01.04.21        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்:
இனிய குழந்தைகளே, நீங்களே இறை மீட்புப் படையினர் ஆவீர்கள். நீங்கள் அனைவருக்கும் சற்கதியைக் கொடுத்து, ஆத்மாக்களின் அன்பை ஒரேஒரு தந்தையுடன் தொடர்புபடுத்தச் செய்ய வேண்டும்.

கேள்வி:
மக்கள் எதற்காகத் தங்;களின் புத்தியைப் பயன்படுத்துகிறார்கள்? நீங்கள் எதற்காக உங்கள் புத்தியைப் பயன்படுத்த வேண்டும்?

பதில்:
ஆகாயத்தினதும், உலகினதும் முடிவை அடைவதற்கு மக்கள் தங்கள் புத்தியைப் பயன்படுத்துகிறார்கள். எவ்வாறாயினும், அதில் நன்மை இல்லை. அவர்களால் அவற்றின் முடிவைக் காண முடியாது. குழந்தைகளாகிய நீங்கள் வழிபடத் தகுதிவாய்ந்தவர்கள் ஆகுவதற்கு உங்கள் புத்தியைப் பயன்படுத்துகிறீர்கள். உலகம் அவர்களை வழிபடாது. குழந்தைகளாகிய நீங்கள் வழிபடத் தகுதிவாய்ந்த தேவர்கள் ஆகுகிறீர்கள்.

பாடல்:
உங்களைக் கண்டுகொண்டதும், நாங்கள் முழு உலகையும் கண்டுகொண்டோம்.

ஓம் சாந்தி.
இது ஞான மார்க்கம் எனவும், அது பக்தி மார்க்கம் எனவும் குழந்தைகளாகிய நீங்கள் புரிந்துகொண்டுள்ளீர்கள். கேள்வி: பக்தி மார்க்கம் மேலானதா அல்லது ஞான மார்க்கம் மேலானதா? இரு விடயங்கள் உள்ளன: ஞானத்தின் மூலம் சற்கதி உள்ளது எனக் கூறப்பட்டுள்ளது. பக்தியும், ஞானமும் வெவ்வேறானவை என நிச்சயமாகக் கூறப்பட முடியும். பக்தி செய்வதனால் தாங்கள் ஞானத்தைப் பெறுவார்கள் எனவும், அப்பொழுதே தாங்கள் சற்கதியைப் பெறுவார்கள் எனவும் மக்கள் நம்புகிறார்கள். பக்தியின் மத்தியில் ஞானம் இருக்க முடியாது. பக்தி அனைவருக்குமானது, ஞானமும் அனைவருக்குமானதாகும். இந்நேரத்தில், இது கலியுக இறுதியாகும். ஆகவே, நிச்சயமாக அனைவரும் சீரழிந்த நிலையில் இருக்க வேண்டும். இதனாலேயே மக்கள் கூவியழைத்துப் பாடுகிறார்கள்: நாங்கள் ஏனைய அனைவரிடமிருந்தும் எங்களைத் துண்டித்து, எங்களை உங்களுடன் மாத்திரம் இணைத்துக் கொள்வோம். அவர் யார்? அவர்கள் யாருடன் தங்களை இணைத்துக் கொள்வார்கள்? அவர்கள் இதனைப் புரிந்துகொள்வதில்லை. நான் உங்களுக்கான உண்மை அன்பைக் கொண்டிருப்பேன் என அவர்கள் கூறும்பொழுது, அவர்களின் புத்தி பொதுவாகக் கிருஷ்ணரிடம் செல்கிறது. அவர்கள் கிருஷ்ணர் மீது அன்பு செலுத்துவதனால், குருமார்கள் அல்லது வேறு எவருக்குமான தேவையே இல்லை. அவர்கள் கிருஷ்ணரை மாத்திரம் நினைவுசெய்ய வேண்டும். அனைவரிடமும் கிருஷ்ணரின் ஒரு படம் உள்ளது. மக்கள் கிருஷ்ணரின் பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்கள், அதனால் வேறு எவரிடமும் செல்லத் தேவையில்லை. அதேவிதமாகவே, மீரா ஒருவரிடம் மாத்திரமே அன்பு