01.02.21        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்:
இனிய குழந்தைகளே, ஏழைகளின் பிரபுவாகிய பாபா, உங்களைச் சிப்பிகளிலிருந்து வைரங்களாக்குவதற்கு வந்துள்ளார். எனவே அவரது ஸ்ரீமத்தைச் சதா பின்பற்றுங்கள்.

கேள்வி:
எந்த இரகசியத்தை நீங்கள் முதலில் அனைவருக்கும் விளங்கப்படுத்த வேண்டும்?

பதில்:
பாபாவினதும், தாதாவினதும் இரகசியத்தையாகும். நீங்கள் இங்கு பாப்தாதாவிடம் வந்துள்ளீர்கள் என்பதை அறிவீர்கள்; இருவரும் ஒன்றாகவே இருக்கின்றனர். இவரினுள் சிவபாபாவின் ஆத்மாவும் இருக்கின்றார், பிரம்மாவின் ஆத்மாவும் இருக்கின்றார். ஒருவர் ஆத்மாவும், மற்றையவர் பரமாத்மாவும் ஆவார்கள். முதலில் இந்த பாபாவும் தாதாவும் ஒன்றாக இருக்கின்றார்கள் என்ற ஆழமான இரகசியத்தை அனைவருக்கும் விளங்கப்படுத்துங்கள். இந்த தாதா கடவுளல்ல. ஒரு மனிதர் கடவுளாக இருக்க முடியாது. அசரீரியான ஒரேயொருவரே கடவுள் என அழைக்கப்பட முடியும். அவரே தந்தையாவார். அவர் அமைதிதாம வாசியாவார்.

பாடல்:
கடைசியில் நாங்கள் காத்திருந்த அந்த நாளும் வந்து விட்டது!

ஓம் சாந்தி.
தந்தை தாதாவினூடாகக் கற்பிக்கின்றார், அதாவது, சிவபாபா, பிரம்ம தாதாவினூடாக விளங்கப்படுத்துகின்றார் என்பதை உறுதியாக்குங்கள். லௌகீக உறவுகளில் தந்தை, பாட்டனாரிலிருந்து வேறுபட்டவர். நீங்கள் பாட்டனாரின் ஆஸ்தியைத் தந்தையினூடாகப் பெறுகின்றீர்கள். நீங்கள் உங்கள் பாட்டனாரின் ஆஸ்தியைப் பெறுகின்றீர்கள் எனக் கூறப்படுகின்றது. அவரே ஏழைகளின் பிரபு. ஏழைகளைக் கிரீடமணிந்தவர்கள் ஆக்குவதற்காக வருபவரே, ஏழைகளின் பிரபு ஆவார்;. எனவே முதலில் இவர் யார் என்பதில் உறுதியான நம்பிக்கை இருக்க வேண்டும். பார்ப்பதற்கு இவர்; ஒரு மனிதராகவே இருக்கின்றார். நீங்கள் அனைவரும் இவரை பிரம்மா என அழைக்கின்றீர்கள். நீங்கள் அனைவரும் பிரம்மகுமாரர்களும், குமாரிகளும் ஆவீர்கள். நீங்கள் சிவபாபாவிடமிருந்து ஆஸ்தியைப் பெறுகின்றீர்கள் என்பதை அறிவீர்கள். அனைவரதும் தந்தை ஆஸ்தியைக் கொடுக்க வந்துள்ளார். தந்தை சந்தோஷம் எனும் ஆஸ்தியைக் கொடுக்கின்றார், அரைக்கல்பத்தின் பின்னர், இராவணன் துன்பம் எனும் சாபத்தைக் கொடுக்கின்றான். பக்தி மார்க்கத்திலே மக்கள் கடவுளைத் தேடித் தடுமாறித் திரிகின்றார்கள், ஆனால் எவராலும் அவரைக் கண்டுகொள்ள முடியவில்லை. பாரத மக்கள் பாடுகின்றார்கள்: நீங்களே தாயும், தந்தையும், உங்கள் கருணையினாலேயே நாங்கள் பெருமளவு சந்தோஷத்தைப் பெறுகின்றோம். பின்னர் அவர்கள் கூறுகின்றார்கள்: நீங்கள் வருகின்றபொழுது, நாங்கள் வேறு எவருக்குமன்றி உங்களுக்கே