01.12.2018        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்:
இனிய குழந்தைகளே, ஜீவன்முக்திக்கான மந்திரத்தை அனைவருக்கும் கொடுக்கும் சற்குருவின் குழந்தைகளான நீங்கள் குருமார்கள். கடவுளைப் பற்றி உங்களால் ஒருபோதும் பொய்; பேச முடியாது.

கேள்வி:
ஒரு விநாடியில் ஜீவன்முக்தி பெறுவதற்கான வழிமுறை என்ன, அதன் ஞாபகார்த்தம் என்ன?

பதில்:
ஒரு விநாடியில் ஜீவன்முக்தி பெறுவதற்கு, உங்கள் குடும்பத்துடன் வீட்டில் வாழும் போதும் ஒரு தாமரை மலர் போலத் தூய்மையாகுங்கள். இவ் இறுதிப் பிறவியில் தூய்மையாக இருப்பதற்கான சத்தியத்தைச் செய்யுங்கள், நீங்கள் ஜீவன்முக்தியைப் பெறுவீர்கள். இதனாலேயே ஜனக மன்னர் உதாரணமாக நினைவுகூரப்படுகிறார். அவர் சத்தியம் செய்ததன் அடிப்படையில், அவர்; வீட்டில் தனது குடும்பத்துடன் வாழ்ந்த போதும், ஒரு விநாடியில் ஜீவன்முக்தி அடைந்தார்.

பாடல்:
இக்காலம் கடந்து கொண்டிருக்கின்றது..

ஒம் சாந்தி.
தந்தை அனைவருக்கும் ஒரு விநாடியில் ஜீவன்முக்தி கொடுப்பதற்கு வருகிறார். அனைவருக்கும் ஜீவன்முக்தி அருள்பவரும், சற்கதி அருள்பவரும் ஒரேயொருவரே என்ற புகழ் நிலவுகிறது. ஜனக மன்னர் உதாரணமாகக் காட்டப்பட்டு, ஒரு விநாடியில் ஜீவன்முக்தி என்று பேசப்படுவது ஏன்? அவரது பெயர் ஜனகர். ஆனால், பிற்காலத்தில் அவரே அனு ஜனகர் (எதிர்காலத்தில் மீண்டும் ஒரு தடவை ஜனகர் ஆகுபவர்) ஆகுகின்றார். ஜனகர் ஒரு விநாடியில் ஜீவன்முக்தி பெற்றதாகக் கூறப்படுகின்றது. ஆனால், சத்திய, திரேதா யுகங்களிலேயே ஜீவன்முக்தி உள்ளதாகக் கூறப்படுகின்றது. குருமார்கள் உங்கள் காதுகளில் இரகசியமாக ஒரு மந்திரத்தைக் கூறுவார்கள். அதுவும் மனதை நெறிப்படுத்தும் மந்திரம் என்றே அழைக்கப்படுகிறது. அவர்கள் அனைவரும் மந்திரத்தைக் கொடுத்த போதிலும் நீங்களே மகா மந்திரத்தை, அதாவது, ஜீவன்முக்திக்கான மந்திரத்தைப் பெறுகின்றீர்கள். உங்களுக்கு இம் மந்திரத்தைக் கொடுப்பது யார்? பிரம்மகுமார்களும், குமாரிகளுமே ஆவர். அவர்கள் எங்கிருந்து இம் மந்திரத்தைப் பெற்றார்கள்? அந்தச் சற்குருவிடமிருந்தாகும். ஒரேயொரு தந்தை மாத்திரமே அதிமேலானவர். பின்பு குழந்தைகளாகிய நீங்கள் அதிமேலானவர்கள் ஆகுகின்றீர்கள். அங்கே, அவர்கள் அதிமேலான குருமார்களை ஏற்றிருக்கின்றார்கள். சற்குருவின் குழந்தைகளாகிய நீங்களும் குருமார்களே. கீதையை உரைப்பவர்களும் குருமார்கள் என்றே அழைக்கப்படுகிறார்கள். அது வரிசைக்கிரமமாகும். நீங்களும் உண்மையைக் கூறும் குருமார்களே. நீங்கள் கடவுளைப் பற்றிப் பொய் பேசுவதேயில்லை. எல்லாவற்றுக்கும் முதலில் நீங்கள் தூய்மையைப் பற்றி அவர்களுக்குக் கூறுகின்றீர்கள்: விகாரத்தில் ஈடுபட மாட்டேனென்று தந்தையிடம் சத்தியம் செய்யுங்கள். பொய் பேசாதிருப்பது