01.09.20        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்:
இனிய குழந்தைகளே, தந்தை உங்களுக்குச் செயல்;, நடுநிலைச் செயல், பாவச்செயல் என்பவற்றின் ஆழமான தத்துவத்தைக் கற்பிக்க வந்துள்ளார். ஆத்மா, சரீரம் இரண்டும் தூய்மையாக இருக்கும்பொழுது, செயல்கள் நடுநிலையானவையாகும். நீங்கள் தூய்மையற்றவர்கள் ஆகும்பொழுது, செயல்கள் பாவகரமானவை ஆகுகின்றன.

கேள்வி:
ஆத்மாக்கள் துருப்பிடித்தவர்கள் ஆகியுள்ளமைக்குக் காரணம் என்ன? துருப்பிடித்த ஓர் ஆத்மாவின் அடையாளம் என்ன?

பதில்:
விகாரமே துருப்பிடித்தவர்கள் ஆகுவதற்கான காரணமாகும். ஆத்மாக்களாகிய நீங்கள் தூய்மையற்றவர்களாகும்பொழுது, துருவினால் மூடப்படுகின்றீர்கள். இப்பொழுதும் ஆத்மாக்கள் துருப்பிடித்தவர்களாக இருந்தால், அவர்கள் பழைய உலகின் பால் கவரப்படுகின்றார்கள். அவர்களுடைய புத்தி தொடர்ந்தும் குற்றமுள்ளதாகுவதுடன், அவர்களால் நினைவில் நிலைத்திருக்கவும் முடியாதுள்ளது.

