01.07.20        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்:
இனிய குழந்தைகளே, பெரிய நகரங்களில் பெரிய கடைகளைத் (நிலையங்கள்) திறந்திடுங்கள். சந்திப்புகளை நடாத்துங்கள், திட்டங்களை உருவாக்குங்கள், சேவையை எவ்வாறு அதிகரிப்பது என்பதைப் பற்றிச் சிந்தியுங்கள்.

கேள்வி:
அனைவரும் பௌதீகமான அற்புதங்களை அறிவார்கள். ஆனால் குழந்தைகளாகிய நீங்கள் மாத்திரமே அறிந்துள்ள, அனைத்திலும் மிகப்பெரிய அற்புதம் என்ன?

பதில்:
அனைவருக்கும் சற்கதியை அருள்பவரான தந்தையே, வந்து எங்களுக்குக் கற்பிக்கின்றார் என்பதே அனைத்திலும் மிகப்பெரிய அற்புதமாகும். இந்த அற்புதமான விடயத்தைப் பற்றி அனைவருக்கும் கூறுவதற்கு உங்கள் கடைகளில் பெருமளவு பகட்டு (ளாழற) இருக்க வேண்டும், ஏனெனில் மக்கள் பெருமளவு பகட்டைப் பார்க்கும்பொழுதே, எங்காவது செல்கின்றார்கள். ஆகையால், அனைவராலும் வந்து புரிந்துகொள்ளும் வகையில், தலைநகரத்தில் சிறந்த, மிகப்பெரிய கடை இருக்க வேண்டும்.

பாடல்:
உங்கள் வீதியிலேயே வாழ்ந்து உங்கள் வீதியிலேயே மரணிக்க வேண்டும்.

ஓம் சாந்தி.
கடவுள் சிவன் பேசுகின்றார். கடவுள் உருத்திரர் பேசுகின்றார் என்றும் கூற முடியும், ஏனெனில் சிவனின் மாலை நினைவுகூரப்படுவதில்லை. பக்தி மார்க்கத்தில் மனிதர்களால் அதிகளவு உருட்டப்படுகின்ற மாலை உருத்திர மாலை என அழைக்கப்படுகின்றது. அது ஒரே விடயமே, ஆனால் சிவபாபா உங்களுக்குச் சரியான முறையைக் கற்பிக்கின்றார். அது மற்றைய பெயராகவே இருக்க வேண்டும், ஆனால் உருத்திர மாலை என்ற பெயரே தொடர்ந்துள்ளது. ஆகையால் உருத்திரருக்கும் சிவனுக்கும் இடையில் வேறுபாடு இல்லை என்பதும் விளங்கப்படுத்தப்பட வேண்டும். நீங்கள் நல்ல முயற்சி செய்து பாபாவின் மாலையில் நெருக்கமாக வர வேண்டும் என்பது குழந்தைகளாகிய உங்கள் புத்தியில் உள்ளது. குழந்தைகள் எவ்வாறு அவர்களுடைய இலக்கை நோக்கி ஓடி, அதனைத் தொட்டு விட்டுப்; பின்னர் திரும்பவும் ஓடிவந்து ஆசிரியருக்கு அருகில் நிற்கின்றார்;கள் என்ற உதாரணம் உங்களுக்குக் கொடுக்கப்பட்டுள்ளது. நீங்கள் 84 பிறவிகளின் சக்கரத்தைச் சுற்றி வந்துள்ளீர்கள் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். நீங்கள் இப்பொழுது சென்று, முதலில் மாலையில் கோர்க்கப்பட வேண்டும். அந்த ஓட்டப்பந்தயம் மனித மாணவர்களுக்கானது, ஆனால் இது ஆன்மீக ஓட்டப் பந்தயமாகும். உங்களால் அந்த ஓட்டப் பந்தயத்தில் ஓட முடியாது. இது ஆத்மாக்களுக்குரிய விடயமாகும். ஆத்மாக்கள் இளையவர்களாகவோ, முதியவர்களாகவோ அல்லது பெரியதாகவோ, சிறிதாகவோ ஆகுவதில்லை. ஆத்மாக்கள் ஒரே அளவினராகவே இருக்கின்றார்கள். ஆத்மாக்களாகிய நீங்கள் உங்களுடைய தந்தையை நினைவுசெய்ய வேண்டும். இதில் சிரமம் என்ற கேள்விக்கே