சொந்தமாகுவோம். நாங்கள் வேறு எவரிலும் பற்று வைக்க மாட்டோம். என்னுடையவர் ஒரு சிவபாபாவே! தந்தையே ஏழைகளின் பிரபு என்பதை நீங்கள் அறிவீர்கள். அந்த ஒரேயொருவரே ஏழைகளைச் செல்வந்தர்களாக்குபவரும், சிப்பிகளாக இருப்பவர்களை வைரங்களாக்குபவரும்;, அதாவது, தந்தை தூய்மையற்ற, கலியுக, ஏழைகளைச் சத்தியயுகத்துக் கிரீடாதாரிகளாக மாற்றுவதற்கு வந்துள்ளார். நீங்கள் இங்கு பாப்தாதாவிடம் வந்துள்ளீர்கள் எனக் குழந்தைகளாகிய நீங்கள் புரிந்துகொள்கின்றீர்கள்; இருவரும் ஒன்றாகவே உள்ளனர். சிவனின் ஆத்மாவும் இவரில் உள்ளார், பிரம்மாவின் ஆத்மாவும் இவரிலேயே உள்ளார், எனவே அவர்கள் இருவரும் இருக்கின்றனர். ஒருவர் ஆத்மாவும், மற்றையவர் பரமாத்மாவும் ஆவார்கள். நீங்கள் அனைவரும் ஆத்மாக்கள். பரமாத்மாவிடமிருந்து ஆத்மாக்கள் நீண்டகாலம் பிரிந்திருந்தார்கள் என நினைவுகூரப்படுகின்றது. ஆத்மாக்களாகிய நீங்களே அவரை முதலில் சந்திக்கின்றீர்கள், அதாவது, ஓ தந்தையான கடவுளே, என்று அவர்கள் கூவி அழைத்த பரமாத்மாவாகிய தந்தையையே ஆத்மாக்களான நீங்கள் சந்திக்கின்றீர்கள். நீங்கள் அவருடைய குழந்தைகள். நீங்கள் நிச்சயமாகத் தந்தையிடமிருந்து ஆஸ்தியைப் பெறுகின்றீர்கள். தந்தை கூறுகின்றார்: கீரிடாதாரியாக இருந்த பாரதம் இப்பொழுது ஏழையாகி விட்டது! நான் குழந்தைகளாகிய உங்களை மீண்டும் ஒருதடவை கிரீடாதாரிகளாக்குவதற்கு வந்துள்ளேன். நீங்கள் இரட்டைக் கிரீடாதாரிகள் ஆகுகின்றீர்கள். ஒன்று ஒளியினால் பிரதிநிதித்துவம் செய்யப்படுகின்ற, தூய்மைக் கிரீடமாகும். மற்றையது இரத்தினங்களினாலான கிரீடமாகும். எனவே முதலில் பாபாவும், தாதாவும் ஒன்றாக இருக்கின்றார்கள் என்ற ஆழமான இரகசியத்தை அனைவருக்கும் விளங்கப்படுத்துங்கள். இவர் கடவுளல்ல. ஒரு மனிதர் கடவுளாக இருக்க முடியாது. அசரீரியானவரே கடவுள் என அழைக்கப்படுகின்றார். அவர் ஆத்மாக்களாகிய நீங்கள் அனைவரும் வசிக்கும் அமைதிதாம வாசியான தந்தை. அது சத்தத்திற்கு அப்பாற்பட்ட (நிர்வாணா) தாமம்; என்றும், ஓய்வு தாமம் எனவும் அழைக்கப்படுகின்றது. ஆத்மாக்களாகிய நீங்கள் பின்னர் உங்கள் பாகங்களை நடிப்பதற்குச் சரீரங்களை எடுக்க வேண்டும். அரைக் கல்பத்திற்குச் சந்தோஷத்திற்கான பாகமும், அரைக் கல்பத்திற்குத் துன்பத்துக்கான பாகமும் உள்ளன. தந்தை கூறுகின்றார்: துன்பம் முடிவடைகின்றபொழுதே நான் வருகின்றேன். இந்த நாடகம் நிச்சயிக்கப்பட்டது. நீங்கள் இங்கே ஒரு பத்திக்குள் வந்துள்ளீர்கள். இங்கே நீங்கள் வெளியுலக விடயங்கள் எதனையும் நினைவுசெய்யக்கூடாது. இங்கே தாயும், தந்தையும், குழந்தைகளும் இருக்கின்றார்கள். சூத்திர