செலுத்தினார்;, தொடர்ந்தும் அனைத்தையும் செய்யும்பொழுது, கிருஷ்ணரிடம் மாத்திரம் அன்பு செலுத்தினார். வீட்டில் வசிக்கும்பொழுது, அவர் உண்பது, அருந்துவது, அனைத்தையும் செய்ய வேண்டியிருந்தது. அவருக்குக் கிருஷ்ணரிடம் மாத்திரமே உண்மையான அன்பு இருந்தது. அது அவர் காதலியாகவும், கிருஷ்ணர் அன்பிற்கினியவராகவும் இருந்ததைப் போன்றிருந்தது. கிருஷ்ணரை நினைவுசெய்வதனால், ஒருவர் பலனையும் பெறுகிறார். அனைவரும் கிருஷ்ணரை அறிவார்கள். மக்கள் பாடுகிறார்கள்: நான் உங்கள் மீது உண்மை அன்பைக் கொண்டிருந்து, ஏனைய அனைவரிடமிருந்தும் துண்டித்துக் கொண்டேன்;. உண்மையான பரமதந்தையே அதிமேன்மையானவர் ஆவார். ஒரு தந்தை மாத்திரமே அனைவருக்கும் ஓர் ஆஸ்தியைக் கொடுக்கிறார். எவரும் அவரை அறியார். அவர்கள் பரமாத்மாவாகிய பரமதந்தை சிவனைப் பற்றிப் பேசினாலும், அவர் எப்பொழுது வருகிறார் என்பதை அவர்கள் அறிந்துகொள்வதில்லை. சிவனின் பிறந்தநாள் இருப்பதனால், அவர் நிச்சயமாக வரவேண்டும். அவர் எப்பொழுது வருகிறார் என்பதையும், அவர் வரும்பொழுது என்ன செய்கிறார் என்பதையும் எவரும் அறியார். அவர் அனைவருக்கும் சற்கதியை அருள்கிறார் என்பதை ஒரு மனிதரேனும் அறியார். எவ்வாறாயினும், அவர் எவ்வாறு அதனைச் செய்கிறார்? சற்கதி என்பதன் அர்த்தம் என்ன? அவர்கள் எதனையும் புரிந்துகொள்வதில்லை. சிவபாபா நிச்சயமாகச் சுவர்க்க இராச்சியத்தைக் கொடுத்திருக்க வேண்டும். அத்தர்மத்துக்கு உரியவர்களாக இருந்தவர்களாகிய குழந்தைகளாகிய நீங்கள், இதைப் புரிந்துகொள்ளவில்லை. நீங்கள் இதனை மறந்துவிட்டதனால், எவ்வாறு ஏனையோர் அறிந்துகொள்ள முடியும்? நீங்கள் இப்பொழுது இதனைச் சிவபாபாவிடமிருந்து அறிந்து கொள்கிறீர்கள். நீங்கள் ஏனையோருக்கும் கூறுகிறீர்கள். நீங்களே இறை மீட்புப் படையினர் ஆவீர்கள். நீங்கள் அதனைச் சற்கதி எனவோ அல்லது மீட்புப்படையினர் எனவோ அழைக்க முடியும். குழந்தைகளாகிய உங்களுக்கு இப்பொழுது ஒரு பொறுப்பு உள்ளது. உங்களால் படங்களை விளங்கப்படுத்த முடியும். பல பாஷைகளும் உள்ளன. பிரதான பாஷைகளில் படங்கள் உருவாக்கப்பட வேண்டும். பாஷைகளினால் பல சிக்கல்களும் ஏற்படுகின்றன, இதனாலேயே கண்காட்சிப் படங்களின் ஒரு தொகுதி உருவாக்கப்பட வேண்டும். படங்களைப் பயன்படுத்தி விளங்கப்படுத்துவது மிகவும் இலகுவானதாகும். சக்கரத்தில் ஞானம் அனைத்தும் உள்ளடக்கப்பட்டுள்ளது. ஏணி பாரத மக்களுக்கு மாத்திரமே உரியதாகும். அதில் வேறு சமயங்கள் கிடையாது. பாரதம் தமோபிரதானாகும்பொழுது, ஏனையோர் தமோபிரதான் ஆக மாட்டார்கள் என்பதில்லை; அனைவரும் தமோபிரதான் ஆகுகிறார்கள். ஆகவே, அவர்களுக்கும் கூட ஏதோவொன்று இருக்க