இடமில்லை. இதைக் கற்பதில் சிலர் பின்தங்கினாலும், இந்நினைவில் என்ன சிரமம் இருக்கின்றது? எதுவுமே இல்லை! ஆத்மாக்கள் அனைவரும் சகோதரர்கள். அந்த ஓட்டப்பந்தயத்தில், இளையவர்கள் விரைவாக ஓடுவார்கள். அது இங்கு பொருந்தாது. குழந்தைகளாகிய நீங்கள் உருத்திர மாலையில் கோர்க்கப்படுவதற்காக ஓடுகின்றீர்கள். ஆத்மாக்களாகிய உங்களது விருட்சம் உள்ளது என்பது உங்கள் புத்தியில் உள்ளது. அது சிவபாபாவிற்கு உரிய மனிதர்கள் அனைவரினதும் மாலையாகும். இது வெறுமனே 108 அல்லது 16,108 இற்குரிய மாலையல்ல் இல்லை. இது மனிதர்கள் அனைவருக்;குமான மாலையாகும். அனைவரும் சென்று வரிசைக்கிரமமாகத் தத்தமது சொந்தச் சமயங்களில் இருப்பார்கள் என்றும், ஒவ்வொரு கல்பமும், அவர்கள் ஒரே இடத்திற்கே மீண்டும் செல்வார்கள் என்பதையும் குழந்தைகளாகிய நீங்கள் புரிந்துகொள்கிறீர்கள். இதுவும் ஓர் அற்புதமாகும். உலகிலுள்ள வேறு எவருக்கும் இந்த விடயங்களைப் பற்றித் தெரியாது. உங்கள் மத்தியிலும் பரந்த, எல்லையற்ற புத்தியைக் கொண்ட குழந்தைகளாலேயே இந்த விடயங்களைப் புரிந்துகொள்ள முடியும். எவ்வாறு அனைவருக்கும் பாதையைக் காட்டலாம் எனும் ஒரேயொரு அக்கறையையே குழந்தைகளாகிய நீங்கள் உங்கள் புத்தியில் கொண்டிருக்க வேண்டும். இது விஷ்ணுவின் மாலையாகும். ஆரம்பத்தில் இருந்து, வம்சாவளி விருட்சம் உள்ளது. கிளைகளும், சிறுகிளைகளும் உள்ளன. சின்னஞ்சிறிய ஆத்மாக்கள் மேலே இருக்கின்றார்கள். இங்கு மனிதர்கள் இருக்கின்றார்கள். பின்னர், ஆத்மாக்கள் அனைவரும் சென்று அங்கு மிகச்சரியாக இருப்பார்கள். இவை அற்புதமான விடயங்கள்;. மக்கள் பார்க்கச் செல்கின்ற பௌதீகமான அற்புதங்கள் எதுவுமேயில்லை. அனைவருக்கும் சற்கதியை அருள்பவரான, பரமாத்மாவான பரமதந்தையே வந்து எங்களுக்குக் கற்பிக்கின்றார் என்பது ஓர் அற்புதமே. கிருஷ்ணரை அனைவருக்கும் சற்கதி அருள்பவர் என அழைக்க முடியாது. நீங்கள் இக் கருத்துக்கள் அனைத்தையும் கிரகிக்க வேண்டும். கீதையின் கடவுள் யார்? என்பதே பிரதானமான விடயம். இதில் நீங்கள் ஒரு தடவை வெற்றி பெற்றால், அது மாத்திரமே உங்களுக்குத் தேவையாகும். சகல சமயநூல்களினதும் இரத்தினமாகிய, தாயான கீதை கடவுளால் கூறப்பட்டுள்ளது. நீங்கள் இதனை முதலில் முயற்சி செய்து பார்க்க வேண்டும். தற்காலத்தில், மக்கள் பெருமளவு பகட்டினை விரும்புகின்றார்கள். பெருமளவு பகட்டு காணப்படுகின்ற கடைகளுக்கு மக்கள் விரைகின்றார்கள், ஏனெனில் அங்கு மிக நல்ல விடயங்கள் இருக்கும் என அவர்கள் நம்புகின்றார்கள். மிகப்பெரிய நிலையத்தைத் திறப்பதற்கு, தாங்கள் வாடகையாக ஆயிரம் அல்லது இரண்டாயிரம் ரூபாய்களை வைப்பீடு செய்ய வேண்டும், இதுவே தாங்கள் விரும்புகின்ற கட்டடத்தைக் கண்டுபிடிப்பதற்கான ஒரேயொரு வழி எனச் சில