சமுதாயத்தைச் சேர்ந்த எவரும் இங்கு இல்லை. பிராமணர்களாக இல்லாதவர்களே சூத்திரர்கள் என அழைக்கப்படுகின்றனர். இங்கே நீங்கள் அவர்களுடைய சகவாசத்தைக் கொண்டிருப்பதில்லை. இங்கே நீங்கள் பிராமணர்களின் சகவாசத்தையே கொண்டிருக்கின்றீர்கள். சிவபாபா உங்களை நரகத்திலிருந்து அழைத்துச் சென்று பிரம்மா மூலம் சுவர்க்க இராச்சியத்தின் அதிபதிகள் ஆக்குவதற்கு வந்துள்ளார் என்பதைக் பிராமணக் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். இந்நேரத்தில் நாங்கள் அதிபதிகளல்ல, ஏனெனில் நாங்கள் தூய்மையற்றவர்கள். நாங்கள் தூய்மையாக இருந்தோம்; பின்னர், நாங்கள் 84 பிறவிகளின் சக்கரத்தில் சுற்றி வந்தோம். நாங்கள் சதோ, ரஜோ, தமோ ஸ்திதிகளினூடாகச் சென்றோம். ஏணிப் படத்தில் 84 பிறவிகளின் கணக்கு எழுதப்பட்டுள்ளது. தந்தை இங்கமர்ந்திருந்து குழந்தைகளான உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றார். அவரை முதல் சந்திக்கின்ற குழந்தைகளே முதலில் சத்தியயுகத்திற்குச் செல்பவர்கள். நீங்கள் 84 பிறவிகளை எடுத்துள்ளீர்கள். ஒரேயொரு தந்தை மாத்திரமே படைப்பவரினதும், படைப்பினதும் ஞானம் அனைத்தையும் கொண்டுள்ளார். அவரே மனித உலக விருட்சத்தின் விதையானவர். எவ்வாறு இந்த விருட்சம் வளர்கின்றது, எவ்வாறு அது பராமரிக்கப்பட்டு, எவ்வாறு அது அழிக்கப்படுகின்றது என்ற ஞானத்தை விதையானவர் நிச்சயமாகக் கொண்டிருக்கின்றார். தந்தை மாத்திரமே இதை விளங்கப்படுத்துகின்றார். நீங்கள் ஏழைகள் என்பதைப் பாரத மக்களாகிய நீங்கள் அறிவீர்கள். நீங்கள் தேவர்களாக இருந்தபொழுது, மிகவும் செல்வந்தராக இருந்தீர்கள். நீங்கள் வைரங்களுடன் விளையாடினீர்கள். நீங்கள் வைரங்கள் பதிக்கப்பட்ட மாளிகைகளில் வாழ்ந்தீர்கள். எவ்வாறு நீங்கள் 84 பிறவிகள் எடுக்கிறீர்கள் எனத் தந்தை இப்பொழுது ஞாபகமூட்டுகின்றார். நீங்கள் கூவி அழைக்கிறீர்கள்: ஓ தூய்மையாக்குபவரே! பாபா, ஏழைகளின் பிரபுவே, வாருங்கள்! ஏழைகளான எங்களை மீண்டும் ஒருமுறை சுவர்க்க அதிபதிகள் ஆக்குங்கள். சத்தியயுகத்தில் பெருமளவு சந்தோஷம் இருந்தது, ஆனால் இப்பொழுது பெருமளவு துன்பம் உள்ளது. இந்நேரத்தில், அனைவரும் முற்றிலும் தூய்மையற்றவர்கள் ஆகிவிட்டார்கள் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். இப்பொழுது இது கலியுக இறுதியாகும், சத்தியயுகம் இருக்க வேண்டும். முதலில் பாரதத்தில் ஆதிசனாதன தேவிதேவதா தர்மம் இருந்தது. அது இப்பொழுது மறைந்து விட்டது. ஏனைய அனைவரும் தங்களை இந்துக்கள் என அழைக்கின்றனர். இந்நேரத்தில் பல