01.05.22    Avyakt Bapdada     Tamil Lanka Murli    13.12.90     Om Shanti     Madhuban


எல்லையற்ற விருப்பமின்மையே தபஸ்யாவின் அத்திவாரம்


இன்று, அன்பான குழந்தைகள் எல்லோரும் பாபாவிற்கு அன்பு மலர்களைப் படைப்பதை பாப்தாதா பார்க்கிறார். இந்தத் தேசத்தையும் வெளிநாடுகளையும் சேர்ந்த குழந்தைகள் எல்லோருடைய இதயங்களில் இருந்தும் அன்பு மலர்கள் பொழிவதை பாப்தாதா பார்க்கிறார். நீங்கள் அதை சங்கீதம் என்று அழைத்தாலென்ன அல்லது ஒரு பாடல் என்று அழைத்தாலென்ன, பாபா குழந்தைகள் எல்லோருடைய இதயங்களில் இருந்தும் அதே சங்கீதத்தை அல்லது பாடலைக் கேட்கிறார். எனது பாபா என்ற ஒரே பாடலே அது. தூய நம்பிக்கைத் தீபங்கள் பாபாவுடன் சந்திப்பைக் கொண்டாடுவது எங்கும் பிரகாசிக்கிறது. கல்பம் முழுவதிலும், பாப்தாதாவையும் குழந்தைகளையும் தவிர வேறு எவராலும் இந்தத் தெய்வீகக் காட்சியைப் பார்க்க முடியாது. இந்தத் தனித்துவமான அன்பு மலர்கள், இந்தப் பழைய உலகின் கொஹினூர் வைரத்தை விடவும் மிகவும் பெறுமதியானவை. குழந்தைகளான உங்களைத் தவிர வேறு எவராலும் இத்தகைய இதயபூர்வமான பாடல்களைப் பாட முடியாது. வேறு எவராலும் இத்தகைய தீபமாலையைக் கொண்டாட முடியாது. குழந்தைகள் எல்லோரும் பாப்தாதாவின் முன்னால் தோன்றியுள்ளார்கள். இந்தப் பௌதீக இடத்தில் எல்லோராலும் அமர்ந்திருக்க முடியாது. ஆனால் பாப்தாதாவின் இதய சிம்மாசனமோ மிகப் பெரியது. அவரின் முன்னால் வெளிப்பட்டுள்ள குழந்தைகள் அனைவரையும் அவர் இவ்வாறே பார்க்கிறார். பாபா அத்துடன் எல்லோருடைய அன்பையும் நினைவுகளையும் பார்க்கிறார். அத்துடன் தமது உரிமையென அவர்கள் கருதும் அன்பான முறைப்பாடுகளையும் கேட்கிறார். அத்துடன்கூடவே, ஒவ்வொரு குழந்தைக்கும் பாபா பிரதிபலனாகப் பலமில்லியன் மடங்கு அன்பையும் நினைவுகளையும் வழங்குகிறார். பௌதீக ரூபத்தில் ஒரு சந்திப்பைக் கொண்டாட வேண்டும் எனக் குழந்தைகளான நீங்கள் உரிமையுடன் கூறுகிறீர்கள். தந்தைக்கும் இந்த விருப்பம் உள்ளது. குழந்தைகளுக்கும் இந்த விருப்பம் உள்ளது. எவ்வாறாயினும், காலத்திற்கேற்ப, தந்தை பிரம்மா தனது அவ்யக்த தேவதை ரூபத்தில், தனது பௌதீக ரூபத்தில் இருந்தபோது செய்ததைவிடப் பலமடங்கு துரித கதியில் சேவை செய்து, குழந்தைகளைத் தன்னைப் போன்று ஆக்குகிறார். அவ்யக்த சந்திப்பின் அனுபவமும் அவ்யக்த ரூபத்தில் அவரின் சேவையும் உங்களுக்கு ஒரு வருடமோ அல்லது இரண்டு வருடங்களோ கொடுக்கப்படவில்லை. ஆனால், பல வருடங்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன. அவர் இன்னமும் அந்த அனுபவத்தை உங்களுக்கு வழங்குகிறார். தந்தை பிரம்மா அவ்யக்த ரூபத்தில் இருந்தாலும், அவர் ஏன் பௌதீகமாக ஒரு பாகத்தை நடிக்கிறார்? உங்களையும் அவரைப் போல் ஆக்குவதற்காகவே. தந்தை பிரம்மா சூட்சுமத்தில் இருந்து பௌதீகத்திற்கு வருகிறார். எனவே, அதற்குப் பிரதியாகக் குழந்தைகளான நீங்கள் என்ன செய்ய வேண்டும்? பௌதீகத்தில் இருந்து சூட்சுமமானவர்கள் ஆகவேண்டும். காலத்திற்கேற்ப, சூட்சும ரூபத்தினூடான அவ்யக்த சந்திப்பின் சேவையானது மிகவும் அத்தியாவசியமானது. இதனாலேயே, அவ்வப்போது, பாப்தாதா ஒரு சூட்சுமமான சந்திப்பின் அனுபவத்திற்காக ஒரு சமிக்கையை உங்களுக்கு வழங்கிக்கொண்டே இருக்கிறார். ஆகவே, நீங்கள் இப்போது தபஸ்யா வருடத்தைக் கொண்டாடுகிறீர்கள்தானே? பெரும்பாலான குழந்தைகளின் ஊக்கமும் உற்சாகமும் மிகவும் நன்றாக இருப்பதைப் பார்த்து பாப்தாதா மகிழ்ச்சி அடைகிறார். சிறுபான்மையான குழந்தைகளே தாம் நிகழ்ச்சிக்கேற்ப எதையாவது செய்யவேண்டும் என நினைக்கிறார்கள். ஒன்று, நிகழ்ச்சிக்கேற்ப எதையாவது செய்வது. மற்றையது, உங்களின் இதயபூர்வமாக ஊக்கத்துடனும் உற்சாகத்துடனும் செய்வது. நான் எந்த வகையைச் சேர்ந்தவன்? என நீங்கள் ஒவ்வொருவரும் உங்களையே கேட்டுக் கொள்ள வெண்டும்.

