின்றார். இப் பழைய உலகம் முடிவடையவுள்ளது என்பது உங்களுக்குத் தெரியும். இந்த உலகின் எதன் மீதும் நாங்கள் எந்த ஆர்வத்தையும் கொண்டிருப்பதில்லை. இன்னார் தனது சரீரத்தை நீக்கித் தனது பாகத்தை நடிப்பதற்காக இன்னுமொன்றைப் பெற்றார், எனவே அப்பொழுது நாங்கள் ஏன் அழ வேண்டும்? பற்றின் இழைகள் துண்டிக்கப்பட்டுள்ளன. எங்கள் உறவுமுறைகள் புதிய உலகத்துடன்; இணைக்கப்பட்டுள்ளன. அத்தகைய குழந்தைகள் உறுதியான மாஸ்ட் காலங்கிதார் ஆவார்கள். நீங்கள் அரசர்கள் ஆகுகின்ற போதையைக் கொண்டிருக்கின்றீர்கள். பாபாவும் போதையைக் கொண்டிருக்கின்றார்: நான் சென்று காலங்கிதார் ஆகுவேன்; நான் ஏழையிலிருந்து செல்வந்தர் ஆகுவேன். அவர் உள்ளுர அப் போதையைக் கொண்டிருக்கின்றார், இதனாலேயே அவர் மாஸ்ட் காலங்கிதார் என அழைக்கப்படுகின்றார். நீங்கள் இவருடைய காட்சிகளைப் பெறுகின்றீர்கள். எனவே, இவர் போதையுடையவராக இருப்பது போன்று, நீங்களும் போதையுடையவராக இருக்க வேண்டும். நீங்களும் உருத்திர மாலையில் கோர்க்கப்படவுள்ளீர்கள். உறுதியான நம்பிக்கையுடையவர்கள் போதையுற்று இருப்பார்கள். ஆத்மாக்களாகிய நாங்கள் இப்பொழுது வீடு திரும்ப வேண்டும். பின்னர் நாங்கள் புதிய உலகிற்குள் செல்கிறோம். இந்நம்பிக்கையுடன் இவரைப் (பிரம்மா) பார்ப்பவர்களால், குழந்தை ஸ்ரீ கிருஷ்ணரைப் பார்க்க இயலும். அவர் மிகவும் அழகானவர் ஆவார். இங்கு கிருஷ்ணர் இல்லை. பலர் அவரை அனுபவம் செய்வதற்குப் பரிதவிக்கின்றார்கள். அவர்கள் ஊஞ்சல்களைச் செய்து அவருக்குப் பாலை ஊட்டுகின்றார்கள். அவை உயிரற்ற விக்கிரகங்கள், இவையோ உண்மையானவை ஆகும். இவரும் தான் மீண்டும் ஒரு குழந்தை ஆகுவேன் என்ற நம்பிக்கையைக் கொண்டிருக்கின்றார். சில குழந்தைகள் ஒரு தெய்வீகக் காட்சியில் ஒரு சிறு குழந்தையையும்; காண்கின்றார்கள். உங்களால் அவரை உங்களுடைய பௌதீகக் கண்களால் காண முடியாது. ஓர் ஆத்மா தெய்வீகத் திருஷ்டியைப் பெறும்பொழுது, சரீரத்தின் விழிப்புணர்வு இருப்பதில்லை. அந்நேரத்தில், நீங்கள் உங்களை ஒரு சக்கரவர்த்தினியாகவும், அவரை ஒரு குழந்தையாகவும் கருதுவீர்கள். இந்நேரத்தில் பலர் இக் காட்சிகளைப் பெறுகின்றார்கள். ஒரு வெண்ணிற ஆடையில் இருக்கின்றவர்களின் காட்சிகளையும் பலர் பெறுகின்றார்கள். அவர்களுக்குக் காட்சியில் கூறப்பட்டது: அம்மக்களிடம் சென்று அவர்களிடமிருந்து ஞானத்தைப் பெறுங்கள், நீங்கள் அவரைப் போன்று ஓர் இளவரசர் ஆகுவீர்கள். இது ஒரு மந்திரவித்தை ஆகும். நீங்கள் ஒரு மிகச்சிறந்த பேரத்தைச் செய்கின்றீர்கள். அவர் உங்களிடமிருந்து