01.11.20    Avyakt Bapdada     Tamil Lanka Murli    11.04.86     Om Shanti     Madhuban


உங்களின் மேன்மையான பாக்கியத்திற்கான சித்திரத்தை உருவாக்கும் வழிமுறை.


இன்று, பாக்கியத்தை உருவாக்குபவரான பாப்தாதா, குழந்தைகள் அனைவரினதும் மேன்மையான பாக்கியத்தின் சித்திரங்களைப் பார்க்கிறார். நீங்கள் அனைவரும் பாக்கியசாலிகள் ஆகியுள்ளீர்கள். ஆனால், ஒவ்வொருவரின் பாக்கியத்தின் சித்திரத்தின் பிரகாசம் தனித்துவமானது. ஓவியர்கள் சித்திரங்களை வரையும்போது, சில சித்திரங்கள் ஆயிரக்கணக்கான ரூபாய்கள் பெறுமதியானவை. ஏனையவை சாதாரணமானவையாக இருக்கும். இங்கு, பாப்தாதாவிடமிருந்து நீங்கள் பெற்ற பாக்கியத்தை வெளிப்படுத்துதல் என்றால், உங்களின் நடைமுறை வாழ்க்கையில் அதைக் கொண்டு வருதல் என்று அர்த்தம். இதிலேயே வேறுபாடு ஏற்படுகிறது. பாக்கியத்தை உருவாக்குபவர் ஒரே வேளையில் ஒரே பாக்கியத்தை அனைவருக்கும் பகிர்ந்தளித்துள்ளார். ஆனால், தமது பாக்கியத்தின் சித்திரங்களை வரைந்த ஆத்மாக்கள் வெவ்வேறானவர்கள் என்பதனால், அவர்கள் உருவாக்கும் சித்திரங்களும் வரிசைக்கிரமமாக உள்ளன. சித்திரத்தின் சிறப்பியல்பு கண்களிலும் புன்னகையிலும் வெளிப்படுத்தப்படுகிறது. சித்திரத்தின் மதிப்பு இந்த இரண்டு சிறப்பியல்புகளிலேயே தங்கியுள்ளது. அதேபோன்று, இங்கேயும், பாக்கியத்தின் சித்திரத்திற்கும் இந்த இரண்டு சிறப்பியல்புகளும் உள்ளன. கண்கள் என்றால், உலக நன்மைக்கும் கருணைக்குமான பார்வையும், தீங்கு இழைத்தவர்களுக்கும் நன்மை செய்வதும் ஆகும். உங்களின் கண்களில் இந்தச் சிறப்பியல்புகள் இருந்தால், உங்களின் பாக்கியச் சித்திரம் மேன்மையானதாக இருக்கும். பிரதானமான விடயங்கள், உங்களின் முகத்தின் சாயல், புன்னகை, பிரகாசம் என்பவையே ஆகும். இதுவே சதா திருப்தியாக இருப்பதன், திருப்தியாகவும் சந்தோஷமாகவும் இருப்பதன் பிரகாசம் ஆகும். இந்தச் சிறப்பியல்புகளாலேயே உங்களின் முகத்தில் சதா ஆன்மீகப் பிரகாசம் தென்படுகிறது. இது ஆன்மீகப் புன்னகையாக அனுபவம் செய்யப்படுகிறது. இந்த இரண்டு சிறப்பியல்புகளுமே ஓவியத்தின் மதிப்பை அதிகரிக்கின்றன. எனவே, இதையே பாபா இன்று பார்த்தார். நீங்கள் அனைவரும் உங்களின் பாக்கியத்தின் ஓவியங்களை உருவாக்கியுள்ளீர்கள். உங்களின் ஓவியத்தை வரைவதற்கான பேனையை உங்கள் ஒவ்வொருவருக்கும் தந்தை வழங்கியுள்ளார். மேன்மையான உணர்வும் மேன்மையான செயல்களின் ஞானமுமே அந்தப் பேனா ஆகும். மேன்மையான செயல்களும் மேன்மையான எண்ணங்களும் என்றால் மேன்மையான உணர்வு என்று அர்த்தம். இந்த ஞானம் என்ற பேனாவால் ஆத்மாக்களான நீங்கள் ஒவ்வொருவரும் உங்களின் பாக்கியத்தின் ஓவியத்தை உருவாக்குகிறீர்கள். நீங்கள் ஏற்கனவே அதை வரைந்துவிட்டீர்கள். ஓவியம் ஏற்கனவே வரையப்பட்டுவிட்டது. கண்களும் முகச்சாயல்களும் ஏற்கனவே வரையப்பட்டு விட்டன. இப்போது, சம்பூரணம் ஆகுகின்ற, தந்தைக்குச் சமமானவர் ஆகுகின்ற இறுதி வரைதல்கள் சேர்க்கப்பட வேண்டும். இரட்டை வெளிநாட்டவர்கள் அதிகளவில் வரைவதை விரும்புவார்கள். எனவே, இன்று, பாப்தாதா அனைவரின் சித்திரங்களையும் பார்த்தார். உங்கள் ஒவ்வொருவராலும் உங்களின் சொந்த ஓவியத்தைப் பார்க்க முடிகிறதல்லவா? அது எவ்வளவு பெறுமதி வாய்ந்தது என்பதைக் காண முடிகிறதல்லவா? எப்போதும் உங்களின் இந்த ஆன்மீக ஓவியத்தைப் பார்த்து, தொடர்ந்து அதை முழுமையாக்குங்கள். உலகிலுள்ள ஆத்மாக்கள் அனைவரிலும், நீங்களே பலமில்லியன்களில் வெகுசிலரும், அந்த வெகு சில பாக்கியசாலிகளிலும் கையளவினரும் ஆவீர்கள். எவ்வாறாயினும், ஒன்று மேன்மையாக இருத்தல். மற்றையது, அனைவரிலும் அதிமேன்மையானவராக இருத்தல். எனவே, நீங்கள் மேன்மையானவர் ஆகியுள்ளீர்களா அல்லது அனைவரிலும் அதிமேன்மையானவர் ஆகியுள்ளீர்களா? இதைச் சோதித்துப் பாருங்கள். அச்சா.

