01.06.22        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்: இனிய குழந்தைகளே, சதா இறை சேவை செய்வதில் மும்முரமாக இருங்கள். அப்பொழுது தந்தை மீதுள்ள உங்கள் அன்பு அதிகரிப்பதுடன், உங்கள் சந்தோஷப் பாதரசமும் எப்பொழுதும் உயர்ந்திருக்கும்.

கேள்வி:
பாபாவின் திருஷ்டியின் மூலம் அப்பால் செல்லும் அனுபவத்தை உடைய குழந்தைகளின் இதயங்களில் இருக்கும் சந்தோஷம் என்ன?

பதில்:
அவர்கள் தங்கள் இதயங்களில் சுவர்க்க இராச்சியத்தின் சந்தோஷத்தை அனுபவம் செய்வார்கள். ஏனெனில் ஓர் ஆத்மா தந்தையின் ஒரு கணப் பார்வையைப் பெற்றவுடனேயே, ஆஸ்திக்கான உரிமையைக் கோருகின்றார். தந்தை அனைத்தையும் தன்னுள்ளே அடக்கியுள்ளார்.

கேள்வி:
தந்தை ஏன் ஒவ்வொரு நாளும் குழந்தைகளுக்குப் பல்வேறுபட்ட வழிகளில் வித்தியாசமான கருத்துக்களை அளிக்கின்றார்?

பதில்:
குழந்தைகளின் பல பிறவிகளின் விருப்பங்களை நிறைவேற்றுவதற்காகும். குழந்தைகள் புதிய கருத்துக்களைத் தந்தையிடமிருந்து செவிமடுக்கின்றார்கள். இதனால் தந்தை மீதுள்ள அவர்களுடைய அன்பு அதிகரிக்கின்றது.

பாடல்:
நீங்கள் இரவை உறங்குவதிலும், பகலை உண்பதிலும் கழித்தீர்கள்.

ஓம் சாந்தி.
பாபாவில்; தங்கள் பார்வையை வைத்தவாறு குழந்தைகள் அமர்ந்திருக்கின்றனர். தந்தை ஆத்மாக்களாகிய உங்களையும், உங்கள் சரீரங்களையும் காண்கின்றார். குழந்தைகளாகிய நீங்களும் அவரைக் காண்கின்றீர்கள். பாபாவைக் காண்பதிலா அல்லது அவரைச் செவிமடுப்பதிலா அதிகளவு இன்பம் உள்ளது? நீங்கள் பெருமளவு ஞானத்தைச் செவிமடுத்துள்ளீர்கள், நீங்கள் எல்லையற்ற ஞானத்தைச் செவிமடுத்துள்ளீர்கள். நீங்கள் முதற்தரமான பக்தர்கள். நீங்கள் பெருமளவு பக்தி செய்துள்ளீர்கள். நீங்கள் வேதங்களையும் சமயநூல்களையும், கிராந்தையும், கீதையையும், காயத்திரி மந்திரத்தையும் கற்றீர்கள். நீங்கள் தவம், தபஸ்யா அனைத்தையும் செய்தீர்கள். நீங்கள் பெருமளவு செவிமடுத்துள்ளீர்கள். நீங்கள் அவற்றைச் செவிமடுக்கத் தொடங்கியதிலிருந்து தந்தை உங்களுக்குக் கூறுகின்றார். அவை எழுதப்பட்ட காலத்திலிருந்து கூறுகின்றார். நீங்கள் பெருமளவில் செவிமடுத்துள்ளீர்கள். எவ்வாறாயினும் கண்களினால் தந்தையைச் சந்திக்கும் இந்தச் சந்திப்பு இப்பொழுது மாத்திரமே இடம்பெறுகின்றது. ஒரு கணப் பார்வையினால் நீங்கள் அப்பால் செல்கின்றீர்கள். வாசகம் ஒன்று உள்ளது: அதிபதியாகிய சற்குரு ஒரு கணப் பார்வையில் ஆத்மாக்களை அப்பால் எடுத்துச் செல்கின்றார். பாபாவே சற்குருவும், மணவாட்டிகளின் பிரபுவும் ஆவார். அவருடைய