சிப்பிகளைப் பெற்று பிரதிபலனாக உங்களுக்கு வைரங்களையும் முத்துக்களையும் கொடுக்கின்றார். நீங்கள் வைரங்களைப் போன்று ஆகுகின்றீர்கள். சிவபாபா உங்களை வைரங்களைப் போன்று ஆக்குகின்றார், இதனாலேயே அவர் மகத்தானவர் ஆவார். புரிந்து கொள்ளாததன் காரணமாக, இது மந்திரவித்தை என மக்கள் கூறுகின்றார்கள். ஞானத்தால் வியப்படைந்து பின்னர் ஓடிவிட்டவர்கள் தவறான விடயங்களைக் கூறுகின்றார்கள். இவ்விதமாகப் பலர் துரோகிகள் ஆகுகின்றார்கள். அத்தகைய துரோகிகள் ஆகுகின்றவர்களால் ஓர் உயர்ந்த அந்தஸ்தைக் கோர முடியாது. அவர்களைப் பற்றிக் கூறப்பட்டுள்ளது: சத்குருவை அவதூறு செய்பவர்களால் ஓர் உயர்ந்த அந்தஸ்தைக் கோர முடியாது. இங்கு, நீங்கள் உண்மையான தந்தையைக் கொண்டிருக்கின்றீர்கள். நீங்கள் இப்பொழுது இதைப் புரிந்துகொள்கின்றீர்கள். அவர் ஒவ்வொரு யுகத்திலும் வருகின்றார் என மக்கள் கூறுகின்றார்கள். நல்லது, நான்கு யுகங்கள் உள்ளன, எனவே 24 அவதாரங்கள் உள்ளன என்று எவ்வாறு நீங்கள் கூற முடியும்? பின்னர் கடவுள் அனைத்துக் கூழாங்கற்களிலும் கற்களிலும் இருக்கின்றார் எனவும், கடவுள் ஒவ்வொரு அணுவிலும் இருக்கின்றார் அல்லது கடவுள் அனைவரிலும் இருக்கின்றார் எனவும் அவர்கள் கூறுகின்றார்கள். தந்தை கூறுகின்றார்: நானே சிப்பிகளை வைரங்கள் ஆக்குபவர், பின்னர் நீங்கள் என்னை ஒவ்வொரு கூழாங்கல்லிலும் கல்லிலும் இட்டுள்ளீர்கள்! அவர் சர்வவியாபியாக இருந்திருந்தால், அவர் அனைவரிலும் இருப்பார், அங்கு எப்பெறுமதியும் இருக்க மாட்டாது. நீங்கள் எவ்வாறு என்னை அவதூறு செய்கின்றீர்கள் எனப் பாருங்கள்! பாபா கூறுகின்றார்: இதுவும் நாடகத்தில் நிச்சயிக்கப்பட்டுள்ளது. நீங்கள் அவ்வாறு ஆகும்பொழுது, தந்தை வந்து உங்களை ஈடேற்றுகின்றார், அதாவது, அவர் உங்களை மனிதர்களில் இருந்து தேவர்களாக மாற்றுகின்றார். பின்னர் உலகின் வரலாறும் புவியியலும் மீண்டும் மீண்டும் நடைபெறும். சத்தியயுகத்தில் அதே இலக்ஷ்மியும் நாராயணனும் இருப்பார்கள். அங்கு, பாரதம் மாத்திரம் இருக்கின்றது. ஆரம்பத்தில், அங்கு மிகச்சொற்ப தேவர்களே இருந்தார்கள். பின்னர், படிப்படியாக அனைத்தும் விரிவாக்கம் அடைந்தன, இப்பொழுது 5000 வருடங்களின் பின்னர் எவ்வளவு பேர் இருக்கின்றார்கள் என்று பாருங்கள். இந்த ஞானம் வேறெவரின் புத்தியிலும் இருப்பதில்லை. மிகுதி அனைத்தும் பக்தி ஆகும். அவர்கள் தேவர்களின் விக்கிரகங்களைப் பற்றிய புகழைப் பாடுகின்றார்கள். அவர்கள் உயிருள்ள ரூபத்தில் இருந்தார்கள் என்பதையோ அல்லது பின்னர் அவர்கள் எங்கு