குழந்தைகள் கவலைப்படுகின்றார்கள். ஒரேயொரு பெரிய இராஜரீகமான கடை மாத்திரமே இருக்க வேண்டும். பெரிய நகரங்களில் பெரிய கடைகள் திறக்கப்படுகின்றன. உங்களுடைய மிகப்பெரிய கடை தலைநகரத்திலேயே இருக்க வேண்டும். சேவையை எவ்வாறு அதிகரிக்க வேண்டும் எனக் குழந்தைகளாகிய நீங்கள் கடைய வேண்டும். நீங்கள் பெரிய கடைகளைத் திறக்கும்பொழுது, பெரிய முக்கியஸ்தர்கள் வருவார்கள். பெரிய முக்கியஸ்தர்களின் ஓசை விரைவாகப் பரவுகின்றது. இதனை முதலில் செய்வதற்கு முயற்சி செய்யுங்கள். முக்கியஸ்தர்கள் வந்து அதனைப் பார்த்து, வியப்படையும் வண்ணம் பெரிய நகரத்தில், சேவைக்காகப் பெரிய இடத்தை உருவாக்குங்கள். அத்தகைய இடங்களில் விளங்கப்படுத்துபவர்களும் முதற்தரமானவர்களாக இருக்க வேண்டும். அந்தளவு திறமைசாலியாக இல்லாத பிரம்மகுமாரி ஒருவர் விளங்கப்படுத்தும்பொழுது, பிரம்மகுமாரிகள் அனைவரும் அவ்வாறானவர்கள் என மக்கள் நினைக்கின்றார்கள். எனவே, கடைகளில் முதற்தரமான விற்பனையாளர்கள் இருக்க வேண்டும். இவை அனைத்துமே ஒரு வியாபாரம், இல்லையா? தந்தை கூறுகின்றார்: குழந்தைகளாகிய நீங்கள் தைரியத்தைக் கொண்டிருக்கும்பொழுது, பாப்தாதா உதவிசெய்கின்றார். அந்த அழிகின்ற செல்வம் எவ்விதத்திலும் பயனுள்ளதாக இருக்கப் போவதில்லை. இந்த பிரம்மா செய்ததைப் போன்று, நீங்கள் உங்களுடைய அழிவற்ற வருமானத்தைச் சம்பாதிக்க வேண்டும். இதில் பலருக்கும் நன்மை ஏற்படும். எவரும் பட்டினியால் மரணிக்க வேண்டியதில்லை. உங்களால் உண்ண முடியும். இவரும் உண்கின்றார். இங்கு நீங்கள் பெறுகின்ற உணவையும், பானத்தையும் வேறு எங்கும் பெறமுடியாது. இங்கிருக்கும் அனைத்தும் குழந்தைகளுக்கு உரியது. குழந்தைகளாகிய நீங்கள் உங்களுடைய சொந்த இராச்சியத்தை ஸ்தாபிக்க வேண்டும். இதற்கு உங்களுக்கு மிகப்பரந்த, எல்லையற்ற புத்தி தேவை. தலைநகரத்தில் உங்களது பெயர் போற்றப்படும்பொழுது, நீங்கள் கூறுவது உண்மையே; கடவுளால் மாத்திரமே உங்களை உலக அதிபதிகள் ஆக்க முடியும் என்பதை அனைவரும் நம்புவார்கள். மனிதர்களால் மனிதர்களை உலக அதிபதிகள் ஆக்க முடியாது. எவ்வாறு சேவையை விரிவாக்குவது என பாபா தொடர்ந்தும் உங்களுக்கு ஆலோசனை கொடுக்கின்றார். குழந்தைகள் பெருந்தன்மையான இதயம் உடையவர்கள் ஆகும்பொழுது, சேவை விரிவடையும். நீங்கள் எதனைச் செய்தாலும், அதனைப் பெருந்தன்மையுடன் செய்யுங்கள். மங்களகரமான ஒரு பணியை நீங்களாகவே செய்வது மிகவும் நல்லது. கூறப்பட்டுள்ளது: எதையும் கூறாமலே செய்பவர்கள் தேவர்கள், அதைக் கூறிய பின்னர் செய்பவர்கள் மனிதர்கள், கூறிய பின்னரும் எதையும் செய்யாதவர்கள் ! பாபாவே அருள்பவர். அவர் எவரிடமும் எதனையும் செய்யுமாறோ அல்லது ஒரு பணிக்காகக் குறித்த அளவைச் செலவழிக்குமாறோ கூறப் போவதில்லை, இல்லை. பெரிய