பார்வையில் நாங்கள் அமர்ந்திருக்கின்றோம். எங்கள் பார்வையால் நாங்கள் தந்தையை அறிவதுடன், அவர் மூலம் உலகின் அதிபதிகளாகவும் ஆகுகின்றோம் என்பதையும் புரிந்துகொள்கின்றோம். ஆத்மா அனைத்தையும் அவரிடமிருந்து பெறுவதால், தந்தையைப் பார்க்கும்பொழுது, இதயம் சந்தோஷம் அடைகின்றது. தந்தை அனைத்தையும் தன்னுள்ளே அடக்கியுள்ளார். குழந்தைகளாகிய நீ;ங்கள் இப்பொழுது தந்தையைக் கண்டு கொண்டீர்கள். நீங்கள் அவரின் பார்வையில் அமர்ந்திருக்கிறீர்கள், எனவே குழந்தைகளாகிய உங்களுக்கு நிச்சயமாகச் சுவர்க்க இராச்சியத்தைப் பற்றிய போதை இருக்கும். முதலில், தந்தைக்குரியவர்கள் என்ற போதையும், பின்னர் ஆஸ்தியான பீட்டாவின் போதை, அதாவது, இராச்சிய போதையும் இருக்கும். நாங்கள் தந்தையின் முன்னிலையில் அமர்ந்திருக்கின்றோம் என்பதையும், அத்துடன் சரீர உணர்வு அகற்றப்படுகின்றது என்பதையும் புரிந்துகொள்கின்றோம். ஆத்மாக்களாகிய நாங்கள் இந்தச் சரீரங்கள் மூலமாக எங்கள் பாகங்களை நடித்தவாறு சக்கரத்தைச் சுற்றி வருகின்றோம். இப்பொழுது எங்கள் தந்தை எங்கள் முன்னிலையில் அமர்ந்திருக்கின்றார். தந்தையிடமிருந்து ஆஸ்தியைப் பெறுகின்றோம் என்ற சந்தோஷம் இருக்கின்றது. ஒரு குழந்தை வளர்ந்து பெரியவராகியதும், தான் ஒரு வழக்கறிஞரினது, பொறியியலாளரினது அல்லது ஒரு சக்கரவர்த்தியினது குழந்தை என்பதையும், அத்துடன் அந்த இராச்சியத்திற்கு அதிபதி என்பதையும் அறிவார். இங்கே தந்தையிடமிருந்து உங்கள் சுவர்க்க ஆஸ்தியைப் பெறுகின்றீர்கள் என்பதை நீங்கள் புரிந்துகொள்கின்றீர்கள். குழந்தைகள் தந்தையைக் காண்பதில் நிரந்தர சந்தோஷத்தை அனுபவம் செய்ய வேண்டும். இதுவே இதயபூர்வமான சம்பாஷணை ஆகும். அனைவரதும் பரமதந்தை இங்கமர்ந்திருந்து ஆத்மாக்களுடன் பேசுகின்றார். ஆத்மா இந்தச் சரீரத்தின் மூலம் செவிமடுக்கின்றார். கண்களின் சந்திப்பு இடம்பெறுவதன் மூலம் ஒரு தடவை மாத்திரமே நீங்கள் நினைவுசெய்கின்ற தந்தை வந்து, உங்கள் 21 பிறவிகளுக்கான ஆஸ்தியைக் கொடுக்கின்றார். குழந்தைகளாகிய நீ;ங்கள் இதனை நினைவுசெய்ய வேண்டும். குழந்தைகள் இதனை மறக்கின்றனர். நீங்கள் இதனை மறக்கக்கூடாது. நீங்கள் பாபாவின் கண்களின் முன்னால் அமர்ந்திருப்பதால், நீங்கள் பாபாவுடன் அமர்ந்திருக்கின்றீர்கள் என்பதைப் புரிந்துகொள்கிறீர்கள். பாபாவைப் பார்க்கும்பொழுது, உங்கள் சந்தோஷப் பாதரசம் உயரும். குழந்தைகள் தந்தையில் முழுமையான அன்பை உருவாக்குவதற்கான புதிய கருத்துக்களைத் தந்தை இங்கமர்ந்திருந்து விளங்கப்படுத்துகின்றார். அதனால் ஆத்மாக்களாகிய