01.03.20    Avyakt Bapdada     Tamil Lanka Murli    02.12.85     Om Shanti     Madhuban


ஆன்மீகச் சக்தியே பந்தனத்தில் இருந்து விடுபடுவதற்கான வழிமுறை.


இன்று, பாப்தாதா தனது ஆன்மீகக் குழந்தைகளின் ஆன்மீகச் சக்தியைப் பார்த்தார். எல்லோரும் அவரின் குழந்தைகளாக இருப்பதனால், ஒவ்வோர் ஆன்மீகக் குழந்தையும் தந்தையிடமிருந்து ஆன்மீகச் சக்தியைப் பெறும் முழு உரிமையைப் பெற்றுள்ளார். எவ்வாறாயினும், நீங்கள் எந்தளவிற்குப் பேறுகளின் சொரூபங்கள் ஆகியுள்ளீர்கள் என்பதை பாபா பார்த்தார். தினமும், குழந்தைகள் எல்லோரும் தங்களை ஆன்மீகக் குழந்தைகள் என்று அழைத்து, ஆன்மீகத் தந்தைக்கு அன்பினதும் நினைவுகளினதும் பிரதியுபகாரத்தைத் தமது உதடுகளால் அல்லது தமது மனங்களால் அன்பும் நினைவும் நமஸ்காரங்களும் என்று சொல்கிறார்கள். இவ்வாறு நீங்கள் பதில் அளிக்கிறீர்கள், அல்லவா? இதன் அர்த்தம் என்னவென்றால், ஆன்மீகத் தந்தை தினமும் உங்களை ஆன்மீகக் குழந்தைகள் என்று அழைத்து, ஆன்மீகச் சக்தியின் உண்மையான அர்த்தத்தை உங்களுக்கு நினைவூட்டுகிறார். ஏனெனில், இந்த பிராமண வாழ்க்கையின் சிறப்பியல்பு ஆன்மீகமே ஆகும். இந்த ஆன்மீகச் சக்தியால் நீங்கள் உங்களையும் மாற்றுகிறீர்கள். மற்றவர்களையும் மாற்றுகிறீர்கள். பிரதானமான அத்திவாரம், இந்த ஆன்மீகச் சக்தியே ஆகும். இந்த சக்தியாலேயே நீங்கள் பல வகையான பந்தனங்களில் இருந்து விடுபடுகிறீர்கள். நீங்கள் விடுதலை அடையவேண்டிய, ஆனால் இப்போதும் அனுபவித்துக் கொண்டிருக்கும் சில சூட்சுமமான பந்தனங்களை பாப்தாதா பார்த்தார். உங்களால் முக்தி அடையும் வழிமுறையை நடைமுறைப்படுத்த முடியவில்லை. இதற்கு என்ன காரணம்? ஏனென்றால், ஒவ்வொரு செயலிலும் ஆன்மீக சக்தியை எவ்வாறு பயன்படுத்துவது என்பது உங்களுக்குத் தெரியவில்லை. நீங்கள் எண்ணங்கள், வார்த்தைகள், செயல்கள் என்ற மூன்றையும் ஒரே வேளையில் சக்திவாய்ந்தவையாக ஆக்க வேண்டும். எவ்வாறாயினும், எதில் நீங்கள் தளர்வடைகிறீர்கள்? ஒருபுறம், உங்களின் எண்ணங்களைச் சக்திவாய்ந்தது ஆக்குகிறீர்கள். ஆனால் உங்களின் வார்த்தைகளில் சிறிதளவு தளர்வாக ஆகிவிடுகிறீர்கள். சிலவேளைகளில், உங்களின் வார்த்தைகள் சக்திவாய்ந்தவை ஆகுகின்றன. ஆனால் உங்களின் செயல்களில் சிறிது தளர்வாக ஆகிவிடுகிறீர்கள். எவ்வாறாயினும், ஒரே வேளையில் மூன்றையும் ஆன்மீகரீதியாக சக்திவாய்ந்தது ஆக்குவதே, முக்தி அடைவதற்கான வழிமுறை ஆகும். உலகை உருவாக்குவதற்கு படைத்தல், காத்தல், அழித்தல் என்ற மூன்று செயல்களும் அவசியமாகும். அதேபோன்று, சகல வகையான பந்தனங்களில் இருந்தும் விடுபடுவதற்கு, எண்ணங்கள், வார்த்தைகள், செயல்கள் என்ற மூன்றிலும் ஒரே வேளையில் ஆன்மீக சக்தி இருத்தல் அவசியமாகும். சிலவேளைகளில் நீங்கள் உங்களின் மனதைப் பார்த்துக் கொள்கிறீர்கள். ஆனால், உங்களின் வார்த்தைகளில் ஏதாவது குறைந்துவிடுகிறது. அதன்பின்னர், நான் அவ்வாறு நினைக்கவில்லை, ஏன் அவ்வாறு நடந்தது என எனக்குத் தெரியவில்லை என நீங்கள் கூறுகிறீர்கள். நீங்கள் மூன்றிலும் முழுக்கவனம் செலுத்த வேண்டும். ஏன்? இந்த மூன்று வழிமுறைகளும் உங்களின் முழுமையான ஸ்திதியையும் தந்தையையும் வெளிப்படுத்தும். முக்தி அடைவதற்கு, மூன்றிலும் ஆன்மீகத்தை அனுபவம் செய்ய வேண்டும். மூன்றிலும் முழுமையாக விவேகிகளாக இருப்பவர்களே ஜீவன்முக்தி வாழ்க்கை வாழ்பவர்கள். எனவே, பாப்தாதா சூட்சுமமான பந்தனங்களைப் பார்த்தார். சூட்சும பந்தனங்களைப் பொறுத்தவரை, இந்த மூன்றும் விசேடமான தொடர்பைக் கொண்டுள்ளன.