கிறிஸ்தவர்கள் உள்ளார்கள், ஏனெனில் இந்து மதத்தைச் சேர்ந்த பலர் மாற்றப்பட்டுள்ளார்கள். ஆதியில் தேவர்களாகிய உங்களுடைய செயல்கள் மிகவும் மேன்மையானவையாக இருந்தன. நீங்கள் தூய இல்லறப் பாதைக்குச் சொந்தமாக இருந்தீர்கள். இப்பொழுது, இராவண இராச்சியத்தில் நீங்கள் தூய்மையற்ற இல்லறப் பாதைக்குச் சொந்தமாகியுள்ளீர்கள், இதனாலேயே நீங்கள் சந்தோஷமற்று இருக்கின்றீர்கள். சத்தியயுகம் சிவாலயம் என அழைக்கப்படுகின்றது. சிவபாபாவினாலேயே சுவர்க்கம் ஸ்தாபிக்கப்படுகின்றது. தந்தை கூறுகின்றார்: நான் குழந்தைகளாகிய உங்களைச் சூத்திரர்களிலிருந்து பிராமணர்களாக மாற்றி, உங்களது ஆஸ்தியான சூரிய, சந்திர வம்சங்களின் இராச்சியத்தை உங்களுக்குக் கொடுப்பதற்கு வருகின்றேன். இவர் பாப்தாதா. அவர்களை மறந்து விடாதீர்கள். சிவபாபா பிரம்மாவின் மூலம் உங்களைச் சுவர்க்கத்திற்குத் தகுதியானவர்கள் ஆக்குகின்றார், ஏனெனில் தூய்மையற்ற ஆத்மாக்களால் அவர்கள் தூய்மையாகும் வரை முக்தி தாமத்திற்குச் செல்ல முடியாது. தந்தை கூறுகின்றார்: நான் இப்பொழுது நீங்கள் தூய்மையாகுவதற்கான வழியைக் காட்டுவதற்கு வந்துள்ளேன். நான் உங்களைச் சுவர்க்க அதிபதிகளான, பல்கோடீஸ்வரர்கள் ஆக்கிவிட்டுச் சென்றேன். நீங்கள் உண்மையிலேயே சுவர்க்க அதிபதிகளாக இருந்தீர்கள் என்பதை நினைவுசெய்கின்றீர்கள். அந்நேரத்தில், எங்களில் வெகுசிலரே இருந்தோம். இப்பொழுது பல மனிதர்கள் உள்ளார்கள். சத்தியயுகத்தில் 900,000 மக்களே இருக்கின்றனர். தந்தை கூறுகின்றார்: நான் வந்து பிரம்மாவின் மூலம் சுவர்க்கத்தின் ஸ்தாபனையையும், சங்கரர் மூலம் விநாசத்தையும் மேற்;கொள்கின்றேன். மிகச்சரியாக முன்னைய கல்பத்தில் செய்ததைப் போன்ற ஆயத்தங்களையே அனைவரும் செய்கின்றார்கள். அவர்கள் பல்வேறு குண்டுகளையும் உற்பத்தி செய்கின்றார்கள். 5000 வருடங்களுக்கு முன்னரும் மகா பாரத யுத்தம் இடம்பெற்றது. கடவுள் வந்து இராஜயோகம் கற்பித்துச் சாதாரண மனிதர்களை நாராயணனாக மாற்றினார். ஆகையால் கலியுக, தூய்மையற்ற உலகம் நிச்சயமாக அழிக்கப்பட வேண்டும். வைக்கோற் போர் தீ மூட்டப்படப் போகின்றது. வேறு எவ்வாறு விநாசம் இடம்பெற முடியும்? இந்நாட்களில் தீயைக் கக்கும் குண்டுகளும் உள்ளன. அடைமழையும், பூமியதிர்வுகளும் இருக்கும், ஏனெனில் அப்பொழுதே விநாசம் இடம்பெற முடியும். பழைய உலகின் விநாசமும், புதிய உலகின் ஸ்தாபனையும் இடம்பெற வேண்டும். இது சங்கமயுகமாகும். இராவண இராச்சியத்திற்கு மரணமும், இராம இராச்சியத்திற்கு வெற்றியும் உள்ளன. புதிய உலகில் கிருஷ்ணரின் இராச்சியம் இருந்தது. இலக்ஷ்மி, நாராயணனின் பெயர்களுக்குப் பதிலாக