சென்றார்கள் என்பதையோ அவர்கள் புரிந்து கொள்வதில்லை. அந்த விக்கிரகங்கள் வழிபடப்படுகின்;றன, ஆனால் அவர்கள் இப்பொழுது எங்கே இருக்கின்றார்கள்? அவர்களும் தமோபிரதான் ஆகிப் பின்னர் சதோபிரதான் ஆக வேண்டும். இது எவருடைய புத்தியிலும் பிரவேசிப்பதில்லை. அத்தகைய தமோபிரதான் புத்தியைச் சதோபிரதான் ஆக்குவது தந்தையின் கடமை மாத்திரம் ஆகும். இலக்ஷ்மியும் நாராயணனும் கடந்த காலத்தில் இருந்தார்கள், இதனாலேயே அவர்கள் புகழப்படுகின்றார்கள். கடவுள் மாத்திரமே அதிமேலானவர் ஆவார். ஏனைய அனைவரும் தொடர்ந்தும் மறுபிறவி எடுக்கின்றார்கள். அதிமேலான தந்தையாகிய கடவுளே, அனைவருக்கும் முக்தியையும் ஜீவன்முக்தியையும் அருள்கின்றார். அவர் வந்திருக்காதுவிடின், மக்கள் ஒரு சதப் பெறுமதியும் அற்றவர்கள் ஆகியிருப்பதுடன் மேலும் அதிகமாகத் தமோபிரதான் ஆகியிருப்பார்கள். அவர்கள் இராச்சியத்தை ஆட்சிசெய்தபொழுது, அவர்கள் ஒரு பவுண்ட் (இங்கிலாந்து பணம்;) பெறுமதியுடையவர்களாக இருந்தார்கள். அங்கு எவரும் எந்த வழிபாடும் செய்யவில்லை. பூஜிக்கத் தகுதிவாய்ந்த தேவர்கள் பின்னர் பாவப் பாதையில் வீழ்ந்தபொழுது, பூஜிப்பவர்கள் ஆகினார்கள். அவர்கள் முற்றிலும் விகாரமற்றவர்களாக இருந்தார்கள் என்பது எவருக்கும் தெரியாது. பிராமணர்களாகிய உங்களிற் சிலரும் இவ்விடயங்களை வரிசைக்கிரமமாகப் புரிந்து கொள்கின்றீர்கள். நீங்களே முழுமையாகப் புரிந்து கொள்ளாதுவிட்டால், ஏனையோருக்கு எதை விளங்கப்படுத்துவீர்கள்? நீங்கள் ஒரு பிரம்மகுமார் அல்லது பிரம்மகுமாரி என அழைக்கப்பட்டு, உங்களால் விளங்கப்படுத்த இயலாதுவிடின், நீங்கள் ஏனையோருக்கு ஓர் இழப்பை ஏற்படுத்துகின்றீர்கள். இதனாலேயே நீங்கள் கூறவேண்டும்: நான் உங்களுக்கு விளங்கப்படுத்தக்கூடிய, என்னிலும் சிரேஷ்ட சகோதரியை அழைப்பேன். பாரதம் ஒரு வைரத்தைப் போன்று இருந்தது, அது இப்பொழுது ஒரு சிப்பியைப் போன்றுள்ளது. இப்பொழுது ஒரு பிச்சைக்காரர் போன்றுள்ள பாரதத்திற்கு யார் முடிசூட்டுவார்கள்? இலக்ஷ்மியும் நாராயணனும் இப்பொழுது எங்கு இருக்கின்றார்கள் என எங்களுக்குக் கூறுங்கள். அவர்களால் உங்களுக்குக் கூற இயலாது. அவர்கள் பக்திக்கடல்கள், அவர்களுக்கு அப்போதை மாத்திரமே உள்ளது. நீங்கள் மாஸ்டர் ஞானக்கடல்கள் ஆவீர்கள். அம்மக்கள் சமயநூல்களை ஞானம் எனக் கருதுகின்றார்கள். தந்தை கூறுகின்றார்: சமயநூல்கள் பக்தியின் சம்பிரதாயங்களைக் கொண்டுள்ளன. நீங்கள் எந்தளவிற்கு அதிகளவு ஞான சக்தியைக் கொண்டிருக்கின்றீர்களோ அந்தளவிற்கு அதிகளவு