தற்போதுள்ள சூழ்நிலைகளுக்கேற்ப, சுயமுன்னேற்றத்திற்கேற்ப, சேவையின் துரித கதிக்கேற்ப, பாப்தாதாவின் அன்பிற்கான பிரதிபலனைக் கொடுப்பதற்கேற்ப, தபஸ்யா மிகவும் தேவை. அன்பு வைப்பது இலகுவானது. எல்லோருக்கும் அன்பு உள்ளது. பாபாவிற்கும் இது தெரியும். எவ்வாறாயினும், பிரதிபலனாக நீங்கள் பாப்தாதாவிற்குச் சமமானவர் ஆகவேண்டும் என்பதே பாப்தாதாவின் விருப்பமாகும். இதையே இப்போது பாப்தாதா பார்க்க விரும்புகிறார். இதில், வெகுசிலரிலும் வெகுசிலரே இருக்கிறார்கள். எல்லோருக்கும் இந்த ஆசை உள்ளது. ஆனால், ஆசை உள்ளவர்களின் எண்ணிக்கைக்கும் அதை நடைமுறைப்படுத்துபவர்களின் எண்ணிக்கைக்கும் இடையில் வேறுபாடு உள்ளது. இலகுவான, நிலையான தபஸ்யாவின் அத்திவாரம், எல்லையற்ற விருப்பமின்மையே ஆகும். எல்லையற்ற விருப்பமின்மையைக் கொண்டிருத்தல் என்றால், நான்கு திசைகளிலும் உள்ள கரைகளை (ஆதாரங்களை) விட்டு நீங்குதல் என்று அர்த்தம். ஏன்? ஏனென்றால் நீங்கள் கரைகளை உங்களின் ஆதாரங்கள் ஆக்கியுள்ளீர்கள்;. காலத்திற்கேற்ப அன்புடையவர் ஆகுதல், அதன் பின்னர், ஸ்ரீமத்திற்கும் கருவி ஆத்மாக்களிடமிருந்து நீங்கள் பெறும் சமிக்கைகளுக்கும் ஏற்ப, உங்களின் புத்திகளை ஒரு விநாடியில் அன்பான நிலையில் இருந்து பற்றற்றதாக ஆக்குதல். இது நிகழ்வதில்லை. நீங்கள் அன்பானவர் ஆகும் அளவிற்கு விரைவாகப் பற்றற்றவர் ஆகுவதில்லை. அன்பானவர் ஆகுவதில் நீங்கள் நன்றாக இருக்கிறீர்கள். ஆனால் பற்றற்றவர் ஆகுதல் என்று வரும்போது, நீங்கள் அதைப் பற்றி இரண்டு தடவைகள் சிந்திக்கிறீர்கள். உங்களுக்கு தைரியம் தேவை என நீங்கள் நினைக்கிறீர்கள். பற்றற்றவர் ஆகுதல் என்றால் ஆதாரத்தை விட்டு நீங்குதல் என்று அர்த்தம். ஆதாரத்தை விட்டு நீங்குதல் என்றால், எல்லையற்ற விருப்பமின்மைக்குரிய மனோபாவத்தைக் கொண்டிருத்தல் என்று அர்த்தம். ஒரு கரையை உங்களின் ஆதாரம் ஆக்கி அதை எவ்வாறு பிடித்துக்கொள்வது என்பதைப் பற்றி நீங்கள் அறிவீர்கள். ஆனால் அதை விட்டு நீங்க வேண்டியிருக்கும்போது நீங்கள் என்ன செய்கிறீர்கள்? நீங்கள் பெரியதொரு கேள்விக்குறி போடுகிறீர்கள். சேவையில் பொறுப்பாளராக (இன்சார்ஜ்) இருப்பது எப்படி என்பது உங்களுக்கு மிக நன்றாகத் தெரியம். ஆனால், பொறுப்பாளர் ஆகுவதுடன் கூடவே, உங்களின் பற்றரியையும் மற்றவர்களின் பற்றரிகளையும் எவ்வாறு சக்தியூட்டுவது (சார்ஜ் செய்தல்) என்பது உங்களுக்குச் சிரமமாக உள்ளது. இதனாலேயே, தற்சமயம் தபஸ்யாவினூடாக எல்லையற்ற விருப்பமின்மைக்குரிய மனோபாவத்தைக் கொண்டிருத்தல் உங்களுக்கு மிகவும் அவசியமாகும்.