வேண்டும். சேவைக்கான இந்த எண்ணங்கள் அனைத்தும் உங்கள் புத்தியில் புக வேண்டும். இரு தந்தையர் பற்றிய இரகசியங்களையும் விளங்கப்படுத்துங்கள். படைப்பவரிடமிருந்தே ஓர் ஆஸ்தி பெறப்படுகிறது. இலக்ஷ்மியும் நாராயணனும் பாரதத்தின் முதல் சக்கரவர்த்தினியும் சக்கரவர்த்தியுமாக, அதாவது, இறைவியும் இறைவனுமாக, இருந்தார்கள் என்பதை வேறெந்தச் சமயங்களிலும் எவரும் அறியார். நல்லது, அவர்கள் எவ்வாறு சுவர்க்க இராச்சியத்தைப் பெற்றார்கள்? அவர்கள் அதை நிச்சயமாகக் கடவுளிடமிருந்தே பெற்றிருக்க வேண்டும். எவ்வாறு அல்லது எப்பொழுது அவர்கள் அதனைப் பெற்றார்கள் என்பதை எவரும் அறியார். அவர்கள் கீதையில் கிருஷ்ணரின் பெயரைப் புகுத்தி, பிரளயத்தையும் காண்பித்துள்ளார்கள், ஆனால் அதிலிருந்து பெறுபேறு எதுவும் கிடையாது. குழந்தைகளாகிய நீங்கள் இதனை விளங்கப்படுத்த வேண்டும். எங்கும் படங்கள் உள்ளன. அவர்களின் ஆடைகளும், முகச்சாயல்களும் வித்தியாசமாக இருந்தாலும், இலக்ஷ்மியினதும், நாராயணனினதும் படங்களும் இருக்க வேண்டும். அனைவரும் தம் உணர்வுக்கேற்பவே அவற்றை உருவாக்கியுள்ளார்கள். கிருஷ்ணரும் இராதையுமே ஸ்ரீநாத்தும் ஸ்ரீநாதினியும் ஆவார்கள். ஸ்ரீ இராதைக்கும், ஸ்ரீ கிருஷ்ணருக்கும் கிரீடம் இல்லை. அவர்கள் கருநீல நிறமுடையவர்களும் கிடையாது. இராச்சியம் இலக்ஷ்மி நாராயணனினதாகும், இராதை கிருஷ்ணரினதல்ல. அவர்கள் பல்வேறு ஆலயங்களை உருவாக்கி, அவற்றுக்கு இலக்ஷ்மி நாராயணன் என்னும் அதே பெயரைக் கொடுத்துள்ளார்கள். வம்சம் இலக்ஷ்மி நாராயணனினது என்றே அழைக்கப்படும். இராமர் சீதையினதும், இலக்ஷ்மி நாராயணனினதும் வம்சம் உள்ளது, ஆனால் வம்சம் இராதைக்கும் கிருஷ்ணருக்கும் உரியதல்ல. இவ்விடயங்கள் மனிதர்களின் மனத்தில் புகுவதில்லை. குழந்தைகளாகிய நீங்களும் செய்யும் முயற்சிக்கேற்ப, வரிசைக்கிரமமாக, புரிந்துகொள்கிறீர்கள். சேவை செய்வதில் ஆர்வமுடையவர்கள் மிகவும் உற்சாகமானவர்கள் ஆகுகிறார்கள். தாங்கள் அனைத்தையும் புரிந்துகொள்வதாகச் சிலர் கூறுகிறார்கள், ஆனால் (ஞானத்தைக் கொடுப்பதற்கு) அவர்களின் வாயைத் திறப்பதற்கு அவர்களுக்கு உதவுவதற்காக வழிமுறைகள் உருவாக்கப்பட வேண்டும். வேதங்களையும், சமயநூல்களையும் கற்பதனாலும், வேள்விகளை நடத்துவதனாலும், தபஸ்யா செய்வதனாலும், யாத்திரைகள் போன்றவற்றுக்குச் செல்வதனாலும் தாங்கள் கடவுளைக் கண்டுகொள்வார்கள் எனச் சிலர் எண்ணுகிறார்கள். எவ்வாறாயினும், கடவுள் கூறுகிறார்: அவை அனைத்தும் என்னிடமிருந்து உங்களைத் தொலைவுக்கு அழைத்துச் செல்லும் வழிமுறைகள் ஆகும். அனைவரும் நாடகத்தில் சீரழிவை அடைய வேண்டும், அதனாலேயே அவர்கள் அத்தகைய