காந்தம் ஆகுகிறீர்கள் அப்பொழுது அனைவரும் ஈர்க்கப்படுவார்கள்; அவர்கள் இப்பொழுது ஈர்க்கப்படவில்லை. எவ்வாறாயினும், நீங்கள் உங்களுடைய யோகத்திற்கும் சக்திக்கும் ஏற்ப, எவ்வளவுக்குத் தந்தையை நினைவுசெய்கின்றீர்கள் என்பதிலேயே அது தங்கியுள்ளது. பின்னர் உங்கள் சரீரங்கள் எஞ்சியிருக்க மாட்டாது என்பதால், நீங்கள் தந்தையை எந்நேரமும் நினைவுசெய்கின்றீர்கள் என்பதல்ல. நீங்கள் தூதுவர்கள் ஆகிப் பலருக்கும் செய்தியைக் கொடுக்க வேண்டும். குழந்தைகளாகிய நீங்களே தூதுவர்கள் ஆகுபவர்கள். வேறு எவரும் இவ்வாறாக மாட்டார்கள். கிறிஸ்து வந்து தனது சமயத்தை ஸ்தாபிக்கின்றபொழுது, அவர் ஒரு தூதுவர் என அழைக்கப்படவில்லை. அவர் கிறிஸ்துவ சமயத்தை மாத்திரம் ஸ்தாபித்தார்; அவர் வேறு எதையும் செய்யவில்லை. அவர் ஒருவருடைய சரீரத்தில் பிரவேசித்தார், பின்னர் ஏனையோர் அவரைப் பின்பற்றினார்கள். இங்கு இராச்சியம் ஸ்தாபிக்கப்படுகின்றது. நீங்கள் என்னவாக ஆகுவீர்கள், நீங்கள் என்ன பாவச் செயல்களைப் புரிந்தீர்கள் என்ற காட்சிகள் அனைத்தையும் நீங்கள் மேலும் முன்னேறுகையில் பெறுவீர்கள். ஒரு காட்சியைப் பெறுவதற்கு அதிகநேரம் எடுப்பதில்லை. மக்கள் தங்களைக் காசியில் அர்ப்பணிப்பது வழக்கமாகும். அங்கு அவர்கள் நின்று கிணற்றினுள் பாய்வார்கள். இப்பொழுது அரசாங்கம் அதை நிறுத்திவிட்டது. தாங்கள் முக்தி அடைவார்கள் என அவர்கள் நினைத்தார்கள். தந்தை கூறுகின்றார்: எவராலும் முக்தியடைய முடியாதுள்ளது. நீங்கள் ஒரு குறுகிய காலத்திற்குள் உங்கள் அனைத்துப் பிறவிகளுக்குமான தண்டனையைப் பெறுகின்றீர்கள், பின்னர் கணக்குகள் அனைத்தும் புதிதாக ஆரம்பிக்கின்றன. எவராலும்; இதுவரை வீடு திரும்ப முடியாதுள்ளது. அவர்கள் எங்கே தங்குவார்கள்? ஆத்மாக்களின் வம்சாவளி விருட்சம் பின்னர் சீர்கெட்டுவிடும். அவர்கள் வரிசைக்கிரமமாகக் கீழே வந்து, பின்னர் வரிசைக்கிரமமாகத் திரும்புவார்கள். குழந்தைகளாகிய நீங்கள் காட்சிகளைப் பெற்று, பின்னர் இப்படங்கள் போன்றவற்றை உருவாக்குகின்றீர்கள். நீங்கள் இப்பொழுது உங்கள் 84 பிறவிகளினதும், உலகச் சக்கரத்தின் ஆரம்பம், மத்தி, இறுதியினதும் ஞானத்தைப் பெற்றுள்ளீர்கள். நீங்களும் வரிசைக்கிரமமானவர்கள் ஆவீர்கள். சிலர் அதிகப் புள்ளிகளுடனும், சிலர் குறைந்த புள்ளிகளுடனும் சித்தியடைகின்றார்கள். எவராலும் 100 புள்ளிகளைப் பெற முடியாது. ஒரேயொரு தந்தை மாத்திரம் 100 புள்ளிகளைக் கொண்டிருக்கின்றார். வேறு எவராலும் அவ்வாறு ஆகமுடியாது. ஒவ்வொருவருக்கும் இடையில் சிறிதளவு வேறுபாடு