அரசர்கள் எப்பொழுதும் உலோபிகளாக இருப்பதில்லை என பாபா விளங்கப்படுத்தியுள்ளார். அரசர்கள் எப்பொழுதும் வழங்குபவர்கள். நீங்கள் சென்று என்ன செய்ய வேண்டும் என்ற ஆலோசனையை பாபா உங்களுக்குக் கொடுக்கின்றார். பெருமளவு எச்சரிக்கையும் தேவைப்படுகின்றது. மாயை வெற்றி கொள்ளப்பட வேண்டும்; அப்பொழுது உங்கள் அந்தஸ்து மிக உயர்ந்ததாக ஆகுகின்றது. இறுதியில் பெறுபேறு அறிவிக்கப்படும். சிறந்த புள்ளிகளுடன் சித்தி எய்துபவர்கள் மிகவும் சந்தோஷம் அடைவார்கள். இறுதியில் நீங்கள் அனைவரும் செய்துள்ளவற்றின் காட்சிகளைக் காண்பீர்கள். எனினும் அந்நேரத்தில் என்ன செய்ய முடியும்? உங்கள் பாக்கியத்தில் என்ன உள்ளதோ, அதனையே நீங்கள் ஒவ்வொருவரும் பெறுவீர்கள். முயற்சி செய்வது வேறு விடயமாகும். பரந்த புத்தி உடையவர்களாக இருக்குமாறு தந்தை குழந்தைகளாகிய உங்களிடம் கூறுகின்றார். நீங்கள் இப்பொழுது தர்மாத்மாக்கள் ஆகுகின்றீர்கள். உலகில் பல தர்மாத்மாக்கள் வாழ்ந்து சென்றுள்ளார்கள். அவர்கள் மிகவும் பிரபல்யமானவர்கள்: இன்னார் சிறந்த தர்மாத்மாவாக இருந்தாhர். சிலர் அதிகளவு பணத்தைச் சேர்த்த பின்னர், சடுதியாக மரணித்து விடுகின்றார்கள். அதன்பின்னர் நம்பிக்கை நிதியம் ஒன்று உருவாக்கப்படுகின்றது. ஒரு குழந்தை நம்பகமானவராக இல்லாது விட்டால், அவருக்காக ஒரு நம்பிக்கைப் பொறுப்பாளர் நியமிக்கப்படுகின்றார். இந்த நேரத்தில் இது பாவாத்மாக்களின் உலகமாகும். மக்கள் பெரிய குருமார் போன்றவர்களுக்குப் பணத்தைத் தானம் செய்கின்றார்கள். உதாரணமாக ஆரிய சமாஜியினரின் சமயம் விரிவடைவதற்காக அவர்களுக்கு காஷ்மீரின் மகாராஜா தனது செல்வம் முழுவதையும் உயில் எழுதினார். இப்பொழுது நீங்கள் என்ன செய்ய வேண்டும்? நீங்கள் எந்தச் சமயத்தை விரிவடையச் செய்ய வேண்டும்? உங்களுக்கு ஒரேயொரு ஆதிசனாதன தேவிதேவதா தர்மம் மாத்திரமே உள்ளது. நீங்கள் மீண்டும் ஒருமுறை அத் தர்மத்தை ஸ்தாபிக்கின்றீர்கள் என்பதை எவரும் அறியார்;. பிரம்மாவின் மூலம் ஸ்தாபனை இடம்பெறுகின்றது. குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது ஒரேயொருவரின் நினைவில் நிலைத்திருக்க வேண்டும். உங்கள் நினைவுச் சக்தி மூலம் நீங்கள் முழு உலகையும் தூய்மையாக்குகின்றீர்கள், ஏனெனில் உங்களுக்குத் தூய உலகம் தேவைப்படுகின்றது. அது எரியூட்டப்படும்பொழுது, தூய்மையாக்கப்படும். பழுதடைந்த எதையும் தீயினால் தூய்மையாக்க முடியும். தூய சடப்பொருட்கள் மாத்திரம் எஞ்சும் வகையில், தூய்மையற்ற அனைத்துச் சடப்பொருட்களும் தீயில் எரிக்கப்படுகின்றன. இவ்வுலகம் மிகவும் அழுக்கடைந்த, தமோபிரதான் உலகம் என்பதை நீங்கள் அறிவீர்கள். அது சதோபிரதான் ஆக்கப்பட வேண்டும். இதுவே ஞான யாகம். நீங்கள் பிராமணர்கள். சமயநூல்களில் யாகத்துடன் தொடர்புள்ள