விடயங்களைச் சித்தரித்துள்ளார்கள். முன்னர், நாங்களும், கடவுள் உச்சியில் உள்ளார் எனவும், அவரை எவரும் எவ்வழியாலும் அடைய முடியும் எனவும் கூறுவது வழக்கமாகும். ஆகவே, மக்கள் அவரை அடைவதற்கு வித்தியாசமான வழிகளைப் பயன்படுத்துகிறார்கள். அவர்கள் பக்தி மார்க்கத்தின் வேறுபட்ட பாதைகள் அனைத்தினாலும் களைப்படைந்தவர்கள் ஆகும்பொழுது, அவர்கள் கடவுளைக் கூவியழைக்க ஆரம்பிக்கிறார்கள்: ஓ தூய்மையாக்குபவரே, வந்து தூய்மையாகுவதற்கான பாதையை எங்களுக்குக் காண்பியுங்கள்! நீங்கள் இன்றி எங்களால் தூய்மையாக முடியாது! நாங்கள் களைப்படைந்து விட்டோம்.! நாளுக்கு நாள், பக்தி முழுமையாகவே உங்களைக் களைப்படையச் செய்கிறது. இப்பொழுது பல நூறாயிரக்கணக்கான மக்கள் சென்று மேளாவில் ஒன்று கூடுகிறார்கள். அங்கு அதிகளவு அழுக்கு உள்ளது! இப்பொழுது இறுதியாகும், உலகம் மாற வேண்டும். உண்மையில், ஓர் உலகம் மாத்திரமே உள்ளது, ஆனால் அவர்கள் இரு பாகங்களை உருவாக்கியுள்ளார்கள், அதனால் மக்கள் சுவர்க்கமும், நரகமும் இரு வேறுபட்ட உலகங்கள் என எண்ணுகிறார்கள். எவ்வாறாயினும், அவை அரை அரைவாசியாகும். உச்சியில் சத்தியயுகமும், பின்னர் திரேதா, துவாபர, கலியுகங்களும் உள்ளன. கலியுகத்தில் அனைவரும் தமோபிரதானாக வேண்டும். உலகம் பழையதாக வேண்டும். எவரும் இவ்விடயங்களைப் புரிந்துகொள்வதில்லை. அவர்கள் குழப்பமடைகிறார்கள். சிலர் கிருஷ்ணரைக் கடவுளாகக் கருதுகிறார்கள், சிலர் இராமரைக் கடவுளாகக் கருதுகிறார்கள். இன்றைய நாட்களில், மக்கள் தங்களைக் கடவுள் என அழைக்கிறார்கள். நான் கடவுளின் ஓர் அவதாரம் ஆவேன். மனிதர்கள் தங்களைத் தேவர்களிலும் மேலானவர்களாக ஆக்கியுள்ளார்கள். தேவர்கள் இன்னமும் தேவர்கள் என்றே கூறப்படுகிறார்கள். இங்கு, அவர்கள் மனிதர்களைக் கடவுள் என அழைக்கிறார்கள்! அது பக்தி மார்க்கமாகும். தேவர்கள் சுவர்க்கவாசிகளாக இருந்தார்கள். இப்பொழுது, கலியுகத்தில், மனிதர்கள் எவ்வாறு கடவுளாக இருக்க முடியும்? தந்தை கூறுகிறார்: நான் சங்கமயுகத்தில், வந்து உலகை மாற்றம் செய்யவுள்ளபொழுதே, வருகிறேன். கலியுகம் சத்தியயுகமாக மாறும், ஏனைய அனைவரும் அமைதி தாமத்துக்குச் செல்வார்கள். அது அசரீரி உலகமும், இது பௌதீக உலகமும் ஆகும். அதனை விளங்கப்படுத்துவதற்கு, ஒரு பெரிய அசரீரி விருட்சம் உருவாக்கப்பட வேண்டும். பிரம்ம தத்துவம் ஆகாயத்தைப் போன்றே பெரியதாகும். அவை எவற்றினதும் முடிவையும் அடைய முடியாது. அவர்கள் அதனைச் செய்ய முயற்சித்து, அங்கு ஆகாய விமானத்தில் சென்றாலும், அவர்களால் முடிவை அடைய முடியாது. அங்கு எதுவுமேயில்லை, வெறுமனே கடலும், ஆகாயமும் மாத்திரமே