உள்ளது. அனைவராலும் ஒரேமாதிரி ஆகமுடியாது. பல மனிதர்கள் உள்ளனர், அவர்களில் ஒவ்வொருவரும் தங்கள் சொந்தச் சாயல்களைக் கொண்டிருக்கின்றனர். ஆத்மாக்கள் அனைவரும் அத்தகைய சின்னஞ்சிறிய புள்ளிகள் ஆவர். மக்கள் மிகவும் பெரியவர்கள், இருந்தாலும் இரண்டு பேருடைய சாயல்கள் ஒன்றாக இருப்பதில்லை. இப்பொழுது இருப்பதைப் போன்று அங்கு பல ஆத்மாக்கள் இருப்பார்கள், இதனாலேயே அவர்கள் மேலே வீட்டில் வசிப்பார்கள். இந்நாடகம் ஏற்கெனவே நிச்சயிக்கப்பட்டுள்ளது. அதற்குள் சிறிதளவு வேறுபாடும் இருக்க முடியாது. ஒருமுறை படப்பிடிப்பு நடைபெற்றதும், நீங்கள் மீண்டும் அதையே காண்பீர்கள். நீங்கள் கூறுவீர்கள்: நாங்கள் இதேபோன்று 5000 வருடங்களுக்கு முன்னரும் சந்தித்தோம். ஒரு விநாடியால் கூட, அது குறைவாக அல்லது அதிகமாக இருக்க முடியாது. இதுவே நாடகம் ஆகும். தங்கள் புத்தியில் படைப்பவரினதும் படைப்பினதும் ஞானத்தைக் கொண்டுள்ளவர்கள் சுயதரிசனச் சக்கரதாரிகள் என அழைக்கப்படுகின்றார்கள். நீங்கள் தந்தையிடமிருந்து இந்த ஞானத்தைப் பெறுகின்றீர்கள். மனிதர்களால் இந்த ஞானத்தை மனிதர்களுக்குக் கொடுக்க முடியாது. மனிதர்கள் பக்தியைக் கற்பிக்கின்றார்கள், ஆனால் ஒரேயொரு தந்தையோ உங்களுக்கு ஞானத்தைக் கற்பிக்கின்றார். ஒரேயொரு தந்தை மாத்திரமே ஞானக்கடல் ஆவார். பின்னர் நீங்கள் ஞான ஆறுகள் ஆகுவீர்கள். ஞானக்கடலிடமிருந்து ஞான ஆறுகளுக்கூடாக மாத்திரமே முக்தியும் ஜீவன்முக்தியும் பெறப்படுகின்றன. அவை நீராலான ஆறுகள் ஆகும். நீர் எல்லாவேளைகளிலும் இருக்கின்றது, சங்கமயுகத்தில் மாத்திரமே நீங்கள் ஞானத்தைப் பெறுகின்றீர்கள். பாரதத்தில், நீராலான ஆறுகள் எல்லாவேளைகளிலும் பாய்கின்றன, ஆனால் நகரங்கள் அனைத்தும் அழிக்கப்படும். ஏனைய தேசங்களும் இருக்க மாட்டாது. மழை பெய்யும், நீர் நீருக்குள் (கடல்) பாயும், இப்பாரதம் மாத்திரமே இருக்கும். நீங்கள் இப்பொழுது ஞானம் அனைத்தையும் பெற்று விட்டீர்கள். இது ஞானமும், மிகுதி பக்தியும் ஆகும். சிவபாபா மாத்திரம் ஒரு வைரத்தைப் போன்றவர் ஆவார், அவருடைய பிறந்தநாள் கொண்டாடப்படுகின்றது. நீங்கள் மக்களிடம் வினவ வேண்டும்: சிவபாபா என்ன செய்தார்? அவர் வந்து, தூய்மையற்றவர்களைத் தூய்மையாக்கினார். அவர் உங்களுக்கு ஆரம்பம், மத்தி, இறுதியின் ஞானத்தைக் கூறுகின்றார். ஞான சூரியன் உதிக்கும்பொழுது என இதனாலேயே பாடப்பட்டுள்ளது. ஞானத்தினூடாகப் பகலும், பக்தியினூடாக இரவும் உள்ளன. நீங்கள் இப்பொழுது உங்கள் 84 பிறவிகளையும் பூர்த்தி செய்துள்ளீர்கள் என்பது