நீங்கள் இதயத்தின் ஆசைகளை நிறைவேற்றிக் கொள்ளலாம், ஏனெனில் நீங்கள் பிரிக்கப்பட்டிருந்தீர்கள். நீங்கள் பலவகைப்பட்ட துன்பங்களை அனுபவம் செய்தீர்கள். இப்பொழுது முன்னிலையில் அமர்ந்திருந்து அவரைப் பார்க்கும்பொழுது, நீங்கள் சந்தோஷமடைய வேண்டும். தந்தையின் முன்னிலையில் இருக்கும்பொழுது, நீங்கள் சந்தோஷமாக இருக்கின்றீர்களா அல்லது அவரிடமிருந்து தொலைவில் இருக்கும்பொழுதும்; அந்தளவுக்குச் சந்தோஷமாக இருக்கின்றீர்களா? ஒருவர் வெளி விடயங்கள் பலவற்றைச் செவிமடுப்பதால், புத்தி வேறு திசையில் ஈர்க்கப்படுகின்றது என்று காரணம் கூறப்;படுகின்றது. மதுவனத்தில் உள்ள குழந்தைகள் தனிப்பட்ட முறையில் பாபாவைச் செவிமடுக்கின்றார்கள். பாபா தனது அன்பால் ஆத்மாக்களைக் கவர்கின்றார். உங்கள் பாபா மிகவும் அன்பானவரும், இனிமையானவரும் ஆவார்! அவர் உங்களைச் சுவர்க்கத்திற்குச் செல்வதற்குத் தகுதி வாய்ந்தவர்கள் ஆக்குகின்றார். குழந்தைகளாகிய நீங்கள் சுவர்க்கத்தின் அதிபதிகள். இப்பொழுது, நாடகத்திற்கேற்ப நீங்கள் அனைத்தையும் இழந்துள்ளீர்கள். இராச்சியத்தை இழப்பதும், மீண்டும் அதனைக் கோருவதும் பெரிய விடயமல்ல. நீங்கள் மாத்திரமே இவ்விடயத்தைப் புரிந்துகொள்கிறீர்கள். உலகில் கோடிக்கணக்கான ஆத்மாக்கள் உள்ளனர், ஆனால் பல்கோடிக்கணக்கானவர்களில் சிலர் மாத்திரமே நான் என்னவாக இருக்கிறேன் என்பதையும், நான் யார் என்பதையும், என்னிடமிருந்து எதனைப் பெற முடியும் என்பதையும் அறிந்து கொள்கின்றார்கள். இவை அனைத்தையும் சிலர் புரிந்து கொண்டாலும், மாயை அவர்களை மறக்கச் செய்கின்றாள் என்பது ஓர் அற்புதமே! மாயை பாபாவின் முன்னிலையில் நேரடியாக இருக்கும் குழந்தைகளை மறக்கச் செய்ய மாட்டாள் என்பதல்ல. மாயை நேரடியாக இங்கிருப்பவர்களையும் மறக்கச் செய்கின்றாள். சிவபாபாவிடம் முழுமையான அன்பு இருக்க வேண்டும். பாபாவிடமிருந்து மிக மேன்மையான ஆஸ்தியை நீங்கள் கோரும்வகையில், எவ்வாறு உங்கள் அன்பை அதிகரிக்க முடியும்? தந்தை கூறுகின்றார்: இறை சேவையைச் செய்யுங்கள்! தந்தையும் குழந்தைகளுக்குச் சேவை செய்கின்றார். பாபா தொலைதூர தேசத்தில் இருந்து வந்துள்ளார் எனக் குழந்தைகளாகிய நீங்கள் புரிந்துகொள்கின்றீர்கள். புத்தியில் நம்பிக்கை கொண்ட குழந்தைகள் ஒருபொழுதும் தளம்பவோ அல்லது குழப்பமடையவோ மாட்டார்கள். எவ்வாறாயினும் மாயை மிகவும் சக்தி வாய்ந்தவள். பாபா உங்களை அலங்கரிக்கின்றார். அவர் மனிதர்களான உங்களைத் தேவர்களாக மாற்றுகின்றார். இது நீங்கள் தேவர்கள் ஆகுகின்ற ஒரு பாடசாலை. தூய