பொதுவானது. பலரும் தொடர்ந்தும் பொய் பேசுகிறார்கள். ஆனால், இங்கே அவ்வாறல்ல. இங்கே தூய்மையே பிரதானமாகும். உங்கள் வீட்டில் குடும்பத்துடன் வாழும்போதும், இவ் இறுதிப் பிறவியில் தாமரை மலர் போல் தூய்மையாக இருப்பதற்கான சத்தியத்தைச் செய்கின்றீர்கள். ஆகவே இங்கே தூய்மையே பிரதானமாகும். இது மிகவும் உயர்ந்த இலக்கு என்றும், இது சாத்தியமில்லை என்றும் அவர்கள் கூறுகிறார்கள். நீங்கள் கூறுகிறீர்கள்: ஆகா, ஏன் இது சாத்தியமில்லை? தாமரை மலர் போல் வாழ்வது என்பது நினைவுகூரப்பட்டுள்ளது. இந்த உதாரணம் சமயநூல்களில் எழுதப்பட்டுள்ளது. நிச்சயமாகத் தந்தையே உங்களுக்கு அவ்வாறான கற்பித்தல்களைக் கொடுத்திருக்க வேண்டும். கடவுளின் வாசகங்களும், பிராமணர்களின் வாசகங்களும் இருக்கின்றன. கடவுள் எல்லோருடனும் பேசுவதில்லை. பிராமணக் குழந்தைகள் மாத்திரமே அவர் கூறுவதைச் செவிமடுக்கின்றார்கள். இதை நீங்கள் எல்லோருக்கும் விளங்கப்படுத்த வேண்டும். தூய்மையே பிரதானமானது. நீங்கள் ஜனக மன்னரைப் போல், தாமரை மலர் போலத் தூய்மையாக வேண்டும். இராதை அனு இராதையாகுவதைப் போல் (எதிர்காலத்தில் அவள் இராதை ஆகுகின்றாள்.) அதே ஜனகரே பிற்காலத்தில் அனுஜனகர் ஆகினார். நாராயணர் என்று அழைக்கப்படும் ஒருவர் எதிர்காலத்தில் அனுநாராயணர் ஆகுவார். இது மிகச்சரியானது. இங்கே வருகின்றவர்கள் எல்லோருக்கும் நீங்கள் விளங்கப்படுத்த வேண்டும்: ஒரு விநாடியில் ஜீவன்முக்தி என்பதைப் பற்றிக் கேள்விப்பட்டுள்ளீர்;கள். வீட்டில் உங்கள் குடும்பத்துடன் வாழும்போதும், உயர்ந்த அந்தஸ்தை அடைவது சாத்தியமே. நாங்கள் அனுபவபூர்வமாகப் பேசுகிறோமே தவிர, பொய் பேசவில்லை. கடவுள் பேசுகிறார்: கடவுளே எல்லோருக்கும் தந்தை என்ற பிரதான விடயத்தை விளங்கப்படுத்துங்கள். நிச்சயமாக அவர் ஜீவன்முக்தி அருள்பவரும் ஆவார். இது இல்லறப் பாதை. சந்நியாசிகள் துறவறப் பாதையைச் சேர்ந்தவர்கள். அவர்களால் இராஜயோகம் கற்பிக்க முடியாது. அவர்கள் தங்கள் வீட்டையும் குடும்பத்தையும் விட்டு விட்டு ஓடி விடுகிறார்கள். அவர்களால் இந்த ஞானத்தைக் கொடுக்க முடியாது. இது இராஜயோகம். வீட்டில் உங்கள் குடும்பத்துடன் வாழும்போது, தாமரை மலர் போல் தூய்மையாக இருக்க வேண்டும். சத்தியயுகத்தில் பாரதம் தூய இல்லறப் பாதையை கொண்டிருந்தது. அது விகாரமற்ற உலகமாகும். ஓர் இராச்சியத்திற்கு ஆண்கள், பெண்கள் இருவருமே தேவைப்படுகிறார்கள். எனவே, நீங்கள் அனுபவசாலிகள் என்பதை நீங்கள் விளங்கப்படுத்த வேண்டும்: வீட்டில் குடும்பத்துடன் வாழும்போது எங்களால் தாமரை மலர் போலத் தூய்மையாக வாழ முடியும். தந்தை மூலம் நாங்கள் தூய்மையாகித் தூய உலகின் அதிபதிகளாகுவோம் என்று எங்களுக்குத் தெரியும். தூய இல்லறப் பாதை