உங்களுக்குத் தெரியும். இப்பொழுது பாபாவை நினைவுசெய்வதால், நீங்கள் தூய்மையானவர்கள் ஆகுகிறீர்கள். பின்னர் நீங்கள் தூய சரீரங்களைப் பெறுவீர்கள். நீங்கள் அனைவரும் வரிசைக்கிரமமாகத் தூய்மையானவர்கள் ஆகுவீர்கள். இது மிகவும் இலகுவானதாகும். நினைவுசெய்தலே பிரதான விடயம் ஆகும். எவ்வாறு தங்களை ஆத்மாக்கள் எனக் கருதுவது அல்லது எவ்வாறு தந்தையை நினைவுசெய்வது என்பவற்றை அறியாத பலர் உள்ளனர். எவ்வாறாயினும், நீங்கள் அவருடைய குழந்தைகள் ஆகிவிட்டீர்கள், எனவே நீங்கள் நிச்சயமாகச் சுவர்க்கத்திற்குச் செல்வீர்கள். தற்காலத்தின் முயற்சிகளுக்கேற்பவே இராச்சியம் ஸ்தாபிக்கப்படுகின்றது. அச்சா.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டெடுக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

 
தாரணைக்கான சாராம்சம்:
1. நீங்கள் இப்பொழுது மாஸ்டர் ஞானக்கடல்கள் ஆகிவிட்டீர்கள் என்ற போதையை எப்பொழுதும் கொண்டிருங்கள். உங்களை ஞான சக்தியால் நிரப்பி, ஒரு காந்தம் ஆகுங்கள். ஓர் ஆன்மீகத் தூதுவர் ஆகுங்கள்.

2. ஒருபொழுதும் சற்குருவாகிய தந்தையின் பெயர் அவதூறு செய்யப்படும் வகையில் அத்தகைய எச்செயல்களையும் புரிய வேண்டாம். எது நடப்பினும்; பரவாயில்லை, நீங்கள் அழக்கூடாது.

ஆசீர்வாதம்:
சகல தெய்வீகக் குணங்களும் நிறைந்தவராக, தெய்வீகக் குணங்களையும் ஞானத்தையும் வெளிப்படுத்திக் கொண்டிருக்கும் ஒரு தெய்வீகக் குணங்களின் சொரூபமாக இருப்பீர்களாக.

ஒவ்வொருவருக்கும் அதிகளவு ஞானம் உள்ளது. ஆனால் இப்பொழுது தெய்வீகக் குணங்களின் வெளிப்படுத்தலுக்கான தேவை உள்ளது. ஆகையால், விசேட செயல்களைச் செய்வதன் மூலம் தெய்வீகக் குணங்களை அருள்பவராக ஆகுங்கள். நீங்கள் கொண்டிருக்க வேண்டிய எண்ணம்: நான் சதா தெய்வீகக் குணங்களின் சொரூபமாக இருப்பதுடன், பிறரையும் தெய்வீகக் குணங்களின் சொரூபமாக ஆக்குகின்ற பணியில் ஈடுபட வேண்டும். இவ்வாறு செய்வதனால், உங்களுக்கு வீணான எதனையும் பார்ப்பதற்கோ, கேட்பதற்கோ அல்லது செய்வதற்கோ நேரம் இருக்க மாட்டாது. இம் முறையை பயன்படுத்துவதால் உங்கள் சொந்த பலவீனங்களும் ஏனையோரின் பலவீனங்களும் இலகுவாக முடிவடையும். இதற்கு, நீங்கள் ஒவ்வொருவரும் உங்களை முதல் இலக்கத்தைக் கொண்டவரென கருதி, சகல தெய்வீகக் குணங்கள் நிறைந்திருப்பவராக ஆகுவதிலும் பிறரை அவ்வாறு ஆக்குவதிலும் ஓர் எடுத்துக் காட்டாக இருக்க வேண்டும்.

சுலோகம்:
உங்கள் மனதினால் யோகத்தையும், உங்கள் வார்த்தைகளினால் ஞானத்தையும், உங்கள் செயல்களினால் தெய்வீகக் குணங்களையும் தானம் செய்யுங்கள்.