பந்தனத்தில் இருக்கும் ஒருவரின் அடையாளம், அவர் எப்போதும் மற்றவர்களின் ஆதிக்கத்திற்கு உட்பட்டிருப்பார். பந்தனத்தில் இருக்கும் ஒருவர் எப்போதும் அக சந்தோஷத்தை அனுபவிக்க மாட்டார். அவருக்கு சதா சந்தோஷத்தின் அனுபவமும் இருக்காது. பௌதீக உலகில், தற்காலிக வசதிகள் உங்களுக்குத் தற்காலிகமான சந்தோஷத்தையும் சுகத்தையும் அளிக்கின்றன. ஆனால் அங்கு அழியாத அல்லது அக சந்தோஷம் இருக்காது. அதேபோன்று, இந்தச் சூட்சும பந்தனங்களால் கட்டுப்பட்ட ஆத்மாக்களும் இந்த பிராமண வாழ்க்கையில், ஏதாவது சேவை, ஒன்றுகூடலின் சக்தி, ஏதாவதொரு பேறு, அல்லது ஏதாவது மேன்மையான சகவாசத்தின் அடிப்படையில் குறுகிய காலத்திற்குத் தொடர்ந்து முன்னேறுவார்கள். இந்த வழிமுறைகள் கிடைக்கும்வரை அவர்களால் சந்தோஷத்தையும் சுகத்தையும் அனுபவம் செய்ய முடியும். எவ்வாறாயினும், இந்த வழிமுறைகள் முடிந்ததும் அல்லது நீக்கப்பட்டதும், அவர்களின் சந்தோஷமும் முடிந்துவிடுகிறது. அது நிலையாக இருப்பதில்லை. சிலவேளைகளில் அவர்கள் சந்தோஷத்தில் நடனம் ஆடுவார்கள். அந்த நேரத்தில், அவர்களைப் போல் எவரும் இருக்கமாட்டார்கள். எவ்வாறாயினும், அவர்கள் நிறுத்தத்திற்கு வந்ததும், சின்னஞ்சிறிய கல்லும் ஒரு மலை போன்றே தெரியும். அவர்களிடம் ஆதியான சக்தி இல்லாததால், அந்த வழிமுறைகளின் அடிப்படையில் அவர்கள் சந்தோஷ நடனம் ஆடுவார்கள். அந்த வழிமுறைகள் இல்லாமல் போனதும், அவர்கள் எங்கே நடனம் ஆடுவார்கள்? இதனாலேயே, ஒரே வேளையில் மூன்று ரூபங்களிலும் அக ஆன்மீக சக்தி எப்போதும் அவசியமாகும். அவர்களின் மனங்களில் உள்ள எண்ணங்களைக் கட்டுப்படுத்தும் சக்தி இல்லாதிருப்பதே பிரதானமான பந்தனம் ஆகும். உங்களின் சொந்த எண்ணங்களின் ஆதிக்கத்திற்கு