உள்ளன. அங்கு எதுவுமேயில்லை. அவர்கள் இதனைச் செய்வதற்குப் பெருமளவு முயற்சிக்கிறார்கள், ஆனால் அவ்விடயங்களில் எதனாலும் என்ன நன்மை உள்ளது? தங்கள் புத்தியைப் பயன்படுத்துவதாக அவர்கள் எண்ணுகிறார்கள். மனிதர்களின் புத்தி அத்தகையதாகும்! மனிதர்களுக்கும் பெருமளவுக்கு விஞ்ஞானத்தின் அகங்காரம் உள்ளது. ஒருவர் எத்தனை கண்டுபிடிப்புக்களைச் செய்தாலும், முழு உலகும் அவரை வழிபடப்போவதில்லை. தேவர்கள் வழிபடப்படுகிறார்கள். தந்தை குழந்தைகளாகிய உங்களை மிகவும் மேன்மையானவர்கள் ஆக்குகிறார்! அவர் உங்கள் அனைவரையும் அமைதி தாமத்துக்கு அழைத்துச் செல்கிறார். அவர்கள் அசரீரி உலகிலிருந்து வருவதாக அனைவரும் அறிந்திருந்தாலும், உலக மக்கள் உங்களைப் போன்று அதேவிதமாகப் புரிந்துகொள்வதில்லை. அது என்ன என்றோ அல்லது எவ்வாறு ஆத்மாக்கள் அங்கு வசிக்கிறார்கள் என்றோ அல்லது பின்னர் அவர்கள் எவ்வாறு இங்கு வரிசைக்கிரமமாகக் கீழிறங்கி வருகிறார்கள் என்றோ எவரும் அறியார். பெரும் பிரம்ம தத்துவத்தில் அசரீரி விருட்சம் உள்ளது எனவும், சத்தியயுகத்தில் மிகச்சொற்ப மக்கள் மாத்திரமே வசிக்கிறார்கள் எனவும், ஏனைய ஆத்மாக்கள் அனைவரும் அசரீரி உலகில் வசிக்கிறார்கள் எனவும் அவர்கள் புரிந்துகொள்வதில்லை. இது பௌதீக உலகம் என்பதைப் போன்றே, அங்கு அசரீரி உலகம் உள்ளது. இவ்வுலகமோ அல்லது அவ்வுலகமோ-உலகம் ஒருபொழுதும் வெறுமை ஆகுவதில்லை. இறுதியை அடையும்பொழுது, ஆத்மாக்கள் இடம்மாற்றப்படுகிறார்கள். மிகச்சொற்பளவினரே இவ்வுலகில் எஞ்சியிருக்க வேண்டும். முழு உலகமும் வெறுமையாக்கியிருக்கப்பட வேண்டுமாயின், பிரளயம் நடைபெறும். பிரளயம் நடைபெற முடியாது, ஏனெனில் இது அழிவற்ற தேசமாகும். இவ்விடயங்கள் அனைத்தையும் உங்கள் புத்தியில் வைத்திருங்கள். எவ்வாறு ஏனையோருக்கு நன்மையளிப்பது என நாள் முழுவதும் சிந்தியுங்கள். அந்த ஒருவரிடம் உங்கள் அன்பு தொடர்புபடுத்தப்படும்பொழுது, அந்த ஒருவரின் அறிமுகத்தை உங்களால் கொடுக்க முடியும். அவரே தந்தை, நீங்கள் அவரிடமிருந்து ஓர் ஆஸ்தியைப் பெறுகிறீர்கள். எவ்வாறு உங்களால் அதனைப் பெற முடியும் என நாங்கள் உங்களுக்குக் கூற முடியும். இதனைக் கூறுபவர்களும் வரிசைக்கிரமமானவர்களே ஆவர். சிலர் மிகச் சிறந்த சொற்பொழிவுகளை ஆற்றுகிறார்கள், ஆனால் ஏனையோரால் அதனைச் செய்ய இயலாதுள்ளது. ஆகவே, அவர்கள் கற்க வேண்டும். குழந்தைகளாகிய நீங்கள் ஒவ்வொருவரும் உங்களுக்கு நன்மையளிக்க வேண்டும். நீங்கள் சரியான பாதையைக் கண்டுவிட்டதனால், நீங்கள் ஒருவருக்கொருவர் நன்மையளிக்க வேண்டும். அவர்களுக்கு ஆன்மீகமாகச் சேவை