01.03.19        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்:
இனிய குழந்தைகளே, தந்தையின் செயலுக்கும் குழந்தைகளின் செயல்களுக்கும் இடையிலான வித்தியாசத்தை இனங்கண்டு கொள்ளுங்கள். தந்தையால் குழந்தைகளாகிய உங்களுடன் விளையாட முடியும், ஆனால் அவரால் உங்களுடன் உண்ண முடியாது.

கேள்வி:
சத்தியத்தின் சகவாசம் உங்களை அக்கரைக்கு அழைத்துச் செல்கின்றது, தீய சகவாசம் உங்களை மூழ்கடிக்கின்றது என்பதன் அர்த்தமென்ன?

பதில்:
நீங்கள் இப்பொழுது சத்தியத்தின் சகவாசத்தைக் கொண்டிருக்கின்றீர்கள், அதாவது நீங்கள் உங்களுடைய புத்தியின் யோகத்தை தந்தையுடன் இணைத்திருப்பதால் உங்களால் அக்கரைக்குச் செல்ல முடியும். பின்னர் நீங்கள் படிப்படியாக சரீர உணர்வடைவதால், தொடர்ந்தும் கீழிறங்குகிறீர்கள். ஏனெனில் நீங்கள் சகவாசத்தால் நிறமூட்டப்படுகின்றீர்கள். இதனாலேயே, சத்தியத்தின் சகவாசம் உங்களை அக்கரைக்கு அழைத்துச் செல்கின்றது, தீய சகவாசம் உங்களை மூழ்கடிக்கின்றது என்று கூறப்படுகின்றது. உங்களுடைய சரீரத்தையும் சரீர உறவினர்கள் அனைவரையும் மறந்து, தந்தையின் சகவாசத்தில் இருங்கள். அதாவது, தந்தையின் நினைவில் நிலைத்திருங்கள், நீங்கள் தந்தையைப் போல் தூய்மையாகுவீர்கள்.

ஓம் சாந்தி.
இப்பொழுது குழந்தைகளாகிய உங்களுக்காக இரண்டு வகுப்புகள் உள்ளன. அது நல்லது. முதலாவது நினைவு யாத்திரையாகும், அதன் மூலம் ஆத்மாக்களாகிய உங்களுடைய பாவங்கள் அழிக்கப்பட்டு, ஆத்மாக்களாகிய நீங்கள் தொடர்ந்து தூய்மையாகுகின்றீர்கள். இரண்டாவது வகுப்பு ஞானமாகும். ஞானமும் இலகுவானதாகும். அதில் எவ்வித சிரமமும் இல்லை. உங்கள் நிலையங்களிற்கும் இவ்விடத்திற்கும் வேறுபாடு உள்ளது. தந்தையும் குழந்தைகளும் இங்கே அமர்ந்திருக்கின்றார்கள். இது தந்தையினதும் குழந்தைகளினதும் ஒன்றுகூடலாகும். அதேவேளை உங்களுடைய நிலையங்களில், குழந்தைகளாகிய உங்களின் ஒன்றுகூடல்கள் இருக்கின்றன. இதனாலேயே குழந்தையாகிய நீங்கள் நேரடியாக இங்கே வருகின்றீர்கள். நீங்கள் அவரை நினைவு செய்தபோதிலும், நீங்கள் அவரை இங்கே உங்கள் முன்னால் பார்க்கின்றீர்கள்: நான் உங்களுடனே அமர்ந்திருக்கின்றேன். நான் உங்களுடனேயே பேசுகின்றேன். தந்தையின் செயற்பாட்டிற்கும் குழந்தைகளாகிய உங்களுடையதிற்குமிடையில் வேறுபாடு உள்ளதெனத் தந்தை விளங்கப்படுத்தியுள்ளார். பாபாவினுடைய பாகம் என்ன என்பதையும், இரதத்தின் பாகம் என்ன என்பதைப் பற்றியும் சிந்தியுங்கள். இரதத்தினூடாகத் தந்தையால் நடிக்க