ஓம் சாந்தி.
குழந்தைகளாகிய நீங்கள் இதன் அர்த்தத்தைப் புரிந்துகொண்டுள்ளீர்கள். ஆத்மாக்களாகிய நீங்கள் ஓம் சாந்தி என்று கூறியவுடனேயே, நீங்கள் இவ்விடத்து வாசிகளல்ல என்ற நம்பிக்கை உங்களுக்கு ஏற்படுகின்றது. நாங்கள் அமைதிதாம வாசிகள். நாங்கள் எங்கள் வீட்டில் வசிக்கின்றபொழுது, அமைதியே எங்களது ஆதி தர்மமாக இருக்கின்றது. பின்னர், எங்களது பாகங்களை நடிப்பதற்காக நாங்கள் இங்கே வருகின்றோம், ஏனெனில் ஆத்மாக்களாகிய நாங்கள் எங்களுடைய சரீரங்களின் மூலமே செயல்களைச் செய்கின்றோம். நல்ல, தீய செயல்கள் உள்ளன. இராவண இராச்சியத்தில் தீய செயல்கள் உள்ளன. இராவண இராச்சியத்தில் அனைவரது செயல்களும் பாவகரமானவை ஆகியுள்ளன. பாவச்செயல்கள் செய்வதிலிருந்து எந்த ஒரு நபருமே விடுபடவில்லை. சாதுக்கள், சந்நியாசிகள் பாவச்செயல்கள் செய்வதில்லை என மக்கள் நம்புகின்றார்கள். ஏனெனில் அவர்கள் தூய்மையாக இருப்பதுடன், துறவறத்தையும் மேற்கொண்டுள்ளார்கள். உண்மையில் தூய்மையாக இருப்பது என்பதன் அர்த்தத்தை அவர்கள் முற்றாகவே அறியார்;கள். அவர்கள் நான் தூய்மையற்றவன் என்று கூறி, தூய்மையாக்குபவரைக் கூவி அழைக்கின்றார்கள். அவர் வரும்வரை உலகம் தூய்மையாக முடியாது. இங்கே இது பழைய, தூய்மையற்ற உலகம், இதனாலேயே அவர்கள் புதிய உலகை நினைவுசெய்கிறார்கள். அவர்கள் புதிய உலகிற்குச் செல்லும்பொழுது, தூய்மையற்ற உலகை நினைவுசெய்ய மாட்டார்கள். அந்த உலகம் முற்றிலும் வேறுபட்டது. அனைத்துமே முதலில் புதியதாக இருந்து பின்னர் பழையதாகுகின்றது. புதிய உலகில் எந்தவொரு தூய்மையற்ற மனிதரும் இருக்க முடியாது. பரமாத்மாவான, பரமதந்தையே புதிய உலகைப் படைப்பவர். அவர் மாத்திரமே தூய்மையாக்குபவர். அவரது படைப்பு நிச்சயமாகத் தூய்மையானதாகவே இருக்க வேண்டும்: அது தூய்மையானதிலிருந்து தூய்மையற்றதாகவும், தூய்மையற்றதிலிருந்து தூய்மையானதாகவும் ஆகும். இவ் விடயங்கள் எவரது புத்தியிலும் இருப்பதில்லை. தந்தை உங்களுக்கு விளங்கப்படுத்துவதற்காக ஒவ்வொரு கல்பத்திலும் வருகிறார். குழந்தைகளாகிய உங்களுக்குள்ளேயும் சிலர் புத்தியில் நம்பிக்கை கொண்டிருப்பதுடன், பின்னர் அவர்களது புத்தி சந்தேகத்தையும் வளர்த்துக் கொள்கின்றது; மாயை அவர்களை முழுமையாக விழுங்கி விடுகின்றாள். நீங்கள் மகாராத்திகள், இல்லையா? மகாராத்திகளே சொற்பொழிவுகள் ஆற்றுவதற்கு அழைக்கப்படுகின்றார்கள். நீங்கள் மகாராஜாக்களுக்கும் விளங்கப்படுத்த வேண்டும்: ஆரம்பத்தில், நீங்கள் தூய்மையானவர்களாகவும், பூஜிக்கத் தகுதிவாய்ந்தவர்களாகவும் இருந்தீர்கள். இப்பொழுது இது தூய்மையற்ற உலகமாகும். பாரத மக்கள் மாத்திரமே தூய உலகில் இருந்தார்கள். பாரத மக்களாகிய நீங்கள் ஆதிசனாதன தேவிதேவதா தர்மத்திற்கு உரியவர்களாகவும், இரட்டைக்கிரீடம் உள்ளவர்களாகவும், முற்றிலும் விகாரமற்றவர்களாகவும் இருந்தீர்கள். மகாராத்திகள் இவ்விதமாக விளங்கப்படுத்த வேண்டும். நீங்கள் இதனைப் போதையுடன் விளங்கப்படுத்த வேண்டும். கடவுள் பேசுகிறார்: காமச்சிதையில் அமர்ந்ததால், ஆத்மாக்கள் அவலட்சணமாகி விட்டார்கள். பின்னர் ஞானச்சிதையில் அமர்வதன் மூலம் ஆத்மாக்கள் அழகானவர்கள் ஆகுவார்கள். விளங்கப்படுத்துகின்ற எவரும் காமச்சிதையில் அமரக்கூடாது. எவ்வாறாயினும் பிறருக்கு விளங்கப்படுத்துகையில், தாங்களே காமச்சிதையில் அமர்கின்ற சிலரும் உள்ளனர். இன்று அவர்கள் இந்த ஞானத்தை விளங்கப்படுத்துகின்றார்கள். நாளை அவர்கள் விகாரத்தில் வீழ்ந்து விடுகிறார்கள். மாயை மிகவும் பலமானவள், கேட்கவும் வேண்டாம்! பிறருக்கு விளங்கப்படுத்துபவர்கள் பின்னர் தாங்களே காமச்சிதையில் அமர்கின்றனர். பின்னர் அவர்கள், என்ன நடந்தது? என வருந்திக் கேட்க நேரிடுகின்றது. இது ஒரு குத்துச்சண்டை. ஓர் ஆண் ஒரு பெண்ணைக் கண்டதும் கவரப்பட்டு, தன்னுடைய முகத்தை அழுக்காக்கிக் கொள்கின்றார். மாயை மிகவும் சக்தி வாய்ந்தவள். அவர்கள் சத்தியம் செய்து விட்டு, பின்னர் வீழ்ந்து விடுகின்றனர். எனவே பின்னர் 100 மடங்கு தண்டனை சேர்க்கப்படுகின்றது. அது சூத்திரரைப் போன்று தூய்மையற்றவர்கள் ஆகுவதாகும். நினைவுகூரப்படுகின்றது: அமிர்தத்தை அருந்திய பின்னர், அவர்கள் வெளியே சென்று அழுக்கான செயல்கள் செய்வதனால், பிறரைத் தொந்தரவு செய்வார்கள். கை தட்டுவதற்கு உங்களுக்கு இரு கைகள் தேவை; நீங்கள் ஒரு கையினால் கைதட்ட முடியாது; இருவருமே சீரழிந்து போகின்றார்கள். பின்னர் சிலர் தங்களுடைய