செய்வதனால், ஏனையோருக்குத் தந்தையின் அறிமுகத்தைக் கொடுப்பதே, உங்கள் இதயத்தின் விருப்பமாகும். அனைவரும் ஒருவருக்கொருவர் சேவை செய்கிறார்கள். எவ்வாறு ஆன்மீகச் சேவை செய்வது எனத் தந்தை வந்து கற்பிக்கிறார். எவ்வாறு ஆன்மீகச் சேவை செய்வது என வேறு எவரும் அறியார். ஆன்மீகத் தந்தை மாத்திரமே ஆத்மாக்களுக்குச் சேவை செய்கிறார். பல பிறவிகளுக்கான பௌதீகச் சேவை பெருமளவுக்குச் செய்யப்பட்டுள்ளது. இப்பொழுது, இந்த இறுதிப் பிறவியில், தந்தை உங்களுக்குக் கற்பித்துள்ள ஆன்மீகச் சேவையைச் செய்யுங்கள். இதில் நன்மை உள்ளது. வேறு எவ்விடயத்தினாலும் நன்மை இல்லை. நீங்களும் வீட்டில் உங்கள் குடும்பத்துடன் வசித்து, உங்கள் பொறுப்புக்களைப் பூர்த்திசெய்ய வேண்டும். இதனை அவர்களுக்கு விளங்கப்படுத்தி அவர்களுக்கு நன்மையளியுங்கள். அவர்கள் உங்கள் மீது அன்பு செலுத்தினால், சிலவற்றைச் செவிமடுப்பார்கள். தாங்களும் அனைத்தையும் துறக்க வேண்டும் எனச் சிலர் அச்சம் கொள்கிறார்கள். இந்நாட்களில் பல சந்நியாசிகள் உள்ளார்கள். அவர்கள் காவியுடைகளை அணிந்து, ஒரு சில வார்த்தைகளைப் பேசுகிறார்கள், அவர்கள் உணவை எங்கிருந்தோ பெறுகிறார்கள். அவர்கள் செல்லும் எக்கடையிலிருந்தாவது ஒரு சிறிதளவு உணவைப் பெறுகிறார்கள். பின்னர் அவர்கள் இன்னுமொரு கடைக்குச் சென்று மேலும் சிறிதளவைப் பெறுகிறார்கள், அது அவர்களின் வயிற்றை நிரப்பப் போதுமானதாகும். பலவகையான யாசகர்கள் உள்ளார்கள். நீங்கள் இத்தந்தையிடமிருந்து ஒரேவிதமான ஆஸ்தியை மாத்திரமே பெறுகிறீர்கள். நீங்கள் எல்லையற்ற ஆஸ்தியைப் பெறுகிறீர்கள், நீங்கள் சதா நோயிலிருந்து விடுபட்டவர்கள் ஆகுகிறீர்கள். செல்வந்தர்கள் இந்தளவுக்கு இதனைப் பெறுவதில்லை. ஏழைகளுக்கும் நன்மையளிக்கப்பட வேண்டும். பாபா பல கண்காட்சிப்படத் தொகுதிகளைச் செய்து வைத்துள்ளார், ஏனெனில் பல கிராமங்கள் உள்ளன. இந்த ஞானம் மிகவும் சிறந்தது என அரசாங்க அமைச்சர்கள் புரிந்துகொள்ளும்பொழுது, அனைவரும் செவிமடுக்க வருவார்கள். நீங்;கள் மேலும் முன்னேறும்பொழுது, உங்கள் பெயர் போற்றப்பட்டு, பலரும் வருவார்கள். துரு நீக்கப்படுவதற்குக் காலம் எடுக்கிறது. ஒருவர் இதில் இரவுபகலாக ஈடுபட்டிருப்பாரானால், ஒருவேளை துரு நீக்கப்படும். ஆத்மா தூய்மையாகும்பொழுது, சரீரம் நீக்கப்படும். இவ்விடயங்கள் அனைத்தும் புரிந்துகொள்ளப்பட வேண்டும். கண்காட்சிகளிலும் விளங்கப்படுத்துங்கள். அனைத்தும் பாரதத்துக்கே பொருந்துகிறது என்பதே பிரதான விடயமாகும். அது பாரதத்தின் எழுச்சியாக இருக்கும்பொழுது, அது அனைவரினதும் எழுச்சியாக இருந்தது. புரொஜெக்டர்களின் மூலம் செய்வதை விடவும் கண்காட்சிகளின் மூலம் அதிகச் சேவை செய்யப்பட