நிலவியது. ஆனால் இப்போது தூய்மையற்ற இல்லறப் பாதையே உள்ளது. இது சீரழிந்த உலகம், ஆனால் அதுவோ மேன்மையான உலகம். இராவணன் உங்களைச் சீரழிந்தவர்கள் ஆக்குகின்றான், ஆனால் இராமரோ உங்களை மேன்மையானவர்கள் ஆக்குகிறார். இராவண இராச்சியம் அரைக் கல்பத்திற்குத் தொடர்கின்றது. பக்தி மாக்கம் சீரழிந்த உலகிலேயே நிலவுகின்றது. சீரழிவு காணப்படுவதாலேயே அவர்கள் தொடர்ந்தும் தான தர்மங்களைச் செய்கின்றார்கள். அதிகளவில் தானதர்மங்களைச் செய்வதன் மூலம் தாங்கள் கடவுளைக் காண்போம் என்று அவர்கள் நம்புகிறார்கள். அவர்கள் கடவுளை வழிபடுகிறார்கள். எங்களை மேன்மையானவர் ஆக்குவதற்கு வாருங்கள் என்று கூறுகிறார்கள். பாரதம் மேன்மையானதாக இருந்தது. இப்போது அது அவ்வாறு இல்லை. சீரழிந்தவர்களே பின்பு மேன்மையானவர்கள் ஆகுகின்றார்கள். பாரதத்தின் புதிய படைப்பைப் பற்றிய கதை எவருக்குமே தெரியாது. படங்களைப் பயன்படுத்தி இதனை மிக நன்றாக விளங்கப்படுத்த முடியும். அவ்வாறான படங்களை நீங்கள் உருவாக்க வேண்டும். ஒவ்வொரு நிலையத்திலும் கண்காட்சிப் படத்தொகுதி இருக்க வேண்டும். பாபா உங்களுக்கு வழிகாட்டல் கொடுக்கின்றார். எனவே, உங்களிடம் அப் படங்கள் இல்லையென்று நீங்கள் எழுதினால் பாபா வழிகாட்டல்கள் கொடுப்பார்: இவ்வாறு இப் படங்களை உருவாக்கி எல்லோரிடமும் கண்காட்சிப் படத்தொகுதி இருக்கும் வகையில், அனைவருக்கும் அனுப்புங்கள். இப் படங்கள் அர்த்தம் நிறைந்தவை. எல்லாவற்றுக்கும் முதல், நீங்கள் தந்தையின் குழந்தைகள் என்பது உங்கள் புத்தியில் பதிய வேண்டும். கடவுளே ஒருவரே சுவர்க்கத்தைப் படைப்பவர். இராவணன் நரகத்தைப் படைப்பவன். சக்கரத்தின் படத்தில் பத்துத் தலைகள் கொண்ட இராவணனுடைய உருவத்தை அமைத்து, சுவர்க்கப் பூகோளத்தின் மீது (நான்கு கரங்களுடைய) சதுர்புஜ வடிவைக் காட்டுங்கள். அத்துடன் நீங்கள் எழுதலாம்: இது இராம இராச்சியம், இது இராவண இராச்சியம். தற்போது இராவணன் சர்வவியாபியாக இருக்கிறான். அங்கே, இராமர் சர்வவியாபி என்று எங்களால் கூற முடியாது. ஆத்மாக்கள் நீண்ட காலம் பரமாத்மாவிடமிருந்து பிரிந்திருந்தனர் என்றும், முகவர் வடிவில் சற்குருவைக் கண்டு கொண்டபோது, ஓர் அழகிய சந்திப்பு இடம்பெற்றது என்றும் நினைவுகூரப்படுகின்றது. எனவே, அவர் நிச்சயமாக வருவார். இக் கணக்கு எவருக்கும் தெரியாது. தேவ ஆத்மாக்களே முதலில் பிரிக்கப்படுகின்றார்கள். இதுவே நீங்கள் அனைவருக்கும் விளங்கப்படுத்த வேண்டிய ஞானம். ஆத்மாக்களின் தந்தை இருக்கிறார். ஓ ஆத்மாவே, பரமாத்மா பரமதந்தையான உங்கள் தந்தையின் பணி என்னவென்று என்னிடம் கூறுங்கள். உங்களுக்கு அது தெரியுமா? தன் தந்தையின் தொழில் என்னவென்று அறியாத ஒரு குழந்தை இருக்க முடியாது. தந்தை இங்கிருந்து