உட்படுவதனால், நீங்கள் மற்றவர்களின் ஆதிக்கத்திற்கு உட்படுவதாக அனுபவம் செய்கிறீர்கள். தமது சொந்த எண்ணங்களின் பந்தனத்தில் இருப்பவர்கள், நீண்ட காலத்திற்கு இதில் மும்முரமாக இருப்பார்கள். ஆகாயத்தில் கோட்டை கட்டுவதைப் பற்றியும் நீங்கள் பேசுகிறீர்கள். நீங்களே கோட்டை கட்டிவிட்டுப் பின்னர் நீங்களே அவற்றை உடைத்தும் விடுகிறீர்கள். நீங்கள் பெரியதொரு சுவரைக் கட்டுகிறீர்கள். இதனாலேயே, அது ஆகாயக் கோட்டை என்று அழைக்கப்படுகிறது. பக்தி மார்க்கத்தில் அவர்கள் பொம்மைகளை வழிபட்டு, அவற்றை அலங்கரித்துப் பின்னர் அவற்றை நீரில் அமிழ்த்துவதைப் போல, தமது எண்ணங்களின் பந்தனத்தில் கட்டுப்பட்டிருக்கும் ஆத்மாக்களும், பல விடயங்களைக் கட்டுகிறார்கள். பின்னர் அவற்றில் பலவற்றைப் பாழாக்கியும் விடுகிறீர்கள். அவர்கள் அந்த வீணான செயலால் களைப்படைவதுடன் மனவிரக்திக்கும் உள்ளாகுகிறார்கள். சிலவேளைகளில், அகங்காரத்தினால், தமது சொந்தத் தவறுக்காக அவர்கள் மற்றவர்களைக் குறைகூறுகிறார்கள். பின்னர், அந்த நேரம் கடந்துசென்ற பின்னர், தாம் செய்தது சரியல்ல என்பதை அவர்கள் புரிந்துகொள்வதுமில்லை. உணர்வதும் இல்லை. ஆனால், அகங்காரத்தின் ஆதிக்கத்தால், தங்களை நிரூபிப்பதற்காக, அவர்கள் மற்றவர்களைக் குறைகூறுகிறார்கள். புத்தியைப் பூட்டிவிடும் இந்த மனதின் பந்தனமே மிகப்பெரிய பந்தனம் ஆகும். எனவே, நீங்கள் அவர்களுக்கு விளங்கப்படுத்துவதற்கு எந்தளவிற்கு முயற்சி செய்தாலும், அவர்களால் புரிந்து கொள்ள முடிவதில்லை. பந்தனத்தில் இருப்பவர்களின் விசேடமான அடையாளம், இனங்காணும் சக்தி இல்லாமல் போவதே ஆகும். இதனாலேயே, இந்த சூட்சும பந்தனத்தை முடிக்காமல், உங்களால் எல்லா வேளையும் அக சந்தோஷத்தை அல்லது அதீந்திரிய சுகத்தை அனுபவம் செய்ய முடியாது.