செய்தியைக் கூறுகின்றார்கள். ஆனால் ஏனைய சிலர் மிகவும் வெட்கமடைவதால், தங்கள் செய்தியைக் கூறுவதில்லை. பிராமணக் குலத்தில் தங்கள் பெயர் அவமதிக்கப்படும் என அவர்கள் உணர்கின்றார்கள். ஒரு சண்டையில் ஒருவர் தோற்கடிக்கப்பட்டால், பலமான மல்யுத்த வீரர் தோற்கடிக்கப்பட்டார் என்ற பெருமளவு ஒலி பரவுகின்றது. அவ்வாறான பல விபத்துக்கள் இடம்பெறுகின்றன. மாயை அவர்களை அறைகின்றாள். இலக்கு அதியுயர்ந்தது. சதோபிரதானாகவும், அழகாகவும் இருந்தவர்கள், காமச்சிதையில் அமர்ந்ததனால், தமோபிரதானாகவும், அவலட்சணமாகவும் ஆகினர் எனக் குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது விளங்கப்படுத்துகின்றீர்கள். இராமர் கருநீல நிறமாகச் சித்தரிக்கப்பட்டுள்ளார். கருநீல நிறமாக அவர்களின் பலரின் படங்களை அவர்கள் உருவாக்குகின்றார்கள். எவ்வாறாயினும் பிரதானமானவர்களின் பெயர்கள் மாத்திரமே உங்களுக்கு விளங்கப்படுத்தப்பட்டன. இங்கேயும், அவர்கள் இராமச்சந்திரனின் கருநீலநிறப் படத்தை வைத்திருக்கின்றார்கள். ஏன் அந்தப் படத்தைக் கருநீலமாகச் செய்துள்ளீர்கள்? என அவர்களிடம் கேளுங்கள். இது கடவுளின் விருப்பம் என அவர்கள் கூறுகின்றார்கள். இது தொன்றுதொட்ட காலத்திலிருந்தே தொடர்கின்றது. இது ஏன் நடக்கின்றது, என்ன நடக்கின்றது என்று கூட அவர்கள் அறியார்கள். தந்தை இப்பொழுது உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றார்: காமச்சிதையில் அமர்வதால், நீங்கள் தூய்மையற்றவர்களாகவும், சந்தோஷமற்றவர்களாகவும், ஒரு சதம் பெறுமதியற்றவர்களாகவும் ஆகினீர்கள். அது விகாரமற்ற உலகம், இது விகார உலகம். இந்த முறையில் விளங்கப்படுத்துங்கள்: இது சூரிய வம்சம், அது சந்திர வம்சம், பின்னர் நீங்கள் வைசிய வம்சத்தில் ஒருவராக வேண்டும். பாவப் பாதையில் செல்வதால், அவர்கள் தேவர்கள் என அழைக்கப்படுவதில்லை. nஐகந்நாதர் ஆலயத்தில் அவர்கள் தேவ குலத்தை மேலே காட்டியுள்ளார்கள். அவர்களுடைய ஆடைகளை தேவர்களினுடையதாகவும், அவர்களின் செயல்களை மிக அழுக்கானவையாகவும் சித்தரித்துள்ளார்கள். தந்தை உங்களது கவனத்தை ஈர்த்துள்ள விடயங்களில் கவனஞ் செலுத்துங்கள். ஆலயங்களிலே பெருமளவு சேவை செய்ய முடியும். நீங்கள் ஸ்ரீநாதர் ஆலயத்திலும் விளங்கப்படுத்தலாம். இவ்விக்கிரகங்களை ஏன் கருநீலமாகச் சித்தரித்துள்ளீர்கள்? என அவர்களிடம் வினவுங்கள். இதை விளங்கப்படுத்துவது மிகவும் நல்லது. அது சத்தியயுகமும், ஆத்மாக்கள் துருப் பிடித்தவர்கள் ஆகும்பொழுது, இது கலியுகமும் ஆகும். உங்களுடைய துரு இப்பொழுது அகற்றப்படுகின்றது. நினைவில் நிலைத்திருக்காதவர்களின் துரு அகற்றப்பட மாட்டாது. ஆத்மாக்கள் பெருமளவு துருவினால் மூடப்பட்டிருக்கும்பொழுது, அவர்கள் பழைய உலகினால் அதிகளவு கவரப்படுகின்றனர். அனைத்திலும் பெரிய துரு விகாரமாகும் (காமம்). ஆத்மாக்கள் விகாரத்தினாலேயே தூய்மையற்றவர்கள் ஆகியுள்ளார்கள். உங்கள் புத்தி குற்றமுள்ளதாகுவதில்லையா என உங்களைச் சோதித்துப் பாருங்கள். மிக நல்ல, முதற்தரமான குழந்தைகளும் இதில் தோல்வியடைகின்றார்கள். தூய்மையே பிரதான விடயம் என்ற புரிந்துணர்வைக் குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது பெற்றுள்ளீர்கள். ஆரம்பத்திலிருந்து இதனால் பெருமளவு சண்டை இருந்து வருகின்றது. தந்தை இதற்கான யுக்திகளை உருவாக்கியுள்ளார். தாங்கள் ஞானாமிர்தம் அருந்தச் செல்வதாக அனைவரும் கூறுவதுண்டு. ஞானக்கடல் மாத்திரமே, ஞானாமிர்தத்தைக் கொண்டுள்ளார். சமயநூல்களைக் கற்பதன் மூலம், எவருமே தூய்மையற்றவரிலிருந்து தூய்மையாக முடியாது. ஆத்மாக்கள் தூய்மையாகிப் பின்னர் தூய உலகிற்குச் செல்ல வேண்டும். தூய்மையாகிய பின்னர் நீங்கள் இங்கிருந்து எங்கே செல்ல முடியும்? இன்னார் அநாதியான முக்தி அடைந்து விட்டார் என மக்கள் நம்புகின்றார்கள். அவர்களுக்கு என்ன தெரியும்? ஒருவர் அநாதியான முக்தியடைந்து விட்டார் என்றால், நீங்கள் பிரிந்து சென்ற அந்த ஆத்மாவிற்கான கிரியைகளை மேற்கொள்ள வேண்டியதில்லை. அந்த ஆத்மாவுக்கு எந்தக் கஷ்டமோ அல்லது இருளில் தடுமாற்றமோ ஏற்படக்கூடாதென்று, இங்கே அவர்கள் தீபத்தை ஏற்றி வைக்கின்றார்கள். ஓர் ஆத்மா சென்று, இன்னொரு சரீரத்தை எடுப்பது ஒரு விநாடிக்கான விடயமாகும். எவ்வாறு ஓர் ஆத்மாவுக்கு இருள் இருக்க முடியும்? அந்த வழக்கம் தொடர்கின்றது. நீங்களும் அதைச் செய்தீர்கள். ஆனால் இப்பொழுது