அவர்கள் கிருஷ்ணரின் பெயரைக் குறிப்பட்டுள்ளார்கள். ஏனெனில் கிருஷ்ணர் அழகானவரும், அதி அன்பிற்கினிய குழந்தையுமாவார். கிருஷ்ணரும் இராதையும் வேறுபட்ட இராச்சியத்திலிருந்து வந்தார்கள் என்பதை மக்கள் அறியார்கள். பாரதம் கிரீடாதாரியாக இருந்தது, ஆனால் அது இப்பொழுது ஏழையாகி விட்டது. தந்தை மீண்டும் ஒருதடவை அதற்குக் கிரீடம் சூட்ட வந்துள்ளார். தந்தை கூறுகின்றார்: இப்பொழுது தூய்மையாகி, சதா என்னை மாத்திரம் நினைவுசெய்யுங்கள், நீங்கள் சதோபிரதான் ஆகுவீர்கள். சேவை செய்வதுடன் மற்றவர்களையும் தங்களைப் போன்று ஆக்குபவர்கள், உயர்ந்த அந்தஸ்தைக் கோரி இரட்டைக் கிரீடாதாரிகள் ஆகுவார்கள். சத்தியயுகத்தில் அரசர், அரசி, பிரஜைகள் அனைவருமே தூய்மையானவர்கள். இப்பொழுது மக்களாட்சியே உள்ளது; இப்பொழுது கிரீடமும் இல்லை. தந்தை கூறுகின்றார்: உலகின் நிலைமை இவ்வாறு ஆகும்பொழுதே, நான் வருகின்றேன். நான் இப்பொழுது குழந்தைகளான உங்களுக்கு இராஜயோகத்தைக் கற்பிக்கின்றேன். நானே தூய்மையாக்குபவர். இப்பொழுது என்னை நினைவுசெய்யுங்கள். ஆத்மாக்களாகிய உங்களிலிருந்து கலப்படம் அகற்றப்படும். பின்னர் நீங்கள் சதோபிரதான் ஆகுவீர்கள். நீங்கள் இப்பொழுது அவலட்சணமானவர்களிலிருந்து (சியாம்) அழகானவர்களாக (சுந்தர்) மாற வேண்டும். தங்கத்தில் கலப்படம் கலக்கப்படும்பொழுது, அதன் பிரகாசம் மங்குகின்றது. எனவே இப்பொழுது கலப்படம் அகற்றப்பட வேண்டும். எல்லையற்ற தந்தை கூறுகின்றார்: நீங்கள் காமச்சிதையில் அமர்ந்ததால் அவலட்சணமாகி விட்டீர்கள்! இப்பொழுது ஞானச் சிதையில் அமர்ந்து, அனைவரிலிருந்தும் பற்றை அகற்றுங்கள். நீங்கள் ஒரேயொரு அன்பிற்கினியவரான, என்னுடைய காதலிகள். பக்தர்கள் அனைவரும் கடவுளை நினைவுசெய்கின்றார்கள். சத்திய, திரேதா யுகங்களில் பக்தி எதுவுமில்லை. அங்கே நீங்கள் ஞானத்தின் வெகுமதியைக் கொண்டிருக்கிறீர்கள். தந்தை வந்து ஞானத்தின் மூலம் இரவைப் பகலாக மாற்றுகின்றார். நீங்கள் சமயநூல்களைக் கற்பதனால் அது பகலாக ஆகுகின்றது என்றில்லை. அவை அனைத்தும் பக்தி மார்க்கத்திற்குரியது. ஒரேயொரு தந்தை மாத்திரமே தூய்மையாக்குபவரான, ஞானக்கடல். அவர் வந்து குழந்தைகளாகிய உங்களுக்கு யோகத்தையும், உலகச் சக்கரத்தின் ஞானத்தையும் கற்பிக்கின்றார். ஈஸ்வரருடன் (கடவுள்) யோகம் செய்பவர்கள் யோகேஸ்வரர் (கடவுளுடன் யோகத்தைக் கொண்டிருப்பவர்) ஆகி, பின்னர் இளவரசர், இளவரசிகள் ஆகுகின்றனர். நீங்கள் தந்தையினால் அரசர்களுக்கெல்லாம் அரசர்கள் ஆக்கப்படுகின்றீர்கள். தூய அரசர்களாக