சங்கமயுகத்தின் சிறப்பியல்பானது, அதீந்திரிய சுகம் என்ற ஊஞ்சலில் ஆடுவதும், சதா சந்தோஷத்தில் நடனம் ஆடுவதும் ஆகும். எனவே, சங்கமயுகவாசி ஆகியபின்னர், உங்களால் இந்தச் சிறப்பியல்பை அனுபவம் செய்ய முடியாவிட்டால், இதை என்னவென்று சொல்வது? ஆகவே, உங்களுக்குள் வீணான எண்ணங்களின் பந்தனம், பொறாமை அல்லது முரண்பாடு என்ற எண்ணங்களின் பந்தனம், கவனக்குறைவு அல்லது சோம்பேறித்தனம் என்ற எண்ணங்களின் பந்தனம் என்ற எந்த வகையான எண்ணங்களின் பந்தனமும் இல்லையா என்பதைச் சோதித்துப் பாருங்கள். இந்த வகையான எண்ணங்களில் எதுவும் மனதின் பந்தனத்தின் அடையாளமே ஆகும். எனவே, இன்று, பாப்தாதா பந்தனங்களைப் பார்த்தார்: உங்களில் எத்தனை பேர் முக்தி பெற்றுள்ள ஆத்மாக்கள்?

பெரிய கயிறுகள் இப்போது முடிந்துவிட்டன. இப்போது இந்த சூட்சுமமான நூல்களே காணப்படுகின்றன. அவை மெல்லியவை. ஆனால் உங்களைப் பந்தனத்தில் கட்டுவதில் அவை கெட்டித்தனமானவை. நீங்கள் பந்தனத்தில் கட்டப்பட்டிருப்பதைக்கூட உணராமல் இருப்பீர்கள். ஏனெனில், இந்த பந்தனங்கள் உங்களைத் தற்காலிகமான காலப்பகுதிக்குப் போதை அடையச் செய்கின்றன. அழியும் போதையைக் கொண்டிருப்பவர்கள், ஒருபோதும் தங்களைக் கீழாக நினைப்பதில்லை. அவர்கள் சாக்கடைக்குள் இருப்பார்கள். ஆனால் தாம் மாளிகையில் இருப்பதாக அவர்கள் நினைப்பார்கள். அவர்கள் வெறுங்கையுடன் இருப்பார்கள். ஆனால் தங்களை அரசர்களாகக் கருதுவார்கள். அதேபோன்று, இந்த போதையுடன் இருப்பவர்களும் ஒருபோதும் தங்களைத் தவறானவர்கள் எனக் கருத மாட்டார்கள். அவர்கள் எப்போதும் தங்களைச் சரியென நிரூபிக்க முயற்சி செய்வார்கள். அல்லது இது எல்லா வேளையும் நிகழ்கிறது, இது எப்போதும் இப்படியே உள்ளது எனக் கூறித் தமது கவனக்குறைவைக் காட்டுவார்கள். இதனாலேயே, மனதின் பந்தனத்தைப் பற்றி உங்களுக்கு இன்று கூறப்பட்டது. பாபா வேறொரு வேளையில் வார்த்தைகளையும் செயல்களையும் பற்றிக் கூறுவார். உங்களுக்குப் புரிகிறதா?