இன்று, இரட்டை வெளிநாட்டவர்களான நீங்கள் பந்தயத்தில் ஓடுவீர்கள், இல்லையா? நீங்கள் முன்னணியில் ஓரிலக்கத்தைப் பெறப் போகிறீர்களா அல்லது முன்னால் இருப்பவர்களைப் பார்த்து சந்தோஷப்படப் போகிறீர்களா? மற்றவர்களைப் பார்த்து சந்தோஷப்படுவதும் அத்தியாவசியமானதே. ஆனால், நீங்கள் பின்னால் இருந்தவண்ணம் மற்றவர்களைப் பார்க்காதீர்கள். அவர்களுக்குப் பக்கத்தில் இருந்தவண்ணம், மற்றவர்களைப் பார்த்து சந்தோஷப்பட்டவாறே தொடர்ந்து முன்னேறுங்கள். நீங்களும் முன்னேறுங்கள். அத்துடன் பின்னால் இருப்பவர்களையும் முன்னேறச் செய்யுங்கள். இது மற்றவர்களை ஈடேற்றுதல் எனப்படுகிறது. எப்போதும் எந்தவிதமான சுயநலமான நோக்கங்களில் இருந்தும் விடுபட்டிருப்பதே, மற்றவர்களை ஈடேற்றுபவர்களின் சிறப்பியல்பு ஆகும். ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும், ஒவ்வொரு பணியிலும், ஒவ்வொரு ஒத்துழைக்கும் ஒன்றுகூடலிலும் எந்தளவிற்கு அதிகமாக சுயநலமற்ற தன்மை இருக்கிறதோ, அந்தளவிற்கு உங்களால் மற்றவர்களை ஈடேற்ற முடியும். நீங்கள் உங்களை சதா நிறைந்திருப்பதாக அனுபவம் செய்வீர்கள். உங்களிடம் எப்போதும் பேறுகளின் சொரூபங்களாக இருக்கும் ஸ்திதி இருக்கும். அப்போது மட்டுமே உங்களால் மற்றவர்களை ஈடேற்றும், அந்த அனுபவத்தை மற்றவர்களைப் பெறச் செய்யும் இறுதி ஸ்திதியை அனுபவம் செய்ய முடியும். நீங்கள் தந்தை பிரம்மாவைக் கண்டீர்கள்: அவரிடம் இறுதி ஸ்திதியில் புலப்பட்ட சிறப்பியல்புகள், அப்பாற்பட்டிருப்பதும் மற்றவர்களை ஈடேற்றுவதும் ஆகும். அவர் தனக்காக எதையும் ஏற்றுக்கொள்ளவில்லை. அவர் தனக்காக எந்தவொரு புகழையும் ஏற்றுக் கொள்ளவில்லை. எந்தவிதமான பொருட்களையும் ஏற்றுக் கொள்ளவில்லை. தான் தங்குவதற்காக ஓரிடத்தைக் கூட அவர் ஏற்றுக் கொள்ளவில்லை. பௌதீகமான, சூட்சுமமான விடயங்களைப் பொறுத்தவரை, அவர் எப்போதும் தனக்கு முன்னால் குழந்தைகளையே வைத்தார். இது மற்றவர்களை ஈடேற்றுதல் எனப்படுகிறது. இதுவே சம்பூரணம் மற்றும் முழுமையின் அடையாளம் ஆகும். உங்களுக்குப் புரிகிறதா?