உலகின் அதிபதிகள் ஆகுவதற்கு நீங்கள் இந்த முயற்சியைச் செய்கின்றீர்கள். பாபா கூறுகின்றார்: என்னை நினைவு செய்யுங்கள்! ஒருவர் மரணிக்கும் தருணத்தில், அவரிடம் இராமரை (கடவுளை) நினைவுசெய்யும்படி கூறுகின்றார்கள். எவ்வாறாயினும், மக்களுக்கு இராமரைத் தெரியாது. எனவே அந்த நினைவினால் எந்த நன்மையும் இல்லை. நீங்கள் தந்தையை முழுமையாக இனங்கண்டு கொண்டுள்ளீர்கள். நீங்கள் இங்கே சிவபாபாவிடம் வந்துள்ளீர்கள். அவரே அசரீரியான படைப்பவர். அவர் எவ்வாறு படைக்கின்றார்? பிரஐhபிதா பிரம்மாவும் ஒரு படைப்பவர் என அழைக்கப்படுகின்றார். மனித உலகம் பிரம்மாவின் மூலம் உருவாக்கப்படுகின்றது. இதனாலேயே அவர் மக்களின் தந்தையான பிரம்மா என அழைக்கப்படுகின்றார். ஆத்மாக்களாகிய நீங்கள் பிராமணர்களாகி விட்டீர்கள். நீங்கள் சிவபாபாவின் பேரக் குழந்தைகள் என்பதையும், நீங்கள் பிரம்மாவின் குழந்தைகளாகி விட்டீர்கள் என்பதையும் ஆத்மாக்களாகிய நீங்கள் தெளிவாகப் புரிந்துகொண்டுள்ளீர்கள். உங்கள் பாவங்கள் அழிக்கப்பட வேண்டும், அத்துடன் வெற்றி மாலையில் மிக நெருக்கமாகக் கோர்க்கப்பட வேண்டும் எனவும் குழந்தைகளாகிய நீங்கள் விரும்புகின்றீர்கள். ஆகவே நீங்கள் பாபாவைப் பெருமளவு நினைவுசெய்ய வேண்டும். நீங்களும் கர்மயோகிகளே. உங்கள் வீட்டைக் கவனிப்பதுடன், தாமரை மலரைப் போல தூய்மையாக இருங்கள். இந்த உதாரணம் சந்நியாசிகளுக்குப் பொருத்தமற்றதாகும். அவர்கள் தங்கள் குடும்பத்தில் இருந்து கொண்டு தாமரை மலர் போல் தூய்மையாகுவதில்லை. அவர்களால் மற்றவர்களுக்கு இதனைக் கூறவும் முடியாது. ஏனெனில் மக்கள் மற்றவர்களைத் தங்களுக்குச் சமமானவர்களாக ஆக்குகின்றார்கள். சந்நியாசிகள் கூறுவதில்லை: தாமரை போல தூய்மையாகுங்கள். அவர்களால் மக்களுக்கு பிரம்ம தத்துவத்தை நினைவுசெய்யுமாறும் கூறமுடியாது. அதுவும் சாத்தியமில்லை. அவர்கள் பதில் கூறுவார்கள்: நீங்கள் வீட்டை விட்டு வெளியேறினீர்கள். ஆனால் எங்களால் எவ்வாறு முடியும்? உங்களால் உங்கள் குடும்பத்தில் இருக்க முடியவில்லை, எனவே நீங்கள் எவ்வாறு மற்றவர்களுக்கு அதனைச் செய்யுமாறு கூற முடியும்? அவர்களால் இராஜயோகக் கற்பித்தலைக் கொடுக்க முடியாது. இப்பொழுது நீங்கள் அனைத்துச் சமயங்களினதும் முக்கியத்துவத்தைப் புரிந்துகொண்டுள்ளீர்கள். அனைத்துச் சமயங்களும் அதற்குரிய நேரத்தில் வரவேண்டும். கலியுகத்திற்குப் பின்னர் சத்திய யுகம் வரவேண்டும். சத்திய யுகத்தில் ஆதிசனாதன தேவ தர்மம் தேவையாகும். வேறு எந்தச் சமயமும் மனிதர்களைத் தேவர்கள் ஆக்குவதில்லை. அவர்கள் முக்தி