ஆன்மீக சக்தியால் தொடர்ந்து முக்தி பெறுங்கள். சங்கமயுகத்தில் ஜீவன்முக்தி வாழ்க்கையை அனுபவம் செய்வதென்றால், எதிர்கால வெகுமதியான ஜீவன்முக்தியைப் பெறுதல் என்று அர்த்தம். நீங்கள் பொன்விழாவின் போது ஜீவன்முக்தி அடைய வேண்டும், அல்லவா? அல்லது, நீங்கள் வெறுமனே பொன்விழாவைக் கொண்டாடுவீர்களா? அவ்வாறு ஆகுவதே கொண்டாடுதல் எனப்படும். உலக மக்கள் வெறுமனே கொண்டாடுவார்கள். ஆனால், இங்கு நீங்கள் அவ்வாறு ஆகுகிறீர்கள். இப்போது, விரைவாகத் தயார் ஆகுங்கள். அப்போது மட்டுமே உங்களின் முக்தியால் அனைவரும் முக்தி பெறுவார்கள். விஞ்ஞானிகளும் தாம் உருவாக்கிய வசதிகளின் பந்தனத்தில் கட்டுப்பட்டு இருக்கிறார்கள். அரசியல் தலைவர்களும் தங்களைக் காத்துக் கொள்ள விரும்புகிறார்கள். ஆனால் அவர்கள் தாம் நினைக்கும் எதையும் செய்ய முடியாத நிலையில் அதிகளவில் கட்டுண்டு இருக்கிறார்கள். எனவே, அதுவும் ஒரு பந்தனம், இல்லையா? அனைவரையும் வெவ்வேறு பந்தனங்களில் இருந்து விடுவிக்கும் நீங்கள், இப்போது விடுதலை அடைகிறீர்கள். இப்போது நீங்கள் அனைவரையும் விடுவிக்க வேண்டும். அனைவரும் விடுதலை பெற வேண்டும் என அழுது வேண்டுகிறார்கள். சிலர் ஏழ்மையில் இருந்து விடுபட விரும்புகிறார்கள். சிலர் தமது இல்லறத்தில் இருந்து விடுபட விரும்புகிறார்கள். ஆனால், அனைவரும் விடுதலைக்காக அழைப்பது ஒன்றாகவே உள்ளது. எனவே, இப்போது முக்தியை அருள்பவர்கள் ஆகுங்கள். அவர்களுக்கு முக்திக்கான பாதையைக் காட்டுவதுடன், முக்திக்கான ஆஸ்தியையும் கொடுங்கள். அவர்கள் அழைப்பது உங்களுக்குக் கேட்கிறதல்லவா? அல்லது, இது தந்தையின் பணி. நான் என்ன செய்வது? என நீங்கள் நினைக்கிறீர்களா? பாபா கூறுகிறார்: நீங்கள் வெகுமதியைப் பெற வேண்டும். தந்தை அதைப் பெற வேண்டியதில்லை. உங்களுக்கே பிரஜைகளும் பக்தர்களும் தேவைப்படுகிறார்கள். தந்தைக்கு அவர்கள் தேவையில்லை. உங்களின் பக்தர்கள் இயல்பாகவே தந்தையின் பக்தர்கள் ஆகுவார்கள். ஏனெனில், நீங்களே துவாபர யுகத்தின் முதல் பக்தர்கள் ஆகுவீர்கள். நீங்கள் முதலில் தந்தையை வழிபட ஆரம்பிப்பீர்கள். எனவே, இப்போது அனைவரும் உங்களைப் பின்பற்றுவார்கள். எனவே, இப்போது நீங்கள் என்ன செய்ய வேண்டும்? அவர்களின் அழைப்பைக் கேளுங்கள். முக்தியை அருள்பவர்கள் ஆகுங்கள். அச்சா.

ஆன்மீக சக்தியைப் பெறும் வழிமுறையால் சதா முக்தியை அடைபவர்களுக்கும், முக்தியை அருள்பவர்களாகி சதா தங்களை சூட்சும பந்தனங்களில் இருந்து விடுவித்துக் கொள்பவர்களுக்கும், தமது அக சந்தோஷத்தாலும் அதீந்திரிய சுகத்தாலும் தங்களை சதா அதிகளவில் முன்னேறச் செய்பவர்களுக்கும், அனைவரையும் முக்தி அடையச் செய்வதற்கு எப்போதும் நல்லாசிகளைக் கொண்டிருப்பவர்களுக்கும், இத்தகைய ஆன்மீக சக்திவாய்ந்த குழந்தைகளுக்கும், பாப்தாதாவின் அன்பும் நினைவும் நமஸ்காரங்களும் உரித்தாகட்டும்.