முடியுமா? ஆம் அவரால் அவரின் ஊடாக நடிக்க முடியும். நான் உங்களுடனேயே அமர்ந்திருப்பேன் என நீங்கள் கூறுகின்றீர்கள். அதேபோன்று நீங்கள் நான் உங்களுடனேயே உண்பேன் எனவும் கூறினீர்கள். எவ்வாறாயினும் அவர் உண்பதில்லை. தந்தை புரிந்துகொள்கிறார், குழந்தைகளுடன் விளையாடுவது என்றால் அவர்கள் இருவரும் உங்களுடன் விளையாடுவது ஆகும். இங்கே அவர் அனைத்தையும் உங்களுடனேயே செய்கிறார். ஏனெனில் அவரும் ஒரு பரம ஆசிரியர் ஆவார். குழந்தைகளாகிய உங்களைக் களிப்பூட்டுவதே ஆசிரியரின் கடமையாகும். உள்ளரங்க விளையாட்டுக்களும் உள்ளன. இக்காலத்தில் பலவகையான விளையாட்டுக்கள் உள்ளன. சதுரங்கத்துக்கு ஒத்த ஒரு பிரபல்யமான விளையாட்டு உள்ளது. இது மகாபாரதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. எவ்வாறயினும் அது ஒரு வகைச் சூதாட்டமாகும். சூதாடுபவர்கள் அதில் அகப்பட்டு விடுவார்கள். அவ்விடயங்கள் அனைத்தும் பக்திமார்க்கத்தின் சமய நூல்களிலிருந்தே எடுக்கப்பட்டது. விரதமிருப்பது, ஒழுங்குமுறைகள் போன்றவற்றைக் கடைப்பிடிப்பது எல்லாம் பக்திமார்க்கத்தின் விடயங்களாகும். சிலர் ஒரு சில நாட்களுக்கு நீர் பருகாமலும், மற்றும் சிலர் ஒரு சில நாட்களுக்கு உணவும், நீர் இன்றியும் இருக்கிறார்கள். பக்தி மார்க்கத்தில் பேறுகள் ஏதேனும் இருந்தால், அதுவும் தற்காலிகமானதே. இங்கே குழந்தைகளாகிய உங்களுக்கு அனைத்தும் விளங்கப்படுத்தப்பட்டுள்ளன. அவர்கள் பக்திமார்க்கத்தில் அதிகளவு தடுமாறித் திரிந்தார்கள். ஞானமார்க்கம் சந்தோஷத்திற்கான பாதையாகும். நீங்கள் உங்கள் சந்தோஷ ஆஸ்தியைத் தந்தையிடமிருந்தே பெறுகிறீர்கள் என்பதை இப்பொழுது நீங்கள் அறிந்துள்ளீர்கள். பக்திமார்க்கத்திலும் நீங்கள் ஒருவரையே நினைவு செய்யவேண்டும். ஒருவரை வழிபடுவது என்பது கலப்படமற்ற வழிபாடாகும். அதுவும் நல்லதே. பக்தியும் சதோ, ரஜோ, தமோ ஸ்திதிகளினூடாகச் செல்கிறது. பக்தி அனைத்திலும் சிவபாபாவின் சதோகுனி பக்தியே அதியுயர்ந்தது. சிவபாபாவே வந்து, குழந்தைகளாகிய உங்கள் அனைவரையும் சந்தோஷ தாமத்திற்கு அழைத்துச் செல்கிறார். அதிகளவு சேவையைக் குழந்தைகளுக்கு செய்து உங்களைத் தூய்மையாக்கிய ஒரே ஒருவரை அவர்கள் அழைத்தார்கள். அவர் கூழாங்கற்களிலும், கற்களிலும் இருக்கிறார் என்று பின்னர் அவர்கள் கூறுகிறார்கள்! எனவே அது அவதூறாகும். குழந்தைகளாகிய நீங்கள் உங்கள் இராச்சிய பாக்கியத்தை எல்லையற்ற தந்தையிடமிருந்து