தாமத்திற்குச் செல்ல வேண்டும். சுவர்க்கத்தில் சந்தோஷம் இருக்கும். நாங்கள் தேவர்களாகியதும், ஏனைய சமயத்தவர்கள் முக்திக்குச் செல்வார்கள். எவ்வாறாயினும், நாங்கள் சுவர்க்கமாகிய, ஐPவன்முக்திக்குச் செல்லும் வரை எவருமே முக்தி தாமத்திற்குச் செல்ல முடியாது. சுவர்க்கமும், நரகமும் ஒரேநேரத்தில் இருக்க முடியாது. நாங்கள் ஆஸ்தியான ஐPவன்முக்தியைப் பெற்றதும் பந்தன வாழ்வில் எவருமே இருக்க முடியாது. இந்நேரத்தில் இது சங்கமம் என்பதை நீங்கள் புரிந்துகொள்கின்றீர்கள். நீங்கள் மாத்திரமே சக்கரத்தின் சங்கமத்தில் தந்தையைச் சந்திக்கின்றீர்கள், மற்றவர்கள் அவரைச் சந்திக்க முடியாது. ஏனையோர்; இது கலியுகம் என நினைக்கின்றார்கள். ஆனால் நாங்கள் கலியுகத்தில் இல்லை. நாங்கள் எங்கள் ஆஸ்தியான சுவர்க்கத்தை பாபாவிடமிருந்து கோருகின்றோம். பாபாவிற்குரியவர்கள் ஆகுவதற்கு நாங்கள் மரணித்து வாழ்கின்றோம். தத்தெடுக்கப்பட்டவர்கள் இரு உலகங்களையும் பற்றி அறிவார்கள். அவர்களுக்குக் கூறப்படுகிறது: நீங்கள் அவருக்குரியவராக இருந்தீர்கள், இப்பொழுது இவருக்கு உரியவராகியுள்ளீர்கள். இரு பக்கத்துக்குமுரிய அவர்களுடைய சினேகிதர்களையும் உறவினர்களையும் அவர்கள் அறிவார்கள். நீங்கள் உங்கள் நங்கூரத்தை உயர்த்தி, அங்கிருந்து விலகி வந்து விட்டீர்கள் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். நாங்கள் இப்பொழுது நீங்கிச் செல்கின்;றோம். இந்த உலகத்துடன் எங்களுக்கு ஒரு தொடர்பும் இல்லை. கடவுள் தனது குழந்தைகளுடன் பேசுகின்றார், அதாவது, பரமாத்மாவாகிய பரமதந்தை சாலிகிராம் குழந்தைகளுடன் பேசுகின்றார். கடவுள் வர வேண்டும் எனக் கூறப்படுகின்றது, ஆனால் அவர்களுக்கு அவரைத் தெரியாது. தந்தையை அறியாததால், அவர்கள் குழப்பமடைகின்றார்கள். எவருமே இத்தகைய இலகுவான விடயத்தைப் புரிந்துகொள்வதில்லை. எனினும் அவர்கள் தொடர்ந்தும் கடவுளை நினைவுசெய்கின்றார்கள். ஓர் ஆத்மா ஒரு பாகத்தை நடிப்பதற்கு ஒரு சரீரத்தை எடுக்கின்றார் என்பதை நீங்கள் புரிந்துகொள்கின்றீர்கள். நீங்கள் பரமாத்மாவாகிய பரமதந்தையும் வசிக்கும் பரந்தாமத்திலிருந்து வந்தீர்கள். மனிதர்கள் ஆத்மாக்களைப் பற்றி அறிவதில்லை, பரமாத்மாவைப் பற்றியும் அறிவதில்லை. கடவுள் வந்து எவ்வாறு குழந்தைகளைச் சந்திக்கிறார் என்பதையோ, அவர் என்ன செய்வார் என்பதையோ எவரும் அறியவில்லை. கீதையில் அனைத்தும் பிழையாக எழுதப்பட்டுள்ளது. அவர்கள் பெயரை மாற்றியுள்ளார்கள். தந்தை கேட்கின்றார்: உங்களுக்கு என்னைத் தெரியுமா? உங்களுக்கு