பாப்தாதா குழுக்களைச் சந்திக்கிறார்:
1. நீங்கள் கேட்பதுடன், சொரூபங்களாகவும் ஆகும் சக்திசாலி ஆத்மாக்கள் அல்லவா? ஒவ்வொரு நாளும் உங்களின் எண்ணங்களில், உங்களுக்காகவும் மற்றவர்களுக்காகவும் ஊக்கமும் உற்சாகமும் நிறைந்த ஓர் எண்ணம் இருக்க வேண்டும். தற்காலத்தில், பத்திரிகைகளில் அல்லது வெவ்வேறு இடங்களில், இன்றைய நாளுக்கான சிந்தனை என்று போடுவார்கள். அதேபோன்று, ஊக்கமும் உற்சாகமும் நிறைந்த ஏதாவதோர் எண்ணம் உங்களின் மனதில் வெளிப்பட வேண்டும். அந்த எண்ணத்தை உங்களின் ரூபத்தில் கொண்டுவருவதுடன் மற்றவர்களுக்குச் சேவை செய்யவும் பயன்படுத்துங்கள். அப்போது என்ன நிகழும்? எப்போதும் புதிய ஊக்கமும் உற்சாகமும் காணப்படும். இன்று, நான் அதைச் செய்வேன். இன்று, நான் இதைச் செய்வேன். விசேடமான நிகழ்ச்சி ஒன்று இருக்கும்போது ஏன் ஊக்கமும் உற்சாகமும் ஏற்படுகின்றன? நீங்கள் திட்டங்களை உருவாக்குகிறீர்கள், இல்லையா? நான் இதைச் செய்வேன். பின்னர் அதைச் செய்வேன். அதைச் செய்வதில் விசேடமான ஊக்கமும் உற்சாகமும் ஏற்படுகின்றன. இந்த முறையில், தினமும் அமிர்த வேளையில், ஒரு விசேடமான ஊக்கமும் உற்சாகமும் உள்ள எண்ணத்தை உருவாக்குங்கள். பின்னர், அதற்கேற்ப உங்களைச் சோதித்துப் பாருங்கள். உங்களின் வாழ்க்கை எப்போதும் ஊக்கமும் உற்சாகமும் நிறைந்தது ஆகிவிடும். அத்துடன் நீங்கள் மற்றவர்களையும் உற்சாகப்படுத்துபவர்கள் ஆகுவீர்கள். உங்களுக்குப் புரிகிறதா? களிப்பூட்டும் நிகழ்ச்சிகளை நடத்துவதைப் போல, இந்த நிகழ்ச்சியை உங்களின் மனதைக் களிப்பூட்டுவதற்காகச் செய்யுங்கள். அச்சா.

2. நீங்கள் சக்திவாய்ந்த நினைவின் மூலம் எப்போதும் முன்னேறும் ஆத்மாக்கள், அல்லவா? சக்திவாய்ந்த நினைவில்லாமல் எந்தவொரு அனுபவமும் ஏற்படாது. எனவே, எப்போதும் சக்திசாலியாகித் தொடர்ந்து முன்னேறுங்கள். உங்களின் சக்திக்கேற்ப எப்போதும் இறை சேவையில் ஈடுபட்டிருங்கள். சேவையின் பலனைப் பெறுங்கள். சேவைக்காகத் தொடர்ந்து உங்களிடம் எவ்வளவு சக்தி இருக்கிறதோ, அந்தளவிற்குப் பயன்படுத்துங்கள். அது உங்களின் சரீரத்தால், உங்களின் மனதால் அல்லது செல்வத்தால் இருக்கலாம். நீங்கள் நிச்சயமாக ஒன்றுக்குப் பதில் பலமில்லியன்மடங்கினைப் பெறப் போகிறீர்கள். நீங்கள் உங்களுக்காகச் சேமிக்கிறீர்கள். பல பிறவிகளுக்காக நீங்கள் சேமிக்க வேண்டும். ஒரு பிறவியில் சேமிப்பதன் மூலம் நீங்கள் 21 பிறவிகளுக்கு முயற்சி செய்வதில் இருந்து விடுபடுவீர்கள். உங்களுக்கு இந்த இரகசியம் தெரியுமல்லவா? எனவே, எப்போதும் உங்களின் எதிர்காலத்தைத் தொடர்ந்து மேன்மையானது ஆக்குங்கள். தொடர்ந்து சந்தோஷத்துடன் சேவையில் முன்னேறுங்கள். எப்போதும் நினைவுடன் நிலையான, ஸ்திரமான ஸ்திதியுடன் தொடர்ந்து முன்னேறுங்கள்.