பெறுகிறீர்கள். நீங்கள் அதனை மீண்டும் நிச்சயமாகப் பெறுவீர்கள். ஞானம், பக்தியிலிருந்து வேறுபட்டது என நீங்கள் கருதுகிறீர்கள். எவ்வாறு இராம இராச்சியம் தொடர்கிறது என்றும், இராவண இராச்சியம் எவ்வாறு தொடர்கிறது என்றும் உங்கள் முயற்சிக்கேற்ப, வரிசைக் கிரமமாக நீங்கள் அறிவீர்கள். இதனாலேயே நீங்கள் அச்சடிக்கப்பட்ட துண்டுப் பிரசுரங்கள் போன்றவற்றைத் தொடர்ந்தும் வைத்திருக்கிறீர்கள். ஏனெனில் மக்களுக்கு நிஜமான புரிந்துணர்வு வேண்டும். உங்களுடைய அனைத்தும் உண்மையே. குழந்தைகளாகிய நீங்கள் சேவை செய்யவேண்டும். அதிகளவு சேவை செய்யவேண்டியுள்ளது இந்த பட்ஜும்| சேவை செய்வதற்கு மிகவும் சிறந்தது. அதி சிறந்த சமயநூல் இந்த பட்ஜ் ஆகும். இவை ஞான விடயங்களாகும். இங்கு, இந்த நினைவு யாத்திரை வேறுபட்டது என நீங்கள் விளங்கப்படுத்த வேண்டும். இந்த சத்தமின்றி உச்சரிக்கும் மந்திரம் என அழைக்கப்படுகின்றது. இங்கே, நீங்கள் எதனையும் உச்சரிக்க வேண்டியதில்லை. நீங்கள் உள்ளார்த்தமாக சிவா, சிவா என்றும் கூறவேண்டியதில்லை. நீங்கள் தந்தையை நினைவு செய்யவேண்டியது மாத்திரமே. சிவபாபாவே தந்தையும், ஆத்மாக்களாகிய நாங்கள் அவரின் குழந்தைகள் என்பதும் உங்களுக்குத் தெரியும். அவரே நேரடியாக உங்கள் முன்னிலையில் வந்து கூறுகிறார்: நானே தூய்மையாக்குபவன். ஒவ்வொரு சக்கரத்திலும் நான் வந்து உங்களைத் தூய்மையாக்குவேன். உங்கள் சரீரம் உட்பட சரீரதாரிகள் அனைவரையும் துறந்து உங்களை ஓர் ஆத்மாவாகக் கருதுங்கள். உங்கள் தந்தையாகிய என்னை நினைவு செய்தால், நீங்கள் தூய்மையாகுவீர்கள். எனது பாகம் தூய்மையற்றவர்களைத் தூய்மையாக்குவதேயாகும். இந்த யோகம் புத்திக்கானதாகும். அதாவது தந்தையின் சகவாசமாகும். நீங்கள் உங்கள் சகவாசத்தினால் நிறமூட்டப்படுகிறீர்கள். கூறப்படுகின்றது: உண்மையின் சகவாசம் உங்களை அக்கரைக்கு அழைத்துச் செல்கிறது, தீயசகவாசம் உங்களை மூழ்கடிக்கிறது. உங்கள் புத்தியின் யோகத்தை தந்தையுடன் இணைக்கும் போது உங்களால் அக்கரையைச் சென்றடைய முடியும். பின்னர் நீங்கள் கீழிறங்கக் தொடங்குவீர்கள். அவரைப் பற்றி நினைவு கூரப்படுகின்றது: சத்தியத்தின் சகவாசம் உங்களை அக்கரைக்கு எடுத்துச் செல்கின்றது. பக்தி மார்க்கத்தில் உள்ளவர்களுக்கு இதன் அர்த்தம் தெரியாது. தூய்மையற்றிருக்கும் நீங்கள் சதா தூய்மையான ஒருவருடன் யோகத்தைக் கொண்டிருப்பதன் மூலம் தூய்மையாகியுள்ளீர்கள் என்பதை ஆத்மாக்களாகிய நீங்கள் புரிந்து