அதைச் செய்வதில்லை. அச்சரீரம் தூசுடன் கலந்துவிடும் என நீங்கள் அறிவீர்கள். அங்கே அவர்கள் அவ்வாறான சம்பிரதாயங்களைக் கொண்டிருப்பதில்லை. இப்பொழுது மந்திர வித்தைகளில் எதுவுமேயில்லை. உதாரணமாக, ஒருவருக்குச் சிறகிருந்து பறக்கவும் ஆரம்பித்தால், அது என்ன? அதில் என்ன நன்மை இருக்கும்? தந்தை கூறுகின்றார்: என்னை நினைவுசெய்யுங்கள், உங்கள் பாவங்கள் அழிக்கப்படும். நீங்கள் தூய்மையற்றவர்களிலிருந்து, தூய்மையாகுகின்ற யோக அக்கினி இதுவாகும். ஞானத்தின் மூலம் நீங்கள் செல்வத்தைப் பெறுகின்றீர்கள். யோகத்தின் மூலம் நீங்கள் என்றும் ஆரோக்கியமானவர்களாகவும், தூய்மையானவர்களாகவும், ஞானத்தின் மூலம் நீங்கள் என்றும் செல்வந்தர்களாகவும் ஆகுகின்றீர்கள். ஒரு யோகியினுடைய ஆயுட்காலம், ஒரு போகியினுடைய (புலன்களின் சந்தோஷத்தில் ஈடுபடுபவர்) ஆயுட்காலத்தை விடவும் எப்பொழுதும் நீண்டது. கிருஷ்ணர் யோகேஸ்வரர் என்று அழைக்கப்படுகின்றார். அவர் கடவுளை நினைவுசெய்ததனால், கிருஷ்ணர் ஆகினார். அவர் சுவர்க்கத்தில் யோகேஸ்வரர் என அழைக்கப்பட மாட்டார். அவர் அப்பொழுது ஓர் இளவரசனாவார். அவர் கிருஷ்ணர் ஆகும் வகையில், அவருடைய கடந்த பிறவியில் அவ்வாறான செயல்களைச் செய்தார். தந்தை உங்களுக்குச் செயல்கள், நடுநிலைச் செயல்கள், பாவச் செயல்களின் ஆழமான தத்துவத்தை விளங்கப்படுத்தியுள்ளார். அரைக்கல்பத்திற்கு இராம இராச்சியமும், அரைக்கல்பத்திற்கு இராவண இராச்சியமும் இருக்கின்றன. விகாரத்தில் (காமம்) ஈடுபடுவதே மாபெரும் பாவமாகும். நீங்கள் அனைவரும் சகோதர, சகோதரிகள். ஆத்மாக்கள் அனைவரும் சகோதரர்கள். நீங்கள் கடவுளின் குழந்தைகள். எனவே எவ்வாறு குற்றத் தாக்குதல் இருக்க முடியும்? பிரம்மாகுமாரர்களும், குமாரிகளுமாகிய நாங்கள் விகாரத்தில் ஈடுபட முடியாது. இந்த யுக்தியைப் பயன்படுத்துவதால் மாத்திரமே நீங்கள் தூய்மையாக இருக்க முடியும். இராவண இராச்சியம் இப்பொழுது முடிவிற்கு வருகின்றது என்பதை நீங்கள் அறிவீர்கள். பின்னர் சகல ஆத்மாக்களும் தூய்மையாகுவார்கள். இதுவே ஒவ்வொரு வீட்டிலும் ஒளியேற்றப்பட்டுள்ளது என அறியப்படுகின்றது. இப்பொழுது நீங்கள் ஒளியேற்றப்பட்டுள்ளீர்கள். நீங்கள் ஒவ்வொருவரும் மூன்றாவது ஞானக்கண்ணைப் பெறுகின்றீர்கள். சத்தியயுகத்தில் அனைவரும் தூய்மையானவர்கள். இந்நேரத்தில் மாத்திரமே நீங்கள் இதைப் புரிந்துகொள்கின்றீர்கள். குழந்தைகளும், பிறருக்கு விளங்கப்படுத்துவதில் வரிசைக்கிரமமான பலத்தைக் கொண்டுள்ளார்கள். நீங்கள் வரிசைக்கிரமமாகவே நினைவில் நிலைத்திருக்கின்றீர்கள். எவ்வாறு இராச்சியம் ஸ்தாபிக்கப்படுகின்றது என்பது எவரது புத்தியிலும் பிரவேசிப்பதில்லை. நீங்கள் ஓர் சேனை. நினைவுச்சக்தி மூலம் நீங்கள் தூய்மையாகுகின்றீர்கள் என்பதையும், பின்னர் அரசர்களாகவும், அரசிகளாகவும் ஆகுவீர்கள் என்பதையும் அறிவீர்கள். உங்கள் அடுத்த பிறவியில் நீங்கள் உங்கள் வாயில் தங்கக் கரண்டியைக் கொண்டிருப்பீர்கள். உயர் பரீட்சையில் சித்தியடைபவர்கள் உயர்ந்த அந்தஸ்தைக் கோருகின்றார்கள். ஒரு வித்தியாசம் இருக்கின்றது; எந்தளவிற்கு நீங்கள் கற்கின்றீர்களோ, அதற்கேற்ப சந்தோஷத்தைப் பெறுகிறீர்கள். கடவுளே உங்களுக்குக் கற்பிக்கின்றார் ஆகவே நீங்கள் எப்பொழுதும்; அந்தப் போதையைக் கொண்டிருக்க வேண்டும். நீங்கள் இப்பொழுது ஊட்டச்சத்துள்ள உணவைப் பெறுகின்றீர்கள். வேறெவருமன்றி கடவுளாலேயே உங்களைத் தேவ, தேவியர்களாக்க முடியும். நீங்கள் இப்பொழுது தூய்மையற்றவர்களிலிருந்து, தூய்மையாகுகின்றீர்கள். பின்னர் நீங்கள் உயர்ந்த அந்தஸ்தைப் பெற்று, பிறவிபிறவியாகச் சந்தோஷமாக இருப்பீர்கள். கற்கும்பொழுது, உங்களில் சிலர் அழுக்கானவர்கள் ஆகுகின்றீர்கள். சரீர உணர்வுடையவர்கள் ஆகுவதனாலேயே உங்கள் மூன்றாவது ஞானக்கண் மூடுகின்றது. மாயை மிகவும் சக்தி வாய்ந்தவள். தந்தையே கூறுகின்றார்: அதற்குப் பெருமளவு முயற்சி தேவை. நான் பிரம்மாவின் சரீரத்தில் பிரவேசித்து அதிகளவு முயற்சி செய்கின்றேன்! அவர்களில் சிலர் இதைப் புரிந்துகொண்டு கேள்வி கேட்கின்றனர்: சிவபாபா வந்து எங்களுக்குக் கற்பிப்பது எவ்வாறு சாத்தியம்? நான் இதை நம்பமாட்டேன். இது அவர்களது சொந்தத் திறமையாகும். அவர்கள் வெறுமனே இவ்வாறு பேசுகின்றார்கள். எவ்வாறாயினும் இராச்சியம் ஸ்தாபிக்கப்படும். சத்தியப் படகு தள்ளாடும், ஆனால் அது என்றுமே மூழ்காது என கூறப்படுகிறது. பல தடைகள் இருக்கின்றன. அச்சா.