3. நீங்கள் உங்களின் நினைவின் சந்தோஷத்தால் ஆத்மாக்கள் பலருக்கும் சந்தோஷத்தைக் கொடுக்கும் சேவையாளர்கள், அல்லவா? உண்மையான சேவையாளர்கள் என்றால் அன்பிலே திளைத்திருப்பதுடன், மற்றவர்களையும் அன்பிலே மூழ்கியிருக்கச் செய்பவர்கள். ஒவ்வோர் இடத்தின் சேவையும் அதற்கேயுரியது. நீங்கள் இந்த இலக்குடன் தொடர்ந்து முன்னேறினால், இவ்வாறு முன்னேறுதல் மகத்தான சந்தோஷத்திற்கான விடயம் ஆகிவிடும். உண்மையில், அந்த உலகப் படிப்புகள் போன்றவை அனைத்தும் அழியக்கூடியவை. அழியாத பேறுகளைப் பெறுவதற்கான வழிமுறை, இந்த ஞானமே ஆகும். நீங்கள் இதை அனுபவம் செய்கிறீர்கள், அல்லவா? பாருங்கள், சேவையாளர்களான நீங்கள் நாடகத்தில் இத்தகைய பொன்னான வாய்ப்பைப் பெற்றுள்ளீர்கள். இந்தப் பொன்னான வாய்ப்புடன் நீங்கள் விரும்பிய அளவிற்கு முன்னேறுவது உங்களின் கைகளிலேயே தங்கியுள்ளது. எல்லோருக்கும் இத்தகைய பொன்னான வாய்ப்புக் கிடைப்பதில்லை. பலமில்லியன்களில் கையளவினர் மட்டுமே அதைப் பெறுகிறார்கள். நீங்கள் அதைப் பெற்றுள்ளீர்கள். எனவே, இந்தளவு சந்தோஷம் உங்களுக்கு இருக்கிறதா? இந்த உலகில் எவரிடமும் இல்லாதது உங்களிடம் உள்ளது. சதா உங்களுக்குள் இந்த சந்தோஷத்துடன் இருங்கள். அத்துடன் இந்த சந்தோஷத்தை மற்றவர்களுக்கும் கொடுங்கள். நீங்கள் ஒவ்வொருவரும் எந்தளவிற்கு முன்னேறுகிறீர்களோ, அந்தளவிற்கு மற்றவர்களையும் முன்னேறச் செய்வீர்கள். நீங்கள் சதா முன்னேறுபவர்கள். அக்கம்பக்கம் பார்த்து, நிறுத்தத்திற்கு வருபவர்கள் அல்ல. எப்போதும் உங்களின் முன்னால் தந்தையும் சேவையுமே இருக்க வேண்டும். அப்போது நீங்கள் சதா தொடர்ந்து முன்னேறுவீர்கள். எப்போதும் உங்களைத் தந்தையின் அதியன்பிற்குரிய, நீண்ட காலம் பிரிந்து இப்போது கண்டெடுக்கப்பட்ட குழந்தைகளாகக் கருதியவண்ணம் தொடர்ந்து முன்னேறுங்கள்.

தொழில் செய்யும் குமாரிகளை பாபா சந்திக்கிறார்:
1. உங்கள் அனைவரினதும் இலக்கு மேன்மையானது அல்லவா? நீங்கள் தொடர்ந்து இரண்டு பக்கங்களிலும் செயற்பட முடியும் என நினைக்கிறீர்களா? ஏதாவது பந்தனம் இருக்கும்போது, இரு பக்கங்களிலும் செயற்படுவது வேறுவிடயம். ஆனால், பந்தனத்தில் இருந்து விடுபட்ட ஆத்மாக்களுக்கு, இரண்டு பக்கங்களிலும் இருத்தல் என்றால் இடையில் தொங்குவதைப் போன்றே இருக்கும். சிலரின் சூழ்நிலைகளுக்கேற்ப, பாப்தாதா அவர்களுக்கு அனுமதி கொடுக்கிறார். எவ்வாறாயினும், அது மனதின் பந்தனமாக இருந்தால், அது தொங்குவதைப் போன்றே இருக்கும். ஒரு கால் இங்கேயும் மற்றைய கால் அங்கேயும் இருந்தால் என்ன நடக்கும்? ஒரு படகில் ஒரு காலையும் இன்னொரு படகில் மற்றைய காலையும் வைத்தால், அதன் நிலைமை என்ன? உங்களுக்குத் துன்பமே ஏற்படும், அல்லவா? ஆகவே, இரண்டு பாதங்களும் ஒரு படகிலேயே இருக்க வேண்டும். எப்போதும் தைரியமாக இருங்கள். தைரியத்தைக் கொண்டிருப்பதன் மூலம் உங்களால் இலகுவாக அக்கரைக்குச் செல்ல முடியும். பாபா உங்களுடன் இருக்கிறார் என்பதை எப்போதும் நினைவில் வைத்திருங்கள். நீங்கள் தனியே இல்லை. அப்போது நீங்கள் விரும்பிய பணியை உங்களால் செய்ய முடியும்.