தபஸ்யாவில் வெற்றி பெறுவதற்கான விசேடமானதும் இலகுவானதுமான வழிமுறை, ஒரேயொருவர் (ஏக்) என்ற பாடத்தை உறுதியாக்கிக் கொள்வதாகும். 2 அல்லது 3 என்ற எண்களை எழுதுவது கஷ்டமானதாக இருக்கும். 1 என்பதை எழுதுவது மிகவும் இலகுவானதாகும். தபஸ்யா என்றால் ஒரேயொருவருக்குச் சொந்தமாக இருத்தல் என்று அர்த்தம். இதையே ஒரேயொருவருக்குச் சொந்தமாகுதல் (ஏக்நாமி) என பாப்தாதா அழைக்கிறார். தபஸ்யா என்றால் மனதையும் புத்தியையும் ஸ்திரப்படுத்துதல் (ஏகாக்கிரதா) என்று அர்த்தம். தபஸ்யா என்றால் ஏகாந்தத்தில் (ஏகாந்) அன்பு வைத்தல் எனப்படும். தபஸ்யா என்றால் ஸ்திரமான ஸ்திதியைப் பேணுதல் (ஏக் ராஸ்) என்று அர்த்தம். தபஸ்யா என்றால் நீங்கள் பெற்றுள்ள பொக்கிஷங்கள் எல்லாவற்றையும் வீணாக்காமல் தடுத்தல் என்று அர்த்தம். அதாவது, சிக்கனமாக செயல்படுதல் என்று அர்த்தம். எனவே, ஒரேயொருவர் என்ற பாடம் இப்போது உறுதியாக இருக்கிறதல்லவா? ஒருவர் என்ற பாடம் கஷ்டமானதா அல்லது இலகுவானதா? இது இலகுவானது, ஆனால்... நீங்கள் இத்தகைய மொழியைப் பயன்படுத்துவதில்லை, அல்லவா?

நீங்கள் பல வகையான சிரமப்படுவதில் இருந்து விடுபட்டுள்ள மிக, மிகப் பாக்கியசாலிகள். காலம் உலகிலுள்ள மக்களைத் தயாராக்கும். அவர்கள் காலத்தின் கட்டாயத்திற்கேற்பத் தயார் ஆகுவார்கள். ஆனால், தந்தை குழந்தைகளான உங்களை நேரத்திற்கு முன்னரே தயார் ஆக்குகிறார். நீங்கள் தந்தை மீதுள்ள அன்பினால் அதைச் செய்கிறீர்கள். நீங்கள் அதை அன்பினால் செய்யாவிட்டால், அல்லது நீங்கள் சிறிதளவு மட்டுமே அதைச் செய்தால், அப்போது என்ன நிகழும்? நீங்கள் அதைக் கட்டாயத்தின் பேரிலேயே செய்ய வேண்டியிருக்கம். உங்களுக்குள் நிச்சயமாக எல்லையற்ற விருப்பமின்மை இருக்க வேண்டும். எவ்வாறாயினும், கட்டாயத்தின் பேரில் நீங்கள் எந்தவிதமான பலனையும் பெறமாட்டீர்கள். அன்பின் உடனடிப் பலனும் எதிர்காலப் பலனாகச் சேமிக்கப்படுகிறது. கட்டாயத்தின் பேரில் செய்ய வேண்டியவர்கள் எதைக் கடந்து செல்ல வேண்டியிருக்கும்? எதையாவது கடந்து செல்ல வேண்டும் என்றால், அது சிலுவையில் இருப்பதை ஒத்ததாகும். நீங்கள் எதை விரும்புகிறீர்கள்? நீங்கள் அன்பினால் அதைச் செய்வீர்கள். இன்னொரு வேளையில் ஆதாரங்களின் பட்டியலைப் பற்றி பாப்தாதா உங்களுக்குச் சொல்வார். அதைப் பற்றித் தெரிந்து கொள்வதில் நீங்கள் கெட்டிக்காரர்கள். ஆனால் பாபா அதை மீட்டல் செய்வார். ஏனென்றால், பாப்தாதாவால் குழந்தைகளின் நாளாந்த நேர அட்டவணையை அவர் விரும்பும்போதெல்லாம் பார்க்க முடியும். ஒவ்வொருவரின் நாளாந்த அட்டவணையையம் நாள் முழுவதும் பார்த்துக் கொண்டிருக்கும் பணியை அவர் செய்வதில்லை. நீங்கள் சாகார் பிரம்மாபாபாவைக் கண்டீர்கள். அவரின் பார்வை இயல்பாகவே எங்கே இருந்தது? அது ஒரு கடிதமோ அல்லது அட்டவணையோ அல்லது யாராவது ஒருவரின் நடத்தையோ, அது எட்டு பக்கக் கடிதமாக இருந்தாலும், அவரின் பார்வை எங்கே சென்றது? எங்கு ஒரு வழிகாட்டல் வழங்கப்பட வேண்டுமோ, எங்கு அவசியம் உள்ளதோ அங்கேயே சென்றது. பாப்தாதா அனைத்தையும் அவதானிக்கிறார். ஆனால் அவர் எதையும் பார்ப்பதில்லை. அவர் அனைத்தையும் இனங்கண்டு கொள்கிறார். ஆனால் அவருக்குத் தெரியாது. எது அவசியமில்லையோ, அவர் அதைப் பார்ப்பதுமில்லை, தெரிந்து கொள்வதுமில்லை. அவர் மிக நல்ல விளையாட்டுக்களை அவதானிக்கிறார். பாபா வேறொரு வேளையில் அதைப் பற்றிச் சொல்வார். அச்சா. தபஸ்யா செய்வதும் எல்லையற்ற விருப்பமின்மைக்குரிய மனோபாவத்தைப் பேணுவதும் இலகுவானதல்லவா? கரைகளை விட்டு நீங்குவது கஷ்டமாக இருக்கிறதா? எவ்வாறாயினும், நீங்களே ஏதாவதொன்றாக ஆக விரும்புவர்கள். நீங்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு கல்பத்திலும் பேறுகளுக்கான உரிமையைக் கோரியுள்ளீர்கள். எனவே, நீங்கள் நிச்சயமாக அவ்வாறு ஆகுவீர்கள். அச்சா. இந்த வருடம், சென்ற கல்பத்தின் குழந்தைகள், பல கல்பங்களாகப் பழையவர்களாக இருந்து, இந்தக் கல்பத்தில் புதியவர்களாக இருப்பவர்களுக்கு ஒரு வாய்ப்புக் கொடுக்கப்பட்டுள்ளது. உங்களுக்கு ஒரு வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது என்பதையிட்டு நீங்கள் சந்தோஷப்படுகிறீர்கள்தானே, பெரும்பாலானோர் புதியவர்கள். ஆசிரியர்கள் பழையவர்கள். ஆசிரியர்களான நீங்கள் என்ன செய்வீர்கள்? நீங்கள் எல்லையற்ற விருப்பமின்மைக்குரிய மனோபாவத்தைக் கிரகிப்பீர்கள்தானே?, நீங்கள் கரையை விட்டு நீங்குவீர்களா? அல்லது, அந்த வேளையில் நீங்கள் செய்ய விரும்புகிறீர்கள், ஆனால் எவ்வாறு அதைச் செய்வது என நீங்கள் சொல்வீர்களா? நீங்கள் அதைச் செய்து மற்றவர்களுக்கு காட்டுபவர்களா? அல்லது நீங்கள் அந்த முறையில் அதைப் பற்றிப் பேசுபவர்களா? பாபா பௌதீக ரூபத்தில் எங்கும் இருந்து வந்துள்ள குழந்தைகள் எல்லோரையும் பார்த்து மகிழ்ச்சியடைகிறார். நீங்கள் தைரியத்தைப் பேணினீர்கள். அத்துடன் நீங்கள் எப்போதும் தந்தையின் உதவியைப் பெறுகிறீர்கள். ஆகவே, தைரியத்துடன், சதா தந்தையின் உதவியைப் பெறுகின்ற உரிமையைத் தொடர்ந்து அனுபவம் செய்வதுடன் தொடர்ந்து இலகுவாகப் பறவுங்கள். தந்தை உதவியை வழங்குகிறார். ஆனால் தேவையானவர்கள் அதை எடுத்துக் கொள்ள வேண்டும். அருள்பவர் வழங்குகிறார். ஆனால் அதை எடுத்துக்கொள்பவர்கள், தமது கொள்ளளவிற்கேற்ப எடுத்துக்கொள்கிறார்கள். எனவே, நீங்கள் உங்களின் சொந்தக் கொள்ளளவிற்கேற்ப இருப்பவர்கள் ஆகக்கூடாது. ஆனால், சதா சக்தி நிறைந்தவர்கள் ஆகவேண்டும். அதன்பின்னர், பிந்தி வருபவர்கள் முன்னால் ஓரிலக்கத்தைப் பெற்றுக்கொள்வார்கள். உங்களுக்குப் புரிகிறதா? சகல சக்திகளுக்குமான உங்களின் முழு உரிமையைக் கோரிக் கொள்ளுங்கள். அச்சா.