என்னைத் தெரியுமா? என்று கிருஷ்ணர் வினவ மாட்டார். முழு உலகிற்குமே அவரைத் தெரியும், ஆனால் அவரால் ஞானத்தைக் கொடுக்க முடியாது. எனவே, கடவுள் தன்னுடைய உருவத்தை மாற்றுவார், ஆனால் அவர் ஸ்ரீ கிருஷ்ணர் ஆகுவதில்லை என்பதை நீங்கள் நிச்சயமாக விளங்கப்படுத்த வேண்டும். அவர் ஒரு மனித சரீரத்தில் பிரவேசிக்கின்றார். அவர் கிருஷ்ணரின் சரீரத்தில் பிரவேசிப்பதில்லை. இவர் பிரம்மா ஆவார். இவரில் கிருஷ்ணரின் ஆத்மா உள்ளார். இந்தச் சிறு விடயத்தில் அவர்கள் பிழையைச் செய்துள்ளனர். இது கிருஷ்ணரின் ஆத்மாவின் 84வது பிறவியாகும், பின்னர் ஆரம்ப காலத்தில் இவர் கிருஷ்ணராக வருகின்றார். இவர் தனது இறுதிப் பிறவியில் கிருஷ்ணரின் அந்தஸ்தைப் பெறுவதற்கு முயற்சி செய்கின்றார். இது மிகவும் மறைமுகமான விடயமாகும். அவர்கள் இந்தச் சிறு விடயத்தை மறந்து விட்டனர். இது புரிந்துகொள்வதற்கு மிகவும் நுணுக்கமானதும், ஆழமானதுமான விடயம். நீங்கள் கிருஷ்ண குலத்திற்குரியவர்கள் என்பதைப் புரிந்துகொள்கின்றீர்கள். இப்பொழுது நீங்கள் உங்கள் இராச்சிய பாக்கியத்தை சிவபாபாவிடமிருந்து மீண்டும் ஒருமுறை கோருகின்றீர்கள். கிருஷ்ணர் உங்கள் புத்தியில் இருப்பதில்லை. மக்கள் கூறுகின்றார்கள்: கடவுள் கிருஷ்ணர் பேசுகின்றார். அது எதனையும் நிரூபிப்பதில்லை. கீதையில் ஐந்து பாண்டவர்கள் மாத்திரம் எஞ்சி இருப்பார்கள் எனக் காட்டப்பட்டுள்ளது. அவர்கள் சக்கரத்திற்கு நூறாயிரக்கணக்கான வருடங்கள் கொடுத்துள்ளனர். மக்கள் அத்தகைய மிகச் சாதாரண விடயங்களையேனும் புரிந்துகொள்வதில்லை! நீங்கள் சூரிய வம்சக் குடும்பத்துக்குரியவர்கள் என்பதைச் சாதாரண சமிக்ஞை மூலம் நீங்கள் புரிந்து கொள்கின்றீர்கள். சூரிய குலத்திற்குரியவராக இருந்த பின்னர் நீங்கள் சூத்திர குலத்திற்குரியவர்கள் ஆகுகின்றீர்கள். பின்னர் பிராமணர்களிலிருந்து தேவர்கள் ஆகுகின்றீர்கள். இந்தச் சாதிகள் உங்கள் புத்தியில் இருக்க வேண்டும். அவர்கள் சாதிகளை அரைவாசியாகக் குறைத்துள்ளனர். அவர்கள் உச்சிக்குடுமியாகிய பிராமணர்களையும் சிவபாபாவையும் மறந்து விட்டனர். அவர்கள் தேவர்கள், சத்திரியர்கள், வைசியர்கள்;, சூத்திரர்களையும் காட்டியுள்ளனர், ஆனால் பிராமணர்களும் நிச்சயமாகத் தேவைப்படுகின்றார்கள். பிரம்மாவின் குழந்தைகள் எங்கு சென்று விட்டனர்? இது எவரது புத்தியிலும் இருப்பதில்லை. தந்தை தெளிவாக உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றார். இவற்றை உங்கள் புத்தியில் நீங்கள் நன்றாகப் பதிய வைக்க வேண்டும். தந்தையின் புத்தியில் உள்ள இந்த