2. குமாரிகளுக்கு சங்கமயுகத்தில் விசேடமான பாகங்கள் உள்ளன. நீங்கள் உங்களை இத்தகைய விசேடமான பாகங்கள் உடையவர்கள் ஆக்கிவிட்டீர்களா? அல்லது, இப்போதும் சாதாரணமானவர்களாகவே இருக்கிறீர்களா? உங்களின் சிறப்பியல்பு என்ன? சேவையாளர்கள் ஆகுவதே உங்களின் சிறப்பியல்பாகும். சேவையாளர்கள் விசேடமானவர்கள். நீங்கள் சேவையாளராக இல்லாவிட்டால், சாதாரணமானவர்களே. உங்களின் இலக்கு என்ன? சங்கமயுகத்தில் மட்டுமே உங்களுக்கு இந்த வாய்ப்பு கிடைக்கும். இப்போது நீங்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளாவிட்டால், கல்பம் முழுவதும் நீங்கள் அதைப் பெற மாட்டீர்கள். சங்கமயுகத்திற்கு மட்டுமே இந்த விசேடமான ஆசீர்வாதம் உள்ளது. உலகப் படிப்பைப் படிக்கும்போதும், உங்களின் அன்பு இந்தப் படிப்பிற்கே இருக்க வேண்டும். அப்போது அந்தப் படிப்பு ஒரு தடை ஆகாது. எனவே, நீங்கள் அனைவரும் உங்களின் பாக்கியத்தை உருவாக்கிய வண்ணம் தொடர்ந்து முன்னேறுவீர்கள். உங்களின் பாக்கியத்திற்கான போதை எந்தளவிற்கு அதிகமாக உள்ளதோ, அந்தளவிற்கு நீங்கள் இலகுவாக மாயையை வென்றவர்கள் ஆகுவீர்கள். இது ஆன்மீக போதை ஆகும். எப்போதும் உங்களின் பாக்கியத்திற்கான பாடல்களைப் பாடுங்கள். பாடல்களைப் பாடிக் கொண்டு உங்களின் இராச்சியத்தை அடைவீர்கள்.

ஆசீர்வாதம்:
உங்களின் பலவீனங்களைத் தானம் செய்வதன் மூலம் சகல பலவீனங்களையும் முடிக்கும் அருள்பவராகவும் பாக்கியத்தை அருள்பவராகவும் ஆகுவீர்களாக.

பக்தி மார்க்கத்தில், ஏதாவது குறைவாக இருந்தால், அதைத் தானம் செய்யும்படி கேட்கப்படும் ஒரு வழக்கம் உள்ளது. நீங்கள் அதைத் தானம் செய்வதன் மூலம், அவ்வாறு கொடுப்பது, பெறுதலின் வடிவைப் பெறும். எனவே, எந்தவிதமான பலவீனத்தையும் முடிப்பதற்கு, அருள்பவராகவும் பாக்கியத்தை அருள்பவராகவும் ஆகுங்கள். நீங்கள் மற்றவர்களுக்குத் தந்தையின் பொக்கிஷங்களை ஆதாரமாகக் கொடுப்பதற்குக் கருவி ஆகினால், பலவீனங்கள் இயல்பாகவே இல்லாமல் போய்விடும். அருள்பவராகவும் பாக்கியத்தை அருள்பவராகவும் இருக்கும் உங்களின் சக்திவாய்ந்த சம்ஸ்காரங்கள் வெளிப்படட்டும். அப்போது பலவீனமான சம்ஸ்காரங்கள் இயல்பாகவே இல்லாமல் போய்விடும்.

சுலோகம்:
தொடர்ந்து உங்களின் பலவீனங்களை அன்றி, உங்களின் மேன்மையான பாக்கியத்தின் புகழைப் பாடுங்கள்.