பல விடயங்கள் எழுதப்பட்டுள்ளன என்பதை நீங்கள் அறிவீர்கள். தட்ச பிரஜாபிதாவின் (பிரஜைகளின் தந்தையான தட்சன்) பெயரும் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே உருத்திரரின் ஞான யாகத்திற்கு என்ன நிகழ்ந்தது? அவர்கள் அமர்ந்திருந்து, அதனைப் பற்றிய பல்வேறு கதைகளை எழுதியுள்ளார்கள்! அந்த யாகத்தைப் பற்றிய சரியான விளக்கம் எதுவும் இல்லை. தந்தை மாத்திரமே வந்து, அனைத்தையும் விளங்கப்படுத்துகின்றார். குழந்தைகளாகிய நீங்கள் ஸ்ரீமத்தின் அடிப்படையிலே இப்பொழுது ஞான யாகத்தை உருவாக்கியுள்ளீர்;கள். இது ஒரு ஞான யாகமும், அத்துடன் ஒரு பல்கலைக்கழகமும் ஆகும். ஞானமும் யாகமும் இரு வேறுபட்ட விடயங்கள். ஒரு யாகத்தில் ஆகுதிகள் இடப்பட வேண்டும். ஞானக்கடலான தந்தையே வந்து இந்த யாகத்தை உருவாக்குகின்றார். இது பழைய உலகம் முழுவதும் அர்ப்பணிக்கப்படுகின்ற, மிகவும் முக்கியமான யாகமாகும். குழந்தைகளாகிய நீங்கள் சேவைக்கான திட்டங்களை உருவாக்க வேண்டும். உங்களால் கிராமங்களுக்கும் சென்று சேவை செய்ய முடியும். இந்த ஞானத்தை ஏழைகளுக்குக் கொடுக்குமாறு பலரும் உங்களுக்குக் கூறுகின்றார்கள். அவர்கள் உங்களுக்கு இந்த ஆலோசனையைக் கூறுகின்றார்கள்; தாங்கள் எதனையும் செய்வதில்லை. அவர்கள் தாங்கள் சேவை செய்யாது உங்களிடம் இதைச் செய்யுங்கள், அதைச் செய்யுங்கள், அது மிகவும் நல்லது என்றும், ஆனால் தங்களுக்கு நேரமில்லை என்றும் கூறுகின்றார்கள். அவர்கள் கூறுகின்றனர்: இந்த ஞானம் மிகவும் நல்லது. அனைவரும் இந்த ஞானத்தைப் பெற வேண்டும். அம்மக்கள் தங்களை முக்கியமானவர்களாகவும், சிரேஷ்டமானவர்களாகவும், உங்களைத் தங்களிலும் பார்க்க கனிஷ்டர்;கள் என்றும் கருதுகின்றார்கள். நீங்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அக்கல்வியுடன், உங்களிடம் இக் கல்வியும் உள்ளது. கல்வியூட்டப்படுவதால், எவ்வாறு மக்களுடன் பேசுவது, எவ்வாறு நற்பண்புகளை விருத்திசெய்வது என நீங்கள் கற்கின்றீர்கள். கல்வியறிவற்றவர்கள் அறியாமையில் உள்ளார்கள். அவர்களுக்கு மக்களுடன் சரியாகப் பேசுவதற்கான விவேகமில்லை. முக்கியஸ்தர்களுடன் மிகவும் மரியாதையான முறையில்; (நீங்கள் என்று கூறி) பேச வேண்டும். இங்கும் சிலர் தங்கள் கணவரை மரியாதையின்றிப் பேசுகின்றார்கள். மரியாதைக்குரிய வார்த்தைகளைப் பயன்படுத்துதல் இராஜரீகமாகும். பிரபல்யமானவர்களுடன் எப்பொழுதும் மரியாதையுடன் பேச வேண்டும். ஆகையால் பாபா உங்களுக்கு ஆலோசனை கூறுகின்றார்: பரிஸ்தானாக இருந்த டெல்கி, மீண்டும் பரிஸ்தான் ஆக்கப்பட வேண்டும். ஆகையால் டெல்கியில் உள்ள அனைவருக்கும் செய்தியைக் கொடுக்க வேண்டும். மிகவும் நன்றாக விளம்பரம் கொடுக்கப்பட வேண்டும். பாபாவும் உங்களுக்குத் தலைப்புக்களைத் தொடர்ந்தும் கொடுத்தவாறு இருக்கின்றார். தலைப்புக்களின் பட்டியல் ஒன்றைத் தயாரித்து, தொடர்ந்தும் எழுதுங்கள்: உலகில் எவ்வாறு அமைதியை ஏற்படுத்தலாம் என்பதை வந்து, புரிந்து கொள்ளுங்;கள். 