நீங்கள் பல முரளிகளைக் கேட்டுள்ளீர்கள். இப்போது, முரளிதாரர்களாகி, சதா நடனம் ஆடுவதுடன் மற்றவர்களையும் நடனம் ஆடச் செய்யுங்கள். ஒரு புல்லாங்குழலால், அவர்களால் ஒரு பாம்பின் நஞ்சை அகற்ற முடிந்தது. எனவே, ஒருவரின் சுபாவமும் சம்ஸ்காரங்களும் எத்தனை கசப்பானதாக அல்லது கடுமையானதாக இருந்தாலும் உங்களால் அதைக் கட்டுப்படுத்தக்கூடிய முறையில் ஒரு முரளிதார் ஆகுங்கள். அதாவது, உங்களால் அவரை விடுவித்து, அந்த ஆத்மாவை நடனமாடவும் மலர்ச்சிநிறைந்தவர் ஆகவும் ஆக்கக்கூடியதாக இருக்க வேண்டும். இப்போது, இத்தகைய தகுதிவாய்ந்த முரளிதாராக யார் ஆகுகிறார் எனப் பெறுபேறுகளை நாம் பார்ப்போம். உங்களுக்கு முரளியிலும் முரளிதாரிலும் அன்பு உள்ளது. ஆனால் அந்த அன்பின் அத்தாட்சி, முரளிதார் பாபா குழந்தைகளான உங்களில் வைத்திருக்கும் தூய விருப்பத்தை நடைமுறையில் நிறைவேற்றுவதே ஆகும். உங்களுக்கு என்ன சொல்லப்பட்டுள்ளதோ, அதை நடைமுறையில் செய்து காட்டுவதே, அன்பின் அடையாளம் ஆகும். நீங்கள் இத்தகைய மாஸ்ரர் முரளிதார்கள், இல்லையா? நீங்கள் அவ்வாறு ஆகவேண்டும். நீங்கள் இப்போது அவ்வாறு ஆகாவிட்டால், எப்போது அவ்வாறு ஆகப் போகிறீர்கள்? ஏதாவதொரு வேளையில் நீங்கள் அவ்வாறு ஆகுவீர்கள் என நினைக்காதீர்கள். நீங்கள் அதைச் செய்யவே வேண்டும். நான் அதைச் செய்யாவிட்டால், வேறு யார் செய்வார்? என நீங்கள் ஒவ்வொருவரும் நினைக்க வேண்டும். நான் நிச்சயமாக இதைச் செய்ய வேண்டும். நான் இவ்வாறு ஆகவேண்டும். நான் ஒவ்வொரு கல்பத்திற்குமான இந்தப் பேரத்தை வெல்ல வேண்டும். இது முழுக்கல்பத்திற்குமான விடயம் ஆகும். எனவே, முதல் பிரிவிற்குள் செல்வதற்கான திடசங்கற்பத்தைக் கிரகியுங்கள். நீங்கள் ஏதாவது புதிய விடயத்தைப் பற்றிப் பேசுகிறீர்களா? நீங்கள் பல தடவைகள் வரைந்த கோட்டின் மேல் மீண்டும் கோட்டை வரைகிறீர்கள். நாடகத்தின் கோடு ஏற்கனவே வரையப்பட்டுவிட்டது. அது நேர்கோடாக இருக்குமா இல்லையா என நீங்கள் நினைக்க வேண்டிய வகையில் நீங்கள் புதிதாக ஒரு கோட்டை வரைவதில்லை. நீங்கள் ஏற்கனவே உருவாக்கப்பட்ட ஒவ்வொரு கல்பத்தின் வெகுமதியையும் மீண்டும் உருவாக்குகிறீர்கள். ஏனெனில், இது செயல்களின் பலனின் கணக்கு ஆகும். எனவே, இதில் புதியதாக என்னவுள்ளது? இது பழையதொரு விடயம். இது ஏற்கனவே நிறைவேறிவிட்டது. இது அசைக்க முடியாத நம்பிக்கை ஆகும். இது திடசங்கற்பம் எனப்படுகிறது. இது தபஸ்யா ரூபமாக இருத்தல் என்று அழைக்கப்படுகிறது. ஒவ்வோர் எண்ணத்திலும் திடசங்கற்பத்தைக் கொண்டிருத்தல் என்றால் தபஸ்யா என்று அர்த்தம். அச்சா.