ஞானம் உங்களிடமும் இருக்க வேண்டும். நான் என்னைப் போலவே ஆத்மாக்களாகிய உங்களையும் ஆக்குகின்றேன். என்னிடமுள்ள உலகச் சக்கரத்தின் ஞானம் உங்கள் புத்தியிலும் உள்ளது. நீங்கள் விவேகிகளாக இருக்க வேண்டும். பாபாவுடன் யோகம் செய்ய வேண்டும், அத்துடன் மீண்டும் மீண்டும் ஞானத்தைக் கடையவும் வேண்டும். நீங்கள் இங்கே பாபாவின் முன்னிலையில் அமர்ந்திருக்கின்றீர்கள். பாபா மிக இலகுவாக விளங்கப்படுத்துகின்றார் என்பதை நீங்கள் புரிந்துகொள்கின்றீர்கள். ஆத்மாக்களும் பரமாத்மாவும் நீண்டகாலமாகப் பிரிக்கப்பட்டிருந்தனர் எனக் கூறப்பட்டுள்ளது. சற்குரு முகவர் ரூபத்தில் உங்களுக்குக் கற்பிக்கின்றார். முகவர் என்றால் உங்கள் ஒப்பந்தங்களைச் செய்பவர் ஆவார். தந்தை வந்து, இவர் மூலம் உங்களுடன் ஒப்பந்தங்களைச் செய்கின்றார். அந்த முகவரை நினைவுசெய்யக் கூடாது என்பதை நீங்கள் புரிந்துகொள்கின்றீர்கள். முகவர் மூலமாக சிவபாபாவுடனான உங்கள் நிச்சயதார்த்தம் இடம்பெறுகின்றது. மத்தியில் இருக்கும் நீங்கள் அனைவரும், முகவர்களே. நீங்கள் கேட்கலாம்: பரமாத்மாவாகிய பரமதந்தையுடனான உங்கள் உறவுமுறை என்ன? அவருடன் மற்ற ஆத்மாக்கள் திருமணம் செய்வதற்கான ஆயத்தங்களை நீங்கள் உருவாக்குகின்றீர்கள். நீங்களும் பிரஜாபிதா பிரம்மா என்ற பெயரைக் கொடுக்கின்றீர்கள். நீங்கள் சிவபாபாவிடமிருந்து ஆஸ்தியைப் பெறுகின்றீர்கள். அவரே சுவர்க்கத்தை உருவாக்குபவர். சரீரதாரி ஆத்மாக்கள் பரமாத்மாவுக்கு நிச்சயதார்த்தம் செய்யப்படுகின்றார்கள். நீங்கள் நிச்சயம் செய்யப்பட்டிருந்தீர்கள். நீங்கள் உங்கள் ஆஸ்தியைப் பெற்றீர்கள்;. அத்துடன் நீங்கள் மீண்டும் ஒருமுறை அதனைக் கோருகின்றீர்கள். சக்கரம் சக்கரமாக சங்கமத்தில் இதுவே உங்கள் தொழில் என்பதை நீங்கள் புரிந்துகொள்கின்றீர்கள். வேறு எவராலும் ஆத்மாக்களைப் பரமாத்மாவுக்கு நிச்சயதார்த்தம் செய்ய முடியாது. அவர்களை உலகின் அதிபதிகளாக்கும் ஒருவருக்கு நீங்கள் அவர்களை நிச்சயதார்த்தம் செய்தீர்கள். இதுவே மிகவும் மேன்மையான ஆன்மீக நிச்சயதார்த்தம் ஆகும். சக்கரம் சக்கரமாக ஆத்மாக்களின் பரமாத்மாவுடனான ஆன்மீக நிச்சயதார்த்தத்தை நீங்கள் எவ்வாறு ஒழுங்குசெய்வது என்பதைக் கற்றீர்கள். இது இவ்வாறே சக்கரம் சக்கரமாக நடைபெறுகின்றது. நீங்கள் நிச்சயமாகச் சக்கரம் சக்கரமாக மனிதர்களில் இருந்து தேவர்களாக மாறுகின்றீர்கள். பின்னர் தேவர்கள் மனிதர்கள் ஆகுகின்றனர். மனிதர்கள் மனிதர்களே! எவ்வாறாயினும், மனிதர்களைத் தேவர்களாக மாற்றுவதற்குக் கடவுளுக்கு நீண்ட காலம் எடுக்க