கொள்கிறீர்கள். ஆத்மாக்கள், பரமாத்மாவாகிய தந்தையை நினைவு செய்ய வேண்டும். ஆத்மா தூய்மையாகும் போது ஒரு தூய சரீரத்தைப் பெறுகிறார். அவர் நிஜத்தங்கமாக ஆகுகின்றார். இதுவே நினைவு யாத்திரையாகும். யோக அக்கினி மூலம் உங்கள் பாவங்கள் எரிந்து கலப்படமும் அகற்றப்படுகிறது. புதிய உலகான சத்தியயுகத்தில் நீங்கள் தூய்மையாகவும், முற்றிலும் விகாரமற்றவர்களாகவும் இருந்தீர்கள் என்பதை நீங்கள் அறிவீர்கள். நீங்களும் 16 சுவர்க்கக் கலைகள் நிறைந்தவர்களாக இருந்தீர்கள். இப்பொழுது கலைகள் எதுவுமே இல்லை. இதுவே ராகுவின் சகுனம் என அழைக்கப்படுகிறது. முழுஉலகின் மீதும், விசேடமாக பாரதத்தின் மீது ராகுவின் சகுனம் உள்ளது. சரீரம் அவலட்சணமானது. அக்கண்களால் நீங்கள் எதனைப் பார்த்தாலும் அவை அவலட்சணமாகவே இருக்கும். அரசன், அரசி எவ்வாறோ அவ்வாறே மக்களும். ~அவலட்சணமானவரும் அழகானவரும|; (சியாம் சுந்தர்) என்பதன் அர்த்தத்தை எவருமே புரிந்து கொள்வதில்லை. அவர்கள் பல பெயர்களைக் கொடுத்துள்ளார்கள். இப்பொழுது தந்தை வந்து அதன் அர்த்தத்தை விளங்கப்படுத்தியுள்ளார். முதலில் அழகாக இருந்த நீங்கள் பின்னர் அவலட்சணமாகியுள்ளீர்கள். ஞானச் சிதையில் அமர்வதன் மூலம் நீங்கள் அழகானவர்களாகியுள்ளீர்கள். எப்படியாகிலும் நீங்கள் அவலட்சணமானவர்களிலிருந்து அழகானவர்களாகவும், அழகானவர்களிலிருந்து அவலட்சணமானவர்களாகவும் ஆக வேண்டும். இதன் அர்த்தத்தை ஆத்மாக்களாகிய உங்களுக்குத் தந்தை விளங்கப்படுத்தியுள்ளார். ஆத்மாக்களாகிய நாங்கள் ஒரே ஒரு தந்தையை மாத்திரமே நினைவு செய்கிறோம். நீங்கள் புள்ளிகள் என்பது உங்கள் புத்திக்குள் புகுந்துள்ளது. இதுவே ஆத்மாவின் புரிந்துணர்வு எனப்படும். பின்னர் அறிந்து கொள்வதற்கு நுண்ணறிவு தேவை. இவ்விடயங்கள் புரிந்து கொள்ளப்பட வேண்டும். நீங்கள் ஆத்மாவைப் புரிந்து கொள்ள வேண்டும்.: நான் ஓர் ஆத்மா, இது எனது சரீரம். எனது பாகத்தை நடிப்பதற்காக நான் இங்கே வந்து ஒரு சரீரத்தினுள் பிரவேசித்துள்ளேன். நாடகத்திட்டத்திற்கேற்ப, நாங்களே முதலில் இங்கு வந்தோம். அனைவரும் ஆத்மாக்களே. சிலருக்கு ஒரு நீண்ட பாகத்தையும் மற்றும் சிலர் ஒரு குறுகிய பாகத்தையும் கொண்டுள்ளார்கள். இது ஒரு மிகப் பெரிய எல்லையற்ற நாடகமாகும். நீங்கள் எவ்வாறு வரிசைக் கிரமமாக இங்கு வந்து உங்கள் பாகங்களை எவ்வாறு நடிக்கின்றீர்கள் என்பது உங்களுக்குத் தெரியும். எல்லாவற்றிற்கும் முதலில் தேவகுலம் உள்ளது. இப்பொழுது நீ;ங்கள் அதிமங்களகரமான சங்கம