கண்களின் ஒளியாக உள்ள, இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டெடுக்;கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கும், அவலட்சணமானவர்களிலிருந்து அழகானவர்கள் ஆகுகின்ற ஆத்மாக்களுக்கும், தந்தை தாயாக இருக்கும் பாப்தாதாவின் இதய ஆழத்திலிருந்து அன்பும், நினைவும், காலை வந்தனமும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. யோக அக்கினியால் விகாரங்கள் என்ற துருவை அகற்றுங்கள். உங்கள் புத்தி குற்றமுள்ளதாக ஆகுகின்றதா, இல்லையா என உங்களையே சோதித்துப் பாருங்கள்.

2. நம்பிக்கையுள்ள புத்தியை வளர்ப்பதால், எதைப் பற்றியும் சந்தேகம் கொள்ளாதீர்கள். பாவச்செயல்கள் செய்வதிலிருந்து உங்களைப் பாதுகாப்பதற்கு, முதலில் உங்களை ஆதிதர்மத்தில் நிலைநிறுத்தி, எப்பொழுதும் தந்தையின் நினைவிலிருந்தவாறு ஒவ்வொரு செயலையும் செய்யுங்கள்.

ஆசீர்வாதம்:
நீங்கள் சகல பேறுகளையும் அனுபவம் செய்வதால், சதா ஒரு வெற்றி சொரூபமாகவும், சக்தி நிறைந்தவர்களாகவும் ஆகுவீர்களாக.