விளங்கப்படுத்துகிறார்: உங்கள் பிறவிகளைப் பற்றி உங்களுக்குத் தெரியாது. அவற்றை நான் உங்களுக்கு விளங்கப்படுத்துகிறேன். முதலில் வந்த தேவர்கள் இத்தனை பிறவிகள் எடுக்கிறார்கள். எனவே, ஏனைய சமயங்களைச் சேர்ந்தவர்கள் எத்தனை பிறவிகள் எடுப்பார்கள் என்று கணக்கிட்டுப் பாருங்கள். ஆகக்கூடியது இத்தனை பிறவிகள் என்பதை நீங்கள் அவர்களுக்கு நிரூபிக்க வேண்டும். விருட்சம் தொடர்ந்தும் வளர்கின்றது. முதலில் தேவர்களே இருக்கிறார்கள். அவர்களே 84 பிறவிகள் எடுப்பவர்கள் என்று கூறப்படுகின்றது. இது பாரதத்தைப் பற்றிய ஞானமாகும். புராதன பாரதத்தைப் பற்றிய ஞானத்தைக் கொடுத்தவர் யார்? அதைக் கிருஷ்ணரே கொடுத்தார் என்று அவர்கள் நம்ப மாட்டார்கள். அதைக் கடவுளே கொடுத்தார். தந்தையான கடவுள் ஞானம் நிறைந்தவர். பிரம்மாவை அல்லது கிருஷ்ணரை ஞானம் நிறைந்தவர் என அழைக்க முடியாது. கிருஷ்ணருடைய புகழ் வேறுபட்டது. இது மிகத்தெளிவானதும், புரிந்துகொள்ளப்பட வேண்டியதுமான ஞானமாகும். ஒரேயொரு அசரீரியான பரமாத்மாவான பரமதந்தையே அனைவரதும் கடவுள். அவர் படைப்பவரும், கிருஷ்ணர் படைப்பும் ஆவார்கள். அதிமேலானவரான கடவுள் ஒரேயொருவரே. அவரைச் சர்வவியாபி என்று அழைக்க முடியாது. பாரதத்தில் ஜனாதிபதியே அதியுயர்வானவர், ஏனையோர் வரிசைக்கிரமமானவர்கள். அனைவரது தொழிலும் கூறப்படுகின்றது. அவர்கள் அனைவரும் ஒரே தரத்தினர் என்றல்ல. ஒவ்வோர் ஆத்மாவும் ஓர் அழிவற்ற பாகத்தைப் பெற்றுள்ளார் என நீங்கள் நிரூபிக்க வேண்டும். இதனை உங்கள் மத்தியில் கலந்துரையாடி, சேவைத் திட்டங்களைத் தீட்டுங்கள். ஆனால், தொடர்பு தெளிவாக இல்லாதவர்களாலோ, விகாரங்கள் இருப்பவர்களாலோ அல்லது யாராவது ஒருவருடைய பெயரிலும் வடிவத்திலும் சிக்கி இருப்பவர்களாலோ இப் பணியை நிறைவேற்ற முடியாது. இதற்கு மிகத்தெளிவான ஒரு தொடர்பு தேவை. இறுதியிலேயே பெறுபேறுகள் அறிவிக்கப்படும். இப்போது அனைவரும் வரிசைக்கிரமமாகவே உள்ளனர். மக்கள் கூறுகின்றார்கள்: கடவுள் வியாசர் சமயநூலை எழுதினார். வியாசர் கடவுளாக இருக்க முடியாது. உண்மையில் நான்கு சமயநூல்களே உள்ளன. சகல சமயநூல்களுக்கும் தாயும் தந்தையுமாக இருக்கும் கீதை ஒன்றே பாரதத்தின் சமயநூலாகும். அதன் மூலம் மாத்திரமே நீங்கள் ஆஸ்தியைப் பெறுகின்றீர்கள். தாயினூடாகத் தந்தையிடமிருந்து நீங்கள் ஆஸ்தியொன்றைப் பெறுகின்றீர்கள். தந்தையே, தாயான கீதையைப் படைப்பவர். எனவே, தந்தை புராதன இலகு இராஜயோக ஞானத்தைக் கீதையினூடாகவே கொடுக்கின்றார். கீதையே பாரத தேசத்தின் சமயநூலாகும். பின்பு, இஸ்லாமியர்கள் தமக்கான சமயநூலையும், கிறிஸ்தவர்கள் தமக்கான சமயநூலையும், பௌத்தர்கள் தமக்கான சமயநூலையும் கொண்டிருக்கின்றனர். கீதையே அனைத்திற்கும் தாயும் தந்தையும் ஆகும். ஏனைய