யுகத்திலேயே இந்த ஞானத்தைப் பெறுகிறீர்கள். பின்னர் இறுதியில் இவை எதையுமே நினைவு செய்ய மாட்டீர்கள். தந்தையே கூறுகின்றார்: இந்த ஞானம் மறைந்துவிடும். எவ்வாறு தேவதர்மம் ஸ்தாபிக்கப்பட்டது என எவருக்குமே தெரியாது. அதன் விக்கிரகங்கள் இருந்த போதிலும், அது எவ்வாறு உருவாக்கப்பட்டது என்பதை எவரும் அறிய மாட்டார்கள். குழந்தைகளாகிய நீங்கள் இதனை அறி;ந்து கொள்வதுடன் பிறரையும் உங்களைப் போன்று ஆக்குகின்றீர்கள். உங்களிற் பலர் இருக்கும் போது, நீங்கள் நிச்சயமாக ஓர் ஒலி பெருக்கியைப் பயன்படுத்த வேண்டும். நிச்சயமாக வழிமுறை ஒன்று தோன்றும். உங்களுக்கு ஒரு பெரிய மண்டபமும் தேவைப்படும். முன்னைய சக்கரத்தில் எதனை மேற்கொண்டீர்களோ, அதனையே நீங்கள் மீண்டும் மேற்கொள்வீர்கள். இதனை நீங்கள் புரிந்து கொள்கிறீர்கள்;. குழந்தைகளாகிய உங்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிக்கும். திருமணங்களுக்காக மண்டபங்களைக் கட்டுபவர்களிடமும் நீங்கள் விளங்கப்படுத்த வேண்டுமென பாபா கூறியுள்ளார். இங்கேயும்கூட திருமண வைபவங்களுக்காக அவர்கள் தர்மசாலைகள் போன்றவற்றைக் கட்டுகிறார்கள். எங்கள் குலத்துக்குரியவர்கள் விரைவில் புரிந்து கொள்வார்கள். இக்குலத்தைச் சாராதவர்கள் தடைகளை ஏற்படுத்துவார்கள். இக்குலத்திற்கு உரியவர்கள் இது உண்மை என்பதை நம்புவார்கள். இத்தர்மத்தைச் சாராதவர்கள் சண்டையிடுவார்கள். எப்பொழுதும் இவ்வழக்கமே உள்ளது என அவர்கள் கூறுவார்கள். இப்பொழுது இது தூய்மையற்ற இல்லறப்பாதையாகும். தந்தை மீண்டும் ஒரு முறை உங்களைத் தூய்மை ஆக்குவதற்காக வந்துள்ளார். நீங்கள் தூய்மையை வலியுறுத்துவதாலேயே பல தடைகள் ஏற்படுகின்றன. அவர்கள் அகாகானுக்கு அதிகளவு மரியாதை கொடுக்கிறார்கள். போப்பாண்டவருக்கும் மரியாதை உள்ளது. போப்பாண்டவர் வந்து என்ன செய்கின்றார் என்பது உங்களுக்குத் தெரியும். அவர் ஆயிரமாயிரம் திருமணங்களை நடாத்துகின்றார். பல திருமணங்கள் இடம்பெறுகின்றன. போப்பாண்டவர் கைகாப்பு கட்டுகின்றார். இவ்வாறு செய்வதை மக்கள் கௌரவமாகக் கருதுகின்றார்கள். அத் திருமணங்களுக்கு அவர்கள் மகாத்மாக்களையும் அழைக்கின்றார்கள். இக்காலத்தில், அவர்கள் திருமண நிச்சயதார்த்த வைபவங்களையும் நடாத்துகின்றார்கள். தந்தை கூறுகிறார்: காமமே கொடிய எதிரியாகும். இக்கட்டளை உங்கள் மாமியார் வீட்டிற்குச் செல்வது போன்றதல்ல. விளங்கப்படுத்துவதற்கு மிக நல்ல சாதுரியம் தேவை. நீங்கள் மேலும் முன்னேறுகையில், காலப்போக்கில் அவர்கள் புரிந்து