சகல பேறுகளினதும் சொரூபங்களே சக்திநிறைந்தவர்கள். சகல பேறுகளையும் அனுபவம் செய்கின்ற, அத்தகைய சக்திநிறைந்த ஆத்மாக்களால் மாத்திரமே வெற்றி சொரூபங்களாக முடியும். மாஸ்டர் சந்தோஷத்தையும், அமைதியையும் அருள்பவர்கள் எங்கே என ஆத்மாக்கள் அனைவரும் இப்பொழுது அதிசயிக்கின்றார்கள். உங்களிடம் சகல சக்திகளும் எனும் கையிருப்பு இருக்கும்பொழுது, உங்களால் அனைவரையும் திருப்தியானவர்களாக்க முடியும். இந்நாட்களில் உங்களால் ஒரு களஞ்சியத்திலிருந்தே அனைத்தையும் பெற இயலுகின்றது, எனவே நீங்களும் அவ்வாறு ஆகவேண்டும். சிலருக்குச் சகிப்புச்சக்தி உள்ளது, ஆனால் முகங்கொடுக்கும் சக்தி இல்லை என்றில்லாதிருக்கட்டும். நீங்கள் சகல சக்திகளும் எனும் கையிருப்பைக் கொண்டிருப்பது அவசியம், அப்பொழுது மாத்திரமே நீங்கள் ஒரு வெற்றி சொரூபமாக ஆகஇயலும்.