சமயநூல்கள் அனைத்தும் அதன் குழந்தைகளேயாகும். அவை பின்னரே வெளித்தோன்றின. வேதங்கள், உபநிடதங்கள் போன்ற அனைத்தும் எச் சமயத்திற்குரியவை? அவற்றை அருளியவர்கள் யாரென்றும், அவற்றின் மூலம் ஸ்தாபிக்கப்பட்ட சமயம் எதுவென்றும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும். சமயம் என்று ஒன்றுமில்லை. எல்லாவற்றுக்கும் முதல் கீதை பொய்யாக்கப்பட்டிருப்பதை நிரூபியுங்கள். தந்தையின் பெயருக்குப் பதிலாகக் குழந்தையின் பெயரைக் குறிப்பிட்டுள்ளார்கள். ஒவ்வொருவருடைய வாழ்க்கைச் சரிதமும் வெவ்வேறானவை. தந்தை கூறுகிறார்: சரீர மதங்கள் அனைத்தையும் துறந்து, என்னை மட்டுமே நினைவு செய்யுங்கள். கடவுள் ஆத்மாக்களோடு பேசுகிறார்: சரீரமற்றவர்களாகி என்னை நினைவுசெய்யுங்கள். சரீரமற்ற தந்தையால் மட்டுமே இவ்வாறு கூற முடியும். சந்நியாசிகளால் இவ்வாறு கூற முடியாது. இவை கீதையின் வாசகங்கள். சகல சமயத்தினருடனும் அவர் பேசுகின்றார்: சரீரமற்றவர்களாகுவீர்களாக! நாடகம் இப்போது முடிவுக்கு வருகிறது. அனைவரும் பெறும் மந்திரம்: உங்கள் சரீரத்தையும், சரீர உறவுகள் அனைத்தையும் துறந்து, என்னை மட்டுமே நினைவுசெய்வீர்களானால், என்னிடம் வருவீர்;கள். முக்தியின் பின் நிச்சயமாக ஜீவன்முக்தியும் உள்ளது. முக்தியின் ஊடாக ஜீவன்முக்தி என்பதே நீங்கள் பெறும் அந்தஸ்தாகும். இங்கே வருகின்ற எவருமே சதோ, இரஜோ, தமோ நிலைகளைக் கடந்து செல்கிறார்கள். கொடுக்கப்படும் விளக்கம் மிகவும் நல்லது! ஆனாலும், குழந்தைகள் அதை ஒரு காதால் கேட்டு மறு காதால் விட்டு விடுகிறார்கள். இல்லாவிட்டால், இது மிகவும் இலகுவானது. பல இடங்களிலும் நீங்கள் கண்காட்சிகள் நடத்தலாம். அதனைப் பத்திரிகைகளிலும் அச்சிடச் செய்யுங்கள். இதற்காக நீங்கள் சிறிதளவு பணத்தைச் செலவிடலாம். எல்லோரும் இதைப் பற்றி அறிந்து கொள்ளட்டும். நிச்சயமாக இதனை நீங்கள் பத்திரிகைகளில் பிரசுரிக்க வேண்டும். குழந்தைகளாகிய உங்களுக்கு அளவற்ற போதை இருக்க வேண்டும். எவ்வாறாயினும், மிகச்சொற்ப காலமே எஞ்சியுள்ளது. அதீந்திரிய சுகத்தின் உணர்வுகளைப் பற்றி கோபியரிடமும் கோபிகைகளிடமும் கேளுங்கள். இவர்கள் கோபிவல்லபரின் கோபியரும் கோபிகைகளும் என நினைவுகூரப்பட்டுள்ளது. கோபியரும் கோபிகைகளும் சத்தியயுகத்திலோ அல்லது கலியுகத்திலோ இருப்பதில்லை. அங்கே இலக்ஷ்மி, இராதை ஆகிய தேவியரே இருக்கிறார்கள். கோபியரும் கோபிகைகளும் இப்பொழுதே இருக்கிறார்கள். அவர்கள் கோபி வல்லபருடைய பேரக்குழந்தைகள். நிச்சயமாகப் பாட்டனாரும் இருக்க வேண்டும். பாட்டானாரும், பாபாவும் மம்மாவும் சங்கமயுகத்தின் புதிய படைப்புக்கள். தந்தை கூறுகிறார்: நான் ஒவ்வொரு சக்கரத்தின் சங்கமத்திலும் புதிய உலகத்தைப் படைப்பதற்காக