இருந்தவர்கள் பின்னர் தூய்மையற்றவர்கள் ஆகிவிட்டார்கள். நீங்களே பூஜிக்கத் தகுந்தவர்களாக இருந்து பின்னர் பூஜிப்பவர்கள் ஆகினீர்கள். இப்பொழுது, எவ்வாறு ஒரு காதலி அவளது அன்பிற்கினியவரை நினைவுசெய்கின்றாளோ, எவ்வாறு நிச்சயிக்கப்பட்ட தம்பதிகள் தொடர்ந்தும் ஒருவரையொருவர் நினைவுசெய்கின்றார்களோ, அவ்வாறே இயன்றளவிற்கு நினைவு யாத்திரையில் நிலைத்திருங்கள். அந்த அன்பிற்கினியவருக்குப் பக்தி மார்க்கத்தில் பல காதலிகள் உள்ளனர். அனைவரும் தந்தையைத் துன்ப வேளையிலேயே நினைவுசெய்கின்றார்கள்: ஓ கடவுளே! எங்கள் துன்பத்தை நீக்கி, சந்தோஷத்தை அருளுங்கள்! இங்கே அமைதியுமில்லை, சந்தோஷமும் இல்லை. அவை இரண்டும் சத்தியயுகத்திலேயே இருக்கின்றன. எவ்வாறு 84 பிறவிகளின் பாகங்களை நடிக்கின்றீர்கள் என்பதை ஆத்மாக்களாகிய நீங்கள் அறிவீர்கள். நீங்கள் பிராமணர்கள், தேவர்கள், சத்திரியர்கள், வைசியர்கள், சூத்திரர்கள் ஆகுகின்றீர்கள். நீங்கள் 84 பிறவிகளின் ஏணியை உங்கள் புத்தியில் வைத்திருக்கின்றீர்கள். இப்பொழுது தந்தையை இயன்றளவிற்கு நினைவுசெய்யுங்கள். அதனால் உங்கள் பாவங்கள் அழிக்கப்படும். செயல்களைச் செய்கின்றபொழுதும், உங்கள் புத்தியில் தந்தையின் நினைவை வைத்திருங்கள். நாங்கள் எங்களுடைய சுவர்க்கம் எனும் ஆஸ்தியை பாபாவிடமிருந்து பெறுகின்றோம். தந்தையையும், உங்கள் ஆஸ்தியையும் நினைவுசெய்யுங்கள். நினைவின் மூலமே, உங்கள் பாவங்கள் அழிக்கப்படும். நீங்கள் எந்தளவிற்கு அதிகமாக நினைவில் நிலைத்திருக்கின்றீர்களோ, அந்தளவிற்கு அதிகமாகத் தூய்மையின் ஒளி இருக்கும்;. கலப்படம் தொடர்ந்தும் அகற்றப்படும். குழந்தைகளாகிய நீங்கள், இயன்றளவிற்கு நினைவில் நிலைத்திருப்பதற்கு வழிமுறைகளைக் கண்டுபிடிப்பதற்கு நேரத்தை ஒதுக்க வேண்டும். காலையில் உங்களுக்கு அதிகளவு நேரம் உள்ளது. இந்த முயற்சியைச் செய்யுங்கள். நீங்கள் வீட்டில் இருந்து, குழந்தைகளைக் கவனித்துக் கொள்ளலாம், ஆனால் இந்த இறுதிப் பிறவியில் தூய்மையாக இருக்க வேண்டும். காமச் சிதையில் ஏறாதீர்கள். நீங்கள் இப்பொழுது ஞானச் சிதையில் அமர்ந்திருக்கின்றீர்கள். இந்தக் கல்வி மிகவும் மேன்மையானது. இதற்கு ஒரு தங்கப் பாத்திரம் தேவைப்படுகின்றது. தந்தையை நினைவுசெய்வதன் மூலம் நீங்கள் தங்கப் பாத்திரம் போன்று ஆகுகின்றீர்கள். நீங்கள் நினைவில் நிலைத்திருக்க மறக்கின்றபொழுது இரும்புப் பாத்திரம் போன்று ஆகுகின்றீர்கள். தந்தையை நினைவுசெய்வதன் மூலம் நீங்கள் சுவர்க்க அதிபதிகள் ஆகுகின்றீர்கள். இது மிக இலகுவானது. இதில் தூய்மையே பிரதானமான விடயம். நினைவின் மூலமே