கொள்ளவார்கள். ஆதி அநாதி இந்து தர்மத்தினருக்கு விளங்கப்படுத்துங்கள். உண்மையில் இதுவே ஆதி சனாதன தேவிதேவதா தர்மமாக இருந்தது. இது இந்து சமயமல்ல என்பதை அவர்கள் விரைவில் புரிந்து கொள்வார்கள். தந்தையிடமிருந்து இந்த ஞானத்தை நீங்கள் பெறுவது போன்று பிறரும் புரிந்து கொள்வதுடன் உங்கள் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரிக்கும். நீங்களும், நாற்றுக்கள் தொடர்ந்தும் நாட்டப்படும் என்னும் உறுதியான நம்பிக்கையை கொண்டிருக்க வேண்டும். தந்தையின் ஸ்ரீமத்தைப் பின்பற்றுவதன் மூலம் நீங்கள் தேவர்கள் ஆகுகின்றீர்கள். அவர்களே புதிய உலகவாசிகள் ஆவார்கள். தந்தை சங்கம யுகத்தில் வந்து உங்களை மாற்றுகின்றார் என்பதை நீங்கள் முன்னர் சற்றும் அறிந்திருக்கவில்லை. இவை எதுவுமே உங்களுக்குத் தெரியாது. உண்மையில் அதிமங்களகரமான சங்கமயுகம் இதுவேயென்பதை நீங்கள் இப்பொழுது புரிந்து கொண்டீர்கள். நீங்கள் அதிமேன்மையானவர்களாக ஆகுகிறீர்கள் எனினும் எந்த அளவிற்கு நீங்கள் முயற்சி செய்கின்றீர்களோ அதற்கேற்பவே நீங்கள் ஆகுவீர்கள். நீங்கள் ஒவ்வொருவரும் உங்கள் இதயத்தை வினவவேண்டும். பாடசாலையில் நீங்கள் என்னென்ன பாடங்களில் குறைவாக இருக்கிறீர்களோ, அதில் சித்தியெய்த மாட்டீர்கள் என்பதை நீங்கள் புரிந்து கொள்வீர்கள். இதுவும் ஒரு பாடசாலையாகும். கீதா பாடசாலை மிகவும் பிரபல்யமானது. அவர்கள் அதன் பெயரைச் சிறிதளவு மாற்றியுள்ளார்கள். நீங்கள் நிஜமான கீதையும், பொய்யான கீதையும் என எழுதும் போது அவர்கள் குழப்பமடைவார்கள். நிச்சயமாக அங்கு முரண்பாடு இருக்கும். இதனையிட்டுப் பயப்படவேண்டிய அவசியமே இல்;லை. இக்காலத்தில் பஸ்வண்டி போன்றவற்றை எரிப்பது நாகரீகமாகிவிட்டது. அவர்கள் அனைத்துக்கும் தொடர்ந்து தீ மூட்டுகின்றார்கள். எவராவது அவர்களுக்குக் கற்பிப்பதை அவர்கள் கற்கிறார்கள். முன்னர் அறிந்திருந்ததை விட இப்பொழுது மக்கள் அதிகளவு கற்றுள்ளார்கள். மறியல் போராட்டம் போன்றவற்றை அவர்கள் தொடர்ந்தும் நடத்துகிறார்கள். அரசாங்கம் ஒவ்வொரு வருடமும் நஷ்டத்தை அனுபவிப்பதால் வரிகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. ஒருநாள் வங்கிகள் போன்றன அனைவருடைய பெட்டகங்களையும் திறப்பார்கள். மக்கள் வீடுகளில் அளவுக்கு அதிகமாக உணவுப்பொருட்களைச் சேமித்து வைத்துள்ளார்களா எனத் தொடர்ந்தும் சோதனை செய்வார்கள். நீங்கள் அவ்விடயங்கள் அனைத்திலும் இருந்து