மாட்டாது என ஏன் எழுதப்பட்டுள்ளது? ஏனெனில், அவர் தேவ தர்மத்தை ஸ்தாபிக்கின்றார். இந்த நிச்சயதார்த்தத்தின் மூலம் நாங்கள் மனிதர்களிலிருந்து தேவர்கள் ஆகுகின்றோம் என்பதை நீங்கள் புரிந்துகொள்கின்றீர்கள். கிறிஸ்துவுக்கு 3000 வருடங்களுக்கு முன்னர் பாரதம் சுவர்க்கமாக இருந்தது என அனைவரும் கூறுகின்றார்கள். ஆனால் இவை எதுவுமே அவர்களின் புத்தியில் புகுவதில்லை. முதலில் பாரதம் சுவர்க்கமாக இருந்தது. இப்பொழுதும் அவர்கள் பல ஆலயங்களைக் கட்டுகின்றார்கள். இது இப்பொழுது மற்றவர்களுக்கு இறங்கும் ஸ்திதியாகும். ஆனால் இது உங்களுக்கு ஏறும் ஸ்திதி ஆகும். ஏறும் ஸ்திதிக்குச் செல்வதற்கு ஒரு வினாடியே எடுக்கும். அச்சா.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தந்தை தாயாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும் ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கின்றார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. ஒருபொழுதும் எதனைப் பற்றியும் குழப்பமடையவோ அல்லது உங்கள் நம்பிக்கையைத் தளம்பலடையவோ அனுமதிக்காதீர்கள். உங்கள் வீடு போன்றவற்றைக் கவனிக்கும் பொழுது, ஒரு கர்மயோகியாக இருங்கள். வெற்றிமாலையில் நெருக்கமாகக் கோர்க்கப்படுவதற்கு நீங்கள் நிச்சயமாகத் தூய்மையாக வேண்டும்.

2. திறமைசாலிகள் ஆகுவதற்கு, ஞானக் கடலைக் கடையுங்கள். இறை சேவை செய்வதில் சதா ஈடுபட்டிருங்கள். ஏனையோரையும் உங்களுக்குச் சமமானவர்கள் ஆக்கும் சேவையைச் செய்யுங்கள்.

ஆசீர்வாதம்:
நீங்கள் பாபா எனும் வார்த்தையின் விழிப்புணர்வு மூலம் என்னுடையது எனும் எல்லைக்குட்பட்ட உணர்வை அர்ப்பணிப்பவராக இருப்பதால், ஓர் எல்லையற்ற துறவி ஆகுவீர்களாக.

சில குழந்தைகள் இந்த நற்குணம் என்னுடையது எனவும், எனது சக்தி எனவும் கூறுகின்றார்கள். இது ஒரு தவறாகும். கடவுளிடமிருந்தான வெகுமதியை உங்களுடையது என்று கருதுவது ஒரு பெரும் பாவமாகும். சில குழந்தைகள் ஒரு சாதாரணமான முறையில் கூறுகின்றார்கள்: எனது நற்குணம் அல்லது எனது புத்தி பயன்படுத்தப்படவில்லை. எவ்வாறாயினும், என்னுடையது என்று கூறுவது அதனை அசுத்தமாக்குவதாகும்; அது ஓர் ஏமாற்றுதலும் ஆகும். ஆகவே, இந்த எல்லைக்குட்பட்ட என்னுடையது எனும் உணர்வை அர்ப்பணித்து, சதா பாபா எனும் வார்த்தையை நினைவுசெய்யுங்கள், அப்பொழுது நீங்கள் ஒரு துறவி ஆத்மா என்று கருதப்படுவீர்கள்.

சுலோகம்:
தந்தைக்கு உங்கள் சேவையை அர்ப்பணியுங்கள், அப்பொழுது நீங்கள் தொடர்ந்தும் சேவையின் பலனையும், சக்தியையும் பெறுவீர்கள்.