நீங்கள் தூய்மையாகுவீர்கள், உலகச் சக்கரத்தை நினைவுசெய்வதனால், நீங்கள் சுவர்க்க அதிபதிகள் ஆகுவீர்கள். நீங்கள் உங்களுடைய வீடுகளை நீக்;கிச் செல்லத் தேவை இல்லை. நீங்கள் உங்கள் குடும்பத்தினருடன் வீட்டில் இருக்கலாம். தந்தை கூறுகின்றார்: நீங்கள் 63 பிறவிகளாகத் தூய்மையற்ற உலகில் வாழ்ந்து விட்டீர்;கள். எனவே அமரத்துவ பூமியாகிய சிவாலயத்திற்குச் செல்வதற்கு, இந்த ஒரு பிறவியில் இப்பொழுது நீங்கள் தூய்மையாகினால் என்ன? நீங்கள் பெரும் வருமானத்தைச் சம்பாதிப்பீர்கள். ஐந்து விகாரங்களை வெல்லுங்கள், அப்பொழுது மாத்திரமே நீங்கள் உலகை வென்றவர்கள் ஆகமுடியும், இல்லையெனில், உங்களால் ஓர் உயர்ந்த அந்தஸ்தைக் கோர முடியாது. தந்தை கூறுகின்றார்: அனைவரும் மரணிக்க வேண்டும். இது உங்களுடைய இறுதிப் பிறவி. பின்னர், நீங்கள் புதிய உலகிற்குச் சென்று ஆட்சிசெய்;வீர்கள். வைரங்களினதும், இரத்தினங்களினதும் சுரங்கங்கள் நிறைந்திருக்கும். அங்கே, நீங்கள் தொடர்ந்தும் வைரங்களுடனும், இரத்தினங்களுடனும் விளையாடுவீர்கள். நீங்கள் அவ்வாறான தந்தைக்குச் சொந்தமாகுவதுடன், அவரது வழிகாட்டல்களையும் பின்பற்ற வேண்டும். ஸ்ரீமத்தைப் பின்பற்றுவதன் மூலமே நீங்கள் மேன்மையானவர்கள் ஆகமுடியும். இராவணனின் கட்டளைகளைப் பின்பற்றுவதால் நீங்கள் சீரழிந்தவர்களாகி விட்டீர்கள். இப்பொழுது தந்தையின் ஸ்ரீமத்தைப் பின்பற்றித் தமோபிரதானிலிருந்து, சதோபிரதான் ஆகுங்கள். தந்தையை நினைவுசெய்யுங்கள்! தந்தை உங்களுக்கு வேறு எந்தச் சிரமத்தையும் கொடுப்பதில்லை. நீங்கள் பக்தி மார்க்கத்தில் பெருமளவு தடுமாறித் திரிந்தீர்கள். இப்பொழுது, தந்தையையும், உலகச் சக்கரத்தையும் நினைவுசெய்யுங்கள். சுயதரிசனச் சக்கரதாரிகள் ஆகுங்கள், நீங்கள் 21 பிறவிகளுக்கு பூகோள ஆட்சியாளர்கள் ஆகுவீர்கள். நீங்கள் பல தடவைகள் இராச்சியத்தைப் பெற்று, இழந்தீர்கள். அரைக் கல்பத்திற்குச் சந்தோஷமும், அரைக் கல்பத்திற்குத் துன்பமும் இருக்கின்றன. தந்தை கூறுகின்றார்: நான் ஒவ்வொரு கல்பத்திலும் சங்கமயுகத்தில் வருகின்றேன். நான் உங்களைச் சந்தோஷ தாமத்தின் அதிபதிகள் ஆக்குகின்றேன். எவ்வாறு நீங்கள் சக்கரத்தில் சுற்றி வந்துள்ளீர்கள் என இப்பொழுது அறிவீர்;கள். இந்தச் சக்கரத்தை உங்கள் புத்தியில் வைத்திருங்கள். தந்தையே ஞானக்கடல். நீங்கள் இங்கே எல்லையற்ற தந்தையின் முன்னால் அமர்ந்திருக்கின்றீர்கள் அதிமேலான கடவுளே உங்களுக்கு உங்களுடைய ஆஸ்தியை பிரஜாபிதா பிரம்மாவின் மூலம் தருகின்றார். எனவே இப்பொழுது விநாசம் இடம்பெறும் முன்னர், தந்தையை நினைவுசெய்து தூய்மையாகுங்கள். அச்சா.