பாப்தாதா அதியுயர்ந்த விருந்தளிப்பவரும் (ர்iபாநளவ ர்ழளவ) பொன்னான விருந்தினரும் (புழடனநn புரநளவ) ஆவார். அவர் உங்களை ஒரு விருந்தளிப்பவராகவும் அதேவேளை விருந்தாளியாகவும் சந்திக்கிறார். எவ்வாறாயினும், அவரே பொன்னான விருந்தினர் ஆவார். அவர் ஜொலிக்கிறார், இல்லையா? நீங்கள் பல விருந்தினர்களைச் சந்தித்திருப்பீர்கள். ஆனால், நீங்கள் ஒருபோதும் பொன்னான விருந்தினரைக் கண்டிருக்க மாட்டீர்கள். நீங்கள் நன்றிகள் சொல்வதற்காக ஒரு பிரதம விருந்தினரை அழைப்பீர்கள். எனவே, தந்தை பிரம்மா விருந்தளிப்பவராகி சமிக்கைகளைக் கொடுத்தார். அத்துடன் ஒரு விருந்தாளியாகி, அனைவருக்கும் பாராட்டுக்களைத் தெரிவிக்கிறார். அவர் ஒரு பொன்னான விருந்தினராக, பருவகாலம் முழுவதும் சேவை செய்தவர்களைப் பாராட்டுகிறார். அனைத்திற்கும் முதலில் யாருக்குப் பாராட்டுக்கள் தெரிவிக்கப்பட வேண்டும்? கருவி தாதிகளுக்கு. தடைகளில் இருந்து விடுபட்ட சேவையின் நிறைவிற்காக பாப்தாதா வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறார். மதுவனவாசிகளுக்கும் தடைகளில் இருந்து விடுபட்டவர் ஆகுவதற்கு, மலர்ச்சிநிறைந்தவராக இருப்பதற்கு, விருந்தாளிகள் அனைவருக்கும் விருந்துபசாரம் செய்வதற்காக பாபா விசேடமான வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறார். கடவுளே விருந்தாளியாக வந்துள்ளார். குழந்தைகளும் விருந்தாளிகளாக வந்துள்ளார்கள். கடவுள் விருந்தாளியாக வந்திருக்கும் வீடாக இருப்பவர் மிகவும் பாக்கியசாலி ஆவார். இரதத்திற்கும் வாழ்த்துக்கள். ஏனென்றால் இந்தப் பாகத்தை நடிப்பது சிறியதொரு விடயம் அல்ல. நீண்ட காலத்திற்குத் தனக்குள் இந்த சக்தியை ஏற்றுக் கொள்வதும் தாதியின் விசேடமான பாகமே. எவ்வாறாயினும், நீங்கள் அனைவரும் இந்த ஏற்றுக் கொள்ளும் சக்தியின் பலனைப் பெற்றுக் கொள்கிறீர்கள். ஏற்றுக் கொள்ளும் சக்தி என்ற சிறப்பியல்புடன் பாப்தாதாவின் சக்தியை ஏற்றுக் கொள்வதும் விசேடமானதொரு பாகம் அல்லது நற்குணம் ஆகும். எனவே, சகல சேவையாளர்களிடையே, இவரும் சேவையின் தனது பாகத்தை நடிப்பதில் தடைகளில் இருந்து விடுபட்டிருந்தார். அதற்காகப் பாராட்டுக்கள். அத்துடன் பலமில்லியன் மடங்கு நன்றிகள். இரட்டை வெளிநாட்டவர்களுக்கு இரட்டை நன்றிகள். ஏனென்றால், நீங்கள் மதுவனத்தை மிகவும் அழகானதாக ஆக்கியுள்ளீர்கள். பிராமணக் குடும்பத்தின் அலங்காரமாக இருப்பதற்கு வாழ்த்துக்கள். மதுவனத்தினதும் குடும்பத்தினதும் அலங்காரமாக இருப்பதற்கு வாழ்த்துக்கள். நீங்கள் மதுவனக் குடும்பத்தின் விசேடமான பரிசு ஆவீர்கள். இதனாலேயே இரட்டை வெளிநாட்டவர்களுக்கு இரட்டை