21 பிறவிகளுக்கு நோயிலிருந்து விடுபட்டவர்களாக ஆகுவது எவ்வாறு என்பதை வந்து, புரிந்துகொள்ளுங்கள். அத்தகைய பெருமளவு சந்தோஷம் நிறைந்த விடயங்கள் எழுதப்பட வேண்டும். உள்ளே வந்து, சத்தியயுகத்தில், 21 பிறவிகளுக்கு நோயிலிருந்து விடுபட்டவர்;களாகவும், இரட்டைக் கிரீடம் உடையவர்களாகவும் ஆகுங்கள். நீங்கள் எழுதுகின்ற அனைத்திலும் சத்தியயுகம் என்ற வார்த்தையை நிச்சயமாகப் பயன்படுத்துங்கள். மக்கள் பார்க்கும்பொழுது, சந்தோஷம் அடையத்தக்க வகையில், அது மிகவும் அழகான எழுத்தாக இருப்பதை நிச்சயப்படுத்துங்கள். அத்தகைய படங்களுடன் கூடிய அறிவிப்புப் பலகைகள், உங்கள் வீடுகளின் வெளியில் இடப்பட வேண்டும். உங்கள் வியாபாரம் போன்றவற்றை மேற்கொள்ளுங்கள், ஆனால் அதேநேரத்தில்; சேவையையும் தொடர்ந்தும் செய்யுங்கள். நாள் முழுவதும் நீங்கள் வியாபாரம் செய்வதில்லை. நீங்கள் அனைத்தையும் மேற்பார்வை மாத்திரமே செய்ய வேண்டும். உதவி முகாமையாளர்களே வேலையைச் செய்கிறார்கள். சில பெருந்தன்மையான செல்வந்த வியாபாரிகள் தங்கள் உதவியாளர்களுக்கு நல்ல சம்பளம் வழங்குவதுடன், அவர்களை ஒரு நல்ல பதவியிலும் நியமிப்பார்கள். இங்கு இது எல்லையற்ற சேவை. ஏனைய அனைத்துச் சேவையும் எல்லைக்குட்பட்டது. இந்த எல்லையற்ற சேவையைச் செய்வதற்கு உங்களுக்கு மிகவும் பரந்த, எல்லையற்ற புத்தி தேவை. நாங்கள் இப்பொழுது உலகை வெல்கிறோம். நாங்கள் இப்பொழுது மரணத்தையும் வென்று, அமரத்துவமானவர்கள் ஆகுகிறோம். உள்ளே வந்து எவ்வாறு உங்களால் அமரத்துவ பூமியின் அதிபதிகள் ஆகலாம் என்பதைப் புரிந்துகொள்ளுங்கள் என எழுதியிருப்பதைப் பார்க்கும்பொழுது, பலர் உள்ளே வந்து புரிந்துகொள்ள முயற்சி செய்வார்கள். நீங்கள் பல தலைப்புக்களைக் கண்டுபிடிக்கலாம். உங்களால் எவரையும் உலக அதிபதிகள் ஆக்கமுடியும். அங்கு துன்பத்தின் எந்தவிதப் பெயரோ அல்லது சுவடோ கிடையாது. குழந்தைகளாகிய நீங்கள் அதிகளவு சந்தோஷத்தைக் கொண்டிருக்க வேண்டும்! பாபா மீண்டும் ஒருமுறை எங்களை என்னவாக ஆக்குவதற்கு வந்துள்ளார்? பழைய உலகம் புதியதாக வேண்டும் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் புரிந்துகொள்கின்றீர்கள். மரணம் முன்னால் நிற்;கின்றது. எவ்வாறு யுத்தங்கள் தொடர்ந்தும் இடம்பெறுகின்றன என்பதை உங்களால் காண முடியும். உலக மகாயுத்தம் இடம்பெறும்பொழுது, முழு நாடகமும் முடிவிற்கு வரும். நீங்கள் இதனை மிக நன்றாக அறிவீர்கள். தந்தை பெருமளவு அன்புடன் கூறுகின்றார்: இனிய குழந்தைகளே, உலக இராச்சியம் உங்களுக்குரியது. நீங்கள் உலக