முடியும். படிப்படியாக தொடர்ந்தும் வளர்ச்சி இருக்கும். நாளுக்கு நாள், உங்கள் பெயர் போற்றப்படும். இது 5000 வருடங்களுக்கு முன்னரும் நடைபெற்றது எனவும் எழுதப்பட்டிருக்க வேண்டும். இவை மிகவும் அற்புதமான விடயங்களாகும். பாபா குழந்தைகளாகிய உங்களுக்குச் சமிக்ஞையைக் கொடுக்கிறார், ஆனால் நீங்கள் பல விடயங்களை மறக்கிறீர்கள். எதேனும் நடைபெற்றால், அது 5000 வருடங்களுக்கு முன்னரும் நடைபெற்றது எனக் கூறப்படும். இவ்விடயங்கள் மிகவும் தெளிவானவை, ஆனால் அது ஒருவருடைய புத்தியில் இருக்கும்பொழுது மாத்திரமேயாகும். நீங்கள் இதனைச் செய்தித்தாள்களில் அச்சிட வேண்டும், அதனால் அவர்களால் குறைந்தபட்சம் சிலவற்றையாவது புரிந்துகொள்ள முடியும்! ஞானப் பாதைக்கு ஒரு மிகச்சிறந்த முதற்தரமான ஸ்திதி தேவையாகும். அத்தகைய சிறந்த விடயங்களையும் நினைவுசெய்து, மலர்ச்சியுடன் இருங்கள். நீங்கள் இப்பயிற்சியை மேலும் விருத்தி செய்யும்பொழுது, அதன் மூலம் உங்கள் ஸ்திதி மிகவும் சந்தோஷமானதாகவும், களிப்பு நிறைந்ததாகவும் ஆகும். நல்லது.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்பொழுதோ தொலைந்து இப்பொழுது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தந்தை தாயாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. உங்கள் புத்தியின் அன்பை ஏனைய அனைவரிடமிருந்தும் துண்டித்து, ஒரு தந்தையிடம் அவர்களினது அன்பைத் தொடர்புபடுத்துவதற்கு அனைவருக்கும் சேவை செய்யுங்கள்.

2. கடவுளின் ஓர் உண்மையான ஆன்மீக உதவியாளர் ஆகுங்கள். உங்களுக்கு நன்மையளிப்பதுடன், ஏனையோருக்கும் பாதையைக் காண்பியுங்கள். உங்கள் ஸ்திதியை மிகவும் சந்தோஷமானதாகவும், களிப்பு-நிறைந்ததாகவும் ஆக்குங்கள்.

ஆசீர்வாதம்:
ஒரேயொரு தந்தையின் விழிப்புணர்வைக் கொண்டிருப்பதன் மூலம் உண்மையான சுஹாங் யை (கணவரை கொண்டிருக்கின்ற பாக்கியசாலி) அனுபவம் செய்கின்ற ஓர் பாக்கியசாலி ஆத்மா ஆகுவீர்களாக.

பிறரின் வார்த்தைகளை கேட்டும் கேட்காதிருப்பவர்களும், தமது எண்ணங்களில் அல்லது கனவுகளில் பிற ஆத்மாக்களின் எந்த விழிப்புணர்வையும் வரவழைக்காதவர்களும் அதாவது எந்த சரீரதாரிகளின் அடிமைதனத்திற்கும் உட்படாதவர்களும், வேறு எவரும் அன்றி ஒரேயொரு தந்தைக்கு மாத்திரமே உரியவர்கள் என்ற விழிப்புணர்வைக் கொண்டிருப்பவர்களுமே அழிவற்ற சுஹாங் எனும் திலகத்தை தம்மில் அணிந்திருக்கின்றார்கள். தமது உண்மையான சுஹாங் யை கொண்டிருப்பவர்கள் மாத்திரமே பாக்கியசாலி ஆத்மா ஆவார்கள்.

சுலோகம்:
உங்கள் ஸ்திதியை மேன்மையானதாக ஆக்குவதற்கு, முதலில் அகநோக்குடையவர்களாகி, பின்னர் புறநோக்கிற்கு வாருங்கள்.