சகல திசைகளிலும் உள்ள அன்பான ஆத்மாக்கள் அனைவருக்கும், தந்தையின் அன்பிற்கான பிரதிபலனை சதா வழங்கும் விசேடமான ஆத்மாக்களுக்கும், தபஸ்யா ரூப ஸ்திதியில் சதா ஸ்திரமாக இருப்பவர்களுக்கும், தந்தைக்கு நெருக்கமான ஆத்மாக்களுக்கும், தந்தைக்குச் சமமானவர் ஆகும் இலக்கிற்கான தகைமைகளை சதா நடைமுறையில் கடைப்பிடிப்பவர்களுக்கும், இந்தத் தேசத்திலும் வெளிநாடுகளிலும் உள்ள சகல குழந்தைகளுக்கும், இதயங்களுக்கு சௌகரியம் அளிப்பவரான பாபாவின் இதய ஆழத்தில் இருந்த அன்பும் நினைவும் நமஸ்காரங்களும் உரித்தாகட்டும்.

அவ்யக்த பாப்தாதா தாதிகளைச் சந்திக்கிறார்:

நீங்கள் அஷ்ட சக்திகளைக் கொண்டிருப்பவர்கள், நீங்கள் விசேடமான இஷ்ட தெய்வங்கள். அத்துடன் எட்டில் ஒருவர், அப்படியல்லவா? எட்டில் ஒருவராக இருப்பதன் அடையாளம் என்னவென்று உங்களுக்குத் தெரியுமா? அவர்கள் ஒவ்வொரு சக்தியையும் ஒவ்வொரு செயலிலும் காலத்திற்கும் சூழ்நிலைக்கும் ஏற்பப் பொருத்தமாகப் பயன்படுத்துவார்கள். எட்டு சக்திகளும் உங்களை விசேடமான இஷ்ட தெய்வம் ஆக்குவதுடன் எட்டில் ஒருவராகவும் ஆக்குகிறது. நீங்கள் எட்டு சக்திகளைக் கொண்டிருப்பவர்கள். இதனாலேயே, அவர்கள் தேவியரை எட்டுக் கரங்களுடன் காட்டியுள்ளார்கள். அவர்களிடம் எட்டு விசேடமான சக்திகள் உள்ளன. உண்மையில், பல சக்திகள் உள்ளன. ஆனால், பெரும்பாலானவை எட்டில் அடங்கியுள்ளன. விசேடமான சக்திகளைச் சரியான நேரத்தில் பயன்படுத்த வேண்டும். காலத்திற்கேற்பவும், சந்தர்ப்பத்திற்கேற்பவும் உங்களின் ஸ்திதி இருக்க வேண்டும். இதுவே எட்டில் ஒருவராகவும் விசேடமான, இஷ்ட தேவராகவும் ஆகுதல் எனப்படுகிறது. எனவே, இத்தகையதொரு குழு தயார்தானே? வெளிநாட்டில் எத்தனை பேர் தயாராக இருக்கிறீர்கள்? நீங்களும் எட்டில் ஒருவர் ஆகப் போகிறீர்கள்தானே? அச்சா.

சந்திரி தாதி அமிர்தவேளையில் தனது சரீரத்தை விட்டார் - 13ஃ12ஃ1990

இது நல்லது. எல்லோரும் நிச்சயமாகப் போக வேண்டும். நீங்கள் என்றும் தயாரா? அல்லது, எனது நிலையம், மாணவர்களுக்கு என்ன நிகழும்? என நீங்கள் நினைவு செய்வீர்களா? எனது, எனது என்று நீங்கள் நினைக்க மாட்டீர்கள்தானே? எல்லோரும் போக வேண்டும். ஆனால் ஒவ்வொருவரின் கணக்குகளும் அவர்களுக்கே உரியவை. எவராலும் தமது கணக்குகளைத் தீர்க்காமல் போக முடியாது. இதனாலேயே, எல்லோரும் சந்தோஷமாக விடைகொடுத்தார்கள். நீங்கள் எல்லோரும் அதை விரும்புகிறீர்கள்தானே? அவ்வாறு செல்வது நல்லதே. எனவே, நீங்கள் என்றும் தயாராக வேண்டும். அச்சா.

பாப்தாதா குழுக்களைச் சந்திக்கிறார்:

1. டெல்லியும் பஞ்சாப்பும் இரண்டும் சேவையின் ஆதி இடங்கள். ஸ்தாபனைக்கான இடங்கள் (ஆரம்பத்தில்) எப்போதும் அந்த முக்கியத்துவத்துடன் பார்க்கப்படுகின்றன. நினைவு கூரப்படுகின்றன. அவை சேவைக்கான ஆதி இடங்களாக இருப்பதைப் போல், நீங்கள் உங்களின் ஸ்திதியில் ஆதி இரத்தினங்களாக இருக்கிறீர்களா? இடத்துடன்கூடவே, ஸ்திதியும் புகழப்படுகிறது. ஆதி இரத்தினங்கள் என்றால், ஒவ்வொரு மேன்மையான வழிகாட்டலையும் தமது வாழ்க்கையில் கடைப்பிடிப்பதில் முதலாவதாக இருப்பவர்கள் என்று அர்த்தம். அதை வெறுமனே கேட்டு, மற்றவர்களுக்குக் கூறுபவர்கள் அல்ல. ஆனால், உண்மையில் அதைச் செய்பவர்கள். ஏனென்றால், எதையாவது வெறுமனே செவிமடுத்து, அதை மற்றவர்களுக்குக் கூறுபவர்கள் பலர் இருக்கிறார்கள். ஆனால், பலமில்லியன்களில் கையளவினர் மட்டுமே உண்மையில் அதைச் செய்கிறார்கள். எனவே, நீங்கள் பலமில்லியன்களில் கையளவினர் என்ற போதை உங்களுக்குள் இருக்கிறதா? இந்த ஆன்மீக போதை உங்களை மாயையின் பல வகையான போதைகளில் இருந்து விடுவிக்கிறது. இந்த ஆன்மீக போதை என்றால் பாதுகாப்பிற்கான வழிமுறையாகும். மாயையின் எந்தவகையான போதையும் - நல்ல ஆடைகளை அணிதல், உண்ணுதல் அல்லது பார்த்தல் போன்றவை உங்களைக் கவர முடியாது. நீங்கள் இத்தகைய போதையில் இருக்கிறீர்களா அல்லது மாயை உங்களைச் சிறிதளவு கவர்கிறதா? நீங்கள் இப்போது விவேகிகள் ஆகிவிட்டீர்கள்தானே? நீங்கள் இப்போது மாயையைப் பற்றியும் புரிந்து கொண்டுள்ளீர்கள். விவேகிகள் ஒருபோதும் ஏமாற மாட்டார்கள். விவேகிகள் ஏமாற்றப்பட்டால், அத்தகைய ஒருவரைப் பார்த்து எல்லோரும் என்ன சொல்வார்கள்? நீங்கள் விவேகிகள். அப்படியிருந்தும் நீங்கள் ஏமாந்து விட்டீர்களே! ஏமாற்றப்படுவதென்றால், துன்பத்தை அழைத்தல் என்ற அர்த்தம். நீங்கள் ஏமாந்து போனதும், அதில் இருந்து உங்களுக்குத் துன்பம் ஏற்படுகிறதுதானே? யாருக்காவது துன்பப்பட விருப்பம் இருக்குமா? இதனாலேயே, நீங்கள் எப்போதும் ஆதி இரத்தினங்கள் ஆவீரகள். அதாவது, நீங்கள் உங்களின் வாழ்க்கையில் ஒவ்வொரு மேன்மையான வழிகாட்டலையும் கடைப்பிடிப்பதில் முதலாவதாக இருப்பவர்கள். நீங்கள் அத்தகையவர்கள்தானே? அல்லது, மற்றவர்கள் செய்வதைப் பார்ப்பதற்கு நீங்கள் காத்திருக்கிறீர்களா? அப்போது மட்டுமே நீங்கள் அதைச் செய்வீர்களா? அவர்கள் அதைச் செய்வதில்லை, எனவே எப்படி என்னால் அதைச் செய்ய முடியும்? இதைச் செய்வதில் நான் முதலில் என்றிருங்கள். மற்றவர்கள் மாறினால் நான் மாறுவேன். இவர் மாறினால் நான் மாறுவேன் என்பதாக இருக்கக்கூடாது. இல்லை. எதையாவது செய்பவர்கள் அதன் வெகுமதியைப் பெறுவார்கள். நீங்கள் எவ்வளவைப் பெறுவீர்கள். ஒன்றுக்குப் பிரதியாகப் பலமில்லியன்மடங்கைப் பெறுவீர்கள். எனவே, இதைச் செய்வதில் களிப்பு உள்ளதல்லவா? ஒரு மடங்கைச் செய்யுங்கள். பலமில்லியன் மடங்கைப் பெற்றுக் கொள்ளுங்கள்! இதில், பேறுகள் கிடைக்கும். பேறுகளைத் தவிர வேறு எதுவும் இல்லை. ஆகவே, ஸ்ரீமத்தை நடைமுறை வடிவில் கடைப்பிடிப்பதில் நான் முதலில் என்று ஆகுங்கள். மாயையின் ஆதிக்கத்திற்கு உள்ளாகுவதில் நான் முதலில் என்று ஆகாதீர்கள். ஆனால் இந்த முயற்சியில் நான் முதலில் ஆகுங்கள். அப்போது மட்டுமே உங்களால் ஒவ்வோர் அடியிலும் வெற்றியை அனுபவம் செய்ய முடியும். வெற்றிக்கு உத்தரவாதம் உள்ளது. உங்களின் பாதையைச் சிறிதளவு மாற்றி, அவ்வாறு மாற்றுவதனால், உங்களின் இலக்கு தொலைவில் செல்வதாகவும் அதற்கு நேரம் எடுப்பதாகவும் இருக்கக்கூடாது. ஒருவர் தவறான பாதையில் செல்லும்போது, அவரின் இலக்குத் தொலைவில் சென்றுவிடும், அல்லவா? எனவே, அவ்வாறு செய்யாதீர்கள். உங்களின் இலக்கு உங்களின் முன்னால் இருக்கிறது. வெற்றிக்கும் உத்தரவாதம் உள்ளது. நீங்கள் சிறிதளவு சிரமப்படும்போது, அன்பின் பக்கத்திலுள்ள தராசு சிறிதளவு இலேசாகிவிடுகிறது. அன்பு இருக்கும்போது, நீங்கள் ஒருபோதும் சிரமப்பட வேண்டியதில்லை. ஏனென்றால், தந்தை உங்களுக்குத் தனது பல கரங்களால் உதவி செய்வார். அவர் தனது கரங்களால் ஒரு விநாடியில் பணியை வெற்றிநிறைந்தது ஆக்குவார். நீங்கள் அதன்பின்னர் உங்களின் முயற்சிகளில் தொடர்ந்து பறப்பீர்கள். பஞ்சாப்பைச் சேர்ந்தவர்களே: நீங்கள் பறக்கிறீர்களா அல்லது நீங்கள் பயப்படுகிறீர்களா? நீங்கள் மிகவும் அனுபவசாலி ஆகிவிட்டீர்களா? உங்களில் எவரும் பயப்படப் போவதில்லைத்தானே? என்ன நிகழும்? அது எவ்வாறு நிகழும்? இல்லை. நீங்கள் அவர்களுக்கு அமைதித் தானத்தை வழங்குபவர்கள். உங்களிடம் வருகின்ற எவரும் அமைதியுடன் திரும்பிச் செல்ல வேண்டும். அவர்கள் வெறுங்கையுடன் திரும்பிச் செல்லக்கூடாது. நீங்கள் அவர்களுக்கு ஞானத்தை வழங்காவிட்டாலும், அமைதி அதிர்வலைகள் அவர்களை அமைதிநிறைந்தவர்கள் ஆக்கும். அச்சா.