வாழ்த்துக்கள் வழங்கப்பட்டுள்ளன. நீங்கள் எங்கிருந்தாலும், பாபாவின் முன்னால் வெகு சிலர் மட்டுமே இருக்கிறார்கள். பாபா பாரதத்திலும் வெளிநாடுகளிலும் எங்கும் உள்ள குழந்தைகள் அனைவருக்கும் பெரிய இதயத்துடன் வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறார். நீங்கள் ஒவ்வொருவரும் மிக நல்ல பாகத்தை நடித்துள்ளீர்கள். இப்போது ஒரு விடயமே எஞ்சியிருக்கிறது. அதாவது, சமமானவராகவும் முழுமையானவராகவும் ஆக வேண்டும். தாதிகளும் மிக நல்ல முயற்சியைச் செய்துள்ளார்கள். அவர்கள் பௌதீக ரூபத்தில் பாபா, தாதா என்ற இரண்டு பாகங்களையும் நடிக்கிறார்கள். இதனாலேயே, பாப்தாதா தனது இதயபூர்வமாக அன்பையும் வாழ்த்துக்களையும் தெரிவிக்கிறார். நீங்கள் அனைவரும் மிக நல்ல பாகத்தை நடித்தீர்கள். அனைவரும் சகலகலாவல்ல சேவையாளர்கள். இது சிறியதொரு சேவையாக இருந்தாலும், அந்தச் சேவை மகத்துவமானதே. நீங்கள் ஒவ்வொருவரும் உங்களுக்காகவும் சேமித்துள்ளீர்கள். அத்துடன் புண்ணியமும் செய்தீர்கள். இந்தத் தேசத்திலும் வெளிநாடுகளிலும் உள்ள குழந்தைகளின் இங்கு வருகின்ற சிறப்பியல்பும் வாழ்த்துக்களுக்குத் தகுதிவாய்ந்தது. மகாராத்திகள் அனைவரும் ஒன்றுசேர்ந்து சேவையின் மேன்மையான எண்ணத்தை நடைமுறை ரூபத்தில் ஏற்படுத்தியுள்ளார்கள். தொடர்ந்தும் அவ்வாறு செய்வார்கள். சேவைக்குக் கருவிகள் ஆகியிருப்பவர்களுக்கு எந்தவிதமான கஷ்டமும் கொடுக்கக்கூடாது. உங்களின் சொந்தக் கவனக்குறைவால் நீங்கள் எவரையும் கடினமாக உழைக்கச் செய்யக்கூடாது. உங்களின் சொந்த விடயங்களைப் பாதுகாத்துக் கொள்வதும் ஞானத்தின் விடயமே ஆகும். தந்தை பிரம்மா என்ன கூறினார் என்பது உங்களுக்கு நினைவிருக்கிறதா? நீங்கள் உங்களின் கைக்குட்டையைத் தொலைத்தால், ஒரு நாள் உங்களையும் நீங்கள் தொலைத்துவிடுவீர்கள். ஒவ்வோர் எண்ணத்திலும் மேன்மையாகவும் வெற்றிநிறைந்தவராகவும் இருத்தல் என்றால் ஞானம் நிறைந்தவராக இருப்பதாகும். உங்களுக்கு சரீரத்தின் ஞானம் இருக்கிறது. ஆத்மாவின் ஞானமும் உள்ளது. இரண்டு வகையான ஞானமும் ஒவ்வொரு செயலிலும் தேவைப்படுகிறது. சரீர நோயின் அறிவும் தேவைப்படுகிறது. எந்த வழிமுறையால் உங்களின் சரீரம் நன்றாக இயங்க முடியும் என்பதை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும். ஆத்மா சக்திவாய்ந்தது, எனவே சரீரத்தைப் பற்றிக் கவலைப்பட வேண்டியதில்லை என நினைக்காதீர்கள். உங்களின் சரீரத்தில் நோய் ஏற்பட்டால், உங்களால் யோகம் செய்ய முடியாது. அப்போது உங்களின் சரீரம் அதை நோக்கி உங்களை இழுக்கும். இதனாலேயே, இந்த ஞானமும் ஞானம் நிறைந்தவராக இருப்பதில் உள்ளடங்குகிறது. அச்சா.

பாப்தாதாவின் முன்னால் சில குமாரிகளின் அர்ப்பணிப்பு விழா நடைபெற்றது

குறிப்பாக அலங்கரிக்கப்பட்டுள்ள விசேடமான ஆத்மாக்கள் அனைவரையும் பாப்தாதா பார்க்கிறார். தெய்வீகக் குணங்களின் அலங்காரம் அனைவரையும் மிக நன்றாகவும் அழகாகவும் ஆக்குகிறது. ஒளிக்கிரீடங்கள் மிக அழகாக ஜொலிக்கின்றன. அழியாத அலங்காரத்தால் அலங்கரிக்கப்பட்ட முகங்களை பாப்தாதா பார்க்கிறார். ஊக்கமும் உற்சாகமும் நிறைந்த குழந்தைகளின் இந்த எண்ணத்தைப் பார்த்து பாப்தாதா களிப்படைகிறார். பாப்தாதா உங்கள் அனைவரையும் எல்லா வேளைக்குமாகத் தேர்ந்தெடுக்கிறார். நீங்களும் மிக உறுதியாக பாபாவைத் தேர்ந்தெடுத்துள்ளீர்கள், இல்லையா? திடசங்கற்பமான எண்ணத்தின் கங்கணம் இப்போது நிச்சயிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொருவரினதும் இதயபூர்வமான எண்ணமும் பாப்தாதாவை அனைத்திலும் மிக விரைவாக வந்தடைகிறது. இப்போது, இந்த மேன்மையான பந்தனம் உங்களின் எண்ணங்களிலேனும் தளர்வடையக்கூடாது. நீங்கள் மிக உறுதியாக உங்களைக் கட்டியுள்ளீர்கள், இல்லையா? எத்தனை பிறவிகளுக்கு நீங்கள் ஒரு சத்தியத்தைச் செய்துள்ளீர்கள்? இது தந்தை பிரம்மாவுடன் உறவுமுறையில் எப்போதும் இருத்தல் என்ற உறுதியான சத்தியம் ஆகும். அத்துடன் நீங்கள் அவருடன் 21 பிறவிகளுக்கு வெவ்வேறு பெயர்கள், ரூபங்கள், உறவுமுறைகளில் இருப்பீர்கள் என்ற உத்தரவாதமும் உள்ளது. எனவே, உங்களுக்கு அதிகளவு சந்தோஷம் உள்ளது. உங்களால் அதைக் கணக்கிட முடிகிறதா? இதைக் கணக்கிடக்கூடியவர்கள் எவரும் இன்னமும் வரவில்லை. இப்போதுபோல் எப்போதும் அலங்கரிக்கப்பட்டவராக இருங்கள். எப்போதும் கிரீடத்தை அணிந்திருங்கள். எப்போதும் சந்தோஷத்தில் பாடி, சிரித்து ஆன்மீகக் களிப்புடன் இருங்கள். உங்கள் அனைவருக்கும் பாபாவின் பாதச்சுவடுகளில் உங்களின் பாதங்களை வைப்பீர்கள் என்ற திடசங்கற்பமான எண்ணம் இன்று ஏற்பட்டதல்லவா? அங்கு, ஒரு மணமகள் பௌதீகமாகத் தனது பாதங்களை மணமகனின் பாதச் சுவடுகளில் வைப்பாள். ஆனால் நீங்கள் அனைவரும் உங்களின் எண்ணம் என்ற பாதங்களைத் தந்தையின் எண்ணம் என்ற பாதச்சுவடுகளில் வைக்கிறீர்கள். தந்தையின் எண்ணம் என்னவோ, அது குழந்தைகளின் எண்ணமாக உள்ளது. இத்தகைய எண்ணம் உங்களுக்கு ஏற்படுகிறதா? எந்தவோர் அடியும் பொருத்தமில்லாமல் இருக்கக்கூடாது. தந்தையின் பாதச்சுவடுகளை விட வேறு எங்கும் வைக்கப்படக்கூடாது. ஒவ்வோர் எண்ணமும் சக்திநிறைந்ததாக இருக்க வேண்டும். அதாவது, தந்தை செய்ததைப் போல், உங்களின் பாதங்களை தந்தையின் பாதச்சுவடுகளில் வையுங்கள். அச்சா.

வெளிநாட்டு சகோதர, சகோதரிகளுக்கு:

நீங்கள் விமானங்களில் பறந்து இங்கே வந்திருப்பதைப் போல், புத்தியின் விமானமும் எப்போதும் மிக விரைவாகப் பறக்க வேண்டும். இல்லாவிட்டால், உங்களால் சூழ்நிலைகளுக்கேற்ப அந்த விமானத்தைப் பிடிக்க முடியாதிருக்கும். எவ்வாறாயினும், எப்போதும் புத்தியெனும் விமானம் உங்களுடன் இருந்தால், அது எப்போதும் சக்திவாய்ந்தாக இருந்தால், உங்களால் நீங்கள் விரும்பிய இடத்திற்கு ஒரு விநாடிக்குள் செல்ல முடியும். எனவே, நீங்கள் இந்த விமானத்தின் மாஸ்ரர்கள், அல்லவா? இந்தப் புத்தியெனும் விமானம் எப்போதும் என்றும் தயாராக இருக்க வேண்டும். அதாவது, புத்தியின் இணைப்பு தெளிவாக இருக்க வேண்டும். புத்தி எப்போதும் சக்திவாய்ந்த முறையில் தந்தையுடன் இருக்க வேண்டும். அப்போது மட்டுமே நீங்கள் விரும்பிய இடத்திற்கு ஒரு விநாடியில் உங்களால் செல்ல முடியும். புத்தியெனும் விமானம் உயரே இருப்பவர்களுக்கு, பௌதீகமான விமானமும் நன்றாகப் பறக்கும். புத்தியெனும் விமானம் நல்ல நிலையில் இல்லாவிட்டால், அந்த விமானமும் பறக்காது. அச்சா.