விடுபட்டுள்ளீர்கள். உங்களின் பிரதான விடயம் நினைவு யாத்திரையாகும். தந்தை கூறுகிறார்: அந்த விடயங்களுடன் எனக்கு எவ்வித தொடர்பும் இல்லை. எனது கடமை உங்கள் துன்பம் அனைத்தும் அகற்றப்படும் பாதையைக் காட்டுவதாகும். இந்நேரத்தில் உங்கள் கர்மக் கணக்குகள் தீர்க்கப்படுகின்றன. இன்னமும் இருக்கின்ற நோய்கள் அனைத்தும் வெளித்தோன்றும். இறுதியில் செய்த கர்மத்தின் கர்மக் கணக்குகளும் தீர்க்கப்பட வேண்டும். நீங்கள் பயப்படக் கூடாது. மக்கள் நோயுற்றிருக்கும் போது, கடவுளை நினைவு செய்யுமாறு நினைவூட்டப்படுகின்றது. நீங்கள் வைத்தியசாலைகளுக்குச் சென்று, இந்த ஞானத்தைக் கொடுக்க முடியும்: தந்தையை நினைவு செய்யுங்கள், உங்கள் பாவங்கள் அழிக்கப்படும். இது இந்தப் பிறப்பிற்கான விடயம் மாத்திரமல்ல. நீங்கள் உங்களுடைய எதிர்கால 21 பிறவிகளுக்கு நோய்வாய்ப்பட மாட்டீர்கள், அத்துடன் என்னை நினைவு செய்வதால், உங்களுடைய ஆயுட்காலம் அதிகரிக்கும் என்பதை நான் உறுதிப்படுத்துகிறேன். பாரத மக்களின் ஆயுட்காலம் நீண்டதாக இருந்தது, அவர்கள் நோயிலிருந்து விடுபட்டவர்களாக இருந்தார்கள். உங்களை மேன்மையானவர்களாக ஆக்குவதற்காக தந்தை இப்பொழுது உங்களுக்கு ஸ்ரீமத்தைக் கொடுக்கிறார். 'மிக மேன்மையானதும் மங்களகரமானதும்" என்ற வார்த்தையை நீங்கள் ஒருபொழுதும் மறக்கக் கூடாது. நீங்களே ஒவ்வொரு கல்பமும் இவ்வாறு ஆகுகிறீர்கள். இதை வேறு எவராலும் கூறமுடியாது. எனவே, இவ்வாறு உங்களால் அதிகளவு சேவையைச் செய்ய முடியும். நீங்கள் எந்நேரமும் வைத்தியரை சந்திப்பதற்காக நேரத்தை நிர்ணயித்துக் கொள்ள முடியும். தொழில் செய்பவர்களாலும் அதிகளவு சேவையை செய்ய முடியும். நோயாளிகளிடம் கூறுங்கள்: எங்களுக்கும் ஒரு வைத்தியர் உள்ளார். அவர் அழிவற்றவரும், எல்லையற்ற சத்திரசிகிச்சை நிபுணரும் ஆவார். எங்களை 21 பிறவிகளுக்கு நோய்களிலிருந்து விடுபட்டவராக ஆக்குபவருக்கு நாங்கள் இப்பொழுது உரியவர்களாக இருக்கின்றோம். சுகாதார அமைச்சர்களுக்கு விளங்கப்படுத்துங்கள்: மக்கள் ஆரோக்கியத்திற்காக அதிகளவு முயற்சி செய்கிறார்கள். சத்தியயுகத்தில் மிகச் சிறிதளவு மக்களே இருக்கிறார்கள். அங்கே அமைதியும், சந்தோஷமும், தூய்மையும் நிலவின. அங்கே அனைத்தும் இருந்தது. நீங்கள் மாத்திரமே முழு உலகிற்கும் நன்மை செய்கின்றீர்கள். நீங்கள் வழிகாட்டிகள். நீங்கள் பாண்டவ சமுதாயத்தினர். இது வேறு எவரது புத்தியில் இருக்காது. உணவு அமைச்சருக்கு விளங்கப்படுத்துங்கள். சிவபாபா