2. எங்கும் இருந்து வந்துள்ள மேன்மையான ஆத்மாக்கள் எல்லோரும் பிராமணர்களே. நீங்கள் இராஜஸ்தான் அல்லது மகாராஷ்டிரா அல்லது மத்தியபிரதேசம் போன்றவற்றில் இருந்து வரவில்லை. நீங்கள் எல்லோரும் ஒன்றே. இந்த வேளையில், நீங்கள் எல்லோரும் மதுவனவாசிகள் ஆவீர்கள். பிராமணர்களின் ஆதியான வசிப்பிடம் மதுவனமாகும். நீங்கள் சேவை செய்வதற்காக வெவ்வேறு இடங்களுக்குச் சென்றுள்ளீர்கள். நீங்கள் ஓரிடத்தில் அமர்ந்திருந்தால், ஏனைய இடங்களுக்கு எவ்வாறு சேவை செய்வது? இதனாலேயே, நீங்கள் வெவ்வேறு இடங்களுக்கு சேவைக்காகச் சென்றுள்ளீர்கள். நீங்கள் ஒரு வர்த்தகரோ அல்லது அரசாங்க அலுவலகரோ அல்லது தொழிற்சாலையில் பணிபுரியும் ஒருவரோ, யாராக இருந்தாலும் உங்களின் ஆதியான தொழில் சேவையாளரே. தாய்மார்களும் வீட்டில் இருந்தவண்ணம் இறைசேவை செய்கிறார்கள். ஒருவர் ஞானத்தைக் கேட்கிறாரோ இல்லையோ, அவரை நல்லாசிகள் மற்றும் தூய உணர்வுகளின் அதிர்வலைகளால் மாற்ற முடியும். வார்த்தைகளால் செய்யப்படும் சேவை மட்டுமே சேவையல்ல. நல்லாசிகளைக் கொண்டிருப்பதும் சேவை செய்வதேயாகும். எனவே, இரு வகையான சேவைகளையும் எவ்வாறு செய்வது என்பது உங்களுக்குத் தெரியும்தானே? யாராவது உங்களை இகழ்ந்தாலும், நல்லாசிகளையும் தூய உணர்வுகளையும் கொடுப்பதை நீங்கள் நிறுத்தக்கூடாது. எப்போதும் எதையாவது கொடுத்துக் கொண்டேயிருப்பது பிராமணர்களின் கடமையாகும். நல்லாசிகளையும் தூய உணர்வுகளையும் கொண்டிருப்பதும் கற்பித்தல்களைக் கொடுப்பதேயாகும். எல்லோரும் வார்த்தைகளால் மாறமாட்டார்கள். ஒருவர் எத்தகையவராக இருந்தாலும், நிச்சயமாக அவருக்குக் கையளவான ஏதாவதொன்றைக் கொடுங்கள். அவர் உண்மையில் இராவணனாக இருந்தாலும் பரவாயில்லை. எமது உறவினர்கள் கடுமையான இராவணர்கள், அவர்கள் ஒருபோதும் மாறப் போவதில்லை எனச் சில தாய்மார்கள் சொல்வார்கள். இத்தகைய ஆத்மாக்களுக்கும் உங்களின் பொக்கிஷக் களஞ்சியத்தில் இருந்து கையளவு நல்லாசிகளையும் தூய உணர்வுகளையும் கொடுங்கள். அவர்களில் யாராவது உங்களை இகழ்ந்தால், அவர்கள் என்ன சொல்கிறார்கள்? இந்த பிரம்மாகுமாரிகள் எனவே, குறைந்தபட்சம் அவர்கள் பிரம்மாபாபாவை நினைக்கிறார்கள்! அவர்கள் உங்களை இகழும்போதும், அவர்கள் பிரம்மாவை நினைக்கிறார்கள். குறைந்தபட்சம் அவர்கள் தந்தையின் பெயரைக் குறிப்பிடுகிறார்கள். அவர்களுக்கு அவரைத் தெரியுமோ இல்லையோ, குறைந்தபட்சம் அவர்களுக்குக் கையளவினைக் கொடுங்கள். இத்தகைய ஆத்மாக்களுக்கு நீங்கள் ஏதாவதொன்றின் கைப்பிடியளவைக் கொடுக்கிறீர்களா? அல்லது, சொல்வதைக் கேட்காதவர்களைப் புறக்கணித்துவிடுகிறீர்களா? நீங்கள் அவர்களைப் புறக்கணிக்கக்கூடாது. ஏனென்றால், அவர்கள் பின்னர் உங்களின் காதுகளைத் திருகி, முறைப்பாடு செய்வார்கள்: நாம் விவேகமற்றவர்கள். நீங்கள் ஏன் எங்களுக்கு எதையாவது தரக்கூடாது? எனவே, அவர்கள் உங்களின் காதுகளைத் திருகுவார்கள்தானே? மற்றவர்கள் எடுக்கிறார்களோ அல்லது எடுக்கவில்லையோ, நீங்கள் தொடர்ந்து கொடுத்துக் கொண்டே இருங்கள். ஒவ்வொரு நாளும் பாப்தாதா குழந்தைகளான உங்களுக்குப் பல பொக்கிஷங்களைக் கொடுக்கிறார். சிலர் அவற்றை முழுமையாக எடுத்துக் கொள்கிறார்கள். ஏனையோர் அவற்றைத் தமது கொள்ளளவிற்கேற்ப எடுத்துக்கொள்கிறார்கள். பாப்தாதா எப்போதாவது, நான் கொடுக்கப்போவதில்லை, நீங்கள் ஏன் எடுத்துக் கொள்ளவில்லை? எனக் கேட்கிறாரா? பிராமணர்களின் கடமை கொடுப்பதேயாகும். நீங்கள் அருள்பவரின் குழநதைகள்தானே? ஓகே, அவர்கள் கேட்கும்போது நீங்கள் எதையாவது அவர்களுக்குக் கொடுத்தால், அது அவர்களை எடுப்பவர்கள் ஆக்கும். எடுப்பவர்களால் ஒருபோதும் அருள்பவரின் குழந்தைகள் ஆகமுடியாது. அவர்களால் ஒருபோதும் தேவர்கள் ஆகமுடியாது. நீங்கள் தேவர்கள் ஆகப்போகின்றீர்கள்தானே? உங்களின் தேவ ஆடை தயாரா? அல்லது, அது இப்போதுதான் தைக்கப்பட்டுக் கொண்டிருக்கிறதா அல்லது கழுவப்பட்டுக் கொண்டிருக்கிறதா? அல்லது, அதை இஸ்திரி செய்யக் கொடுத்துள்ளீர்களா? உங்களின் தேவ ஆடை உங்களின் முன்னால் தென்பட வேண்டும்: இன்று ஒரு தேவதை, நாளை ஒரு தேவர். நீங்கள் எத்தனை தடவைகள் தேவர் ஆகியுள்ளீர்கள்? எனவே, எப்போதும் நினையுங்கள்: நீங்கள் அருள்பவரின் குழந்தை. நீங்கள் ஒரு தேவர் ஆகப் போகிறீர்கள். அருள்பவரின் குழந்தை முதலில் எடுத்துப் பின்னர் கொடுக்க மாட்டார். எனக்கு மரியாதை வேண்டும். நான் மரியாதையைப் பெற்றால் மதிப்பைக் கொடுப்பேன். இவ்வாறு இருக்கக்கூடாது. நீங்கள் எப்போதும் அருள்பவரின் குழந்தைகள், சதா கொடுப்பவர்கள். உங்களுக்கு சதா இத்தகைய போதை இருக்கிறதல்லவா? அல்லது, அது சிலவேளைகளில் குறைவாகவும் சிலவேளைகளில் அதிகமாகவும் இருக்கிறதா? நீங்கள் இன்னமும் மாயைக்குப் பிரியாவிடை கொடுக்கவில்லையா? மெதுவாகப் பிரியாவிடை கொடுக்காதீர்கள். அந்தளவு நேரம் உங்களிடம் இல்லை. முதலாவதாக, நீங்கள் பிந்தி வந்துள்ளீர்கள். அதனால் நீங்கள் மெதுவாக முயற்சி செய்தால், உங்களால் உங்களின் இலக்கைச் சென்றடைய முடியாது. உங்களுக்கு நம்பிக்கை இருந்தது. நீங்கள் போதை அடைந்தீர்கள். நீங்கள் பறக்க ஆரம்பித்தீர்கள். இது இப்போது பறக்கின்ற ஸ்திதிக்குரிய நேரமாகும். பறப்பது வேகமானதுதானே? நீங்கள் அதிர்ஷ்டசாலிகள். ஏனென்றால் நீங்கள் பறக்கின்ற நேரத்தில் வந்துள்ளீர்கள். எனவே, எப்போதும் உங்களை மிகவும் பாக்கியசாலிகளாக அனுபவம் செய்யுங்கள். உங்களால் கல்பம் முழுவதிலும் இத்தகைய பாக்கியத்தைப் பெற முடியாது. எனவே, அருள்பவரின் குழந்தைகள் ஆகுங்கள். எடுக்கின்ற எண்ணத்தையேனும் கொண்டிராதீர்கள். எனக்குப் பணம் கொடுங்கள், எனக்கு ஆடைகள் கொடுங்கள், எனக்கு உணவு கொடுங்கள். அருள்பவரின் குழந்தைகள் அனைத்தையும் இயல்பாகவே பெறுகிறார்கள். எதையாவது கேட்பவர்கள் அதைப் பெற மாட்டார்கள். ஓர் அருள்பவராகுங்கள். நீங்கள் இயல்பாகவே தொடர்ந்து பெறுவீர்கள். அச்சா.