சுலோகம்:
மரியாதைக் கோட்பாடுகளே பிராமண வாழ்வின் படிகளாகும், உங்கள் பாதச் சுவடுகளைத் தந்தையின் பாதச் சுவடுகளில் இடுவது எனில், உங்கள் இலக்கிற்கு அண்மையில் வருவது என அர்த்தமாகும்.


மாதேஷ்வரிஜியின் பெறுமதிமிக்க, அதிமேன்மையான வாசகங்கள்

முயற்சியினாலும் வெகுமதியினாலுமே அநாதியான நாடகம் உருவாக்கப்பட்டுள்ளது.

மாதேஷ்வரி: முயற்சியும், வெகுமதியும் இரு விடயங்களாகும். செய்யப்பட்ட முயற்சியாலேயே வெகுமதி உருவாக்கப்பட்டுள்ளது. இந்த அநாதியான சக்கரம் தொடர்ந்தும் சுழல்கின்றது. ஆதியும் அநாதியுமான பாரதவாசிகள் பூஜிக்கத் தகுதிவாய்ந்தவர்களாக இருந்து, பின்னர் பூஜிப்பவர்கள் ஆகினார்கள். பின்னர் அதே பூஜிப்பவர்கள் முயற்சி செய்து பூஜிக்கத் தகுதிவாய்ந்தவர்கள் ஆகுவார்கள். எழுச்சியையும், வீழ்ச்சியையும் பற்றிய அநாதியான நாடகம் எனும் விளையாட்டு நிச்சயிக்கப்பட்டுள்ளது.

கேட்பவர்: மாதேஷ்வரிஜி, என்னிடம் இந்தக் கேள்வியும் உள்ளது. இந்த நாடகம் இவ்விதமாக நிச்சயிக்கப்பட்டுள்ளதால், அப்பொழுது நான் எழுச்சியடைவதாக இருந்தால், அது இயல்பாகவே இடம்பெறும். ஆகவே முயற்சி செய்வதன் நன்மை என்ன? எழுச்சியடைபவர்கள் பின்னர் வீழ்வார்கள், எனவே அப்பொழுது நாங்கள் ஏன் அதிகளவு முயற்சி செய்ய வேண்டும்? மாதேஷ்வரிஜி, நாடகம் அதேபோன்று மீண்டும் மீண்டும் இடம்பெறுகின்றது என்று நீங்கள் கூறுகின்றீர்கள், ஆகவே, சர்வசக்திவான் தந்தை அத்தகைய நாடகத்தை அவதானிப்பதால் களைப்படைய மாட்டாரா? குளிர்காலம், வசந்த காலம், கோடைகாலம், இலையுதிர்காலம் ஆகிய நான்கு பருவ காலங்களிலும் ஒரு வேறுபாடு இருப்பதைப் போன்று, இந்த நாடகத்திலும் ஏதாவது வேறுபாடு உள்ளதா?