பாப்தாதா குழுக்களைச் சந்திக்கிறார்:

1. நீங்கள் எப்போதும் உங்களை மேன்மையான இராஜயோகி ஆத்மாக்களாக அனுபவம் செய்கிறீர்களா? இராஜயோகி என்றால் உங்களின் பௌதீக அங்கங்கள் அனைத்திற்கும் இராஜாவாக (ஆளுபவர்) இருப்பவர் என்று அர்த்தம். பௌதீக அங்கங்களைக் கட்டுப்படுத்தும் அரசர் ஆகுங்கள். உங்களின் பௌதீக அங்கங்களால் கட்டுப்படுபவர் ஆகாதீர்கள். தமது பௌதீக அங்கங்களின் கட்டுப்பாட்டில் செயல்படுபவர்கள் பிரஜா யோகிகள் (பிரஜைகள்), இராஜயோகிகள் அல்ல. பௌதீக அங்கங்கள் உங்களின் பணியாளர்கள் என்றும், நீங்கள் அவர்களின் அதிபதி என்றும் ஞானத்தை நீங்கள் பெற்றிருப்பதனால், அதிபதியால் ஒருபோதும் பணியாளர்களின் ஆதிக்கத்திற்கு உட்பட முடியாது. ஒருவர் எந்தளவிற்கு முயற்சி செய்தாலும், இராஜயோகி ஆத்மாக்கள் எப்போதும் மேன்மையாகவே இருப்பார்கள். இந்த இராஜ யோகி வாழ்க்கையில் நீங்கள் இப்போது உங்களை சதா ஆளுகின்ற சம்ஸ்காரங்களால் நிரப்பிக் கொள்ள வேண்டும். என்ன நிகழ்ந்தாலும், எப்போதும் உங்களின் இந்தப் பட்டத்தை நினைவில் வைத்திருங்கள்: நான் ஓர் இராஜயோகி. உங்களிடம் சர்வசக்திவானின் சக்தி உள்ளது. உங்களுக்கு அவரில் நம்பிக்கை உள்ளது. எனவே, நீங்கள் உங்களின் உரிமையாக வெற்றியைப் பெறுகிறீர்கள். உரிமை என்பது இலகுவாகப் பெறப்படுகிறது. அது சிரமமானதல்ல. சகல சக்திகளின் அடிப்படையில் ஒவ்வொரு பணியும் வெற்றிபெறுவதற்கான உத்தரவாதம் உள்ளது. நீங்கள் இதய சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கும் ஓர் ஆத்மா என்ற ஆன்மீக போதையை எப்போதும் கொண்டிருங்கள். இந்த ஆன்மீக போதை உங்களைக் கவலைகள் அனைத்திற்கும் அப்பால் எடுத்துச் செல்லும். இந்த ஆன்மீக போதை இல்லாவிட்டால், கவலைகளைத் தவிர வேறு எவையும் இருக்காது. எனவே, எப்போதும் இந்த போதையைப் பேணுங்கள். சகல ஆசீர்வாதங்களையும் பெற்றிருப்பவர் ஆகுங்கள். தொடர்ந்து ஆசீர்வாதங்களைப் பகிர்ந்தளியுங்கள். சம்பூரணமானவராகி, மற்றவர்களையும் சம்பூரணம் ஆக்குங்கள். மற்றவர்களை இவ்வாறு ஆக்குதல் என்றால், அவர்களுக்கு சுவர்க்கத்தில் ஓர் ஆசனத்திற்கான சான்றிதழை வழங்குதல் என்று அர்த்தம். இது கடதாசியிலுள்ள சான்றிதழ் அல்ல. ஆனால் ஓர் உரிமை ஆகும். அச்சா.

2. நீங்கள் ஒவ்வோர் அடியிலும் பலமில்லியன்கள் வருமானத்தைச் சேமிப்பவரான, எல்லையற்ற பொக்கிஷங்களின் அதிபதிகள் ஆகியுள்ளீர்கள். இத்தகைய சந்தோஷத்தை நீங்கள் அனுபவம் செய்கிறீர்களா? இன்றைய உலகம் ஏமாற்றக்கூடியது. நீங்கள் அந்த ஏமாற்றும் உலகில் இருந்து அப்பால் வந்துள்ளீர்கள். ஏமாற்றும் உலகின் மீது உங்களுக்கு ஏதாவது பற்று இல்லையல்லவா? சேவையின் நிமித்தம் தொடர்புகளை வைத்திருத்தல் வேறு விடயம். ஆனால், உங்களின் மனங்களில் எந்தவிதமான பற்றுகளையும் வைத்திருக்காதீர்கள். எனவே, நீங்கள் எளிமையானவர்கள் இல்லை, நீங்கள் சாதாரணமானவர்கள் இல்லை, ஆனால் நீங்கள் மேன்மையான ஆத்மாக்கள், நீங்கள் எப்போதும் தந்தையால் நேசிக்கப்படுபவர்கள் என்ற போதையை எப்போதும் பேணுங்கள். தந்தையைப் போலவே, குழந்தைகளும் இருப்பார்கள். தொடர்ந்து உங்களின் அடிகளைத் தந்தையின் பாதச்சுவடுகளில் வையுங்கள். அதாவது, தொடர்ந்து பின்பற்றுங்கள். நீங்கள் தந்தைக்குச் சமமானவர் ஆகுவீர்கள். சமமானவர் ஆகுதல் என்றால் சம்பூரணமானவர் ஆகுதல் என்று அர்த்தம். இதுவே பிராமண வாழ்க்கையின் பணியாகும்.