அதிபதிகளாக இருந்தீர்கள். நீங்கள் பாரதத்தில் பெருமளவு சந்தோஷத்தை அனுபவம் செய்தீர்கள். அங்கு இராவணனின் இராச்சியம் இருப்பதில்லை. எனவே, நீங்கள் அத்தகைய பெருமளவு சந்தோஷத்தைக் கொண்டிருக்க வேண்டும். குழந்தைகளாகிய நீங்கள் ஒன்றுகூடிச் சந்தித்து இந்த விடயங்களைக் கலந்துரையாட வேண்டும். இதனைப் பத்திரிகைகளில் வெளியிடுங்கள். டெல்கி முழுவதும் விமானத்தின் மூலம் துண்டுப் பிரசுரங்களைப் போடுங்கள். அழைப்பிதழ்களை வழங்குங்கள். இதற்குப் பெருமளவு செலவு ஏற்படாது. ஒரு மூத்த அலுவலர் இங்கு வந்து இந்த ஞானத்தைப் புரிந்துகொண்டால், அவர் அதனை இலவசமாகவும் செய்யக்கூடும். கல்கத்தா போன்ற நகரத்தில் நாற்சந்தியில் பெரிய முதற்தரமான இராஜரீகமான கடை இருக்க வேண்டும் என பாபா உங்களுக்கு அறிவுரை கூறுகின்றார்; பின்னர், பல வாடிக்கையாளர்கள் வருவார்கள். சென்னை, பம்பாய் போன்ற நகரங்களில் பெரிய கடைகள் இருக்க வேண்டும். பாபாவும் வியாபாரி. அவர் உங்களிடமிருந்து எடுத்துக் கொள்கின்ற ஒரு சதமேனும் பெறுமதியற்ற பயனற்ற விடயங்கள் அனைத்தையும், அதற்குப் பதிலாக அவர் உங்களுக்கு என்ன கொடுக்கின்றார் எனவும் பாருங்கள்! இதனாலேயே, அவர் கருணை நிறைந்தவர் என நினைவுகூரப்படுகிறார். அவர் சிப்பிகளை வைரங்களாக, சாதாரண மனிதர்களைத் தேவர்களாக மாற்றுபவர். மகத்துவம் ஒரேயொரு தந்தைக்கானது. அது தந்தைக்கு இல்லாவிடின் நீங்கள் என்ன புகழைக் கொண்டிருப்பீர்கள்? கடவுள் உங்களுக்குக் கற்பிக்கின்றார் என்ற போதையைக் குழந்தைகளாகிய நீங்கள் கொண்டிருக்க வேண்டும். சாதாரண மனிதனிலிருந்து நாராயணனாக ஆகுகின்ற இலக்கும் குறிக்கோளும் உங்களுக்கு முன்னால் உள்ளன. கலப்படமற்ற பக்தியை முதலில் செய்ய ஆரம்பித்தவர்களே, வந்து உயர்ந்த அந்தஸ்தைக் கோருவதற்கான முயற்சியைச் செய்வார்கள். பாபா அத்தகைய நல்ல கருத்துக்களை விளங்கப்படுத்துகின்றார். குழந்தைகளாகிய நீங்கள் அவற்றை மறந்து விடுகின்றீர்கள். இதனாலேயே பாபா அவற்றை எழுதும்படி உங்களுக்குக் கூறுகின்றார். தொடர்ந்தும் தலைப்புக்களை எழுதுங்கள். மருத்துவர்களும் புத்தகங்களைப் படிக்கின்றார்கள். நீங்களும் மாஸ்டர் ஆன்மீக சத்திரசிகிச்சை நிபுணர்;கள். ஆத்மாக்களுக்கு எவ்வாறு ஊசி மருந்தினைக் கொடுப்பது என உங்களுக்குக் கற்பிக்கப்படுகின்றது. இந்த ஊசி மருந்து ஞானத்திற்கு உரியது. இதற்கு ஊசி போன்ற எதுவும் பயன்படுத்தப்படுவதில்லை. பாபாவே அநாதியான சத்திரசிகிச்சை நிபுணர்;; அவர் வந்து ஆத்மாக்களுக்குக் கற்பிக்கின்றார். ஆத்மாக்களே தூய்மையற்றவர்கள் ஆகியுள்ளனர். இது மிகவும் இலகுவானது. தந்தை எங்களை உலக அதிபதிகள் ஆக்குகின்றார். எனவே, நாங்கள் ஏன் அவரை நினைவுசெய்யக்கூடாது? மாயையிடமிருந்து அதிகளவு எதிர்ப்புக்கள் வருகின்றன. இதனாலேயே