வருகிறேன். நீங்கள் அசுர குழந்தைகளில் இருந்து இறை குழந்தைகள் ஆகுகின்றீர்கள். பின்பு நீங்கள் தேவ குழந்தைகளாகுவீர்கள். பின்னர், உங்கள் 84 பிறவிகளில், சத்திரியக் குழந்தைகளாகி, வைசியக் குழந்தைகளாகி, சூத்திரக் குழந்தைகளாகுவீர்கள். ஒரேநேரத்திலேயே விரிவாக்கம் இடம்பெறுகின்றது. விருட்சமும் பூரணமடைய வேண்டும். பிரளயம் என்றுமே இடம்பெற மாட்டாது. பாரதம் அழிவற்ற பூமி. பாரதம் பெரிதும் போற்றப்பட வேண்டும். அனைத்து நாடுகளிலும் அதிமேலானது பாரதமே. அது என்றுமே அழிக்கப்படுவதில்லை. அச்சா.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து, இப்போது கண்டெடுக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

இரவு வகுப்பு: 16ஃ04ஃ68

சங்கம யுகம் எப்பொழுது என்பது பிராமணக் குழந்தைகளாகிய உங்களைத் தவிர வேறு எவருக்குமே தெரியாது. சக்கரத்தின் சங்கமயுகத்துக்கு அதிகளவு புகழ் உள்ளது. தந்தை வந்து உங்களுக்கு இராஜயோகம் கற்பிக்கின்றார். நிச்சயமாகச் சத்தியயுகத்திற்கு முதல் சங்கம யுகம் வர வேண்டும். இங்கே மனிதர்கள் இருக்கிறார்கள். சிலர் அதிதாழ்ந்தவர்களும், சிலர் அதிமேலானவர்களும் ஆவார்கள். அவர்களின் (தேவர்களின்) முன்னிலையில் புகழ் பாடுகின்றார்கள்: நீங்கள் அதிமேலான மனிதப்பிறவிகள், நாங்களோ அதிதாழ்ந்தவர்கள். அவர்கள் தம்மைத் தாமே நான் இவ்வாறானவன், நான் அவ்வாறானவன் என்று கூறுகிறார்கள். பிராமணர்களாகிய உங்களைத் தவிர வேறு எவருக்குமே இந்த அதிமங்களகரமான சங்கமயுகத்தைப் பற்றித் தெரியாது. மக்கள் எல்லோரும் அறிந்துகொள்ளும் வகையில் இதை எவ்வாறு நாம் விளம்பரப்படுத்தலாம்? கடவுளே சங்கமயுகத்தில் வந்து எங்களுக்கு இராஜயோகம் கற்பிக்கிறார். நீங்கள் இராஜயோகம் கற்கின்றீர்கள் என்பது உங்களுக்குத் தெரியும். இப்போது, மக்கள் இதனை அறிந்துகொள்ளக்கூடிய வகையில் நாம் உருவாக்க வேண்டிய வழிமுறை என்ன? எவ்வாறாயினும், நாளடைவில் இது நடக்கும். அதற்கு இன்னமும் காலம் உள்ளது. அதிகளவு காலம் கடந்து, இப்போது குறுகிய காலமே எஞ்சியிருக்கின்றது. மக்கள் விரைவாக முயற்சி செய்ய வேண்டும் என்பதற்காகவே நாம் இவ்வாறு கூறுகிறோம். உண்மையில், ஞானம் என்பது ஒரு விநாடியில் பெறப்படுகின்றது. அந்நேரத்தில் அந்த ஞானத்தின் மூலம் நீங்கள் ஜீவன்முக்தியைப் பெறுகின்றீர்கள். ஆனாலும், அரைச்சக்கர காலப் பாவங்கள் உங்கள் தலை மீதுள்ளன. அவை ஒரு விநாடியில் அழிக்கப்பட முடியாது. அதற்குக் காலம் எடுக்கின்றது. இன்னும் காலமிருக்கிறதே என்றும், இப்போது ஏன் நாங்கள் பிரம்மகுமாரிகளிடம் செல்ல வேண்டும் என்றும் மக்கள் நினைக்கிறார்கள். நூல்களிலிருந்து அவர்கள் தவறாகப் புரிந்துகொள்கிறார்கள். அவர்களது பாக்கியத்தில் இல்லையென்றால் தவறாகவே புரிந்துகொள்வார்கள். இதுவே