3. நீங்கள் எப்போதும் உங்களைத் தந்தையின் ஆன்மீகத் தோட்டத்தில் உள்ள ஆன்மீக ரோஜாக்களாகக் கருதுகிறீர்களா? ரோஜாக்கள் அதி நறுமணமிக்க மலர்கள். ரோஜா நீர் (பன்னீர்) பல நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படுகின்றன. நிறம் மற்றும் அழகின் அடிப்படையில், ரோஜாக்கள் மிகவும் விரும்பப்படுகின்றன. எனவே, நீங்கள் அனைவரும் ஆன்மீக ரோஜாக்கள். உங்களின் ஆன்மீக நறுமணம் இயல்பாகவே மற்றவர்களைக் கவரும். நறுமணமுடைய ஏதாவதொன்று இருக்கும்போது, அது இயல்பாகவே அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும். ஆன்மீக ரோஜாக்களான உங்களின் நறுமணம் உலகையே கவரும். ஏனெனில், அதற்கு இந்த ஆன்மீக நறுமணம் தேவையாக உள்ளது. எனவே, எப்போதும் இதை உங்களின் விழிப்புணர்வில் வைத்திருங்கள்: நான் அநாதியான தோட்டத்தில் உள்ள அநாதியான ரோஜா ஆவேன். நான் ஒருபோதும் வாட மாட்டேன். நான் எப்போதும் மலர்ந்தே இருப்பேன். இத்தகைய மலர்ந்திருக்கும் ஆன்மீக ரோஜாக்கள் எப்போதும் இயல்பாகவே சேவை செய்வதற்குக் கருவிகள் ஆகுவார்கள். தொடர்ந்து அனைவருக்கும் நினைவின் நறுமணத்தையும் சக்திகளினதும் நற்குணங்களினதும் நறுமணத்தையும் வழங்குங்கள். தந்தையே வந்து பூக்களான உங்களைத் தயார் செய்துள்ளார். நீங்கள் விசேடமான, அன்பான, நீண்ட காலம் பிரிந்திருந்து இப்போது கண்டெடுக்கப்பட்டுள்ளவர்கள் ஆவீர்கள். அச்சா.

ஆசீர்வாதம்:
நீங்கள் பற்றற்றவராகவும் அன்பானவராகவும் இருப்பதன் இரகசியத்தை அறிந்து கொள்வதன் மூலம் சகல இரகசியங்களையும் அறிந்தவராகி, சதா சந்தோஷமானவராக இருப்பீர்களாக.

வீடுகளில் தமது குடும்பங்களுடன் வசிக்கும்போது, பற்றற்றவராகவும் அன்பானவராகவும் இருக்கும் இரகசியத்தை அறிந்த குழந்தைகள், தம்முடன் சந்தோஷமாக இருப்பதுடன் தமது குடும்பங்களையும் சந்தோஷமாக வைத்திருப்பார்கள். இத்துடன்கூடவே, அவர்களுக்கு உண்மையான இதயங்கள் இருப்பதனால், பிரபுவும் எப்போதும் அவர்களால் மகிழ்ச்சி அடைகிறார். இந்த இரகசியத்தை அறிந்தவர்களாகவும் சதா சந்தோஷமாகவும் இருக்கும் இத்தகைய குழந்தைகள், எவரையும் தங்களுக்கோ அல்லது வேறு எவருக்குமோ ஆலோசகர் ஆக்க வேண்டியதில்லை. ஏனென்றால் அவர்களால் தமது சொந்தத் தீர்மானங்களை எடுக்க முடியும். எனவே, அவர்கள் எவரையும் தமது ஆலோசகராகவோ, சட்டத்தரணியாகவோ அல்லது நீதிபதியாகவோ ஆக்க வேண்டியதில்லை.

சுலோகம்:
நீங்கள் சேவை செய்வதனால் பெறுகின்ற ஆசீர்வாதங்களே உங்களின் நல்ல ஆரோக்கியத்திற்கான அடிப்படை ஆகும்.