பாபா கூறுகின்றார்: உங்கள் அட்டவணையைப் பேணி, சேவையைப் பற்றிச் சிந்தியுங்கள், நீங்கள் பெருமளவு சந்தோஷத்தைக் கொண்டிருப்பீர்கள். யோகம் இல்லாவிடின், ஒருவர் எவ்வளவு நன்றாக ஞானத்தைக் கொடுத்தாலும், தந்தையுடன் நேர்மையாக இருப்பது அவருக்கு மிகவும் சிரமமாக இருக்கும். நீங்கள் மிகவும் திறமைசாலிகளாக இருந்து நன்றாக முன்னேறுகின்றீர்கள் என உணர்ந்தால், உங்களுடைய நினைவு அட்டவணையை பாபாவிற்கு அனுப்பி வைக்க வேண்டும், அதனால் எந்தளவிற்கு உண்மையைக் கூறுகின்றீர்களா அல்லது இல்லையா என்பதை பாபாவால் புரிந்துகொள்ள முடியும். அச்சா. நீங்கள் அழிவற்ற ஞான இரத்தினங்களின் விற்பனையாளர்கள் ஆகவேண்டும் எனக் குழந்தைகளாகிய உங்களுக்குக் கூறப்பட்டுள்ளது. அச்சா.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டெடுக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. உங்கள் இலக்கையும், இலட்சியத்தையும் உங்கள் முன்னால் வைத்து, போதையுற்று இருங்கள். மாஸ்டர் ஆன்மீக சத்திரச்சிகிச்சை நிபுணர்;கள் ஆகி, அனைவருக்கும் ஞானம் எனும் ஊசிமருந்தைக் கொடுங்கள். சேவை செய்வதுடன், ஒரு நினைவு அட்டவணையையும் வைத்திருங்கள். நீங்கள் சந்தோஷமாக இருப்பீர்கள்.

2. மற்றவர்களுடன் பேசும்பொழுது, நல்ல பண்புகளைக் கொண்டிருங்கள். மற்றவர்களுடன் மரியாதையான முறையில் பேசுங்கள். ஒவ்வொரு பணியிலும் பெருந்தன்மையான இதயத்தைக் கொண்டிருங்கள்.

ஆசீர்வாதம்:
நீங்களே உங்களுக்கு நன்மையளிக்கின்ற நடைமுறை உதாரணத்தின் மூலம் உலக நன்மை எனும் சேவையில் சதா வெற்றி சொரூபம் ஆகுவீர்களாக.

இந்நாட்களில் அநேகமான நோய்கள் அனைத்தும் இதய வழுவல் எனும் நோய்க்குரியது. அதேபோன்று, ஆன்மீக முன்னேற்றம் எனும் ரீதியில், அதிகளவு மனந் தளர்ந்திருத்தல் எனும் நோய் உள்ளது. மனந் தளர்ந்திருக்கின்ற ஆத்மாக்களில் நடைமுறையான மாற்றத்தைப் பார்ப்பதால், மக்கள் தைரியத்தையும், சக்தியையும் வளர்த்துக் கொள்கின்றனர். அவர்கள் பெருமளவைக் கேட்டுள்ளனர், இப்பொழுது எதையாவது பார்க்க விரும்புகின்றனர். ஓர் உதாரணத்தைப் பார்ப்பதால், மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு அவர்கள் விரும்புகின்றார்கள். எனவே உலக நன்மைக்காக, முதலில் உங்களுக்கு நீங்களே நன்மையளிக்கின்ற முன்மாதிரியை அவர்களுக்குக் காட்டுங்கள். நடைமுறை உதாரணமே உலக நன்மை எனும் சேவையில் வெற்றி சொரூபம் ஆகுவதற்கான வழியாகும். இதன் மூலமே தந்தையின் வெளிப்பாடு இடம்பெறும். நீங்கள் பேசும் விடயங்களை உங்கள் ரூபத்தில் நடைமுறையில் பார்க்கும்பொழுது மாத்திரமே அவர்கள் அனைத்தையும் ஏற்றுக் கொள்வார்கள்.

சுலோகம்:
உங்கள் அபிப்பிராயங்களுடன்; ஏனையோரின் அபிப்பிராயங்களை ஒத்திசையச் செய்வதே மரியாதை கொடுப்பதாகும்.