அனைவரையும் விட சிறந்த உணவு அமைச்சராவார். சுவர்க்கத்தில் எக் குறைபாடும் இல்லாத வகையில் அவர் பெருமளவு உணவை வழங்குகின்றார். நீங்கள் இப்பொழுது சங்கமயுகத்தில் இருக்கிறீர்கள். உங்களுடைய புத்தியில் முழுச் சக்கரமும் இருப்பதாலேயே நீங்கள் சுயதரிசன சக்கரதாரிகள் என்று அழைக்கப்படுகிறீர்கள். எவ்வாறாயினும், பாரதம் கடனாளி ஆகிவிட்டது. விவேகத்தைக் கொண்டிருப்பவர் தனது விவேகத்தை தொடர்ந்தும் உங்களுக்குக் கற்பிப்பதற்காக வந்துள்ளார் என்பது உங்களுக்குத் தெரியும். அச்சா.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டெடுக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தந்தை, தாயாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. ஒரேயொரு தந்தையை உங்கள் சகவாசியாக ஆக்கி, 'நான் உங்களுடனேயே அமர்ந்திருக்கிறேன், நீங்கள் கூறுவதை மாத்திரமே நான் செவிமடுக்கிறேன், நான் உங்களுடனேயே உண்கிறேன்" என்பதை அனுபவம் செய்யுங்கள். தீய சகவாசத்தைத் துறந்து, சத்திய சகவாசத்தில் இருங்கள்.

2. நினைவு யாத்திரையால் உங்களுடைய கர்மக் கணக்குகளையும், கர்ம வேதனையையும் தீர்த்து, முழுமையாக தூய்மையானவர்களாக ஆகுங்கள். சங்கமயுகத்தில் உங்களை முழுமையாக மாற்றுங்கள்.

ஆசீர்வாதம்:
புள்ளி வடிவில் நிலைத்திருப்பதன் மூலம், உங்கள் மனதையும் புத்தியையும் எந்த எதிர்மறையான செல்வாக்கிலிருந்தும் பாதுகாப்பாக வைத்திருக்கின்ற ஓர் விசேட ஆத்மா ஆகுவீர்களாக.

சகல பருவகாலங்களிலும், அப்பருவ காலத்தில் இருந்து உங்களை பாதுகாப்பதற்காக விசேட கவனம் செலுத்துகின்றீர்கள். மழைகாலத்தில், குடை அல்லது ரெயின்கோட் போன்றவற்றை உங்களுடன் வைத்திருப்பதில் கவனம் செலுத்துவீர்கள். குளிர் காலத்தில், குளிரிலிருந்து பாதுகாக்கும் ஆடைகளை உங்களோடு வைத்திருப்பீர்கள். அவ்வாறே, தற்காலத்தில், மாயை எதிர்மறையான உணர்வுகளையும், நோக்கங்களை உங்கள் மனதிலும் புத்தியிலும் உருவாக்குகின்ற அவளது விசேட பணியை ஆற்றுகின்றாள். ஆகையால், நீங்கள் விசேட பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். நீங்கள் புள்ளி வடிவத்தில் நிலைத்திருப்பதே அதனை வெற்றி கொள்வதற்கான இலகுவான வழியாகும். ஆச்சரியக்குறியோ அல்லது வினாக்குறியோ இடுவதற்குப் பதிலாக முற்றுப்புள்ளி இட்டு ஓர் விசேட ஆத்மா ஆகுங்கள்.

சுலோகம்:
ஆம், எனது பிரபு| என ஒவ்வொரு எண்ணத்திலும், வார்த்தையிலும், செயலிலும் கூறுபவரே ஓர் கீழ்ப்படிவான ஆத்மா ஆவார்.