இனிமையிலும் இனிமையான அன்புக்குரிய எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தந்தை தாயாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. தந்தையின் நினைவில் சதா நிலைத்திருப்பதற்கு உங்கள் புத்தியைத் தங்கப் பாத்திரம் ஆக்குங்கள். செயல்களைச் செய்கின்றபொழுதும் தந்தையின் நினைவு இருக்க வேண்டும். நினைவில் நிலைத்திருப்பதனாலேயே தூய்மை எனும் ஒளி இருக்க முடியும்.

2. என்றுமே ஒரு முரளியையும் தவற விடாதீர்கள்! நாடகத்தின் இரகசியத்தை மிகச்சரியாகப் புரிந்துகொள்ளுங்கள். இந்தப் பத்தியில் இருக்கும்பொழுது வெளியுலகின் எதையும் நீங்கள் நினைவுசெய்யக்கூடாது.

ஆசீர்வாதம்:
நீங்கள் நம்பிக்கையைக் கொண்ட புத்தியையுடைய துறவற சொரூபமாகி, பாப்தாதாவை உங்களிடம் அர்ப்பணிக்கச் செய்வீர்களாக.

தந்தையைக் கண்டடைந்ததும், நான் அனைத்தையும் கண்டடைந்து விட்டேன். இந்தப் போதையைக் கொண்டவர்கள் அனைத்தையும் துறக்கும்பொழுதும், நம்பிக்கையைக் கொண்ட அத்தகைய புத்தியையுடைய குழந்தைகள் தந்தையிடமிருந்து களிப்பு, அமைதி, சக்தி, சந்தோஷத்தை அனுபவம் செய்யும்பொழுதும், மக்களின் அபிப்பிராயத்தைப் பற்றி அவர்கள் கவலைப்படுவதில்லை, ஆனால் ஒவ்வோர் அடியிலும் எப்பொழுதும் தொடர்ந்தும் முன்னேறுகின்றார்கள். அவர்கள் உலகின் அனைத்து விடயங்களையும் சுவையற்றதாகவும், சாராம்சம் (சக்தி) அற்றதாகவும் அனுபவம் செய்கின்றார்கள். நம்பிக்கையைக் கொண்டிருக்கும் புத்தியை உடைய துறவறத்தின் சொரூபங்களான, அத்தகைய குழந்தைகளிடம் பாப்தாதா தன்னையும் சேர்த்து, தனது செல்வம் அனைத்தையும் அர்;ப்பணிக்கின்றார். பாபா, நான் உங்களுடையவன் எனும் எண்ணத்தைக் குழந்தைகள் கொண்டிருப்பதைப் போல, தந்தைக்குரிய அனைத்தும் உங்களுக்குரியவை என்று பாபாவும் கூறுகின்றார்.

சுலோகம்:
தனது ஒவ்வோர் எண்ணத்தின் மூலமும், செயலின் மூலமும் தந்தையின் அன்பின் அதிர்வலைகளைப் பரப்புபவரே, ஓர் இலகுயோகி ஆவார்.