ஆசீர்வாதம்:
நீங்கள் மிகச்சரியான நினைவைக் கொண்டிருந்து, சகல சக்திகளும் நிறைந்த ஒரு கர்மயோகியாகி, எப்போதும் உங்களின் ஆயுதங்களை உங்களுடன் வைத்திருப்பீர்களாக.

மிகச்சரியான நினைவு என்றால் சதா சகல சக்திகளாலும் நிரம்பியிருத்தல் என்று அர்த்தம். ஓர் எதிரி உங்களின் முன்னால் வருகின்ற சந்தர்ப்பத்தில், உங்களின் ஆயுதங்களைப் பயன்படுத்தாவிட்டால், உங்களை ஆயுதங்களை வைத்திருக்கும் ஒருவர் என அழைக்க முடியாது. ஒவ்வொரு செயலிலும் உங்களுக்கு நினைவு இருக்கும்போதே வெற்றி கிடைக்கும். உங்களால் ஒரு விநாடியேனும் எதையும் செய்யாமல் இருக்க முடியாதிருப்பதைப் போல், யோகம் செய்யாமல் உங்களால் எந்தவொரு செயலையும் செய்ய முடியாது. எனவே, கர்மயோகியாகி, உங்களின் ஆயுதங்களை உங்களுடன் வைத்திருங்கள். உங்களின் கட்டளைகளுக்கேற்ப உங்களின் சக்திகளைப் பொருத்தமான நேரத்தில் பயன்படுத்துங்கள். அப்போது நீங்கள் மிகச்சரியான யோகி என்று அழைக்கப்படுவீர்கள்.

சுலோகம்:
யாருடைய எண்ணங்களும் செயல்களும் மகத்தானவையாக இருக்கிறதோ, அவர்கள் மாஸ்ரர் சர்வசக்திவான்கள் ஆவார்கள்.