அதிமேலான மனிதர்களாகுவதற்கான யுகம் என்பது உங்களுக்குப் புரிகின்றது. வைரம் போலாகுவது என்ற புகழ் இருக்கின்றது. பின்பு அது சத்தியயுகம், திரோதாயுகம் என்று குறைவடைந்து செல்கின்றது. இந்த சங்கம யுகமே வைர யுகமாகும். சத்தியயுகம் பொற்காலமாகும். இச் சங்கம யுகம் சுவர்க்கத்தை விடவும் மேலானது என்பதை நீங்கள் அறிவீர்கள், இப் பிறவி வைரம் போன்றதாகும். அமரத்துவ பூமிக்கான புகழ் உள்ளது. பின்பு அது தொடர்ந்தும் குறைவடைந்து செல்கின்றது. எனவே, நீங்கள் எழுதலாம்: அதிமங்களகரமான சங்கமயுகம் வைரமும், சத்தியயுகம் தங்கமும், திரேதாயுகம் வெள்ளியும் ஆகும். சங்கமயுகத்திலேயே நீங்கள் மனிதர்களிலிருந்து தேவர்கள் ஆகுகின்றீர்கள் என்று நீங்கள் விளங்கப்படுத்தலாம். எட்டு மணிகளைக் கொண்ட மணிமாலையொன்றைத் தயாரித்து மத்தியில் ஒரு வைரத்தைப் பதிக்கிறார்கள். சங்கமயுகத்திற்கான கோலாகலம் உள்ளது. சங்கமயுகம் வைரம் போன்றது. சங்கமயுகத்தில் வைரத்திற்கான பெறுமதியுள்ளது. உங்களுக்கு யோகம் போன்றவை கற்பிக்கப்படுகிறது. இது ஆன்மீக யோகம் எனப்படுகின்றது. ஆனாலும் தந்தை மட்டுமே ஆன்மீகமானவர். சங்கமயுகத்தில் மட்டுமே நீங்கள் ஆன்மீகத் தந்தையை இனங்கண்டு, ஆன்மீக ஞானத்தைப்; பெறுகின்றீர்கள். அளவற்ற அகங்காரங் கொண்ட மனிதர்களால் எவ்வாறு அத்தனை விரைவில் இதனை ஏற்க முடியும்? இது ஏழைகளுக்கு விளங்கப்படுத்தப்படுகிறது. எனவே நீங்கள் எழுத வேண்டும்: சங்கமயுகமே வைரயுகம் அதன் ஆயுட்காலம் இவ்வளவு. சத்தியயுகம் பொற்காலம், இதன் ஆயுட்காலம் இவ்வளவாகும். சமயநூல்களில் சுவஸ்திகாவைக் காட்டியிருக்கிறார்கள். எனவே, குழந்தைகளாகிய நீங்கள் இதனை நினைவு செய்யும்போது, உங்களுக்கு அளவற்ற சந்தோஷம் ஏற்படும். மாணவர்களும் சந்தோஷமாகவே உள்ளார்கள். இல்லையா? மாணவ வாழ்வே மிகச் சிறந்த வாழ்வாகும். இது உங்கள் வருமானத்திற்கான வழியாகும். இது மனிதர்களைத் தேவர்களாக்கும் பாடசாலையாகும். தேவர்களே உலக அதிபதிகளாக இருந்தனர். இப்போது உங்களுக்கு இது தெரியும். எனவே அளவற்ற சந்தோஷம் இருக்க வேண்டும். இதனாலேயே புகழப்படுகின்றது: அதீந்திரிய சுகத்தை அறிய விரும்பினால், கோபிவல்லபரின் கோபியரையும் கோபிகைகளையும் கேளுங்கள். ஆசிரியர் இறுதிவரை உங்களுக்குக் கற்பிக்கின்றார். எனவே, நீங்களும் அவரை இறுதிவரை நினைவுசெய்ய வேண்டும். கடவுள் உங்களுக்குக் கற்பிக்கின்றார். அவர் உங்களைத் தன்னுடன் திரும்ப அழைத்துச் செல்வார். மக்கள் கூவியழைக்கின்றார்கள்: முக்தியளிப்பவரே, வழிகாட்டியே, எங்களைத் துன்பத்திலிருந்து விடுவியுங்கள்! சத்தியயுகத்தில் துன்பம் இல்லை. அவர்கள் கூறுகின்றார்கள்: உலகில் அமைதி நிலவ வேண்டும். அவர்களிடம் வினவுங்கள்: முன்னர் எப்போது அமைதி நிலவியது? அது