மாதேஷ்வரி: இது இந்த நாடகத்தின் தனித்துவம்; அது அதேபோன்று மீண்டும் மீண்டும் இடம்பெறுகின்றது. இது மீண்டும் மீண்டும் இடம்பெற்றாலும், இந்த நாடகத்தின் இன்னுமொரு சிறப்பியல்பானது அது ஒவ்வொரு நாளும் புதிதாக உணரப்படுவதாகும். முதலில் எங்களுக்கு இக் கற்பித்தல்கள் கொடுக்கப்படவில்லை, ஆனால் நாங்கள் இந்த ஞானத்தைப் பெற்றபொழுது, விநாடிக்கு விநாடி கடந்து செல்கின்ற ஒரு விநாடியும் மிகச்சரியாக முன்னைய கல்பத்தில் இருந்ததைப் போல் இருக்கின்றது என அறிந்தோம், ஆனால் நாங்கள் அதனை ஒரு பற்றற்ற பார்வையாளராக அவதானிக்கும் பொழுது, ஒவ்வொரு நாளும் அதைப் புதிதாக உணர்கின்றோம். சந்தோஷம், துன்பம் இரண்டையும் பற்றிய புரிந்துணர்வை நாங்கள் இப்பொழுது பெற்றுள்ளோம். எனவே பின்னர் நாங்கள் தோல்வியடையப் போகின்றோம், எனவே ஏன் கற்க வேண்டும் என்று எண்ணக்கூடாது. இல்லை. அச்சந்தர்ப்பத்தில், நீங்கள் உணவைப் பெறுவதாக இருந்தால், இயல்பாகவே அதைப் பெறவுள்ளதால், அப்பொழுது நீங்கள் சிலவற்றைச் சம்பாதிப்பதற்கு ஏன் அதிகளவு முயற்சி செய்கின்றீர்கள் எனவும் சிந்திக்க வேண்டும். உண்மையில், இப்பொழுது மேலேறுவதற்கான காலம் வந்துள்ளதையும், அதே தேவதர்மம் ஸ்தாபிக்கப்படுவதையும் நான் காண்பதால், நாங்கள் ஏன் அந்தச் சந்தோஷத்தை இப்பொழுது பெறக்கூடாது? உதாரணமாக, ஒருவர் நீதிபதியாக விரும்பினால், அப்பொழுது அவர் சில முயற்சிகளைச் செய்வதால் மாத்திரமே ஒரு பட்டத்தைப் பெறுவார். அவர் தோல்வியடைந்தால், அனைத்து முயற்சிகளும் வீணாகி விடும். எவ்வாறாயினும், இந்த அழிவற்ற ஞானம் அவ்வாறானதல்ல. இந்த அழிவற்ற ஞானம் சிறிதளவு கூட அழிக்கப்படுவதில்லை. நீங்கள் தேவ தர்மத்திற்குள் வருவதற்கான போதுமான முயற்சியைச் செய்யாது விட்டாலும், நீங்கள் குறைவான முயற்சியையே செய்திருந்தாலும், உங்களால் சத்தியயுகத்தின் பிரஜைகளில் ஒருவராக முடியும். எவ்வாறாயினும், முயற்சி செய்வது அவசியமாகும், ஏனெனில் முயற்சி செய்வதால் மாத்திரமே வெகுமதி உருவாக்கப்படுவதால், மகத்துவம் முயற்சிக்கே உரியதாகும். அச்சா.

இந்த இறை ஞானம் மனித ஆத்மாக்கள் அனைவருக்கும் உரியது.

அனைத்துக்கும் முதலில் நாங்கள் ஒரு பிரதான கருத்தை எங்கள் விழிப்புணர்வில் வைத்திருக்க வேண்டும். கடவுளே இந்த மனித உலக விருட்சத்தின் விதையாக இருப்பதால், கடவுளிடமிருந்து நாங்கள் பெறுகின்ற ஞானம் மனிதர்கள் அனைவருக்கும் முக்கியமானதாகும். சகல சமயத்தவர்களுக்கும் இந்த ஞானத்திற்கான ஓர் உரிமை உள்ளது. ஒவ்வொரு சமயத்தினதும் ஞானம் அதற்கே உரியது, அவற்றின் சமயநூல்கள் அவற்றிற்கே உரியவை, அவர்களின் அபிப்பிராயங்கள் அவர்களுக்கே உரியவை, அவர்களின் சம்ஸ்காரங்கள் அவர்களுக்கே உரியவையாக இருந்தாலும், இந்த ஞானம் அனைவருக்கும் உரியது. அவர்களால் இந்த ஞானத்தைப் பெற்று, எங்கள் வம்சத்தினுள் வர முடியாது விட்டாலும், அந்த ஒரேயொருவர் அனைவரினதும் தந்தையாக இருப்பதால், அந்த ஒரேயொருவருடன் யோகத்தைக் கொண்டிருப்பதால், அவர்கள் அனைவரும் நிச்சயமாகத் தூய்மையாகுவார்கள். அத்துடன் இந்தத் தூய்மை காரணமாக, அவர்கள் அனைவரும் தங்கள் சொந்தப் பிரிவில் ஓர் அந்தஸ்தை நிச்சயமாகக் கோருவார்கள், ஏனெனில் மனிதர்கள் அனைவரும் யோகத்தில் நம்பிக்கை கொண்டுள்ளார்கள். தங்களுக்கு அநாதியான முக்தி வேண்டும் என மக்கள் கூறுகின்றனர். எவ்வாறாயினும், இந்த யோகத்தைக் கொண்டிருப்பதால் மாத்திரமே தண்டனையிலிருந்து விடுபட்டிருப்பதற்கான சக்தியைப் பெற முடியும். அச்சா.