எந்த யுகத்தில்? எவருமே அதனை அறியார்கள். இராம இராச்சியமே சத்தியயுகம். இராவண இராச்சியம் கலியுகம். இது உங்களுக்குத் தெரியும், இல்லையா? குழந்தைகள் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ள வேண்டும். இதயத்திலுள்ள எதனை நான் பகிர்ந்து கொள்வது? எல்லையற்ற சுய இராச்சியத்தைக் கொடுக்கும் எல்லையற்ற தந்தையை நான் இனங்கண்டு விட்டேன். அதனைவிட வேறெந்த அனுபவத்தை நான் பகிர்ந்து கொள்வது? வேறு எதுவுமில்லை! இதனைப் போன்றதொரு சந்தோஷம் வேறெதுவும் இல்லை. எவரும் எவருடனும் முரண்படுவதால் வீட்டில் இருந்து விடக்கூடாது. அது உங்கள் பாக்கியத்துடன் நீங்கள் முரண்படுவது போன்றதாகும். உங்கள் கல்வியுடன் நீங்கள் முரண்பட்டால் நீங்கள் என்ன கற்பீர்கள்? பிரம்மா மூலமே தந்தை உங்களுக்குக் கற்பிக்க வேண்டும். எனவே, நீங்கள் ஒருவரோடொருவர் முரண்படக்கூடாது. அதுவே மாயை. யாகத்திற்கு அசுரர்களால் இடையூறுகள் ஏற்படுத்தப்படுகின்றன. அச்சா.

இனிமையிலும் இனிமையான ஆன்மீகக் குழந்தைகளுக்கு, உங்கள் தந்தை, தாயாக இருக்கும் ஆன்மீக பாபாவினதும் தாதாவினதும் அன்பும் நினைவுகளும் இரவு வணக்கமும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:

1. தந்தை உங்களுக்குக் கூறுவதை ஒரு காதால் கேட்டு மறு காதால் விட்டு விடாதீர்கள். ஞான போதையுடையவர்களாகி, அதீந்திரிய சுகத்தை அனுபவம் செய்யுங்கள்.

2. அனைவருக்கும் ஒரு விநாடியில் முக்திக்கும், ஜீவன்முக்திக்குமான உரிமையை பெற்றுக் கொடுப்பதற்காக, அவர்களுக்கு இந்த மகாமந்திரத்தைக் கூறுங்கள்: உங்கள் சரீரத்தையும், சரீர உறவுகளையும் துறந்து, தந்தை ஒருவரையே நினைவுசெய்யுங்கள்.

ஆசீர்வாதம்:
தந்தைக்குச் சமமாகி தந்தை பிரம்மாவைப் பின்பற்றுவதன் மூலம் முதலாம்; இலக்கத்தைக் கோருவீர்களாக.

குழந்தைகள் அனைவரும் தந்தை பிரம்மா மீது அதிகளவு அன்பைக் கொண்டிருப்பதுடன், அந்த அன்பின் அடையாளமே அவருக்குச் சமமாக ஆகுவதாகும். இதற்கு எப்பொழுதும் முதலாவதாக வருவதற்கான இலக்கைக் கொண்டிருங்கள். பொறாமையினால் அல்ல, ஏனெனில் அது மிகவும் ஆபத்தானது. எவ்வாறாயினும், நீங்கள் அவ்வாறு கூறிப் பின்னர் தந்தையை நடைமுறைரீதியில் பின்பற்றுவதில் முதலாவதாக ஆகுங்கள். தந்தை பிரம்மா எவ்வாறு முதல் இலக்கத்தவராக வந்தாரோ, அதேபோன்று, அவரைப் பின்பற்றுபவர்கள் அனைவரும் முதல் இலக்கத்தில் வருவதற்கான இலக்கைக் கொண்டிருக்கட்டும். இதனை முன்னெடுப்பவர்கள் முதலாம் இலக்கத்தவர்கள் ஆகுவார்கள். அர்ச்சுனனும், ஏனைய அனைவரும் முதலாவதாக வருவதற்கான வாய்ப்பைப் பெற்றுள்ளனர். முதல் தரம் எல்லையற்றது. அது ஒரு சிலருக்கானதல்ல.

சுலோகம்:
வெற்றி சொரூபமாகுவதற்கு உங்களுக்கும் ஏனையோருக்கும் ஒரேநேரத்தில் சேவை செய்யுங்கள்.